அதிரூபன் 10

 



"சார்..." என்று அலிஷா தயக்கமாக அழைக்க, ருத்ரனோ அவள் முன்னே அமர்ந்து ஒற்றைப் புருவத்தை கேள்வியாக ஏற்றி இறக்க, இவளுக்குதான் பேச்சே வரவில்லை.


"வாட்?" என்று அவன் அதிசயமாக  வாயைத் திறந்து கேட்டதும், "அது... இன்னைக்கு எனக்கு ஹாஃப் டே வேணும். மதியத்துக்கு அப்பறம் கெளம்புற மாதிரி பண்ணீங்கன்னா வசதியா இருக்கும்" என்று திக்கித்திணறி அவள் சொன்னதும், நாடியை நீவி விட்டவாறு அவளை ஒரு பார்வைப் பார்த்தான் ருத்ரன்.


"எதுக்கு?" என்று அவன் சந்தேகப் பார்வையோடுக் கேட்க, "அது... அது... என் பாட்டி சீரியஸ்ஸா ஹாஸ்பிடல்ல இருக்காங்க, அதான்..." என்று அவள் சொல்ல, அவனுடைய விழிகளோ மேலும் சந்தேகத்தில் இடுங்கின.


"பாட்டியா! அது எங்க இருந்து வந்தாங்க உனக்கு ஒரு புது பாட்டி? பொய் சொல்றியா என்ன?" என்று அவன் எழுந்து அவளை நோக்கி வந்தவாறுக் கேட்க, "அய்யய்யோ நோ சார், நான் உங்ககிட்ட பொய் சொல்லுவேனா என்ன? நிஜமாவே பாட்டி ரொம்ப சீரியஸா இருக்காங்க. நான் போயே ஆகணும்" என்றுக்கொண்டே இரண்டடி பின்னே நகர்ந்தாள் அலிஷா.


"ஆஹான்! சரி வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போ!" என்று விட்டு அவன் மேசையில் ஒற்றைக் காலை மடக்கி சாய்ந்துக்கொள்ள, "தே.. தேங்க் யூ சோ மச் சார்..." என்றவாறு அவள் வெளியே ஓடப் போக, "ஆதி..." என்றழைத்து நிறுத்தினான் ருத்ரன்.


சட்டென நின்றவள், அவனைப் பின்னே திரும்பிப் பார்த்து விட்டு "சொல்லுங்க சார்" என்று வெறுமையான குரலில் சொல்ல, "மிஸ் யூ..." என்ற ருத்ரனின் வார்த்தைகளில் உள்ளுக்குள் என்ன உணர்ந்தாளோ, அவனையே சில கணங்கள் வெறித்துப் பார்த்துவிட்டு அந்த அறையிலிருந்து வேகமாக வெளியேறினாள்.


தன் இருக்கையில் பிரம்மை பிடித்தது போல் வந்தமர்ந்த அலிஷாவைப் பார்த்த வைஷாலி, "ஏய் அலீ, அவர தனியாதானே மீட் பண்ண, போய் என் லெட்டர கொடுக்க வேண்டியதுதானே?" என்று காதில் கிசுகிசுக்க, அவளிடத்தில் எந்த பதிலுமே இல்லை.


அன்று மதியத்திற்குப் பிறகே அலிஷா ஆஃபிஸிலிருந்துவெளியேறி வீட்டுக்குச் சென்றவள், உடை மாற்றி விட்டு மது சொன்ன இடத்திற்கு வந்து அவளுக்கு அழைத்தாள்.


"மது நீ சொன்ன காஃபி ஷாப் முன்னாலதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீ எங்க இருக்க?" என்று அவள் கேட்க, "நீ அங்கேயே இரு அலீ, இப்போவே வரேன்" என்ற மது தான் சொன்னது போல் அடுத்த இரண்டே நிமிடங்களில் அலிஷா இருக்கும் இடத்துக்கு வந்து அவளை அழைத்துக்கொண்டு சென்றாள்.


அத்தனை பெரிய பிரம்மாண்டமான ஹோட்டலுக்குள் இப்போதுதான் முதல் தடவை வருகிறாள் அலிஷா. அவளால் அந்த பிரம்மாண்டத்தில் வாயைப் பிளக்காமல் இருக்க முடியவில்லை.


