தஷுரி 25

 


அடுத்தநாள், விக்டர், ரோய், தஷுரி, ராதா மற்றும் அஃப்ரிம் அனைவருமே பாரிஸுக்குச் செல்வதற்கான விமானத்தில் அமர்ந்திருக்க, அங்கு இவர்கள் வரும் தகவல் ஜேக்கப்பின் அலைப்பேசி குறுஞ்செய்தியில் வந்திருந்தது.

விமானத்தில் தனக்கான இருக்கையில் அமர்ந்திருந்த தஷுரி, முன்னே இருந்த விக்டரை உற்று உற்று பார்த்துக் கொண்டிருக்க, சட்டென விக்டர் திரும்பவும் வேறு எங்கோ பார்ப்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

'என்ன இவன் ரொம்ப தான் பண்றான், இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு என் முகத்தை கூட பார்க்காம மூக்கால முறைச்சுக்கிட்டு சுத்திட்டு இருக்கான். நான்தான் அவன காதலிச்சேன், அப்போ எல்லாம் என்னை துரத்தி விட்டுட்டு இப்போ வான்னா வரதுக்கு நான் என்ன அவன் வேலைக்காரியா? மனசுக்குள்ள அத்தனை காதல வச்சுகிட்டு இப்போ நான் இவ்வளவு தயங்குறேன்னா அது ஏன்னு புரிஞ்சுக்க மாட்டானா? இவன...'

என்று உள்ளுக்குள் தன்னவனை அவள் திட்டித் தீர்க்க, அதை உணர்ந்தவன் போல் மீண்டும் வேகமாக தஷுரியை நோக்கித் திரும்பிய விக்டர், விழிகளை சுருக்கி அவளை குறுகுறுவென்றுப் பார்க்க, வேகமாக பார்வையைத் திருப்பிக்கொண்டவளுக்கு அய்யோ என்றிருந்தது.

'மனசால கூட இவன திட்ட முடியல, பாவி உடனே திரும்பி பார்க்குறான்' என்று மீண்டும் திட்டியவள், அவனைப் பார்ப்பதும் பின் திரும்புவதுமாக விளையாட, ஒற்றைப் புருவத்தைத் தூக்கி அவளை முறைத்தவன், "இடியட்!" என்று அவளை திட்டி முணுமுணுத்தான்.

ரோயோ ஒருபக்கம் துர்காவின் நினைவில் இருக்க, பல வருடங்கள் கழித்து அனுபவிக்கும் விமானப் பயணத்தை தன் கணவரோடு சந்தோஷமாக அனுபவித்தார் ராதா.

எப்படியோ பல மணி நேரங்கள் கழித்து ஃப்ரான்ஸின் தலைநகரான பாரிஸில் இவர்களுடைய விமானம் தரையிறங்க, மீண்டும் பாரிஸிற்குள் நுழைந்த தஷுரியின் நினைவுகள் முதன் முதலாக இங்கு வந்த போது நடந்த சம்பவங்களையும் தான் விக்டர் மேல் காதல் கொண்டதையும் அவனுடனான தருணங்களையும் நினைவுக் கூர்ந்தன.

அந்த சம்பவங்கள் கொடுத்த தாக்கத்தில் உணர்ச்சி வசப்பட்டவளாய் கலங்கிய விழிகளோடு தஷுரி விக்டரைப் பார்க்க, அவனோ ஏதோ ஒன்றை தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

"ரோய், அலெர்ட்!" என்று விக்டர் சொல்லி முடிக்கும் முன்னே அவனுடைய ஆட்கள் முழு பாதுகாப்போடு விமான நிலையத்தில் அவர்களை சூழ்ந்துக்கொள்ள, அவர்களின் பாதுகாப்போடு நுழைந்தவர்கள் விமான நிலையத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த விக்டரின் பென்ஸ் காரில் ஏறுவதற்காக விமான நிலையத்திலிருந்து வெளியேறப் போக, திடீரென அந்த கார் வெடித்து அந்த இடமே கலவரமானது.

அங்கிருந்த மொத்தப் பேரும் பயந்தபடி கத்திக்கொண்டு ஓட, விக்டருக்கோ கோபம் ஏகத்துக்கும் எகிறியிருந்தது. இது யாருடைய வேலை என்று அவனுக்கு தான் தெரியுமல்லவா!

