தஷுரி 19




"நல்லா சாப்பிடுங்க, இதெல்லாம் எங்க ஊரு ஸ்பெஷல்" என்றுக்கொண்டே ராதா மூன்று ஆண்களுக்கும் உணவைப் பரிமாற, அவர்களின் உப்புக்காரமான உணவு பழக்கமில்லாததில் ஆண்களுக்குதான் காதில் புகை கிளம்பியது.


அதுவும் ரோயின் கண்கள் கார உணவு பழக்கமில்லாததில்  லேசாக சிவந்து கலங்கியிருக்க, அப்போதுதான் உள்ளே வந்த துர்காவுக்கு அவனைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை.


அவளுடைய சிரிப்பில் சட்டெனத் திரும்பிய ரோய், கலங்கிய விழிகளை மறைக்க மற்ற கையால் முகத்தை பாதி மறைத்துக்கொள்ள, துர்காவுக்குப் பின்னே வந்த தஷுரியோ யாரையும் கண்டுகொள்ளாதது போல் அங்கிருந்தவர்களைத் தாண்டி செல்ல எத்தனித்தாள்.


"தஷு..." என்று ராதா அழைத்ததுமே அவள் அப்படியே நிற்க, "சாப்பிட்டியாம்மா?" என்று கேட்டார் அஃப்ரிம். 


அந்த கேள்வியில் அவளின் இதழ்கள் ஏளனமாக வளைய, "இத்தனை வருஷம் நாங்க நல்லா சாப்பிட்டோமா இல்லையான்னு தெரிஞ்சிக்க தோனல்ல, இப்போ மட்டும் எங்கயிருந்து வந்தது இந்த பாசம்?" என்று சட்டென அவள் கேட்டுவிட, அவளின் வார்த்தைகளைத் தாண்டி தொண்டைக் குழியில் உணவு இறங்க மறுத்தது அவருக்கு. 


விக்டரோ தஷுரியை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டிருக்க, "வாய மூடுடீ! என்ன பேச்சு பேசுற நீ, என்ன ஆனாலும் அவருதான் உன் அப்பா. அது இல்லைன்னா ஆகிறாது" என்று ராதா கோபத்தில் கத்த, "இத்தனைநாள் இல்லாமதானே இருந்துச்சு, இப்போவும் இருக்க தேவையில்ல" என்றாள் அவள் ஒரு முடிவாக.


அஃப்ரிமுக்கு மகளின் வார்த்தைகளில் விழிகள் சட்டெனக் கலங்கிவிட்டன. தஷுரி பேசிய அடுத்தகணம் கோபம் உச்சக்கட்டத்திற்கு எகிற கொஞ்சமும் யோசிக்காது ராதா மகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்க, "ஏய்..." என்று ராதாவின் கரத்தைப் பற்றினார் அஃப்ரிம்.


தஷுரியோ கன்னத்தைத் தாங்கியவாறு தன் அம்மாவை வலி நிறைந்த பார்வைப் பார்க்க, விக்டரோ விழிகளை அழுந்த மூடித் திறந்தான். 


"தஷ்..தஷுரி..." என்று அவளைப் பரிதாபமாகப் பார்த்தவாறு அஃப்ரிம் மகளை நெருங்க, "என் அம்மாவ என்கிட்டயிருந்து பிரிச்சிட்டீங்கல்ல!" என்று குற்றம் சுமத்தும் வார்த்தைகளைக் கக்கியவள், அங்கிருந்த அறைக்குள் நுழைந்து கதவடைத்துக்கொள்ள, தன்னவரின் மார்பில் சாய்ந்து அழுதேவிட்டார் ராதா.


