யாத்ரன் 22
யாவும் நின் யாத்ரனாய்..
EPISODE 22
"ஹேய் லுக், அவ கொஞ்சம் கூட யாத்ரனுக்கு பொருத்தமே இல்ல. ஐ கான்ட் டோலரேட் திஸ்"
யாத்ரனோடு எப்போதும் கொஞ்சிக் குழாவும் ரேஷ்மாவுக்கு ஜான்சியைப் பார்க்கப் பார்க்க பற்றிக்கொண்டு வந்தது.
"ரேஷ், அவனுக்கு கல்யாணம் ஆனதையே மறைச்சிருக்கான். என்னால இப்போ வரைக்கும் அதைதான் டோலரேட் பண்ணவே முடியல. நீ என்னடான்னா..." என்று கவின் அதிர்ச்சி குறையாத குரலில் சொல்ல, ரேஷ்மா எரிச்சலோடு விழிகளை உருட்டினாள்.
யாத்ரன், விதுஷா மற்றும் ராஜ்தீப் தத்தமது தொழில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்க, தனியாக விடப்பட்டாள் ஜான்சி.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ரேஷ்மாவுக்கு உள்ளுக்குள் ஒரு திட்டம் தோன்ற, கைகளைப் பிசைந்தவாறு சிறு பதற்றத்தோடு நின்றிருந்தவளின் அருகே மெல்ல சென்றாள்.
"ஹேய் ஹாய்... ஹவ் ஆர் யூ? மே ஐ நோ யூவர் நேம்" என்று அவள் ஆங்கிலத்தில் பேச, புரியாமல் விழித்த ஜான்சியோ அசடுவழிந்தவாறு தலையாட்டி வைத்தாள்.
'அய்யோ யார் கூடவும் பேச கூடாதுன்னு சொன்னாரே, இதுக்காகதானா! இப்போ என்ன பண்றது? முகத்த திருப்பிக்கிட்டு போனா அவங்க மனசு கஷ்டப்படுவாங்களே' அவள் தனக்குள் இவ்வாறு யோசிக்க, அதற்கு எதிர்மாறாக அவளுக்கு எதிரில் இருந்தவளோ வன்மத்தோடு சிரித்தாள்.
"நீ முழிக்குறத பார்த்தா உனக்கு இங்லீஷ் தெரியாது போலயே! பரவாயில்ல இங்க வந்த ஆரம்பத்துல நானும் இப்படிதான்.. இதை சொல்றதுக்கு எதுக்கு வெக்கப்படுற? நானும் தமிழ் பொண்ணுதான், உனக்கு அக்கா மாதிரி.. இதுல நீ தயக்கப்பட என்ன இருக்கு?"
அவளை மயக்குவது போல ரேஷ்மா பேச, ஜான்சிக்கு ஆச்சரியமாக இருந்தது.
"நிஜமாவே இங்க யாருமே என் கூட இப்படி பேசினது கிடையாது. ரொம்ப நாளைக்கப்பறம் எனக்காக ஒருத்தர் பேசுறத கேக்குறேன். அவர்தான் என்னை யார் கூடவும் பேச கூடாதுன்னு சொல்லி இருந்தாரு. ஆனா நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்களே அக்கா" என்று ஜான்சி ரேஷ்மாவின் வார்த்தைகளை உண்மையென நம்பி வெகுளியாய் பேச, விஷமமாகப் புன்னகைத்தாள் மற்றவள்.
"சரி வா, சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்" என்று அவளை அழைத்துச் சென்றவள், புஃபே முறையிலிருந்த உணவை எடுத்து அவளுக்கான தட்டில் வைத்துக் கொடுக்க, அதை ருசித்துப் பார்த்தவளின் முகம் அதிருப்தியில் சுருங்கியது.
