தஷுரி 23

 



தன்னவளின்  முட்டை விழிகளை ரசித்துக்கொண்டே தன் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த அந்த அரிய வகை வைரக் கல்லை விக்டர் வெளியே எடுக்க, தஷுரியோ புரியாதுப் பார்த்தாள்.

"எல்லாமே இதுக்காகத்தான்" என்றவன், தன் திட்டத்தை முழுதாக சொல்லி முடிக்க, ஏற்கனவே அவன் மேல் கோபத்தில் இருந்தவள் இப்போது காளி அவதாரமே எடுத்துவிட்டாள்.

அவன் பிடித்திருந்த கரத்தை உதறிவிட்டு, "இத்துணூன்டு இந்த கல்லுக்காக அவக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டீங்களா, என் மூஞ்சுலயே முழிக்காதீங்க, மொதல்ல வெளிய போங்க!" என்று அவள் கத்த, "ஓ கோட்!" என்று விழிகளை சுழற்றியவன், அவள் திமிற திமிற கைகளில் ஏந்திக்கொண்டு கட்டிலில் சரித்து அவளின் மேல் படர்ந்தான்.

அவளோ மறுப்பாகத் தலையசைத்தவாறு திமிற, அவளின் இரு கரங்களை தன் ஒரு கரத்தில் அடக்கியவன், மற்ற கரத்தால் அவளின் இதழைப் பொத்தி "ஷ்ஷ் பேசாத!" என்று மிரட்டி, "யூ நோ வாட் தஷுரி, யாருமே என்னை இவ்வளவு டோர்ச்சர் பண்ணதில்ல, அதுவும் எந்த பொண்ணையும் நான் என் பக்கத்துல நெருங்கவிட்டதும் இல்லை. நீ என்னை ரொம்பவே இம்சை பண்ற. அதுவும் இந்த வாய் இருக்கே இந்த வாய்... அதுதான் என்னை அப்பப்போ டெம்ப் பண்ணுது. அதுக்கு பனிஷ்மென்ட் கொடுக்க வேணாமா?" என்றுக்கொண்டே இதழை நெருங்க, முகத்தை கோபமாகத் திருப்பிக்கொண்டாள் அவள்.

விக்டருக்கோ எரிச்சலாக, "என்னடீ?" என்று கடுப்பாக அவன் கேட்க, "நீங்க உங்க ஊருக்கே போயிடுங்க, நான் உங்களுக்கு வேணாம்" என்று ஒரு விழியிலிருந்து விழிநீர் ஒட, கீழுதட்டைக் கடித்து தஷுரி அழுகையை அடக்க, அவளைத் தீப்பார்வைப் பார்த்தான் அவன்.

"என்னன்னு வெளிப்படையா சொல்லு" என்று பொறுமையை இழுத்துப் பிடித்து விக்டர் கேட்கவும், அவளோ வாயைத் திறந்து பதில் பேசுவது போலில்லை. இதில் ஆடவனுக்குதான் கோபம் தலைக்கேற, அவளை விட்டு விலகி எழுந்து நின்றுக்கொண்டவன், உணர்வுகளை அடக்க தலையை அழுந்தக் கோதிக்கொண்டான்.

அவளோ கட்டிலில் அமர்ந்தவாறு, "உங்களுக்கு கோபம் வரலாம், ஆனா... எனக்கு இது சரி வரும்னு தோனல்ல. உங்க தகுதிக்கு நான் ஏணி வச்சாலும் எட்ட மாட்டேன். நீங்க போய் அந்த லாராவயே மறுபடியும் கல்யாணம் பண்ணுங்க. உங்களுக்கு அவதான் பொருத்தமா இரு..." என்றுக்கொண்டிருக்கும் போதே அவளின் கன்னத்தில் பொளீரென ஒன்றுவிட்டான் விக்டர்.

அந்த அடியில் அவளுக்கு லேசாக தலையே சுற்றிவிட, கன்னத்தைப் பொத்தியவாறு அவனை அவள் அதிர்ந்து நோக்கினாள்.

ருத்ரமூர்த்தி போல் நின்றிருந்தவனின் நெற்றி நரம்புகள் புடைத்துக் கிளம்பியிருக்க, கை முஷ்டி இறுகியிருந்தது. கோபத்தில் அவனுடைய முகமோ சிவந்துப் போயிருக்க, பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டாள் தஷுரி.