ராதாவோ பயத்தில் அழத் தொடங்கி விட, "விக்டர், சீக்கிரம் இவங்க இரண்டு பேரையும் வீட்டுக்கு பாதுகாப்பா அனுப்பி விடு! இதை யாரு பண்ணாங்கன்னு நான் கண்டுபிடிக்குறேன்" என்று அஃப்ரிம் கோபத்தில் கத்த, "நோ வொர்ரீஸ் அஃப்ரிம், இது யாரோட வேலைன்னு எனக்கு தெரியும்" என்றான் அவன் அழுத்தமாக.

அந்தநொடி வேகமாக செயற்பட்ட ரோய் விமான நிலையத்திலிருந்து வேறு பாதுகாப்பான இடத்தின் வழியே அவர்களை அழைத்துச் செல்லவென யாருக்கும் தெரியாமல் அவனின் ரோல்ஸ் ரொய்ஸ் காரை வரவழைத்திருக்க, அஃப்ரிமோ ராதாவையும் தஷுரியையும் தோளோடு அணைத்துக்கொண்டு வேக நடையிட்டார்.

விக்டரும் தன் ஆட்களோடு
ஷர்ட் கையை மடித்துவிட்டவாறு முன்னே நடக்க, திடீரென "விக்டர்..." என்ற ரோயின் அலறல் சத்தம்.

தஷுரியோ வேகமாகத் திரும்பிப் பார்க்க, அங்கு கூட்டத்திற்கு நடுவே ஓடி வந்த ஒருவன் விக்டரின் வயிற்றில் கத்தியை இறக்கியிருக்க, இதை எதிர்பார்க்காதவனாக அதிர்ந்துப் போய் நின்றுவிட்டான் அவன்.

ஆனால், அவனுடைய கரங்கள் தன்னை குத்தியிருந்தவனின் கோலரை இறுகப் பற்றியிருந்தது. விக்டரோ அவனை தீப்பார்வைப் பார்த்தவாறு, "கார்ட்ஸ்..." என்று அழைத்து அவனை கீழே தள்ளிவிட, கொஞ்சமும் யோசிக்காது சுற்றியிருந்து சுட்டுத் தள்ளியே அவனை கொன்றனர் அவனுடைய ஆட்கள்.

அதைப் பார்த்தவாறு விக்டர் சமநிலையின்றி விழப் போக, தன் தோழனை தாங்கிக் கொண்ட ரோய், "சீக்கிரம் வண்டிய ரெடி பண்ணுங்க" என்று கட்டளையாகச் சொல்ல, வேகமாக செயற்பட்ட ஆட்கள் விக்டரை இன்னொரு காரில் ஏற்றி வைத்தியசாலைக்கு மின்னல் வேகத்தில் புறப்பட்டனர்.

இது மொத்தமும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்திருக்க, தஷுரிக்கு இதயம்  ஒருகணம் நின்றுவிட்ட உணர்வு. என்ன நடந்தது ஏது நடந்தது என்று அவள் சுதாகரிக்கு முன்னே விக்டரை ஏற்றிய கார் பறந்திருக்க, "என்னங்க..." என்று அடித் தொண்டையிலிருந்து கத்தினாள் தஷுரி.

இரத்த வெள்ளத்தில் மிதந்த தன்னவனைப் பார்த்ததுமே இதயத் துடிப்பு நின்று விட்டிருந்தது அவளுக்கு. கைக் கால்கள் செயலிழப்பது போலிருக்க, அப்படியே விழப் போனவளை தாங்கிப் பிடித்துக்கொண்டார் அஃப்ரிம். ராதாவோ அதிர்ச்சி தாங்க முடியாமல் விழிகளிலிருந்து விழிநீர் ஓட, அதிர்ந்துப் போய் நிற்க, "விக்டர்... விக்டர்..." என்று கதறியழுதாள் தஷுரி.

அந்த இடத்தில் யாராலும் அவளை கட்டுப்படுத்த முடியவில்லை.

"தஷு... தஷுரி, விக்டருக்கு எதுவும் ஆகாது. மொதல்ல உனக்கு ஏதாவது ஆபத்து வரதுக்குள்ள இங்க இருந்து போயிடலாம். சொல்றத கேளும்மா!" என்று அஃப்ரிம் சொல்ல, அவளுக்கோ எதுவுமே காதில் விழுந்தபாடில்லை.

