அதிரூபன் 11




"யாரைக் கேட்டு மாம், இப்படி ஒன்னு ப்ளான் பண்ணீங்க? நான் கீர்த்திய லவ் பண்றேன் அவள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு எப்போவாவது சொன்னேனா? சொல்லுங்க..." என்று ஹரி அடக்கப்பட்ட கோபத்தோடு சுவற்றுக்கு பின்னால் மறைந்திருந்தவாறு தன் அம்மாவிடம் கத்த, "நான் யாரைக் கேட்டு முடிவு பண்ணணும்? உன் விஷயத்துல எல்லா முடிவையும் எடுக்க எனக்கு உரிமை இருக்கு" என்று அழுத்தமாக சொன்னார் ராதிகா.


"திஸ் இஸ் டூ மச் மாம், இது என்னோட லைஃப். நான் கல்யாணம் பண்ண போற பொண்ணு எனக்கு பிடிச்சிருக்கணும்ல!" என்று அவன் இயலாமையோடுக் கேட்க, சலிப்பாக விழிகளை உருட்டினார் அவர்.


"கீர்த்திக்கு என்னடா குறை, அழகு படிப்பு பணம் எல்லாமே இருக்கு. அப்படி இருக்குறப்போ எதுக்குடா அவள வேணாம்னு சொல்லுற. கீர்த்திய விட உனக்கு பொருத்தமானவ யாருமே இல்லன்னுதான் எனக்கு தோனுது" என்று ராதிகா உறுதியாகச் சொல்ல, இவனுக்கு எப்படி தன் அம்மாவை சமாளிப்பது என்றே தெரியவில்லை.


"எல்லாமே இருக்கட்டும், ஆனா லவ்னு ஒன்னு இருக்கு. அவ மேல எனக்கு அது வரவே மாட்டேங்குது. நீங்க என் லைஃப்ல விளையாடுறீங்க மாம்" என்று அவன் கோபமாகப் பேச, அவரோ அவன் சொல்வதை எல்லாம் கேட்டபாடில்லை, தன் முடிவிலேயே உறுதியாக இருந்தார்.


சரியாக, "மேம்..." என்ற மதுவின் குரல் கேட்க, வேகமாகத் திரும்பிப் பார்த்தான் ஹரி.


"அது... மியூசிக் ஆன் பண்ண போறோம். சோ, எல்லாரும் டான்ஸ் பண்ண ரெடியா இருக்காங்க. ஹரி சாரும் கீர்த்தி மேடமும் ஆடினா ரொம்ப நல்லாயிருக்கும். கீர்த்தி மேடமும் சாருக்காகதான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க" என்று மெல்ல மது சொல்லி முடிக்க, "வாவ் இது  நல்ல விஷயமாச்சே! ஹரி ரெடியாதான் இருக்கான்" என்றார் ராதிகா உற்சாகமாக.


ஆனால், ஹரியின் பார்வையோ மதுவின் மீது பாவமாகப் பதிந்தது. 'ஏன்டீ, நான் இங்க உன்னை நினைச்சுட்டு இருக்கேன். நீ என்னடான்னா என்னை வேற ஒருத்தி கூட கோர்த்துவிட எங்க அம்மாவுக்கு ஐடியா கொடுக்குறியா பாவி! உனக்கு எங்கடீ புரிய போகுது என் ஃபீலிங்ஸு அய்யோ அய்யோ' என்று உள்ளுக்குள் பொறுமிக்கொண்டான் அவன்.


ராதிகாவும் மகனை இழுத்துக்கொண்டு ஹால் நடுவுக்கு செல்ல, அங்கு இவனுக்காகவே காத்திருந்த கீர்த்தி வேகமாக ஹரியின் அருகே ஓடி வந்து, ஷெல் வீ டான்ஸ் ஹரி?" என்று கரத்தை நீட்டியவாறுக் கேட்க, அவனோ மதுவைப் பார்த்தவாறு அவளின் கரத்தோடு தன் கரத்தை கோர்த்தான்.


அவளும் அவனை அழைத்துக்கொண்டு மேடைக்குச் சென்றவள் அவனின் உடலோடு உடல் உரச நடனமாடத் தொடங்க, ஹரிக்கு இதில் சுத்தமாக உடன்பாடில்லை.


"வாவ் ஹரி என்னால நம்பவே முடியல. நமக்கு என்கேஜ்மென்ட் ஆகிருச்சு. இட்ஸ் லைக் அ ட்ரீம்... எப்படி இருக்கு என்னோட சர்ப்ரைஸ்?" என்று கீர்த்தி ஆடியவாறு கேட்க, அவளை முறைத்துப் பார்த்தவன் எந்த பதிலும் பேசவில்லை.