முயன்று தன்னை ஆசுவாசப்படுத்தி தன்னவளைப் பார்த்தவனுக்கு, அவனை நோக்கிய அவளின் பயந்த விழிகள் வேதனையை உண்டாக்கின. உடனே அவளருகில் அமர்ந்த விக்டர், "சாரிடீ!" என்றுக்கொண்டே அவளின் நெற்றியில் அழுந்த முத்தத்தைப் பதிக்க, இவளுடைய விழிகளில் அப்போதும் பயம் சென்றபாடில்லை.

அதைப் பார்த்தவனின் இதழ்கள் விஷமப் புன்னகை புரிய, புருவத்தை நெறித்து அவளை உற்றுப் பார்த்தவன், அவள் புரியாமல் விழிகளை சுருக்கவும் உடனே அவளிதழை தன்னிதழால் கவ்விக்கொண்டான்.

ஏனோ அவள் மறுப்பதை நினைக்க நினைக்க அவனுக்குள் ஆத்திரம் பெருக, தன் கோபத்தை அவளிதழில் காட்டத் தொடங்கினான். பெண்ணவளுக்கு அவனின் கோபம் புரிந்தது போலும்!

வலியைப் பொறுத்துக்கொண்டு அவள் அமைதியாக நிற்க, அந்த அமைதியும் இவனை கொல்லாமல் கொன்றது. 'சரியான பிடிவாதக்காரி!' என மனதிற்குள்ளேயே திட்டிக்கொண்டவன், அவளிதழிலிருந்து பிரிந்து அவள் முகத்தை நோக்க, கண்ணீர் வழிய உள்ளுக்குள்ளேயே அழுது கரைந்தாள் தஷுரி.

லாராவை முத்தமிட்டதற்கான விளக்கத்தைக் கொடுத்துவிட்டான். இதன் பிறகும் இவளுக்கு என்ன பிரச்சனை ஏன் மறுக்கிறாள் என்று மட்டும் அவனுக்குப் புரியவே இல்லை.

அதற்கு மேல் அவள் அழுவதை காண முடியாது அறையிலிருந்து வெளியேறியவன், விறுவிறுவென வீட்டிலிருந்து வெளியேறி அமைதியைத் தேடி எங்கு செல்கிறோம் என தெரியாமலேயே அந்த குளிரில் கால் போன போக்கிற்கு நடக்க, அப்போதுதான் சமையலறைக்கு தண்ணீர் அருந்தவென வந்த ராதாவின் விழிகளுக்கு இது சரியாக சிக்கியது.

அடுத்தநாள் விடிந்ததும்தான் விக்டர் வீட்டிற்கே வந்திருக்க, யாரையும் பார்க்காது இறுகிய முகத்தொடு தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியவனை அவதானித்துக்கொண்டிருந்தார் ராதா.

இதற்கு மேலும் இதைப் பற்றி கேட்காவிட்டால் சரியாக இருக்காது என்பதை உணர்ந்தவராய், "அஃப்ரிம்..." என்று தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டினார் அவர்.

அவரோ முதலில் விழிக்காது ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, "அஃப்ரிம்... அஃப்ரிம் எழுந்துடுங்க!" என்று அவரை உலுக்கி ராதா கத்தவும், பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தவர், "என்னாச்சு, நம்ம வீட்டை ரவுண்ட் பண்ணிட்டாங்களா, கார்ட்ஸ் எங்க?" என்று கேட்டார் தான் கனவில் இருப்பதாக நினைத்துக்கொண்டு.

அதில் தலையிலடித்துக்கொண்ட ராதா, "இன்னும் அந்த துப்பாக்கி, கார்ட்ஸ், ஃபைட்னு விடவே இல்லையா நீங்க? அய்யோ அய்யோ!" என்று சலித்துக்கொள்ள, "ஹிஹிஹி... கனவுன்னு நினைச்சுக்கிட்டு..." என்று அசடுவழிந்த கணவரைப் பார்த்து அவருக்கு சிரிப்புதான் வந்தது.