"விக்டர்... என்னால தாங்க முடியல்லையே! தயவு செஞ்சு என்கிட்ட வந்துருங்க, நீங்க இல்லாம இருக்க முடியது. என்னால முடியல.. ஆஆ..." என்று கத்தியவாறு அவள் அப்படியே மயங்கி சரிந்திருக்க, உடனே தன் கைகளில் ஏந்திக்கொண்டு வாகனத்தை நோக்கி ஒடினார் அஃப்ரிம்.

இரண்டு மணி நேரம் கழித்து, திடீரென மயக்கம் தெளிய இறுதியாக நடந்த சம்பவத்தின் விளைவால் பட்டென்று விழிகளைத் திறந்தவள், "விக்டர்..." என்று கத்தியவாறு பதறியடித்துக்கொண்டு எழுந்தமர, "ஏய் தஷு, ரிலாக்ஸ்... சாருக்கு ஒன்னு இல்லை, ரிலாக்ஸ்!" என்று அவளை அணைத்து ஆறுதல்படுத்தினாள் ஹெலன்.

"அக்கா... அக்கா அவருக்கு என்னாச்சு, ஒன்னு இல்லல்ல, நல்லாதானே இருக்காரு! எனக்கு அவர பார்க்கணும். ப்ளீஸ்!" என்று பதற்றமாக தஷுரி பேசிக்கொண்டு கட்டிலில் இருந்து இறங்கப் போக, அவளைப் பிடித்துக்கொண்டாள் மற்றவள்.

"தஷுரி, நான் சொல்லுறத கேளு! சார் இன்னும் ஒப்சவெர்ஷன்ல இருக்காரு. ட்ரீன்மென்ட் முடிஞ்சாச்சு. ஆனா, சாரோட கன்டிஷன தெரிஞ்சிக்க இன்னும் டுவென்டி ஃபார் ஹவர்ஸ் ஆகும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. சோ, யூ டோன்ட் வொர்ரி! சார் சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வந்துருவாரு" என்று அவளை சமாதானப்படுத்த, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மீண்டும் தன்னவனின் பெயரையே ஜபித்தவாறு கதறியழத் தொடங்கினாள் அவள்.

சரியாக அப்போது அறைக்குள் நுழைந்த ராதாவுக்கு தன் மகளைப் பார்த்ததும் அத்தனைக் கவலையாக இருந்தது. "தஷு..." என்று அவர் மெல்ல அழைக்க, தன் அம்மாவின் குரலைக் கேட்டதுமே திரும்பியவள் கட்டிலிலிருந்து கீழே இறங்கி ஓடிச் சென்று அம்மாவை அணைத்துக்கொண்டாள்.

"எனக்.. எனக்கு பயமா இருக்கும்மா, அவருக்கு எதுவும் ஆகாதுல்ல... என்னால தாங்க முடியலம்மா, ரொம்ப வலிக்குது. அவருக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா சத்தியமா என்னால தாங்கிக்க முடியாது. கிட்டத்தட்ட பைத்தியமே பிடிச்சிரும் போல இருக்கு. எல்லாத்துக்கும் நான் தான் காரணம், கடைசியில அவரு என்கிட்ட அவரோட காதல சொல்லும் போது நான் புரிஞ்சிருக்கணும். அவர ரொம்ப காயப்படுத்திட்டேன்" என்று ஏதேதோ பிதற்றியவாறு அவள் அழுக, தன் மகளை ஆழ்ந்துப் பார்த்தார் ராதா.

"தஷுரி..." என்று அவர் அழைத்ததைக் காதில் வாங்காமல் அவள் அப்போதும் மன வேதனையில் புலம்பிக்கொண்டே போக, அவளின் இரு தோள்களைப் பற்றிக் குலுக்கி, "தஷுரி!" என்று அழுத்தமாக அழைத்தார் அவர்.

தன் அம்மாவின் அதட்டலில் நடப்புக்கு வந்தவள், அவரை கலங்கி சிவந்த விழிகளோடு புரியாது நோக்க, "நீ விக்டர காதலிக்கிறியா?" என்ற தன் தாயின் கேள்வியில் திகைத்துப் போய் விழிகளை விரித்தாள் அவள்.