அன்று நாள் முழுவதும் தஷுரி அறையிலேயே கிடக்க, பயணக் களைப்பில் ரோயும் அஃப்ரிமும் தங்களுக்கான அறையில் ஓய்வெடுத்தார்கள் என்றால், விக்டருக்குதான் உறக்கமே இல்லை. அடிக்கடி அறையிலிருந்து வெளியே வந்தவனின் விழிகள் பூட்டியிருந்த கதவையே நோட்டமிட்ட வண்ணமிருக்க, இதை ராதாவும் கவனிக்காமலில்லை.


அதேநேரம் பாரிஸில்,


"ஷீட் ஷீட் ஷீட்! அவன சும்மா விடவே கூடாது. என்னை... என்னையே ஏமாத்திட்டான் இடியட்! ஏதாச்சும் பண்ணணும், ஏதாச்சும் பண்ணியே ஆகணும்... ஆஆ..." என்று லாரா ஏமாற்றம் கொடுத்த வலியிலும் ஆத்திரத்திலும் தலையைப் பிய்த்துக்கொள்ள, "சில் லாரா!" என்றுக்கொண்டே ஒரு க்ளாஸில் மதுவை ஊற்றி வாயில் சரித்தாள் ரியா.


"நாமதான் க்ரிம்னல்னு பார்த்தா அந்த விக்டர் நம்மள விட பெரிய க்ரிம்னலா இருக்கானே! என்ட், அந்த சர்வென்ட்ட தேடிதான் இந்தியா போயிருக்கான்னு எனக்கு இன்ஃபார்மேஷன் கிடைச்சிருக்கு. விக்டருக்கு ஏன் இப்படி ஒரு மட்டமான டேஸ்ட்" என்று ரியோ கேலியாகச் சொல்ல, "ஷட் அப்!" என்று அந்த இடமே அதிரக் கத்திய ஜேக்கப், சிகரெட் புகையை ஊதியவாறு குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு நெற்றியைத் தட்டிய வண்ணம் யோசிக்கத் தொடங்கினான்.


"எனக்கு ஒரு நல்ல யோசனை தோனுது. மொதல்ல விக்டர் பாரிஸுக்கு வரட்டும், அப்பறம் அதை எக்ஸிகியூட் பண்ணலாம். இந்த முறை அவன் தப்பிக்கவே கூடாது" என்று ஜேக்கப் பற்களைக் கடிக்க, "அவன உயிரோட விடக் கூடாது, அவளையும்தான்" என்று விழிகள் சிவக்கச் சொன்னாள் லாரா.


அன்றைய நாள் இவ்வாறு கழிந்து அடுத்தநாளும் விடிந்தது. 


அடைக்கப்பட்ட நான்கு சுவருக்குள் ஏசி குளிரில் புசுபுசு மெத்தையில் தூங்கி எழுந்த விக்டருக்கு இந்த மரக்கட்டிலும் வெயில் சூடும் புதிதுதான்.


தாமதமாக தூங்கியிருந்தவன், முகத்தில் பட்ட வெயிலில் விழிகளை சுருக்கியவாறு திரும்பிப் படுக்க, இப்போது உடலில் உணர்ந்த ஈரத்தன்மையில் தானாக உறக்கம் கலைந்தது. 


உடனே எழுந்தமர்ந்தவன் தன் ஆடையைப் பார்க்க, அதுவோ வியர்வையில் குளித்திருக்க, "ஷீட்!" என்று சட்டைப் பட்டன்களைக் கழற்றச் சென்றவன், "அய்யய்யயோ வேணாம்!" என்ற கத்தலில் திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தான். 


எதிரே சாட்சாத் தஷுரியேதான்.


கையில் காஃபியோடு அவனை தயக்கமாக ஏறிட்டவள், "அதான் நீங்க கேட்ட பொருள கொடுத்துட்டேன்ல, ஏன் இங்கயிருந்து கஷ்டப்படுறீங்க? நீங்க போயிருங்க" என்று அவனின் விழிகளைப் பார்க்க முடியாமல் தடுமாறியபடிச் சொல்ல, சட்டைக் கையை மடித்துவிட்டவாறு எழுந்து நின்றவன், "வேலை முடிஞ்சாச்சு, ஆனா விட மாட்டேங்குறாங்களே! வாட் டு டூ தஷுரி, உன் அப்பா அம்மா கல்யாணத்தை பார்த்துட்டுதான் போகணும்னு ரிக்வஸ்ட்" என்று கேலியாகச் சொல்லி சிரிக்க, இவளுக்கோ முகமே இறுகிவிட்டது.