இருபக்கமும் தலையாட்டி சிரித்தவாறு, "நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்" என்று ராதா சொல்ல, அவரை கேள்வியாகப் பார்த்தார் பெரியவர்.

"அது... நீங்க சொன்னீங்கல்ல, அது நெசம்தானா?" என்று அவர் கேட்க, "அப்போ நீ இன்னும் நான் சொன்னதை நம்பல்லையா?" என்று கணவர் முறைத்தவாறுக் கேட்டதும், "அப்படி இல்லைங்க" என்று இன்று பார்த்ததை சொல்லி முடித்தார் ராதா.

அதைக் கேட்டதும் அஃப்ரிமின் விழிகள் யோசனையில் இடுங்க, "ஏதோ ஒன்னு நடந்திருக்கு, ஆனா என்னன்னு தெரியல்லையே!" என்று அதே யோசனையோடு அவர் மனைவியிடம் சொல்ல, "எனக்..எனக்கு என்னவோ இது சரியா படல அஃப்ரிம், இது வேணாம்னு..." என்று தயக்கமாக இழுத்தவர், மீண்டும் கணவரின் முறைப்பில் அமைதியானார்.

"ஏன் ராதா, உனக்கு இதுல விருப்பமில்லையா? விக்டர்கிட்ட அப்படி என்ன குறை இருக்கு? என்னை பொருத்த வரைக்கும் அவன விட தஷுரிய வேற யாராலேயும் நல்லா பார்த்துக்க முடியாது, அவங்க இரண்டு பேரும் சேருறதுல எனக்கு முழு விருப்பம்" என்று தன் மனதிலுள்ளதை அஃப்ரிம் சொல்லி முடிக்க, ராதாவின் முகத்திலோ திருப்தியே இல்லை.

அவரின் முகத்தைக் கூர்ந்துப் பார்த்த அஃப்ரிம், "எதையும் தெளிவா சொன்னாதான் புரியும்" என்று அழுத்தமாகச் சொல்ல, "அது... அது வந்து... தஷுரி கிராமத்துல வளர்ந்த பொண்ணுங்க, விக்டர் நான் வளர்த்த பையன்தான். ஆனாலும் ஒரு வயசுக்கப்பறம் நான் அவன் கூட இல்லை. தனிமையில வளர்ந்திருக்கான். உங்க ஊர் கலாசாரம்தான் அவனுக்கு தெரியும். அப்படி இருக்கப்போ எப்படி ஒத்துப்போகும்?" என்று தன் மனதிலுள்ள கேள்வியை வெளிப்படையாகக் கேட்டு முடித்தார் அவர் மனைவி.

அதில் அவரை இரு புருவங்களை ஏற்றி இறக்கி குறும்பாகப் பார்த்தவர், "எங்களுக்குள்ள எப்படி ஒத்துப் போச்சு?" என்று கேட்க, கணவர் சொல்ல வருவதைப் புரிந்துக்கொண்டு, "அது... அது... நான்..." என்று என்ன பதில் சொல்வது என்றுத் தெரியாமல் தடுமாறினார் ராதா.

"நீ என்னை காதலிக்கும் போது நம்ம அடையாளம் கலாச்சாரம் மொழி எதுவுமே உனக்கு தெரியல. அப்படி இருக்குறப்போ அவங்க மட்டும் அதை புரிஞ்சு காதலிக்கணும்னு சொல்லுறது எந்த விதத்துல நியாயம்? என்ன பொருத்த வரைக்கும் தஷுரிக்கு விக்டர விட பொருத்தமானவன் யாருமில்ல, அவங்களோட காதல்ல நாம தடையா குறுக்க நிக்க கூடாது ராதா" என்று அவர் புரிய வைக்க, கலங்கிய விழிகளோடு தன் கணவரின் மார்பில் சாய்ந்துக்கொண்டார் ராதா.

அன்று மதியம், இரவு முழுக்க தூங்காததில் காலை விழிக்கக் கூட முடியாது நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான் விக்டர். ஏனோ இப்போதெல்லாம் இந்த சூழலும் சேவல் குயிலின் சத்தங்களும் அவனுக்கு பழகிப் போயிருந்தது.

