அதிரூபன் 08

 




"நாளைக்கு ஃபங்ஷன் இருக்கு. இன்னைக்கும் ஆஃபீஸ் போகணுமாடா?" என்று ராதிகா கேட்க, அதைக் கேட்டும் கேட்காதது போல் ஆஃபீஸுக்கு செல்ல தயாராகி மாடியிலிருந்து இறங்கி உணவு மேசையில் அமர்ந்துக்கொண்டான் ஹரி.


"நான் பேசுறது கேக்குதா இல்லையா, உன்கிட்டதானே சொல்லிட்டு இருக்கேன்" என்று அவர் சற்று கடுப்பாகக் கேட்க, "தெரியும் மாம், பட் ஆஃபீஸ்ல ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் போயே ஆகணும்" என்றான் அவன் இரண்டு சப்பாத்திகளை எடுத்து தன் தட்டில் வைத்தவாறு.


"ஏன் இந்த மீட்டிங்க ருத்ரன் அட்டென்ட் பண்ணாதான் என்னவாம்? ஆமா... அவனுக்கு ஏதோ மனநிலை சரியில்லன்னு கேள்விப்பட்டேன். நிஜமாவா? அந்த பொண்ணு இறந்ததுலயிருந்து தானே அவன் இப்படி ஆகிட்டான்" என்று ஊர்க்கதைகள் பேசும் பெண்ணாக ராதிகா ருத்ரனைப் பற்றி பேசிக்கொண்டு போக, "ஷட் அப் மாம்" என்று தன் தாயை முறைத்துப் பார்த்தான் ஹரி.


"அவன பத்தி எதுவும் பேசாதீங்க... உங்களுக்கு ஆரம்பத்துலயிருந்தே அவன பிடிக்காது, பட் அவன் என்னோட ஃப்ரென்ட். நீங்க பேசுறத என்னால கேட்டுட்டு இருக்க முடியாது" என்று அவன் அழுத்தமாகச் சொல்ல, 'அவன் பேச்சை எடுத்தாலே எனக்கும் என் மகனுக்கும் பிரச்சனைதான்' என்று முணுமுணுத்துக்கொண்டவர், "அவன விடு, இன்னைக்கு போய் அந்ந ஈவென்ட் ப்ளேன்னர்ஸ்ல கொஞ்சம் விசாரிச்சிக்கோ, எல்லா ஏற்பாடும் பக்காவா நடக்குதான்னு" என்று சொல்ல, சட்டென தன் அம்மாவை நிமிர்ந்துப் பார்த்தான் அவன்.


"இதுதான் என்னோட சர்ப்ரைஸ் பர்த்டே  பார்ட்டீயா... சூப்பர்! இப்படி ஒரு சர்ப்ரைஸ்ஸ யாருமே கொடுத்திருக்க மாட்டாங்க" என்று அவன் திட்டிக்கொண்டே எழுந்து செல்லப் போக, "பின்ன, நானா இதை எல்லாம் போய் விசாரிச்சிட்டு இருக்க முடியும். வயசான காலத்துல என்னால எப்படிப்பா முடியும்?" என்று அவர் சொல்லவும், திரும்பி ஒற்றைப் புருவத்தை தூக்கிய தோரணையில் அவரை ஒரு பார்வைப் பார்த்தான் அவன்.


"அப்போ இந்த வயசான காலத்துல லேடீஸ் க்ளப், ஃபெமினிஸ்ட் மீட்டிங்னு அலைய முடியும். அப்படிதானே?" என்று அவன் முறைத்தவாறுக் கேட்க, "ஹிஹிஹி..." என அசடுவழிந்தார் அவர்.


ஹரியும் சலிப்பாக தலையாட்டி விட்டு வீட்டிலிருந்து வெளியேறப் போக, சரியாக வேகமாக உள்ளே ஓடி வந்து அவனுடைய மார்பிலேயே மோதி நின்றாள் கீர்த்தி.


அவளைப் பார்த்ததும், 'அடி ஆத்தீ! ஓடிருடா கைப்புள்ள...' என்று அவன் உள்ளுக்குள் பதறியவாறு வேகமாக நகரப் பார்க்க, "ஹரி... ஸ்டாப்! நான்தான்" என்றுக்கொண்டே அவன் முன்னே சென்று நின்றாள் கீர்த்தி.