காஃபி கப்பை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காது அவள் செல்லப் போக, "என் ட்ரெஸ்ஸ அயர்ன் பண்ணிக் கொடு!" என்றான் விக்டர் வழக்கம் போல் கட்டளையாக.


நிதானமாக அவனைத் திரும்பிப் பார்த்தவள், "இது ஒன்னும் உங்க ஊரு கிடையாது, என் ஊரு. ஓவரா ஆடினீங்கன்னா வால அறுத்துவிட்டுருவேன்" என்று மிரட்டலாகச் சொல்லி, "இருந்தாலும் வந்தவங்கள கவனிக்கிறது தமிழ்நாட்டு பண்பு. அதனால..." என்றுக்கொண்டே சட்டையைக் கேட்டு கரத்தை நீட்ட, சிறிதுநேரம் மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டி அவளை அழுத்தமாகப் பார்த்திருந்தான் அவன்.


அவளோ இரு புருவங்களை ஏற்றி இறக்க, ஒற்றைப் புருவத்தைத் தூக்கி முறைத்துப் பார்த்தவன், சட்டையை லக்கேஜிலிருந்து எடுத்து அவளிடம் நீட்ட, அவளும் எடுப்பதற்கு அவனை நெருங்கி கரத்தை நீட்டினாள். ஆனால், அடுத்தகணம் அவளுடைய கரத்தைப் பற்றியிழுத்தவன், அவளின் முதுகுபுறமாக கரத்தை மடக்கி அவளை சுவற்றில் சாற்றியிருந்தான். 


இதை கொஞ்சமும் தஷுரி எதிர்பார்க்கவில்லை என்பது அவளுடைய அதிர்ந்த முகமே அப்பட்டமாகக் காட்ட, அவளை சுவற்றில் சாய்த்து அவள் மேல் சாய்ந்துக்கொண்டவன், அவளின் காதுமடலில் தன் மீசை முடி உரச, "ஹவ் டேர் யூ இடியட், என்னையே நீ மிரட்டுறியா! லுக், நான் நினைச்சா உன் இடத்துலயே உன்னை ஒன்னுமே இல்லாம பண்றதுக்கு ஒரு நிமிஷம் ஆகாது. மறுபடியும் என்னோட மேன்ஷன்ல உன்னை சர்வென்ட்டா கூட என்னால மாத்த முடியும். என்னை அடக்க நினைக்காத, புரியுதா?" என்று அடக்கப்பட்டக் கோபத்தோடு கர்ஜிக்க, ஆடிப்போய்விட்டாள் பெண்ணவள்.


அவளுடைய விழிகளிலிருந்து பயத்தில் கண்ணீர் சொட்ட, அதைப் பார்த்தவனின் இதழ்கள் லேசாக விரிந்தன. அவளுடைய கரத்தைப் பற்றியிருந்த பிடியைத் தளர்த்தி தன்னை நோக்கி அவளைத் திருப்பியவன், சுவற்றில் சாய்ந்து தன்னைப் பயந்துப்போய் பார்க்கும் அந்த  மான் விழிகளில் தன்னையே இழந்துவிட்டான்.


விக்டர் இதுவரை அவனுடைய முடிவுகளில் மற்றவர்களை தலையிட விட்டதில்லை. அவன் நினைத்திருந்தால் நேற்றே இங்ஙகிருந்து சென்றிருக்கலாம்.  ஆனால், அவன் மனம்தான் இடங்கொடுக்கவில்லையே! 