ஆனால், இங்கு ரோயோ ஒரே பதற்ற நிலையில் இருந்தான். குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு என்ன செய்வது ஏது செய்வது என அவன் தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்க, அரைக் கண்ணைத் திறந்துப் பார்த்த விக்டர், தோழனை புரியாதுப் பார்த்து, "அன்னைக்கு நான் உடைக்காம விட்ட பலகைய இன்னைக்கு நீ உடைக்கலாம்னு ப்ளான் போட்டிருக்கியா டியூட்?" என்று கேட்டான் கிண்டலாக.

அவனை முறைத்தவன், பின் சட்டென ஓவென்று அழத் தொடங்க, பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தான் விக்டர்.

"என்னாச்சு?" என்று அவன் கேட்க, ரோயும் விடயத்தை சொல்லி முடிக்க, நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டான் விக்டர். இதை கொஞ்சமும் அவன் எதிர்பார்க்கவில்லை.

ரோயோ தோழனை பாவமாகப் பார்க்க, "ஐ வில் ஹேன்டல், இந்த பிஸ்னன் மேக்னட்ட என்ன வேலை பார்க்க வச்சுட்ட" என்று சொல்லிக்கொண்டே கட்டிலிலிருந்து பாய்ந்து எழுந்தவன், அவசர அவசரமாகத் தயாராகி ரோயோடு மாடிப்படிகளில் இறங்கப் போக, சரியாக "வணக்கம் ஆன்ட்டி" என்றொரு குரல்.

மொத்தப் பேரின் பார்வையும் வாசலை நோக்க, "உள்ள வரலாமா?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் வினோத்.

"வாங்க வாங்க..." என்று சிரித்த முகமாக வரவேற்ற ராதா, தயக்கத்தோடு ஏதோ சொல்ல முயன்று கைகளைப் பிசைய, அதற்குள் அவனோ "நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும், தஷுரிய வெளில அழைச்சிட்டு போகவா ஆன்ட்டி?" என்று கேட்க, அவரோ தயக்கமாக அஃப்ரிமை திரும்பிப் பார்த்தார்.

அவரோ விழிகளாவ் வேண்டாம் என்று சொல்ல, "அது வந்து தம்பி... நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணு..." என்று அவர் பேசி முடிப்பதற்குள்ளே தஷுரியை கண்டுகொண்டவன் அவன் பாட்டிற்கு அவர்களைத் தாண்டி அவளின் அருகே சென்றான்.

"ரொம்பநாளா கேக்கணும்னு ட்ரை பண்றேன், கொஞ்சம் வெளில போகலாமா? அதான் சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்க போறோமே!" என்று வினோத் சொல்ல, அவளோ மலங்க மலங்க விழித்தவாறு என்ன சொல்வதென்று தெரியாது தடுமாற, "ஹாய் வினோத்" என்ற கம்பீரக் குரல் அந்த இடத்தையே நிரப்பியது.

அவன் மட்டுமல்லாமல் மொத்தப் பேரும் குரல் வந்த திசையை நோக்க, அங்கு சட்டைக் கையை மடித்து விட்டவாறு வந்த விக்டர், "அது எப்படி நான் இல்லாம நீங்க மட்டும் வெளில போவீங்க?" என்று நக்கல் தொனியில் கேட்க, மற்றவனோ தஷுரியை திரும்பிப் பார்த்துவிட்டு, "ஹெலோ மிஸ்டர் விக்டர்" என்றான் புன்னகையோடு.

அவனை ஆழ்ந்து நோக்கியவாறு தஷுரியின் கழுத்தை சுற்றி கைப் போட்டவன், அவளை ஒரு கையால் அணைத்தவாறு "ஷீ இஸ் மை ஃபியான்சி" என்று அதிரடியாகச் சொல்லிவிட்டு, "நான் வேணா உங்களுக்கு ஊரை சுத்தி காட்டட்டுமா மிஸ்டர்..." என்று இழுக்க, வினோத்தோ தஷுரியின் தோளிலிருந்த அவனுடைய கரத்தையும் தஷுரியையும்தான் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.

இவளோ தன் அம்மாவைப் பார்த்து மலங்க மலங்க விழித்தவாறு விக்டரின் கரத்தைத் தட்டிவிட, அவள் மறுக்க மறுக்க இவனின் பிடிதான் இறுகிக்கொண்டே சென்றது.

