விழிகள் 25
அரண்மனை வளாகத்துக்குள் மறைந்திருந்தவள் அங்கிருந்த நீண்ட ஜன்னலின் கதவு திறந்திருப்பதைப் பார்த்து வேகமாக அதை நோக்கி ஓட, அங்கு சுற்றியிருந்த காவலர்களின் விழிகளுக்கு சிக்கிக்கொண்டாள் அவள். "ஹேய்.. வூ ஆர் யூ? ஸ்டாப்! கார்ட்ஸ்... கார்ட்ஸ்..." என்று அவன் எல்லோருக்கும் குரல் எழுப்பி கத்திக்கொண்டு அவளை நோக்கி ஓடி வர, அதிர்ந்து விழித்தவள் உடனே சுதாகரித்து ஜன்னல் வழியே அறைக்குள் நுழைந்து ஜன்னல் கதவை வேகமாக மூடிக்கொண்டாள். சுற்றி பரபரப்பு நிலவ, ஜன்னல் கதவை அவர்கள் வேகமாக தட்ட ஆரம்பிக்கவும் இவளுக்கு ஏன்தான் இங்கு வந்தோம் என்று அந்த நொடி தோன்றியது. வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்டவளுக்கு பயத்தில் உடலெல்லாம் நடுங்க, எதுவும் யோசிக்கக் கூட தோன்றவில்லை. உடல் முழுவதும் பதற்றத்தில் வியர்க்க ஆரம்பிக்க, உடனே அந்த அறைக் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தவள் எந்த பக்கம் செல்வதென்று கூட தெரியாமல் கால் போன திசைக்கு அந்த வராண்டாவில் ஓட ஆரம்பித்தவள். திடீரென சில அதிகாரிகளின் காலடி சத்தம் கேட்க, பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்துக்கொண்டாள் யாழ்மொழி. 'அய்யோ க...