"எனக்கு இதெல்லா அவ்வளவா பழக்கம் இல்லக்கா, இங்க எதுவுமே எனக்கு பிடிக்கல. இப்போ பாருங்க, எங்க ஊர்ல எல்லா நாங்களே கையால பரிமாறுவோம். அதுதானே பாரம்பரியம். ஆனா இங்க... வந்தவங்கள எடுத்து போட்டு சாப்பிட சொல்றாங்க. அதுவும் என்ன சாப்பாடு இது? உப்பு காரமே இல்லாம இருக்கு"
என்று அவள் சொன்னதைக் கேட்டவளுக்கு ஏளனச் சிரிப்புதான் இதழில் தோன்றியது.
'அப்போ யாத்ரன் சொன்னதெல்லா பொய்யா, ஒரு பட்டிக்காட்ட போய் கல்யாணம் பண்ணதாலதான் மறைச்சிருக்கானா?'
என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள் அவள் மேல் அக்கறை இருப்பது போல் அப்பட்டமாக நடிக்க, பாவம் அதை அறியவில்லை ஜான்சி.
"நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க, எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு. அவரோட ஃப்ரென்டா நீங்க? இருங்க நான் அவர அழைச்சுட்டு வர்றேன்" என்று ஜான்சி சொல்லிக்கொண்டே யாத்ரனைத் தேடி சுற்றிமுற்றி பார்த்தவாறு முன்னே சென்றாள்.
அடுத்தகணம் அவள் கையில் வைத்திருந்த உணவுத் தட்டு கீழே சிதறியிருக்க, தரையில் மல்லாக்காகக் கிடந்தாள் ஜான்சி.
அதற்குமேல் துரதிஷ்டவசமாக அவளுக்கு முன்னே இருந்த விதுஷாவின் ஹையர் ஆஃபீசர் ஒருவரின் விலை உயர்ந்த வெள்ளை கோட் தட்டிலிருந்த உணவுகள் தெறித்ததில் சர்வ நாசமாகியிருக்க, இதை யாரும் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
அங்கிருந்த மொத்தப் பேரும் திரும்பிப் பார்க்க, யாத்ரனுக்கு அதிர்ச்சி ஒருபக்கம் என்றால் இன்னொரு புறம் கோபம் எல்லையைக் கடந்தது.
"ஓ ஷீட்! மானமே போச்சு" என்று விதுஷா வெளிப்படையாக தலையிலடித்துக்கொள்ள, ரேஷ்மாவோ தனது வன்மத்தை தீர்த்துவிட்டு திருப்தியில் மெல்ல அங்கிருந்து நகர்ந்தாள்.
"ஓ காட்! என்னோட ட்ரெஸ்... யூ... ஹவ் டேர் யூ இடியட்?" என்று அந்த உயரதிகாரி கத்திய கத்தலில் அரக்கப் பறக்க எழுந்து நின்றவள், "அய்யோ என்னை மன்னிச்சிருங்க, நான் வேணும்னு பண்ணல. இருங்க நானே அதை சுத்தம் பண்றேன்" என்றுவிட்டு அங்கிருந்த தண்ணீரை கொண்டு வந்து சுத்தப்படுத்த முயற்சித்தாள்.
ஆனால், ஏற்கனவே கோபத்தில் இருந்தவருக்கு இவள் ஆடையைத் தொட்டதும் கோபம் உச்சத்தை தொட்டது.
உடனே அவளைப் பிடித்து ஆவேசமாக தள்ளிவிட்டவர் விதுஷாவை கோபமாகப் பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டே விறுவிறுவென்று சென்றிருக்க, மீண்டும் கீழே கிடந்தவளின் அருகே வேகமாக வந்தான் யாத்ரன்.
அவளின் முழங்கையைப் பற்றி இழுத்து நிற்கச் செய்தவன் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அவளை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்ல, ஜான்சியோ அழுதுக்கொண்டே அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.
அவளை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த வரதனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாத்ரனை நோக்கி அவன் ஒரு அடி வைக்க, சட்டென அவனுடைய அலைப்பேசி அலறியது.
திரையைப் பார்த்தவன் புருவ முடிச்சுகளோடு அதை ஏற்றவாறு அங்கிருந்து நகர்ந்துச் செல்ல, இங்கு தனதறைக்குள் அவளை தள்ளி கதவை அடித்துச் சாத்தினான் யாத்ரன்.