"வாவ் மது, இவ்வளவு பெரிய ஹோட்டல்லா... என்னால நம்பவே முடியல. இங்க பர்த்டே பார்ட்டீ பண்ண போறாங்களா, அந்த குழந்தை ரொம்ப குடுத்து வச்ச குழந்தை" என்று அலிஷா சுற்றி முற்றி ஆர்வமாகப் பார்த்தவாறுச் சொல்ல, "ஹாஹாஹா.... குழந்தையா நோ அலீ, இருபத்தைஞ்சு வயசுக்கு மேல இருக்கும் அந்த எருமை மாட்டுக்கு" என்று சொல்லி சிரிக்க, அதிர்ச்சியில் விழி விரித்தவள் பின் பொறாமையில் உதட்டைப் பிதுக்கினாள்.


அதன்பிறகு இருவருமே வேலையில் மூழ்க, அலிஷாவுக்கு ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்தவள் தன்  குழுவோடு சேர்ந்து எல்லா ஏற்பாட்டுக்களையும் சிறப்பாக செய்து முடிக்க சரியாக ஹரியும் ராதிகாவும் உள்ளே வர, அவனைப் பார்த்த அலிஷா, 'அடி ஆத்தீ!' என்றுக்கொண்டே மதுவின் பின்னே ஓடிச் சென்று ஒளிந்துக்கொண்டாள்.


"என்னாச்சு அலீ?" என்று அவள் பதறியபடிக் கேட்க, "என் பாஸ்" என்றவள் தங்களை நோக்கி வரும் ஹரியைக் காண்பிக்க, "ஓஹோ... இதுதான் உன் பாஸ்ஸா! இவரோட பர்த்டேக்கான அர்ரேன்ஜ்மென்ட்ஸ்தான் இது எல்லாமே" என்று தோழி சொன்னதும்தான் அவளுக்கு வைஷாலி சொன்னதும் ஞாபகத்திற்கு வந்தது.


"இது தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேனே!" என்றவள், ஹரி பக்கத்தில் நெருங்கியதும் மெல்ல அங்கிருந்து நழுவப் பார்க்க, அவனோ கண்டுகொண்டவன், "மிஸ்.அலிஷா, நீங்களா?" என்று கேட்டான் போலியான ஆச்சரியக் குரலில்.


"ஹிஹிஹி... ஹெலோ சார், ஹேப்பி பர்த்டே!" என்று அவள் அசடுவழிந்தவாறு சொல்ல, "சார், என் ஃப்ரென்ட்னு சொன்னேன்ல, அது இவதான். உங்க கம்பனியிலதான் இவ வர்க் பண்றான்னு எனக்கு தெரியல" என்றாள் மது புன்னகையோடு.


அவனும் அவளை ஆழ்ந்த பார்வை ஒன்று பார்த்தவன், எதுவும் பேசாமல் புன்னகையோடு கடந்து விட, அலிஷாவோ 'ஊஃப்ப்...' என பெருமூச்சு விட்டுக்கொண்டாள் என்றால், மதுவுக்கு அந்த பார்வை உள்ளுக்குள் ஏதோ செய்தது.


இவள் அது என்னவென்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவளருகே வந்த ராதிகா, "என்கேஜ்மென்ட்க்கு எல்லாம் ஓகேதானே?" என்று ஹரிக்கு கேட்காதவாறு ரகசிய குரலில் கேட்க, மதுவும் மெல்ல தலையாட்டினாள்.


அதன் பிறகு, வேகவேகமாக ஒவ்வொரு ஏற்பாடுகளும் நடைப்பெற்றன. விருந்தினர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்க, மதுவுக்கு அலிஷாவுடன் நின்று  பேசக் கூட நேரமிருக்கவில்லை.


அவளோ மதுவின் குழுவிலுள்ள ஆட்கள் சொல்லும் வேலையை செய்துக்கொண்டிருக்க, சரியாக ஹோட்டலுக்குள் நுழைந்தான் ருத்ரன்.


"ஏய் இரு ருத்ரா, நானும் வரேன்" என்றுக்கொண்டே பின்னே டேஸியும் வர, வேலையில் இருந்ததால் ருத்ரனை அலிஷா கவனிக்கவே இல்லை. 


உள்ளே கேக் வெட்டுவதற்காக பெரிய அலங்காரத்தோடு மேசை வைக்கப்பட்டு மூன்று தட்டுக்களில் அத்தனை அழகா கேக் பார்வைக்கு முன் இருக்க, ஹரியோ தன் தாயை ஒரு பார்வைப் பார்த்து விட்டு கேக்கை வெட்டினான்.