அவனுடைய பார்வை தூரத்தில் கையில் ஃபைலை வைத்துக்கொண்டு எல்லாரும் ஆடுவதைப் பார்த்தவாறு நின்றிருந்த மதுவின் மேல் பதிய, அவனுக்கு சரியாக ஒரு யோசனைத் தோன்றியது.


"ஹேய் கீர்த்தி, நாம வேணா பார்ட்னர் சேன்ஜ் பண்ணி ஆடலாமா?" என்று கேட்டு அவளின் பதிலைக் கூட எதிர்பார்க்காது அவன் பாட்டிற்கு ஆடிக்கொண்டே அடுத்த ஜோடியின் புறம் தாவ, எல்லாருக்கும் ஹரியின் உற்சாகம் ஆர்வத்தைத் தூண்டியது.


அவனோடு இணைந்து பாடலுக்கேற்ப எல்லாரும் நடனமாட, மதுவுக்கோ ஆச்சரியமாக இருந்தது. அவள் தன்னை சுற்றி மொத்தப் பேரும் நடனமாடுவதை விழி விரித்துப் பார்த்துக்கொண்டிருக்க, சரியாக அவள் முன்னே வந்து நின்றான் ஹரி.


அவளுடைய அனுமதியைக் கேட்காது அவளுடைய கரங்களை இழுத்தெடுத்து தன் உடல் உரச நிறுத்தியவன் அவளிடையைப் பற்றி அணைத்தவாறு ஆடத் தொடங்க, "சா... சார் என்னை விடுங்க, எனக்கு ஆடத் தெரியாது. அய்யோ எல்லாரும் பார்க்குறாங்க" என்று  இவள் பதறிக்கொண்டிருக்க, அவனோ அதை எல்லாம் கண்டுகொள்வதாக இல்லை.


"சார் இப்போ நீங்க என்னை விடப் போறீங்களா இல்லையா? என்னோட டீம் மெம்பர்ஸ் பார்த்தா அவ்வளவுதான். அப்பறம் பாஸ்கிட்ட என்னை பத்தி கம்ப்ளைன் போகும். ப்ளீஸ் சார்!" என்று இவள் காலில் விழாத குறையாக அவனிடமிருந்து விலக முயற்சித்தவாறு கெஞ்ச, அவளை தன்னோடு மேலும் நெருக்கியவாறு அவள் முகத்தைப் பார்த்தான் ஹரி.


அவனின் விழிகளைப் பார்த்தவளுக்கு அதிலிருந்த பிடிவாதம் ஏதோ ஒன்றை உணர்த்துவது போல இருக்க, அவளுடைய இதயத்துடிப்போ படுவேகமாக அடிக்கத் தொடங்கியது.


"மது..." ஹஸ்கி குரலில் அவன் அழைக்க, இவளோ அவனையேதான் இமை மூடாமல் பார்த்திருந்தாள்.


"ஐ லவ் யூ!" என்று அவன் பட்டென்று சொல்லி விட, அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போய் விட்டாள் மது. இதை கொஞ்சம் கூட அவள் எதிர்பார்க்கவில்லை. இது கனவோ என்று கூட தோன்றியது அவளுக்கு.


ஏனோ வார்த்தைகள் கூட தந்தியடிக்க, பேச முடியாமல் சிலை போல் நின்றிருந்தவள், "ஹரி..." என்ற ராதிகாவின் அதட்டலில்தான் நடப்புக்கு வந்தாள்.


"ஏய்  ஹரி, என்ன பண்ணிக்கிட்டு இருக்க. கீர்த்திய விட்டுட்டு ஏதோ கண்டவ கூட ஆடிட்டு இருக்க. பைத்தியமாடா உனக்கு, அவ உன்னை பத்தி தப்பா நினைக்க மாட்டாளா என்ன! பாரு, பாவமா ஒரு ஓரமா நின்னுகிட்டு இருக்கா. போய் அவ  கூட பேசு!" என்று மகனின் கரத்தைப் பற்றி அவர் இழுத்துக்கொண்டு செல்ல, அவனோ திரும்பி மதுவைப் பார்த்து ஒற்றைக் கண்ணை சிமிட்டினான்.


அதில் வாயைப் பிளந்தது என்னவோ பெண்ணவள்தான். இங்கு இவ்வாறு இருக்க, வெளியில் தரையில் கிடந்த ருத்ரனோ தன் முன் நின்றிருந்தவனை உற்றுப் பார்த்த அடுத்தகணம் அவனுடைய விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.