"ஏன் என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி போற, என்ன என்னை டீஸ் பண்றீயா?" என்று அவள் இடுப்பில் கைக்குற்றி போலியாக முறைத்த வண்ணம் கேட்க, "ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை, வர்க் இருக்கு அதான்..." என்று தயங்கினான் அவன்.


"ஓஹோ... சரி விடு, நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு" என்று அவள் சொல்ல, "சர்ப்ரைஸ்ஸா... நீயும் அது என்னன்னு சொல்லிடேன்ம்மா" என்றான் அவன் தன் அம்மாவை நினைத்து.


"நோ நோ... நாளைக்கு நீயே பார்ப்ப" என்று அவள் சொன்னதும், எதுவும் பேசாமல் அவன் அங்கிருந்து நகர்ந்து தன் காரை நோக்கிச் செல்லப் போக, "ஹரி டேஸி ஏன் என் கால ஆன்சர் பண்ணவே மாட்டேங்குறா?" என்று புரியாமல் கேட்டாள் அவள்.


"க்ளினிக்ல ஒரே கூட்டமாம், ரொம்ப பிஸி அதான்..." என்று கத்தி சொன்னவன், 'நேர்ல இவள பார்த்துக்க வாய்ப்பில்லாததால தப்பிச்சிட்டல்ல, இருடீ உன்னை இவளோட கோர்த்து விடுறேன்' என உள்ளுக்குள் நினைத்து சிரித்தவாறு தன் காரிலேறி பறக்க, போகும் அவனை காதலாகப் பார்த்திருந்தாள் கீர்த்தி.


இங்கு ஹரியோ காரை ஆஃபீஸை நோக்கி செலுத்தாமல் நேராக ஈவென்ட் ப்ளேன்னர்ஸை நோக்கி செலுத்தினான். இவன் ஆஃபீஸ் முன்னால் காரை நிறுத்த, அவனுடைய காருக்கு நேரே மோதுவது போல் வந்த மது பயத்தில் அப்படியே உறைந்துப் போய் நின்றுவிட்டாள்.


"ச்சே!" என்று வேகமாக காரிலிருந்து இறங்கிய ஹரி, "நீயும் உன் வண்டியும் என் கார் முன்னாடியேதான் வந்து விழுந்துகிட்டு இருப்பீங்களா?" என்று கோபமாகக் கேட்க, மதுவுக்கோ அப்போதும் உடல் நடுக்கம் குறையவில்லை.


"ஹெலோ..." என்று அவன் அவளை உலுக்க, ஏதோ தூக்கத்திலிருந்து விழித்தது போல் மலங்க மலங்க விழித்தவள், "சா... சாரி என் மேல தான் தப்பு, ஐ அம் ரியலி சாரி!" என்று தடுமாறியபடி சொல்ல, அவனோ ஒற்றைப் புருவத்தைத் தூக்கி அவளை முறைத்துப் பார்த்தான்.


"சாரி கேட்டா சரியாகிடுமா? இது ஒன்னும் ஃபர்ஸ்ட் டைம் இல்ல, ஐ திங் உனக்கு என் கார் மேல ஒரு கண்ணு இருக்குன்னு நினைக்கிறேன். அதான்  அடிக்கடி விழுந்துட்டே இருக்க" என்று நாடியை நீவி விட்டவாறு ஹரி சொன்னதும், இப்போது மதுவுக்கோ சுர்ரென்று கோபம் எகிறியது.


"என்ன பேசுறீங்க நீங்க, அன்னைக்கு உங்க தப்பு. என் வண்டிய இடிச்சிட்டு உங்க பாட்டுக்கு போனீங்க. அதான் கல்லால கண்ணாடிய உடைச்சேன். இ.. இப்போ என் தப்புதான். அதுக்காக நீங்க இப்படி பேசக் கூடாது" என்று அவள் அவனோடு வாதிட, மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டி அவளையே பார்த்திருந்தான் அவன்.


அப்போதுதான் நடப்பை உணர்ந்தவளாக, 'ச்சே! என்ன காரியம் பண்ணிட்ட மது' என்று மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டவள், "சாரி சார், நீங்க விக்கி சார்கிட்ட மட்டும் சொல்லிராதீங்க. இந்த வேலைய விட்டா அவ்வளவு தான். நானும் என் பாட்டியும் என் ஃப்ரென்டும்  நடுத்தெருவுல தான் நிக்கணும்" என்று பாவம் போல் சொல்ல, ஹரியோ முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டான்.