கால்களை ஊன்றி தன்னை சமன்படுத்தி நின்றுக்கொண்டவள், "என்னங்க நான்..." என்று சொல்ல வந்ததை முழுதாக பேசி முடிக்கவில்லை, மின்னல் வேகத்தில் அவளை நெருங்கிய யாத்ரனின் ஐவிரல்களும் அவளுடைய கன்னத்தில் பதிந்திருந்தன.
"ஆர் யூ அவுட் ஆஃப் யூவர் மைன்ட்? ஹவ் மெனி டைம்ஸ் ஐ டோல்ட் யூ, டோன்ட் யூ கெட் தட்? ச்சே! இப்போ நான் பேசினது கூட உனக்கு புரிஞ்சிருக்காது. எல்லா உன்னாலதான்டீ. பட்டிக்காடு!"
என்றூ யாத்ரன் திட்டிக்கொண்டே போக, கன்னத்தில் கை வைத்த வண்ணமாய் அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவளின் விழிகளிலிருந்து விழிநீர் மட்டும் அருவியாய் ஓடியது.
"நா.. நான் வேணும்னு பண்ணலங்க. ஏதோ தெரியாம..." அவள் சொல்ல வர, எதையும் கேட்கும் நிலையிலில்லை அவன்.
"ஷட் அப்! ஷட் யூவர் ப்ளடி மவுத். ஒரு வார்த்தை கூட நீ பேசக் கூடாது. உன் ஊருக்கு வர வரைக்கும் ரொம்ப.. ரொம்ப நிம்மதியா இருந்தேன். ஆனா என் லைஃப்பே போச்சு உன்னால. உன் சுயநலத்துக்காக என்னை கல்யாணம் பண்ண, எனக்கு உன்மேல இன்ட்ரஸ்ட் இல்லன்னு தெரிஞ்சும் என் பின்னால சுத்திட்டு இருக்க. அதான் சொல்றேனே, உனக்கு பணம்தான் வேணும்னா எவ்வளவு வேணும்னு சொல்லு கொடுக்குறேன்னு. ஜஸ்ட் கெட் அவுட் ஃப்ரொம் மை லைஃப்"
என்று அவன் ஆத்திரத்தில் வெடிக்க, அவளுக்கோ தன் இதயத்தை யாரோ குத்திக் கிழிப்பது போலிருந்தது.
"நா.. நான் ஒன்னு மட்டும் கேக்குறேங்க, நிஜமாவே உங்களுக்கு என்னை பிடிக்கலயா? ஏங்க என்மேல இத்தனை வெறுப்ப காமிக்கிறீங்க" என்றவளின் வார்த்தைகளில் வலி மட்டுமே மிஞ்சியிருந்தது.
ஆனால், யாத்ரன் அத்தருணம் அவளுடைய வலியை உணரும் நிலையிலில்லை.
"ஆரம்பத்துலயிருந்து உன்ன பிடிக்கலன்னுதானே சொல்லிட்டு இருக்கேன். அதுமட்டும் இல்ல, நா.. நான் வேற ஒரு பொண்ண காதலிக்கிறேன். அவ கூட சேருவேனா இல்லயான்னு எல்லா எனக்கு தெரியல. ஆனா... ஆனா அவ மட்டும்தான் எனக்குள்ள இருக்கா. என் வாழ்க்கை முழுக்க அவள நினைச்சுக்கிட்டே வாழ்ந்துருவேன். என்னைக்கும் நான் உன்ன காதலிக்க போறதில்ல புரியுதா?"
அவன் கத்திவிட்டு அறையிலிருந்து வெளியேறியிருக்க, ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டாள் ஜான்சி.
நாட்கள் செல்லச் செல்ல அனைத்தும் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு, அவனின் மனதில் தனக்கு இடமே இல்லை என்ற நிதர்சனத்தை ஏற்கவே முடியவில்லை.