அலிஷாவோ அதை எட்டிப் பார்த்து விட்டு, "இதெல்லாம் ரொம்ப ஓவரு..." என்று பொறுமிக்கொள்ள, "வெயிட் அலீ, டோன்ட் ஐட்ஜ் அ புக் பை இட்ஸ் கவர்.. இன்னைக்கு உங்க பாஸோட என்கேஜ்மென்ட்டும் இருக்கு, அது சர்ப்ரைஸ். அவங்க அம்மாவோட கிஃப்ட்டாம். அதனாலதான் இந்தளவுக்கு அலங்காரம் பண்ணி  இருக்கோம்" என்று மது சொன்னதும்தான், 'ஓஹோ... இதுதான் சங்கதியோ?' என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டாள் மற்றவள்.


"நான் என்ன குழந்தையாம்மா, எல்லாரும் சிரிக்கிறாங்க" என்று ஹரி பற்களைக் கடித்தவாறு சொல்ல, "ஐ ஹேவ் அ சர்ப்ரைஸ் ஃபார் யூ!" என்ற ராதிகா மதுவிற்கு விழிகளால் சைகை செய்ய, உடனே அவள் அடுத்து நடக்க வேண்டியதை ஏற்பாடு சய்தாள்.


ஒருசிலர் நடு மேடைக்கு வந்து காதல் பாட்டொன்றுக்கு நடனமாட, ஹரியோ அவர்களை புரியாமல் பார்த்தான். திடீரென அவர்களுக்கு நடுவே வந்த கீர்த்தி அவர்களோடு சேர்ந்து அழகாக நடனமாட, சுற்றியிருந்தவர்களுக்கும் இப்போது ஆர்வம் கூடியது.


'ஓஹோ... இவங்கதான் மது சொன்ன அவங்களா?' என்று நினைத்துக்கொண்ட அலிஷாவுக்கு யாரோ தன்னையே பார்ப்பது போல் தோன்ற, சுற்றிமுற்றி பார்த்தவள் மீண்டும் நடப்பதை பார்வையிடத் தொடங்க, சிவப்பு நிற பார்ட்டீ ஃப்ரொக்கில் தேவதைப் போல் இடுப்பை வளைத்து  ஹரியையே பார்த்தவாறு ஆடினாள் கீர்த்தி.


சரியாக பாட்டு முடியும் தருவாயில் ஹரியும் முன் ஒற்றைக் காலை மடக்கி தரையில் அமர்ந்தவள், அவனை நோக்கி ஒரு அழகான மோதிரத்தை நீட்ட, இதை கொஞ்சம் கூட ஹரி எதிர்பார்க்கவில்லை என்பது அவனுடைய அதிர்ந்த முகமே அப்பட்டமாகக் காட்டியது.


"கீ.. கீர்த்தி... அது... நீ..." அவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. அவளோ அவன் முன் மோதிரத்தை நீட்டியவாறு, "வில் யூ மேர்ரி மீ?" என்று தன் ஆசையைக் கேட்க, ஹரியின் பார்வையோ சட்டென நிமிர்ந்து தன் முன்னே புன்னகையோடு நின்றிருந்த மதுவின் மீதுதான் பதிந்தது.


"என்னடா பார்த்துட்டு இருக்க, அவ எவ்வளவு நேரமா அப்படியா இருக்கா. கைய நீட்டு ஹரி, அம்மாவோட சர்ப்ரைஸ் எப்படி இருக்கு?" என்று ராதிகா கேட்க, விருட்டென தன் தாயை திரும்பிப் பார்த்தவனுக்கு இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை.


"மாம், நா.. நான் உங்ககிட்ட கேட்டேனா, எனக்கு இப்போ..." என்று அவன் ஏதோ சொல்ல வர, "இதெல்லாம் பேச இது நேரமில்ல, நீ சொல்லிதான் நான் உனக்கு கல்யாணம் பண்ணணுமா! உனக்கு எந்த நேரத்துக்கு என்ன பண்ணணும்னு எனக்கு நல்லாவே தெரியும். மொதல்ல மோதிரத்தை வாங்கிக்கோ, எல்லாரும் உன்னைதான் பார்த்துட்டு இருக்காங்க" என்றவர் சுற்றி இருப்பவர்களைப் பார்த்து, "எல்லாரும் க்ளேப் பண்ணி என்கரேஜ் பண்ணுங்க காய்ஸ்" என்றார் சத்தமாக.