வினோத்திற்கு வெளிப்படையாக இதை எப்படி கேட்பதென்று கூடத் தெரியவில்லை. அவன் ராதாவைத் திரும்பி 'இது என்ன?' என்பது போல் ஒரு பார்வைப் பார்க்க, அவரோ தயங்கியபடி முன்னே வந்தவர், "அது வந்து தம்பி... எங்கள மன்னிச்சிடுங்க! தஷுரியும் இவரும் காதலிக்கிறாங்க, மொதல்ல எங்களுக்கு இது தெரியல. இப்போதான் தெரிஞ்சது. நாங்களே உங்களுக்கு அழைச்சு பேசலாம்னு இருந்தேன். ஆனா, அதுக்குள்ள..." என்றார் கைகளைப் பிசைந்தபடி.

வினோத்திற்கு அதற்கு மேல் அங்கு நிற்க விருப்பமில்லை. தஷுரியையும் விக்டரையும் முறைத்துவிட்டு அவன் அங்கிருந்து செல்ல, விக்டரின் கரத்தைத் தட்டிவிட்டவள், "ஏன் இப்படி பண்ணீங்க, பாவம் அவரு!" என்று போகும் வினோத்தை பரிதாபமாகப் பார்த்தபடி சொன்னாள்.

விக்டரோ அவளை ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளியவன், "அவன பார்த்தா மட்டும் உனக்கு பாவமா இருக்கா, நான்தான்டீ பாவம். அதோ அந்த கல்லுக்காக இங்க வந்தேன்னு நினைச்சியா, நான் நினைச்சா அதோட வெல்யூவ விட அதிகமா சம்பாதிக்க முடியும். அந்த டயமன்ட் எல்லாம் நான் இங்க வரதுக்கான ஜஸ்ட் ரீசன்தான். அப்போ கூட உன் மேல வச்சிருந்த என் காதல உணரல்ல. புரிஞ்சுக்கிட்டு உன்கிட்ட வந்தா ஈஸியா வேணாம்னு சொல்லுற. நானாடீ உன்னை மொதல்ல லவ் பண்ணேன், நீயா என்னை காதலிச்சு உன்னை காதலிக்க வச்சுட்டு இப்பொ வேணாம்னா என்ன அர்த்தம்?"

என்று படபடவென பேசிக்கொண்டே செல்ல, எதுவும் பேசாமல் இறுகிய முகமாக தரையை வெறித்திருந்தாள் தஷுரி.

"தஷுரி..." என்று ராதா அழைக்க, அவளோ தன் அம்மாவை நிமிர்ந்துப் பார்த்தவள், "அவர் சொல்லுறது உண்மைதான்,  நான் காதலிச்சேன். ஆனா இப்போ..." என்று திக்கித்திணற, "ஆனா என்ன இப்போ?" என்று கேட்டார் அஃப்ரிம் குழப்பத்தோடு.

"எனக்கு எதுவுமே வேணாம், நா..நான் அம்மா கூட இங்கேயே இருந்துடுறேன். இந்த காதல் கல்யாணம் எதுவுமே தேவையில்ல. அவங்களோட தகுதி வேற, நான் இருக்க வேண்டிய இடம் வேற. அவங்களுக்கு நான்.. நான் பொருத்தமானவ கிடையாது. நா... நான் இங்கேயே இருந்துடுறேனேம்மா" என்று தஷுரி அழுகையை அடக்கிய குரலில் பேசிக்கொண்டே செல்ல, விக்டரின் முகமோ பாறை போன்று இறுகிப் போயிருந்தது.

அவளையே அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, "அப்போ உனக்கு விக்டர் மேல காதல் இல்லையா தஷுரி?" என்று கேட்டார் அஃப்ரிம்.

அதற்கான பதில் அவளுக்கே தெரியவில்லை. இல்லை என்று எப்படி சொல்வாள், அவள்தான் அவனை உருகி உருகி காதலித்தவள் ஆயிற்றே!