அப்படியே தரையில் முட்டி போட்டு அமர்ந்தவள் ஒரு மூச்சு அழுதுத் தீர்க்க, இங்கு வெளியில் வந்த யாத்ரனின் மனமும் ஒரு நிலையிலில்லை.
மனதிலிருந்த கோபத்தை கொட்டிவிட்டான். ஆனால் இப்போது பேசிய வார்தைகளில் உண்டான குற்றவுணர்ச்சி அவனை பிடுங்கித் தின்ற, எதிலும் ஈடுபாடு காட்ட முடியவில்லை அவனால்.
"ஆர் யூ ஓகே யாத்ரா?" பக்கத்திலிருந்த விதுஷா கேட்க, "ம்ம்..." என்று மட்டும் சொன்னவனுக்கு விழாவுக்கு வந்திருந்த நண்பர்கள் பேசுவது கூட காதில் விழவில்லை.
அவனுடைய சிந்தனை முழுக்க இப்போது ஜான்சி மட்டுமே...
விழாவும் முடிவடைந்து அடுத்தநாளும் விடிந்தது.
யாத்ரன் பேசாவிட்டாலும் ஏதாவது ஒன்றைப் பற்றி வளவளத்துக் கொண்டிருப்பவளிடம் என்றும் காணாத அமைதி இன்று.
தன்னுடைய வேலைகளை மட்டும் செய்துக்கொண்டவள் தோட்டத்திலேயே தன் நேரத்தைக் கடத்த, இதை யாத்ரன் உணராமலில்லை.
கிட்டத்தட்ட மாலை நெருங்கியிருக்க, வேகமாக வீட்டிற்குள் வந்தான் வரதன்.
யாத்ரனோ அலைப்பேசியை நோண்டியவாறு சோஃபாவில் அமர்ந்திருக்க, "யாத்ரா..." என்றழைத்தவனின் முகத்தை பதற்றம் சூழ்ந்திருந்தது.
அதைப் பார்த்த மற்றவனின் புருவங்கள் கேள்வியில் முடிச்சிட, "என்னாச்சு?" என்று மெல்ல முணுமூணுத்தன அவனுடைய இதழ்கள்.
"ஜான்சி எங்க?" வந்ததும் வராததுமாய் அவன் ஜான்சியைக் கேட்டதில் யாத்ரனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
"இங்கதான் எங்கேயோ இருந்தா..அவள இப்போ எதுக்கு கேக்குற? மொதல்ல என்னன்னு சொல்லு!" என்று யாத்ரன் சற்று குரலை உயர்த்திக் கேட்டான்.
"அது... நான் இதை சொல்லியிருக்கணும். ஜான்சியோட அப்பா சுபாஷ் ரொம்ப நாளாவே கேன்சர்ல பாதிக்கப்பட்டிருந்தாரு. அதுவும் லாஸ்ட் ஸ்டேஜ். கண்டுக்காம இருந்ததால இப்போ... இப்போ ரொம்ப முடியாம இருக்காருடா, ஹிஸ் லாஸ்ட் மினிட்ஸ் ஐ திங். ஜான்சிய பார்க்கணும்னு ஆசைப்படுறாரு" என்று வரதன் சொல்லி முடிக்கவில்லை, குறுக்கிட்டது ஜான்சியின் குரல்.
"அப்பாக்கு என்னாச்சு?" அதிர்ச்சியோடு அவளுடைய குரல் ஒலிக்க, வரதன் அவளுக்கு புரியும்படி அனைத்தையும் சொன்னான்.
ஏற்கனவே வேதனையில் இருந்தவள் தன் தந்தையின் நிலையை அறிந்த மறுகணம் விழிநீரோடு சிறுபிள்ளை போல் அழ ஆரம்பித்துவிட்டாள்.
இதுவரை அவளுடைய தந்தை அவளுக்கு அன்பு காட்டியதில்லை, தந்தைக்குரிய கடமையை செய்ததில்லை, சிரித்துப் பேசியதில்லை. ஆனால், தந்தையாயிற்றே.
அவரின் நிலை அறிந்து அவளின் மனம் வலித்தது.