சுற்றியிருந்தவர்களும், "மோதிரத்தை வாங்கிக்கோங்க ஹரி..." என்று கத்தி கரகோஷம் எழுப்ப, "ஹரி, ஐ லவ் யூ!" என்றாள் கீர்த்தி அத்தனை பேருக்கு மத்தியில். ஏனோ இவனுக்கு அவளை சங்கடப்படுத்தவும் விருப்பமில்லை.


விழிகளை அழுந்த மூடித் திறந்தவன், மதுவையே பார்த்தவாறு தன் கரத்தை நீட்ட, கீர்த்தியும் அவனுடைய மோதிர விரலில் தன் மோதிரத்தை அணிவிக்க, ராதிகாவோ ஹரியின் கையில் ஒரு மோதிரப் பெட்டியை திணித்தார்.


"இதை அவளோட விரல்ல போட்டு விடு கண்ணா" என்று அவர் சொல்ல, வேறு வழியில்லாமல் தன் கையிலிருந்த மோதிரத்தை கீர்த்தியின் விரலில் அவன் போட்டு விட, "தேங்க் யூ சோ மச் ஹரி, நான் பயந்துட்டே இருந்தேன். லவ் யூ அ லொட்!" என்றுக்கொண்டே அவனை அணைத்துக்கொண்டாள் கீர்த்தி.


மொத்தப் பேரும் கத்தி விசலடித்து அவர்களை உற்சாகப்படுத்த, ஹரியின் பார்வை மதுவையேதான் நாடியது. ஏனோ இப்போது வரை அவளை காண வேண்டும் என்கிற ஆர்வம் அவனுக்குள் அடிக்கடி தோன்றும், தன்னை மீறி உள்ளுக்குள் அவளை ரசித்திருக்கிறான். ஆனால், இதுதான் காதல் என்று அப்போது உணரவில்லை அவன்.


இப்போது இப்படியொரு நிலையில் உணர்ந்துவிட்டான் ஹரி. ஆனால், இதையெல்லாம் மது உணரவில்லை. தன் ஏற்பாடுகள் எல்லாம் தான் எதிர்பார்த்தது போல் நடந்துவிட்ட திருப்தி அவளுக்குள்.


அந்த சந்தோஷத்தில் மது இருக்க, இங்கு அலிஷாவுக்கோ தன்னை யாரோ பார்த்துக்கொண்டிருப்பது போல் உள்ளுக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது. இடது பக்க புருவத்தை நீவி விட்டவாறு அவள் ஏதாவது சாப்பிடலாம் என்று அங்கு உணவுகள் வைக்கப்பட்டிருந்த ஒரு அறைக்குள் நுழைய, அப்போதும் யாரோ பின்தொடர்வது போல ஒரு உணர்வு அவளுக்குள்.


'என்னடா இது, என்னைக்கும் இல்லாம ஒரு மாதிரி ஃபீல் ஆகிட்டே இருக்கு. ஏதோ சரியில்லன்னு மட்டும் தோனுது ச்சே!' என்று உள்ளுக்குள் யோசித்தவாறு அங்கிருந்த ஒரு குளிர்பான போத்தலை உடைத்து வாயிற்குள் சரித்தவள், 'அப்பாடா! இப்போதான் நிம்மதியா இருக்கு' என்று பெருமூச்சு விட்டவாறுத் திரும்ப, அடுத்தகணம் அதிர்ந்துப்போய் நின்றாள் அலிஷா.


அவளெதிரே நின்றிருந்தது சாட்சாத் ருத்ரனேதான். அவனோ அவளையே விடாது பார்த்துக்கொண்டிருக்க, ஒருகணம் ஆடிப் போய்விட்டாள் அவள்.


"சா.. சார் நீங்களா?" என்று அவள் அதிர்ந்த குரலில் கேட்க, "ஆதி..." என்றான் ருத்ரன் புன்னகையோடு.


'அய்யோ ஆதி ஆதின்னு நம்ம பேரையே நம்மள மறக்க வச்சிருவான் போல!' என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள், "நீங்க இங்க எப்படி சார்?" என்று கைகளைப் பிசைந்தவாறுக் கேட்க, "உன் பாட்டிதான் ரொம்ப சீரியஸா இருக்காங்கன்னு சொன்னியா... அதான் பார்க்க வந்தேன்" என்றான் ருத்ரன் ஒற்றைப் புருவத்தைத் தூக்கியபடி.