"சுதாகர்..." என்று ருத்ரனுடைய இதழ்கள் முணுமுணுக்க, சுதாகரோ விஷம சிரிப்பு சிரித்தவாறு தன் கையிலிருந்த கட்டையால் ருத்ரனின் தலையில் அடிக்க வர, லாவகமாக அந்தை கட்டையைப் பிடித்தான் ருத்ரன்.


"சுதாகர், நமக்குள்ள பிரச்சனை வேணாம். என்னால எப்போவுமே ஆதிய விட முடியாது" என்று அவன் அழுத்தமாகச் சொல்ல, "மறுபடியும் என்னடா விட முடியாது? அவளதான் கொன்னுட்டியே" என்றுக்கொண்டே அவன் ருத்ரனை அடிக்க, இப்போது ருத்ரனின் முழங்கையில் நன்றாக விழுந்தது அந்த அடி.


"ஆஆ... சுதாகர்..." என்று அவன் பற்களைக் கடிக்க, சுதாகரோ அவனை யோசிக்க விடாது சரமாரியாக அடித்துக்கொண்டு போக, ருத்ரனோ ஒரு அடிக் கூட அவனைத் திருப்பி அடிக்கவில்லை. அவன் நினைத்திருந்தால் லாவகமாக தப்பித்து சுதாகரை புரட்டியெடுத்திருக்க முடியும், ஆனால் அவன் அடிகளை வாங்கிக்கொண்டதற்கான காரணத்தை டேஸி நன்றாகவே அறிந்திருந்தாள்.


"சுதாகர் நான் சொல்றத..." என்றுக்கொண்டே அவன்  மீண்டும் ஏதோ சொல்ல போக, சுதாகர் ருத்ரனின் பின்னந்தலையில் ஓங்கி அடித்த அடியில் அவனோ அப்படியே மயங்கி சரிய, மழைநீரோடு சேர்த்து அவனின் இரத்தமும் ஆறாக ஓடியது.


அவன் விழுந்ததைப் பார்த்ததுமே "ருத்ரா..." என்று கத்திக்கொண்டு டேஸி ஓடி வர, தூரத்தில் நின்றிருந்த அலிஷாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.


சற்று நேரத்திற்கு முன் நடந்ததை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. "சார்..." என்று கத்திக்கொண்டு வந்த அலிஷா உடனே ருத்ரனின் தலையை தன் மடியில் சாய்த்து அவனுடைய கன்னத்தைத் தட்டியவாறு அழ ஆரம்பிக்க, முன்னே ருத்ரனை வெறியோடு பார்த்திருந்தான் சுதாகர்.


"சார்... ருத்ரா சார்... கண்ண திறங்க!" என்று அவள் பதற்றமாக அழைத்தவாறு அவனை உலுக்க, அப்போதுதான் இரத்தத்தை கவனித்தவளுக்கு கிட்டத்தட்ட தலையே சுற்றிவிட்டது.


உடனே அவள் நிமிர்ந்து சுதாகரைப் பார்க்க, அவனும் சரியாக ருத்ரனிடமிருந்து பார்வையை விலக்கி அலிஷாவைதான் நோக்கினான். இவளோ அவனை கோபமாகப் பார்க்க, சுதாகரின் கையிலிருந்த கட்டையோ தரையில் விழ,  தன் முன்னே இருந்தவளைப் பார்த்து பேரதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு.


"ஆ... ஆதிரா..." அவனுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிய, வார்த்தைகள் வர மறுத்தன. இறந்தவள் என்று நினைத்தவள் இப்போது கண் முன்னே இருந்தால் யாருக்குதான் அதிர்ச்சியாகாமல் இருக்கும்!


"ஆதிராம்மா... அம்மா ஆதிரா... ஆதி..." என்று கலங்கிய விழிகளோடு தான் காண்பதை நம்ப முடியாமல் அவன் அலிஷாவை நோக்கி தடுமாறியபடி வர, அவளோ புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க, சரியாக போலீஸ் ஜீப் சத்தம் கேட்டது.


"அண்ணே போலீஸ் வருது, வாங்க சீக்கிரம் போயிரலாம். இல்லன்னா அவ்வளவுதான்" என்று சுதாகரின் அடியாள் பதறியபடி அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு போக, சுதாகரின் பார்வையோ அலிஷாவை விட்டு நகரவே இல்லை.