மதுவோ அவனின் முகத்தையே பாவம் போல் பார்த்திருக்க, "ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என்று தொண்டையை செருமியவன், "அப்போ என்னோட காஃபி சாப்பிட வந்தேன்னா நான் சொல்ல மாட்டேன்" என்றான் குறும்புப் புன்னகையோடு.


"வாட்! நோ நோ... அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஆல்ரேடி லேட், இப்போ மட்டும் நான் ஆஃபீஸ்ல இல்லன்னு தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான். விக்கி சார் என்னை மட்டும் எப்போவுமே ஸ்பெஷலா நோட் பண்ணுவாரு. சோ, மாட்டிக்கிட்டு என்னால திட்டு வாங்க முடியாது" என்று பயந்தபடி அவள் சொல்ல, "விக்கி கிட்ட நான் பேசிக்கிறேன். நீ வா..." என்று இப்போது உரிமையோடு அழைத்தான் ஹரி.


சில கணங்கள் யோசித்தவள் சம்மதமென தலையை எல்லா பக்கமும் ஆட்டி வைக்க, உடனே கார் கதவை திறந்தவன், "கார்ல ஏறு மது" என்று சொல்ல, அதை 'ஙே' என ஒருகணம் பார்த்தவள், "ஏன் பக்கத்துல இருக்குற காஃபி ஷாப்க்கு போக இம்புட்டு பெரிய வண்டி, நாம வேணா ஸ்கூட்டில போகலாமா?" என்று கேட்டாள் வெகுளியாக.


அதில் அவளை அதிர்ந்துப் பார்த்த ஹரி, அவள் ஸ்கூட்டியை அவன் முன்னே கொண்டு வந்து நிறுத்தியதும் அவளின் பின்னே சென்று அமர்ந்துக்கொண்டான். 


அவனோ சுற்றி முற்றி பார்த்தவாறே அவளோடு  செல்ல, மதுவோ அவள் பாட்டிற்கு வண்டியை கொண்டு சென்று ஆஃபீஸுக்கு பக்கத்திலிருந்த டீ கடைக்கு முன்னே வண்டியை  நிறுத்தி, "வந்தாச்சு" என்று சொல்ல, அவனோ அண்ணாந்துப் பார்த்து எதையோ தீவிரமாகத் தேடினான்.


அதைக் கவனித்தவள், "சார், என்ன தேடுறீங்க?" என்று புரியாமல் கேட்க, "இல்லை... காஃபி ஷாப் கூட்டிட்டு போறேன்னு சொன்ன. இப்போ இங்க கொண்டு வந்து வண்டிய நிறுத்தியிருக்க. அதான் காஃபி ஷாப்ப தேடிட்டு இருக்கேன்" என்று தீவிர முக பாவனையோடு சொல்ல, பக்கென்று சிரித்து விட்டாள் மது.


"ஐயோ நீங்க என்ன இவ்வளவு வெகுளியா இருக்கீங்க! இதோ இருக்கு நம்ம காஃபி ஷாப்..." என்று அவள் தன் இடது பக்கத்திலிருந்த சிறிய கடை ஒன்றைக் காட்டி சொல்ல, வாயைப் பிளந்து அதைப் பார்த்தவன், "இ... இது... இங்க எப்... எப்படி?" என்று தடுமாறியபடி பேச, அவன் பேசி முடிப்பதற்குள் அந்த கடைக்கு முன் போடப்பட்டிருந்த சிறிய பெஞ்சில் அமர்ந்துக்கொண்டாள் மது.


"சார், இங்க வந்து உட்காருங்க யாராச்சும் வந்து உட்கார்ந்துட போறாங்க" என்று அவனையும் அவள் தன் பக்கத்தில் வந்து அமர சொல்ல, வேறு வழி இல்லாமல் சுற்றிமுற்றி பார்த்தபடி அவளின் பக்கத்தில் சென்று அமர்ந்துக்கொண்டான் அவன்.


அந்த கடைக்காரரும் இருவரிடம் இரண்டு டீ க்ளாஸ்களை நீட்ட, தானே இரண்டையும் வாங்கிக்கொண்டு அதில் ஒன்றை ஹரியிடம் கொடுத்தவள் தன் கையில் இருந்ததை ருசித்து குடிக்க ஆரம்பிக்க, சிரித்தபடி தானும் அருந்தினான் ஹரி.