'அய்யய்யோ மாட்டிக்கிட்டோம்!' என்று உள்ளுக்குள் நினைத்து மிரண்டுப்போய் அவனைப் பார்த்தவள் மெல்ல நடந்து கதவை நோக்கி வந்தவாறு அவனைத் தாண்டி கதவைத் திறக்கப் போக, அவள் முழங்கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான் அவன்.


"ஆதி, நீ பண்ணது எனக்கு சுத்தமா பிடிக்கல. என்கிட்டயே பொய் சொல்லிட்டு இங்க வந்து வேலை பார்த்துக்கிட்டு இருந்திருக்க" என்று அவன் பற்களைக் கடித்துக்கொண்டு சொல்ல, இவளுக்கோ அவனின் உறுமலில் சப்த நாடியும் அடங்கிவிட்டது.


"என்னை விடுங்க!" என்று அவள் அவனின் பிடியிலிருந்து தன் கரத்தை உறுவ முயற்சிக்க, அவனோ விட்டபாடில்லை.


"நான் உன்கிட்ட பேசிட்டு  இருக்கேன் ஆதி, இப்படி பண்ணா எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு நல்லாவே தெரியும்" என்று அவன் கத்த, அதற்கு மேல் அலிஷாவின் பொறுமையும் காற்றில் பறந்தது.


"நோ... எனக்கு தெரியாது. நான் ஒன்னும் உங்க ஆதி இல்லை. என்னை கன்ட்ரோல் பண்ணாதீங்க, விடுங்க என்னை!" என்று அவள் கத்திக்கொண்டே தன் கரத்தை இழுத்தெடுத்தவள், அதற்கு மேல் அங்கு இருக்காது ஓடியே விட, ருத்ரனும் பின்னாலேயே சென்றான். கூட்டத்திற்கு நடுவே பேசிக்கொண்டிருந்த டேஸியும் இதை கவனித்து விட, ஹரியைத் தேடியவள் அவனை காணாது ருத்ரனின் பின்னே ஓடினாள்.


"ஆதி... ஆதி..." என்று கத்திக்கொண்டே ருத்ரன் அவளின் பின்னால் செல்ல, "ருத்ரா ஸ்டாப்!" என்று கத்தியவாறு அவன் பின்னால் ஓடினாள் டேஸி.


அலிஷாவோ ஹோட்டலிலிருந்து வெளியே வந்து வேகமாக நடந்துச் செல்ல, இவர்களின் நேரத்திற்கு மழையும் அடித்துப் பெய்தது. தலைமுடியை விரல்களால் கோதிய ருத்ரன், கோபத்தில் தரையை காலால் உதைத்துவிட்டு சட்டைக் கையை மடித்துவிட்டவாறு அவள் பின்னாலேயே ஓட, சட்டென அவன் முன்னே வந்து நின்றது ஒரு கார்.


ருத்ரனோ அதை கண்டுகொள்ளாதது போல் அந்த காரைத் தாண்டி செல்லப் போக, காரிலிருந்து இறங்கிய ஒருவன் ருத்ரன் கொஞ்சமும் எதிர்பார்க்காததில் அவனுடைய முதுகில் எட்டி உதைத்திருக்க, தரையில் விழுந்தான் அவன்.


அதைப் பார்த்ததுமே, "ருத்ரா..." என்று கத்திக்கொண்டே டேஸி ஒடி வர, அப்போதுதான் சத்தம் கேட்டு திரும்பிய அலிஷா அடியாற்கள் சூழ தரையில் விழுந்திருந்த ருத்ரனைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டாள்.


தன்னை தாக்கியவர்களின் மீது உண்டான கோபத்தில் பற்களைக் கடித்துக்கொண்டு சிவந்த விழிகளோடு திரும்பிய ருத்ரனோ கையில் நீண்ட கட்டையோடு நின்றிருந்தவனின் முகத்தைப் பார்த்து அதிர்ந்துப்போய் விழிகளை விரிக்க, அலிஷாவோ ருத்ரனை நோக்கி ஓடினாள்.


****************

அதிரூபன் 11 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/10/11.html


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls


Comments

Popular posts

தஷுரி 10