ஆனால், ஏதோ ஒரு தயக்கம், தடை அவளுக்குள். சுற்றியிருந்த மொத்தப் பேருமே அவளுடைய பதிலைதான் எதிர்பார்க்க, "எந்த பதிலும் வேணாம் அஃப்ரிம், இத்தோட இதை விட்டுருங்க! என்ட், நாங்க வித்இன் டூ டேய்ஸ்ல கிளம்பலாம்னு இருக்கோம். வாட் அபௌட் யூ அஃப்ரிம்?" என்று முடிவைக் கேட்டான் விக்டர்.

"இங்க எங்களுக்குன்னு எதுவுமே இல்லை கண்ணா, வில்லியம் சார் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாரு. நான் பாரிஸுக்கு வந்தே ஆகணும். பட் ராதா..." என்று அஃப்ரிம் தயக்கமாக இழுக்க, "ஏற்கனவே பல வருடங்கள் பிரிஞ்சு வாழ்ந்தாச்சு, இதுக்கு மேல முடியாது" என்று தன் மனதிலுள்ளதை முடிவாக சொல்லிவிட்டார் அவருடைய மனைவி.

மீண்டும் அவர் தஷுரியைப் பார்க்க, அவள் இப்போதும் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க, "மொதல்ல அங்க மேரேஜ் பார்ட்டீக்கு அர்ரேன்ஜ் பண்ணலாம், இப்போதைக்கு விசிட்டிங் வீசாவுல அழைச்சுட்டு போய் அதுக்கப்பறம் ஆக வேண்டிய ஃபார்மலிட்டீஸ்ஸ அங்க வச்சு பார்த்துக்கலாம்" என்று தன் திட்டத்தை சொன்னார் அஃப்ரிம்.

தஷுரியோ விருட்டென நிமிர்ந்தவள், "எதே! மறுபடியும் போறோமா?" என்று அதிர்ந்துப்போய் கேட்க, அவளை முறைத்தவாறு தலையசைத்த ராதா, "பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு எதுவும் தெரியாம கமுக்கமா இருந்திருக்கல்ல, மொதல்ல அங்க போறதுக்கான ஏற்பாட ஆரம்பிப்போம். உன்னை நான் அப்பறம் கவனிச்சிக்கிறேன்" என்றார் பற்களைக் கடித்துக்கொண்டு.

விக்டருக்கோ தஷுரியின் மேல் அத்தனை கோபம். எத்தனை முறைப் பேசியும் தன்னை வேண்டாம் என்கிறாளே என்ற ஆத்திரம் அவனுக்குள்.

அவன் பாட்டிற்கு வெளியேறப் போனவன், "இன்னொருத்தங்களும் நம்ம கூட வர போறாங்க" என்றுவிட்டு, "கம் ஆன் ரோய், போய் பேசி பார்க்கலாம்" என்று அழைக்க, இத்தனை நேரம் நடந்ததை மலங்க மலங்க விழித்தவாறு பார்த்திருந்த ரோய், நண்பன் அழைத்ததும் அவன் பின்னால் வேகமாக ஓடினான்.

அவர்கள் செல்வதை புரியாமல் பார்த்த தஷுரி, தாவணி முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு  மெல்ல அவர்களின் பின்னே செல்ல, அந்த இருவரும் சென்று நின்றது என்னவோ துர்காவின் வீட்டின் முன்னே.


********************

தஷுரி 24 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/08/24.html


தஷுரி முழு நாவலைப் படிக்க 👇

India link

https://www.amazon.in/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin

USA link

https://www.amazon.com/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin

Comments

  1. இந்த தஷூரி சரியான லூசு தான். விக்டர் தான் லாராவை லவ் பண்ணவே இல்லைன்னு தானே சொல்றான். அப்புறம் இவ மட்டும் ஏன் அவனை நம்ப மாட்டேங்குறா..?
    விக்டர் லாராவுக்கு முத்தம் கொடுத்தது தான்..அவனை வேண்டாம்ன்னு சொல்ல காரணம்ன்னா, அப்ப விக்டர் இப்ப இவளுக்கு முத்தம் கொடுத்தான் தானே..? அப்ப, இவ மட்டும் வினோத்தை கட்டிக்க சம்மதிக்கலாமா...? இவளுக்கு வந்தா ரத்தம், அவனுக்கு வந்தா தக்காளி சட்னியா...???

    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts

தஷுரி 10