அவரோ மகளின் பதிலை எதிர்பார்த்து அவளையே கூர்ந்துப் பார்க்க, அவரின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தன் பார்வையை திருப்பிக் கொண்டாள் தஷுரி.

"நீ விக்டர காதலிக்கிறியான்னு நான் கேட்டேன், அன்னைக்கு ஊருல வச்சு விக்டர் பேசும் போது நீ மறுத்ததா எனக்கு ஒரு நியாபகம்' என்று சொல்லி மீண்டும் அவர் அழுத்தமாகக் கேட்க, விழிகளில் இருந்து விடாது கண்ணீர் வழிய தலையை குனிந்துக் கொண்டாள்.

"பதில் சொல்லு தஷுரி" என்று ராதா மீண்டும் கேட்டதும், "ரொம்பவே அம்மா... அவர ரொம்ப காதலிக்கிறேன். ஆனா, ஏதோ ஒரு தயக்கம். அவருக்கு நான் தகுதி இல்லையோன்னு, பொருத்தம் இல்லையோன்னு தோனுது. இப்படி யோசிச்சே நான் அவர வேணாம்னு சொன்னேன் அம்மா, அவர காயப்படுத்தினேன். ஆனா, சத்தியமா அவர நான் ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன். எனக்கு அவர் வேணும், அவர் குணமாகி என்கிட்ட வந்தா போதும்.  அது மட்டும் போதும்மா"

என்று அழுதவாறு தன் மனதில் உள்ளதை அவள் சொல்லி முடிக்க, ராதாவுக்கோ அவள் வெளிப்படையாக சொன்னதே போதுமாக இருந்தது.

"யார் சொன்னா நீ பொருத்தமில்லன்னு. உன்னை விட விக்டருக்கு பொருத்தமானவ யாருமே கிடையாது. சின்ன வயசுல இருந்து பாசத்துக்காக ஏங்கி வளர்ந்த பையன் அவன், உன்னால மட்டும் தான் அவனுக்கான முழு பாசத்தை கொடுக்க முடியும் தஷுரி. விக்டரும் உன்னை ரொம்ப காதலிக்கிறான், அவன் நான் வளர்த்த பையன். கண்டிப்பா அவன் நேசிக்கிறவங்கள ரொம்ப நல்லா பார்த்துப்பான்"

என்று தன் மகளின் தலையை வருடிவிட்டவாறு ராதா உறுதியாகச் சொல்ல, தஷுரியோ 'இல்லை' எனும் விதமாக மீண்டும் தலையாட்டினாள்.

ராதாவோ புரியாது விழிக்க, "உங்கள ஊருல விட்டுட்டு நான் எப்படிம்மா இங்க தனியா இருப்பேன்?" என்று சிறுபிள்ளைப் போல் உதட்டைப் பிதுக்க, தன் மகளை முறைத்துப் பார்த்தார் ராதா.

"உன் அப்பாவும் இங்கதான் வந்தாகணும், அது நியாபகம் இருக்கா இல்லையா? அவர இங்க விட்டுட்டு நான் ஊருல தனியா இருந்து என்ன பண்ணுவேன், இத்தனை வருஷம் எல்லாத்தையும் விட்டுட்டு நாம தனியா இருந்தது போதும், அப்பப்போ ஊருல நம்ம வீட்டுக்கு போயிட்டு வரலாம்" என்று இறுதியாக அவர் தன் முடிவை சொல்ல, ஆச்சரியத்தில் விழிகளை விரித்தாள் தஷுரி.

"நிஜமா தான் சொல்லுறியாம்மா? என்னால... என்னால நம்பவே முடியல, அப்போ நாம இங்க ஒன்னாவே இருக்க போறோமா?" என்று அதிர்ச்சி குறையாமல் தஷுரி விழிகளை விரித்து கேட்ட விதத்தில், அவளின் கன்னத்தைக் கிள்ளியவர், "ஆமாடீ, இப்போ மேடம் விக்டர ஏத்துப்பீங்களா?" என்று கேட்டார் ராதா குறும்பாக.

தஷுரியின் முகம் நாணத்தில் சிவக்க, அதைப் பார்க்கவே ராதாவிற்கு அத்தனை ஆசையாக இருந்தது.