"அழாதம்மா, அப்பாக்கு..." வரதன் ஏதோ சொல்ல வர, "இந்தியா போறதுக்கான எல்லா அர்ரேன்ஜ்மென்டஸும் பண்றேன், ட்ரெஸ் பேக் பண்ணி ரெடியா இரு" என்று தடாலடியாக தன் முடிவை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் யாத்ரன்.
கிட்டத்தட்ட இரண்டே நாட்களில் இந்தியா செல்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருந்தான் அவன்.
அவளுடைய இரண்டாவது விமானப் பயணம். இந்த முறை ஜன்னலோர இருக்கை கிடைத்தும் ரசிக்க முடியவில்லை அவளால்.
தன்னவனோடு ஒரு வார்த்தைக் கூட பேசாமல் மௌனமாய் அவள் வர, சில கணங்கள் அவளை வெறித்துப் பார்த்திருந்த யாத்ரனோ அமைதியாய் விழிகளை மூடி சாய்ந்துக்கொண்டான்.
பயணம் முடியும் வரை இருவரிடத்தில் அமைதி மட்டுமே.
எப்படியோ பல மணிநேர பயணத்திற்கு பிறகு இருவரும் அந்த கிராமத்தை சென்றடைந்திருக்க, வழக்கம் போல் தங்களுக்குள் கிசுகிசுத்த வண்ணம் ஊருக்குள் செல்லும் காரை பார்த்துக் கொண்டிருந்தனர் ஊர் மக்கள்.
ஜான்சிக்கு கைக் கால்கள் நடுங்கியது. அவளுடைய உடல் பதற்றத்தில் வியர்க்கத் தொடங்க, அதை உணர்ந்தவனோ தன்னை மீறி அவள் கரத்தின் மீது தன் கரத்தை வைத்தான்.
"நீ நல்லாதானே இருக்க?" வார்த்தைகளில் மென்மையை தத்தெடுத்து அவன் கேட்க, "ஊரை விட்டு ஒதுக்கி வச்சிருக்காங்க, இப்போ வந்ததைப் பார்த்தா ஊர்க்காரங்க ஏதாச்சும் பிரச்சனை பண்ணுவாங்களோன்னு தோனுது" என்றாள் அவள் பயத்தோடு.
ஆறுதலாக அவளுடைய கரத்தில் அழுத்தம் கொடுத்தவன், "நான் இருக்கேன்" என்று அழுத்தமாக சொல்லி அவளுடைய விழிகளைப் பார்க்க, அப்போதுதான் நடப்பதை உணர்ந்தவளாய் அவன் விழிகளைப் பார்த்தாள் அவள்.
அவன் மேல் அவளுக்குள் இருக்கும் காதல் அவனை அணைக்கச் சொல்லி தூண்ட, கீழுதட்டைக் கடித்து உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அவன் கரத்திலிருந்து தன் கரத்தை உருவிக்கொள்ள, இப்போது யாத்ரனுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
அவன் சிறு அதிர்ச்சியோடு அவளைப் பார்க்க, சரியாக ஜான்சியின் வீட்டின் முன்னே நின்றது அந்த கார்.
***********
யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 23
👇👇
https://agnitamilnovels.blogspot.com/2026/05/23.html
'kadhaikulla polaama' யூடியூப் சேனல்ல இப்போ காதல்போதையடா நீ எனக்கு நாவல் ஆடியோ நாவலா போயிக்கிட்டு இருக்கு..
கிட்டத்தட்ட 10 அத்தியாயங்கள் பதிவிட்டாச்சு.. இதுவரைக்கும் கேக்காதவங்க கேக்க ஆரம்பிங்க.. கண்டிப்பா ரோஹனையும் மாயாவையும் உங்களுக்கு பிடிக்கும்
Channel name - kadhaikulla polaama 👇
Https://youtube.com/@kadhaikullapolaama99?si=ZIbEQ6qPd-b7cg-b
Pls subscribe my channel and keep supporting me 😍

Comments
Post a Comment