"மது, எத்தனை வருஷமா நீ மும்பையில இருக்க?" என்று அவன் தன் சந்தேகத்தைக் கேட்க, "நான் இங்க வந்து ஒரு எயிட் இயர்ஸ் இருக்கும். பாட்டி கூடத்தான் இருக்கேன். அம்மா அப்பா ஒரு ஆக்சிடன்ட்ல இறந்துட்டாங்க. என்ட், இப்போ என் ஃப்ரென்டும் என் கூட இருக்கா" என்று சொல்ல, ஹரியின் இதழ்கள் மர்மமாகப் புன்னகைத்தன.


"ஃப்ரென்டா.. இந்த மும்பையில யாரையும் நம்ப முடியாது. சோ, கெயார்ஃபுல் மது" என்று அவன் சொல்ல, "நோ நோ... அலீ ரொம்ப ரொம்ப நல்லவ. அஞ்சு வருஷமாதான் எனக்கு அலீய தெரியும், அப்பா அம்மாவுக்கு ஆக்சிடென்ட் ஆகும் போது அந்த வண்டியில நானும் தான் இருந்தேன். ஜஸ்ட் மிஸ், காயங்களோட நான் தப்பிச்சிட்டேன். அப்போ அலீஷாவையும் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருந்தாங்க. அவளும் ஆக்சிடென்ட் கேஸ்தான். இரண்டு பேரும் பக்கத்து பக்கத்து ரூம்" என்று அவள் பேசிக்கொண்டே போக, ஆடவனின் புருவங்களோ யோசனையில் முடிச்சிட்டிருந்தன.


"ஓ..." என்று யோசனையோடே சொன்னவன், "எந்த ஹாஸ்பிடல்?" என்று சந்தேகத்தோடுக் கேட்க, "திருச்சிக்கு பக்கத்துல..." என்று அவள் சொல்லி  முடித்ததும்தான் தாமதம், சட்டென எழுந்து நின்றுவிட்டான் அவன்.


"என்னாச்சு?" என்று அவள் பதற்றமாகக் கேட்க, "நோ... நா..நான் வந்ததே நாளைக்கு பார்ட்டீக்கு எல்லா அர்ரேன்ஜ்மென்ட்ஸும் பக்காவா இருக்கான்னு கேட்கதான், நவ் ஐ ஹேவ் டூ கோ... நாளைக்கு பார்க்கலாம் மது" என்றுக்கொண்டே அவன் தன் காரை நோக்கிச் செல்ல, ஏதோ ஞாபகம் வந்தவளாக, "ஹரி சார்... அது நான்..." என்று எதையோ சொல்ல வந்தவளின் வார்த்தைகள் காற்றில் கரைந்த கற்பூரமாகின.


அப்போதே ஹரியை பார்த்து விதி சிரிக்க,  இங்கு கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து வராத கண்ணீரை துடைத்துக்கொண்டிருந்தாள் அலிஷா.


'இவங்க மத்தியில பொழப்ப நடத்துறது ரொம்ப கஷ்டமா இருக்குப்பா, அய்யோ அய்யோ அய்யோ...' என்று ஆஃபீஸ் வாஷ்ரூமிற்குள் இருந்து புலம்பிக்கொண்டவள், மீண்டும் வெளியே வந்து தன் இருக்கையில் அமர்ந்துக்கொள்ள, "என்னாச்சு அலீ, ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?" என்று புரியாமல் கேட்டாள் வைஷாலி.


'அய்யய்யோ கண்ணுல பயம் தெரியுது போல, மறைச்சிக்க அலீ...' என உள்ளுக்குள் தன்னைத்தானே அலெர்ட் செய்துக்கொண்டவள், "நந்திங்..." என்று தோளைக் குலுக்க, வைஷாலியோ ஒரு ஃபைலோடு சேர்த்து லெட்டரையும் அவளிடம் நீட்டினாள்.


"என்ன இது?" என்று அலிஷா புரியாமல் கேட்க, "அலீ, ப்ளீஸ்டீ! உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா, இந்த லெட்டர கொண்டு போய் நான் கொடுத்தேன்னு ருத்ரன் சார்கிட்ட கொடுத்துடு. ப்ளீஸ்டீ!" என்று தோழியின் காலில் விழாத குறையாக வைஷாலி கெஞ்ச, அவளுக்கோ மூச்சே அடைத்து விட்டது.