அது காதல் என்று உணராமலேயே அவளிடத்தில் தன்னை இழந்துக்கொண்டிருந்தான் விக்டர். அவனுடைய கழுகுப்பார்வை அவளிதழ்களை இரையாக்க அதில் பார்வையைப் பதிக்க, அவனுடைய விரல்களோ அவளுடைய கன்னத்தில் மெல்ல மெல்ல கோலம் போட்டுக்கொண்டிருந்தன.


அவள் கன்னத்திலிருந்து மெல்ல நகர்ந்து இதழ்களை பெருவிரலால் வருடியவன், மற்ற கரத்தால் அவளிடையை அழுந்தப் பற்றியிருக்க, விழிகளை இறுக மூடிக்கொண்ட பெண்ணவளுக்கு ஏனோ அவனைத் தடுக்க மனம் வரவில்லை. ஏற்கனவே அவனிடத்தில் காதல் வயப்பட்டவளுக்கு தன்னவனின் தொடுகை கசக்குமா என்ன!


இதுவரை பல பெண்களுடன் இருந்திருக்கிறான். ஆனால், தஷுரியை நெருங்க நெருங்க அவளுடைய ஸ்பரிசம் கொடுக்கும் சுகத்தையும் படபடப்பையும் எந்த பெண்ணிடத்திலும் உணர்ந்ததில்லை அவன். 


தாவணி வழியே தெரிந்த வெற்றிடையைப் பற்றி மெல்ல தன்னை நோக்கி இழுத்தவன், அதற்குமேல் காத்திருக்க முடியாது உணர்ச்சியின் வேகத்தில் அவளிதழ்களைக் கவ்வியிருக்க, அவனின் வேகம் தாங்க முடியாது அவன் பின்னந்தலை முடியைப் பற்றிக்கொண்டாள் தஷுரி.


அவளிதழை சுவைக்கும் அவனின் வேகம் அதிகரித்துக்கொண்டே செல்ல, இருவருக்கிடையேயான சிறு இடைவெளியும் குறைந்துக்கொண்டே சென்றது. காற்று கூட புக முடியாத நெருக்கமும் இணைப்பும் இருவருக்குள்ளும். 


இருவரும் விடுவதாக இல்லை. ஏனோ ஒரு வார பிரிவு கூட இருவரையும் வாட்டி எடுத்துவிட்டது போலும்! இனி பிரிவே இல்லை என்பது போல் இருந்தது இருவரின் முத்தப்போர்.


திடீரென, "ஹ்ர்ம் ஹ்ர்ம்" என்ற செருமல் சத்தத்தை உணர்ந்த தஷுரி விக்டரிடமிருந்து விலகப் போக, அவனோ அப்போதும் விட்டபாடில்லை. அடுத்தகணம், "ஆத்தாடி ஆத்தா!" என்ற அலறல் சத்தத்திலேயே நடப்புக்கு வந்த விக்டர், வேகமாக தஷுரியை தன்னிடமிருந்து விலக்க, சுவற்றில் மோதி நின்றவள், எதிரே நின்றிருந்த துர்காவைப் பார்த்து உடனே விழிகளை இறுக மூடிக்கொண்டாள்.


தஷுரிக்கு தோழியின் முகத்தைக் காணவே வெட்கமாக இருக்க, கலைந்திருந்த தலைமுடியையும் சட்டையையும் சரிசெய்தவாறு துர்காவுக்கு பக்கத்திலிருத்தத ரோயைப் பார்த்து, "வாட்?" என்று சாதாரணமாகக் கேட்டு தோளைக் குலுக்கினான் அவன்.


ஆனால், தஷுரிக்கு அந்த இடத்தில் நிற்கக் கூட முடியவில்லை. உடனே துர்காவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து அவள் ஓடியேவிட, தோழனை குறுகுறுவெனப் பார்த்தவாறு, "டியூட், இது நிஜமாவே லஸ்ட்தானா?" என்று கேட்டான் ரோய்.