"வெளியூரு மாப்பிள்ளையே வேணாம், அம்மா பண்ண தப்ப நான் பண்ணவே மட்டேன்னு ஒருத்தங்க சொன்னதா எனக்கு நியாபகம்" என்று அப்போது தஷுரி சொன்னதை ஞாபகப்படுத்தி இப்போது ராதா கிண்டல் செய்ய, அதில் தடுமாறியவள், "நான்... உங்க பொண்ணுல்ல அம்மா, அதான்..." என்று சிரிப்பை அடக்கியவாறு சமாளித்தாள்.

அதில் பதிலுக்கு முறைத்தவர் பின் அவளின் கரத்தை ஆறுதலாக இறுகப் பற்றி, "சீக்கிரம் விக்டர் குணமாகிருவான், அப்பறம் உனக்கும் விக்டருக்கும் கல்யாணம் தான்" என்று சொல்ல, இப்போது மீண்டும் தஷுரியின் முகம் வாடியது.

கலங்கிய விழிகளோடு, "நான் அவர பார்க்கணும்மா" என்று அவள் சொல்ல, விக்டரின் நிலமையை நினைத்து யோசனையில் ஆழ்ந்தார் ராதா.

அன்று மதியமே, ரோய் விக்டரை அனுமதித்திருக்கும் பாரிஸிலேயே பெரிய வைத்தியசாலைக்கு தஷுரியை அழைத்துச் செல்ல, அறை வாசலில் நின்றிருந்தவளுக்கு மனம் கனத்துப் போயிருந்தது.

ஐசீயூ அறைக்குள் செல்லவென வாசலில் நின்றிருந்த தஷுரிக்கு, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஒரு பெருமூச்சை விட்டு உள்ளே நுழைந்தவளுக்கு வயிற்றை சுற்றி பெரிய பென்டேஜ் கட்டோடு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க, மூக்கில் ஒக்சிசன் மாஸ்க் போட்டு சுயநினைவில்லாது கிடந்தான் விக்டர்.

மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக வைத்து முன்னே சென்றவள், தன்னவனின் அருகே சென்று, "என்னங்க..." என்று மெல்ல அழைக்க, அவனிடமோ அசைவில்லை.

விழிகளிலிருந்து விழிநீர் அருவியாய் ஓட, அவனருகே அமர்ந்து அவனின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள். மெல்ல அவனின் முகத்தை நோக்கிக் குனிந்து அவன் நெற்றியில் அழுந்த முத்தத்தைப் பதித்தவளுக்கு அழுகையில் தொண்டை அடைத்தது.

"என்னங்க... என்னங்க நான் உங்க தஷு வந்திருக்கேன். ஏன் என் கூட பேச மாட்டேங்குறீங்க, நான் உங்க காதல புரிஞ்சுக்கலன்னு கோபமா இருக்கீங்களா என்ன! இனி... இனி அப்படி பண்ண மாட்டேங்க, எனக்கு நீங்க வேணும். எனக்கு மட்டுமே வேணும். நீங்க சீக்கிரம் வாங்க, வந்ததுமே நாங்க கல்யாணம் பண்ணிப்போம். உங்கள கோபப்படுத்த மாட்டேன், உங்களுக்கு முத்தம் வேணும்னாலும் கூட நான் தரேன்ங்க, என் கூட பேசுங்க, சத்தியமா சொல்றேன் நான் உங்கள ரொம்ப காதலிக்கிறேன். உங்க மேல இருந்த காதல் எனக்கு குறையவே இல்லை. உங்களுக்கு நான் பொருத்தமானவ இல்லைன்னு ஏதேதோ பைத்தியக்காரத் தனமா யோசிச்சு உங்கள காயப்படுத்திட்டேன். ஐ...  ஐ லவ் யூ!"

என்று அவள் காதலால் கசிந்துருகி அழுதுக்கொண்டே தன் காதலை சொல்லி முடிக்க, இது அத்தனையும் அந்த ஆடவனின் காதில் விழுந்ததா இல்லையா என்பது அந்த கடவுளுக்கு தான் தெரியும்!


***********************

தஷுரி 26 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/08/26.html


தஷுரி முழு நாவலைப் படிக்க 👇

India link

https://www.amazon.in/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin

USA link

https://www.amazon.com/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin

Comments

Popular posts

தஷுரி 10