"அண்ணே என்ன பண்றீங்க, வாங்க போகலாம்" என்று அந்த அடியாள் சுதாகரை இழுத்துக்கொண்டே சென்றுவிட, டேஸியோ வேகமாக தன்னுடைய காரை எடுத்து வர, இருவரும் சேர்ந்து ருத்ரனை காருக்குள் படுக்க வைத்தனர்.


அலிஷாவோ அடுத்து என்ன செய்வது என்று கூடத் தெரியாமல் யோசித்துக்கொண்டிருக்க, "அலீ ப்ளீஸ்" என்று டேஸி விழிகளை சுருக்கி கெஞ்சலாகக் கேட்டதும் உடனே ருத்ரனின் அருகில் ஏறிக்கொண்டாள் அவள்.


ஹாஸ்பிடலில்,


ருத்ரனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருக்க, வெளியில் யோசனையோடு அமர்ந்திருந்தனர் டேஸியும் அலிஷாவும். சரியாக அப்போதுதான் நடந்தது கேள்விப்பட்டு ருத்ரனைத் தேடி வந்தான் ஹரி.


"டேஸி, ருத்ராவுக்கு என்னாச்சுடீ, யார் பண்ண வேலை இது?" என்று அவன் கோபக் குரலில் கேட்க, "சுதாகர்" என்றாள் டேஸி ஒரே வார்த்தையில்.


ஹரிக்கோ கோபம் உச்சத்தைத் தொட, கோபத்தில் கை முஷ்டியை இறுக்கி சுவற்றில் குத்தினான். "அவன சும்மாவே விட மாட்டேன்" என்று இவன் ஆத்திரத்தில் வெடிக்க, "அவன் மேல கை வைக்க ருத்ரன் விட மாட்டான், அது உனக்கே தெரியும். அவன் அத்தனை அடிச்சும் திருப்பி ஒரு அடி கூட அவன் அடிக்கல" என்று டேஸி உணர்ச்சியற்ற குரலில் சொன்னதும்தான், அலிஷா நடந்ததை யோசித்துப் பார்த்தாள்.


"ச்சே! இன்னும் எவ்வளவு காலத்துக்கு அவங்க துரத்த இவன் ஓடிட்டே இருக்க போறான்? ருத்ரன் சரின்னு ஒரு வார்த்தை சொன்னா போதும் அந்த வீட்டு ஆம்பிளைங்க மொத்தப் பேரையும் கொன்னுடுவேன்" என்று இவன் உறும, "நோ ஹரி, இதுக்கான சொல்யூஷன் ருத்ரன் கிட்டதான் இருக்கு. நாம என்ன பேசினாலும் அது வேலைக்கு ஆகாது, அவன் ஒத்துக்கணும்" என்று உறுதியாக சொன்னாள் அவள்.


ஹரியும் தீவிரமாக யோசிக்க, "இங்க என்னதான் நடக்குதுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்று பயந்தபடிக் கேட்டாள் அலிஷா.


ஹரியும் டேஸியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு அலிஷாவை  தயக்கத்தோடுப் பார்க்க, அவளோ தன் பர்சிலிருந்த புகைப்படத்தை அவர்களை நோக்கி நீட்டவும், இருவருடைய விழிகளும் அதிர்ந்து விழித்தன.


"இந்த ஃபோட்டோ எப்படி உன்கிட்ட?" என்று ஹரி அதிர்ச்சியோடுக் கேட்க, "ருத்ரா சாரோட பர்ஸ்ல இருந்துச்சு. ஒருவேள அவர் சொல்ற ஆதிரா இவங்கதானா? நான் இவங்கள மாதிரியே இருக்குறதாலதான் அவர் என்னை ஆதின்னு கூப்பிடுறாரா? இப்போ அங்க வச்சு ருத்ரா சார அடிச்ச அந்த ஆளு கூட என்னை ஆதிரான்னு கூப்பிட்டாரு. அவர் யாரு? அவருக்கும் ஆதிராவுக்கும் என்ன சம்பந்தம்? ப்ளீஸ் எனக்கு எல்லாத்தையும் தெளிவா சொல்லுங்க" என்று குழப்பத்தோடுக் கேட்டாள் அலிஷா.


'உன்னை பத்தி நீயே கேக்குறியே அலீ' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள், "அலீ, இதுதான் ஆதிரா. ருத்ரனோட லவ் ஆஃப் லைஃப். அவங்க மீட் பண்ணதே ஒரு மாதிரியான மேஜிக்தான். இரண்டு பேரோட லவ்க்கும் எல்லையே இல்லை. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தியே அவன்தான் சுதாகர். ஆதிராவோட அண்ணன். குடும்பமே ஜாதி வெறின்னு அலைவாங்க. அந்த குடுபத்தாலதான் அவங்க பிரிஞ்சாங்க. இல்லன்னா ருத்ராவோட கெத்தே வேற தெரியுமா...?" என்று நடந்த சம்பவங்களை அவள் சொல்ல, அலிஷாவோ விழி விரித்து அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.