சில கணங்கள் அமைதியாக இருந்தவன், பின் "அப்படியே வச்சிக்க!" என்றுவிட்டு அங்கிருந்து வெளியேற, 'இது காதல்னு எப்போதான் புரிஞ்சுக்க போறானோ!' என உள்ளுக்குள் நினைத்தவாறு இருபுறமும் தலையாட்டி சலித்துக்கொண்டான் மற்றவன்.


மொத்தப்பேரும் ஹாலில் இருக்க, தஷுரியோ ராதா பார்க்கும் போதெல்லாம் முகத்தைத் திருப்பிக்கொண்டுச் செல்ல, பெரியவருக்குதான் மனம் வாடியது. இதைக் கவனித்த அஃப்ரிம், "தஷு..." என்றழைத்தவாறு அவளை நோக்கிச் செல்லப் போக, "ஹ்ர்ம் ஹ்ர்ம்... உள்ள வரலாமா?" என்றொரு குரல்.


அனைவரும் வாசலை நோக்கித் திரும்ப, அங்கு நின்றிருந்த சுப்ரமணியோ, அவர் பாட்டிற்கு உள்ளே வந்து முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி இழித்தபடி, "இதுதான் உன் வெளியூரு ஃப்ரென்ட்ஸ்ஸா தஷுரி?" என்று கேட்க, அவளோ அவரை முறைத்தபடி நின்றிருந்தாள்.


"ஆமா.... உனக்கு கல்யாணம்னு அரசல்புரசலா பேசிக்கிறாங்க, நெசமாவா?" என்று ராதாவைப் பார்த்து அவர் கேட்க, ராதாவோ பக்கத்திலிருந்த அஃப்ரிமை கைகளைப் பிசைந்தவாறு ஏறிட, அவரோ சுப்ரமணியை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தார்.


அவர்கள் பேசுவது புரியாது விக்டரிடம் என்னவென்றுக் கேட்ட ரோய்,  அவன் தெளிவுபடுத்தியதும், 'அட! பிபிசீ நியூஸ்ஸ விட இந்த ஊரு ஸ்பீடா இருக்கே!' என்று கேலியாக நினைத்துக்கொண்டான். 


சுப்ரமணியோ மூன்று ஆண்களையும் மேலிருந்து கீழ் பார்த்துவிட்டு, "எல்லாரும் வெளிநாட்டுக்காரனுங்களா! நமக்கு வசதியா போச்சு, அப்போ என்கிட்ட எடுத்த பணம் கூடிய சீக்கிரம் கிடைச்சிரும்ல!" என்று விஷமப் புன்னகையோடுக் கேட்க, 'என் பொண்ணு வாழ்க்கைய அழிக்க பார்த்துட்டு பணத்தை கேக்குறான் பாவி!' என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாது மனதிற்குள்ளே கருவிக்கொண்டார் ராதா.


சுப்ரமணியோ மூன்று ஆண்களையும் பார்த்தூ 'ஈஈ...' என்று இழித்தவாறு அங்கிருந்து வெளியேற, "யாரு அது?" என்று அஃப்ரிம் கேட்கவும், "அது... எங்க ஊருல ரொம்ப பெரிய குடும்பத்தை சேர்ந்தவங்க. அவங்ககிட்டதான் அப்பப்போ கட..கடன் வாங்கிப்பேன்" என்று தடுமாறியபடி ராதா சொல்ல, அவரை குறுக்கிட்டாள் தஷுரி.


"ஏன் இதோட நிறுத்திட்டீங்க, அந்த பொண்ணுங்கள கடத்துற கும்பலுக்கு என்னை வித்ததே இவன்தான்னு சொல்ல வேண்டியதுதானே!" என்று அவள் பட்டென சொன்னதும், விக்டரின் விழிகள் கூர்மையாக, "தஷுரி, அமைதியா இரு!" என்று கத்தினார் அவளின் அம்மா.