"வாட்! என்னை இந்த பில்டிங்ல இருந்து குதிக்க சொன்னாலும் குதிப்பேனே தவிர இந்தப் பாவத்தை மட்டும் நான் பண்ணவே மாட்டேன்" என்று சொல்லி அலிஷா முகத்தைத் திருப்பிக்கொள்ள, "ப்ளீஸ் அலீ, இந்த ஆஃபீஸ்ல நான் பழகுற ஒரே ஃப்ரென்ட் நீதான். நீயே இப்படி சொல்லலாமா? இந்ந ஹெல்ப் மட்டும் பண்ணு, உன் கைய காலா நினைச்சு கேக்குறேன்" என்று கொஞ்சி கெஞ்சி எப்படியோ வைஷாலி அலிஷாவின் கரத்தில் தன் லெட்டரை திணித்தாள்.


'அவனவன் இன்ஸ்டா டிவிட்டர்னு சோஷியல் மீடியா கமென்ட்ஸ்ல ப்ரொபோஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க, இந்த நாய் அதையெல்லாம் விட்டுட்டு இன்னும் பழைய பஞ்சாமிர்தம் மாதிரி லெட்டர் கொடுக்க சொல்லுது. அதுவும் யார்கிட்ட கொடுக்க யாரை அனுப்புறா... கடவுளே! எனக்குன்னு டிசைன் டிசைனா ப்ராப்ளம் வச்சிருப்பீங்களோ?' உள்ளுக்குள் புலம்பித் தள்ளியவாறு ருத்ரனின் அறை வாசலில் சென்று நின்றாள் அலிஷா.


"சார், மே ஐ கம் இன்" என்று கதவைத் தட்டிவிட்டு அவள் உள்ளே செல்ல, அங்கு அறைக்குள் வெறிச்சோடி போயிருந்தது.


'என்ன யாரையுமே காணோம், எங்க போயிருப்பான் இந்த முட்டாபயல்?' என்று யோசித்துக்கொண்டே அறையில் சுற்றிமுற்றி  தேடியவள், அவன் இல்லை என்று உணர்ந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.


'அப்பாடா! அவன் இல்லை, இதை கொண்டு போய் மொதல்ல அவகிட்ட கொடுத்துடுவோம்' என்றுக்கொண்டே திரும்பியவளின் விழிகளில் சரியாக சிக்கியது இருக்கைக்கு கீழே கிடந்த ஆண்களின் பர்ஸ்.


அதைப் பார்த்தவள் மெல்ல இருக்கைக்கு அருகே சென்று அந்த பர்சை எடுத்து மேசையின் மீது வைக்கப் போக, அதிலிருந்து விழுந்தது ஒரு சிறிய புகைப்படம்.


'அய்யய்யோ... யாராச்சும் பார்த்தா என்னை ஏதோ திருடி ரேன்ஞ்ல பார்ப்பாங்க. சீக்கிரம் இதை வச்சுட்டு போயிரு அலீ' என்று உள்ளுக்குள் பதறியவள் அந்த புகைப்படத்தை எடுத்து வைக்கப் போக, அடுத்தகணம் அலிஷாவின் இரு விழிகளும் தெறித்து விடுமளவிற்கு விரிந்தன.


ஆனால் அவளுடைய அதிர்ச்சி சில கணங்கள்தான். உடனே அந்த பர்ஸை மட்டும் மேசையின் மீது வைத்துவிட்டு அந்த புகைப்படத்தை மட்டும் தன் கையில் எடுத்துக்கொண்டவள், வேகமாக அந்த அறையிலிருந்து வெளியேறி இருந்தாள்.


"ஏய் அலீ, கொடுக்கலையா நீ, ஏன்டீ என்னாச்சு? சார் இல்லன்னு நினைக்கிறேன். தட்ஸ் ஓகே... நெக்ஸ்ட் டைம் மறக்காம கொடுத்துரு!" என்று வைஷாலி பேசிக்கொண்டே போக, அலிஷாவின் முகமோ பாறை போல் இறுகிப் போயிருந்தது.


****************

அதிரூபன் 09 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/10/09.html


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls




Comments

  1. ஐ திங்க்...அநேகமா அது ஆதி, ஐ மீன் அலிஷா படமாத்தான் இருக்கணும்.. கரெக்ட்டா..?

    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts

தஷுரி 10