"என்.. என்னால நம்பவே முடியல" என்ற அலிஷாவுக்கு தன்னை மீறி அழுகை வர, கலங்கும் விழிகளை இமை சிமிட்டி அடக்கிக்கொண்டாள் அவள்.


"நாலு வருஷமாச்சு இன்னும் ருத்ரா மாறவே இல்லை. எங்களுக்கு எப்படியாச்சும் அதை சரி பண்ணணும். அதுக்கு உன்னோட உதவி தேவைப்படுது அலீ" என்று டேஸி மெல்ல விடயத்தை சொல்ல வர, அலிஷாவோ குழப்பமாக தன் முன் நின்றிருந்த இருவரையும் பார்த்தாள்.


"என்ன உதவி?" என்று அவள் கேட்டதும், "அது அலிஷா..." என்று சொல்ல வந்த ஹரியை தடுப்பது போல் அறையிலிருந்து வெளியே வந்தார் டாக்டர்.


"காயத்துக்கு மருந்து போட்டிருக்கு. இன்னும் கொஞ்சம் பலமா அடிபட்டிருந்தா மிஸ்டர் ருத்ரன காப்பாத்தி இருக்கவே முடியாது. நவ் ஹீ இஸ் ஆல்ரைட். இன்னும் வன் ஹவர்ல கண் முழிச்சதும் போய் பாருங்க" என்று டாக்டர் சொல்ல, "தேங்க்ஸ் டாக்டர்" என்று இருவரும் சொல்ல, ஒரு தலையசைப்போடு அங்கிருந்து நகர்ந்தார் டாக்டர்.


"இப்போ சொல்லுங்க என்ன உதவி?" என்று டாக்டர் சென்ற அடுத்தகணம் அலிஷா கேட்க, "அது... அது வந்து... நாம கேன்டீன்ல போய் பேசலாமா?" என்று கேட்டாள் டேஸி பதற்றமாக.


அவளும் தலையசைக்க மூவரும் ஹாஸ்பிடலுள்ள கேன்டீனில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர்.


"இப்போ சொல்லுங்க, என்ன ஹெல்ப்?" என்று அவள் கேட்டதும், "அதை பத்தி சொல்றதுக்கு முன்னாடி நான் ஒன்னு சொல்லிக்கிறேன். ரீசன்ட்டா உன் ஃபேமிலி ரொம்ப கஷ்டத்துல இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். உன் அப்பாவுக்கு சீரியஸ், ஏகப்பட்ட கடன், ஒன்னுக்கும் உதவாத தம்பி. இதை எல்லாம் சரிபண்ண நீ இங்க வந்து கஷ்டப்பட்டுட்டு இருக்க. ஒருவேள, நீ எங்களுக்கு அந்த உதவிய பண்ணேன்னா இந்த மொத்த கஷ்டத்தையும் நாங்க சரிபண்ணுவோம்" என்றான் ஹரி தெளிவாக.


"ஆமா அலீ, உன் அப்பாவுக்கு பெஸ்ட் ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் பண்றதுக்கான ஏற்பாட்டை நாங்களே பண்ணி தரோம். உன் மொத்தக் கடனையும் நாங்களே அடைச்சிருவோம். என்ட் உன் தம்பி அவனுக்கு எங்க ப்ரான்ச்லயே வேற ஏதாச்சும் ஒரு கம்பனியில வேலை போட்டு கொடுக்குறோம்" என்று டேஸி சொல்ல, வாயைப் பிளந்துக் கேட்டாள் அலிஷா.


'இந்தளவுக்கு ஆஃபர் கொடுக்குறாங்கன்னா அப்படி என்ன உதவி என்கிட்ட எதிர்பார்க்குறாங்க?' உள்ளுக்குள் யோசித்தவாறு அவள் அந்த இருவரையே பார்த்திருக்க, அடுத்து அவர்கள் சொன்னதைக் கேட்டவளுக்கு ஒருகணம் தலையே சுற்றி விட்டது.


**************


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls



Comments

  1. என்ன... ருத்ரனோட லவ்வர் & வைஃப் ஆதிராவா நடிக்கச் சொல்லி கேட்கப் போறாங்க... அப்படித்தானே...?

    😀😀😀
    CRVS (or) CRVS2797

    ReplyDelete

Post a Comment

Popular posts

தஷுரி 10