ஆனால், இப்போது விக்டர் விடப்போவதில்லை. 


"என்னாச்சு?" என்று அவன் அழுத்தமாகக் கேட்க, ராதா தடுத்தும் நடந்ததை சொல்லி முடித்த தஷுரி, "அவனுங்ககிட்ட காசு இருக்கு, அவங்கள எதிர்த்து எங்களால என்னதான் பண்ண முடியும்! உண்மை தெரிஞ்சும் எதுவும் பேச முடியாம இருக்கோம்" என்று சொல்ல, விக்டரின் விழிகளோ கோபத்தில் சிவந்தன.


கை முஷ்டியை இறுக்கியவனின் நெற்றி நரம்புகள் புடைத்துக் கிளம்ப, அஃம்ரிமுக்கும் அத்தனை ஆத்திரம். இதைக் கவனித்துக்கொண்டிருந்த ராதாவுக்குதான் பதற்றம் தொற்றிக்கொண்டது.


தஷுரியோ தன்னவனையே பார்த்துக்கொண்டிருக்க, சில கணங்களில் முகபாவனையை மாற்றியவன், அலைப்பேசியை நோண்டியவாறு ரோயை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே செல்ல, ஒன்றை எதிர்பார்த்து உண்மையை சொன்னவளுக்கு இப்போது சப்பென்றானது.


ஆனால், வெளியில் வந்த விக்டர், எப்போதோ தன் திட்டத்தை தோழனிடம் சொல்லியிருந்தான். ரோயும் அதற்கான வேலையை ஆட்கள் மூலமாக ஆரம்பித்திருக்க, சில நிமிடங்கள் கடந்து வெளியே வந்த தஷுரி, "ஊரை சுத்தி பார்க்க வர்றீங்களா?" என்று கேட்டாள் ஆர்வமாக.


இரு ஆடவர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டவர்கள் அவர்கள் பாட்டிற்கு முன்னே செல்ல, அவர்களின் பெரிய எட்டுக்களுக்கு ஈடு கொடுக்க முடியாது கிட்டத்தட்ட ஓடினாள் தஷுரி என்றுதான் சொல்ல வேண்டும்.


சரியாக, தான் வேலைப் பார்க்கும் வயலுக்கு அவர்களை அவள் அழைத்துச் சென்றிருக்க, அங்கு நின்றிருந்த துர்கா இவர்களைப் பார்த்ததும் அங்கிருந்த பக்கெட் நீரினால் கைகளையும் கால்களையும் கழுவிவிட்டு இவர்களை நோக்கி ஓடி வர, அவளைப் பார்த்ததும் ரோயின் விழிகள் மின்னின.


"என்ன தஷு, இந்த பக்கம்?" என்று கேட்டுக்கொண்டே அருகே வந்தவள், "அண்ணே, எங்க ஊரு பிடிச்சிருக்கா?" என்று விக்டரைப் பார்த்துக் கேட்க, அவனோ புருவத்தை நெறித்தவாறு சந்தேகத்தோடு தஷுரியைப் பார்த்தான்.


"என்னை எதுக்கு பார்க்குறீங்க, நான் அவகிட்ட எதையும் மறைக்க மாட்டேன். உண்மைய எல்லாம் சொல்லிட்டேன்" என்று சொல்லி தஷுரி எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்ய, அவனோ அவளை முறைத்தவன், துர்காவைப் பார்த்து வராத புன்னகையை கஷ்டப்பட்டு வரவழைத்துப் புன்னகைத்தான்.


'இவளுக்காகவே தமிழ் கத்துக்கணும் போலயே!' என உள்ளுக்குள் நினைத்துக்கொண்ட ரோய், "தஷுரி, இந்த ஊருல ஏதாச்சும் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன். மில்க் ப்ரொடெக்ட் மாதிரி... இங்க மாட்டுப் பண்ணை வச்சு மில்க் சப்ளே பண்றவங்க இருந்தா அவங்ககிட்ட கூட்டிட்டு போக முடியுமா?" என்று கேட்டதும், தஷுரியோ முன்னே நடக்கத் தொடங்கினாள்.


உடனே பதறிப்போனவனாக, "ஹேய் வெயிட்! நீ வேணா விக்டருக்கு ஊரை சுத்தி காம்மி, உன் ஃப்ரென்ட்... அதாவது அவங்க ஃப்ரீயா இருந்தா கூட்டிட்டு போக சொல்லு" என்று சொல்லி திருதிருவென விழிக்க, விக்டரோ நண்பனின் வித்தியாசமான நடவடிக்கையை விழிகளைச் சுருக்கிப் பார்த்தான்.


தஷுரிக்கு கூட லேசான சந்தேகம்தான். தோழியை தயக்கமாகப் பார்த்தவள், "அவளுக்கு தமிழ தவிர வேற எதுவும் பேச தெரியாது, பேசினாலும் புரியாது. அப்போ எப்படி?" என்று வெளிப்படையாகச் சொல்லிக் கேட்க, "தட்ஸ் நொட் அ பிக் டீல் தஷுரி, நான் ஹேன்டல் பண்றேன். எனக்கு உன்னோட என்ட் விக்டரோட டைம்ம வேஸ்ட் பண்ண பிடிக்கல" என்று தியாகிப் போல் பேசிய தோழனை, 'ஆஹான்!' என்று ஒரு ஆச்சரியப் பார்வைப் பார்த்தான் விக்டர்.


தஷுரியோ சிரிப்பை அடக்கியவாறு துர்காவிடம் விடயத்தைச் சொல்ல, அவளோ பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டாள். "ஏலே, அவர் ஏதாச்சும் கேட்டா என்னலே பதில் சொல்லுறது, ஒரு எழவும் புரியாதே!" என்று அவள் பயந்த குரலில் சொல்ல, "நான் சொன்ன இடத்துக்கு கொண்டு போய் விடுற வேலைய மட்டும் நீ பாரு, அவரு அவங்க கூட பேசிக்கட்டும்" என்று மற்றவள் சமாளித்து அனுப்ப, ரோயிற்கு ஒரே குஷிதான்.


துர்காவோ கைகளைப் பிசைந்தவாறு ரோயிற்கு பின்னே செல்ல, முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்க முடியாது வாய்விட்டே சிரித்தவாறு தன்னவனின் புறம் திரும்பியவளின் விழிகளில் சரியாகச் சிக்கியது சட்டைக்குள்ளிருந்து பாதி வெளியே தெரிந்த அவனுடைய கழுத்திலிருந்த செயின். அதைப் பார்த்தவள் மெல்ல அவனை நெருங்க, விக்டரோ தஷுரியை புரியாதுப் பார்த்தான்.


அவனை நெருங்கி அந்த செயினை சட்டைக்குள்ளிருந்து மெல்ல வெளியே எடுத்தவளின் விழிகள் மின்னின. காரணம், இத்தனைநாள் அவளிடமிருந்து காணாமல் போன அவள் தேடிக்கொண்டிருந்த அவளுடைய அம்மாவின் டோலர் இவனுடைய கழுத்தில். 


குறும்புப் புன்னகையோடு தஷுரி தன்னவனை நோக்க, முதல் முறை எப்படி சமாளிப்பதென்றுத் தெரியாமல் சற்றுத் தடுமாறினான் விக்டர்.


********************

தஷுரி 20 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/07/20.html


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls



Comments

  1. அச்சோ பாவம் விக்டர் மாட்டிக்கிட்டானா. .? பல நாள் திருடன், ஒருநாள் மாட்டுவான்ங்கறது இது தானோ..??

    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts

தஷுரி 10