தஷுரி 15




அந்த அலுவலகத்தின் பெரிய மீட்டிங் அறையில் லாராவும் விக்டரும் அமர்ந்திருக்க, அவர்களுக்கெதிரே அமர்ந்திருந்தனர் சிலபேர்.


"ஹாய் எவ்ரிவன், திஸ் இஸ் விக்டர் வன் ஆஃப் த பில்லியனர் இன் பாரிஸ்" என்று தன் முன்னிருந்தவர்களிடம் விக்டரை அறிமுகப்படுத்திய லாரா, "விக்டர், நான் ஆல்ரெடி சொன்னேன்ல, அது இவங்கதான். நம்மளோட நிவ் பிஸ்னஸ் டீலர்ஸ்" என்று சொல்ல, ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்தவனின் நினைவுகள் அன்று கேளிக்கை விருந்தின் போது நடந்ததை நினைவுக் கூர்ந்தன.


"மிஸ்டர்.விக்டர், உங்க கூட பேசலாமா?" என்ற லாராவின் வார்த்தைகளில் சட்டென நின்று திரும்பிப் பார்த்தான் விக்டர். 


"இஸ் திஸ் அபௌட் பிஸ்னஸ்?" அவன் அழுத்தமாக கூரிய பார்வையோடுக் கேட்க, "லைஃப் வித் பிஸ்னஸ்" என்றவளின் இதழ்களோ மயக்கும் சிரிப்பை உதிர்த்தது.


அந்த மேசையில் மூவரும் அமர்ந்திருக்க, தன் அலைப்பேசியில் சிலபேரின் புகைப்படங்களைக் காட்டிய லாரா, "இவங்க என்னோட பிஸ்னஸ் ஃப்ரென்ட்ஸ்ஸுன்னு சொல்லலாம். நீங்க இங்க இருக்குற ரெயாரான எனிமெஸ்ஸ அதோட பார்ட்ஸ்ஸ இல்லீகல்லா எக்ஸ்போர்ட் பண்றீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். இவங்களும் அவங்களோட நாட்டுல நீங்க பண்ற இதே பிஸ்னஸ்ஸ பண்றாங்க. இப்போ ரீசன்ட்டா இந்த அரிய வகை மிருகங்களுக்கான பாதுகாப்பு ரொம்ப அதிகமாகிருச்சு, உங்களோட இந்த பிஸ்னஸ் டவுன்ல இருக்குறதா கேள்விப்பட்டேன். பட், ஐ கென் ஹெல்ப் யூ. என்ட் ஆல்சோ, இவங்களும் என் மூலமா உங்க கூட பிஸ்னஸ் டீலிங் வச்சிக்கணும்னு நினைக்கிறாங்க" என்று சொல்லி முடிக்க, 


"அதுக்கென்ன, தாராளமா பண்ணலாம். பட், இவங்கள எப்படி நாங்க நம்புறது? என்ட், செக்யூரிட்டிய மீறி நீங்க ஹெல்ப் பண்றதா சொல்றீங்க, அது எப்படி?" என்று புரியாமல் கேட்டான் ரோய். விக்டரோ எதுவும் பேசவில்லை, யோசனையோடு விழிகளை சுருக்கியவாறு அவளையே ஆழ்ந்துப் பார்த்திருந்தான்.


"பாதுகாப்புக்கு இருக்குறவங்களே என் ஆளுங்களா இருந்தா முடியாதா என்ன? அவங்க மூலமா என்னால ஈஸியா கடத்த முடியும்" என்று சொல்லி சிரித்தவள், "பட், வன் கன்டிஷன்!" என்று விக்டரை மர்மச் சிரிப்போடுப் பார்த்தவாறு நிறுத்த, "வாட்?" என்று கேட்டான் அவன் கழுகுப் பார்வையோடு.


"நீங்க என்னை கல்யாணம் பண்ணணும்" என்று லாரா சொன்னதும் ஒருகணம் விக்டரே விழிகளை அதிர்ந்து விழித்தான். "எக்ஸ்கியூஸ் மீ!" அவனுடைய வார்த்தைகள் அழுத்தமாக வர, "யெஸ் மிஸ்டர்.விக்டர், நான் உங்கள கல்யாணம் பண்ணணும்னு ஆசைப்படுறேன். பட், நொட் ஃபார் ரொமேன்ஸ். ஆல் ஆர் பிஸ்னஸ்" என்று சொல்லி சாதாரணமாகத் தோள்களைக் குலுக்கியவள், "என்ட், உங்களுக்கு தேவையான ஒன்னு என்கிட்ட இருக்கு" என்றாள் சிரித்தபடி.


"யூ மீன்..." என்று சற்று முன்னே வந்து மேசையில் இரு கைகளைக் கோர்த்து அவன் அவளை கூர்ந்து நோக்க, "அரிய வகையான பொருட்கள்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்..." என்றுக்கொண்டே தன் கழுத்திலிருந்த வட்ட வடிவிலான டோலரை அவள் திறக்க, அதிலிருந்தது பளிச்சிடும் பல்மாணிக்க நீல நிறத்திலான வைரக்கல். உலகிலேயே ஒருவரிடம் மட்டுமே இருக்கக் கூடிய அரிய வகைக் கல் அது.


அதைப் பார்த்ததுமே விக்டரின் விழிகள் மின்னின. இத்தனை வருடங்களாய் தனக்கு சொந்தமாக்க வேண்டுமென அவன் ஆசைப்பட்டுத் தேடிக்கொண்டிருந்த ஒன்று. இன்று அவன் விழிகளுக்கெதிரே.


"வாவ்!" அவனுடைய இதழ்கள் அவனையும் மீறி முணுமுணுத்தன. விழிகளில் ஆச்சரியத்தோடு லாராவைப் பார்த்தவன் உடனே முகபாவனையை மாற்றி, "பிஸ்னஸ் பேசலாமா?" என்று அர்த்தம் பொதிந்த சிரிப்போடுக் கேட்க, "ஆல்ரெடி டீல் பேசியாச்சு விக்டர்" என்றவள், "மேரேஜ்தான் இதுக்கான விலை" என்றாள் அவனைப் போல் கைகளைக் கோர்த்து மேசையில் ஊன்றி முன்னே வந்தபடி.


விக்டரிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளியாக, "ஐ அக்ரி!" என்று அவன் சொன்னதும், லாராவின் இதழ்கள் புன்னகைக்க, விழிகள் மின்னின.


ஆனால், இத்தனை நேரம் நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த ரோயிற்கு, 'இங்க என்னதான் நடக்குது' என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. மாறி மாறி விக்டரையும் லாராவையும் அதிர்ந்துப்போய் பார்த்தவன், மெல்ல விக்டரின் காதருகே நெருங்கி "ஒரு கல்லுக்காக கல்யாணம் பண்ண போறியா டியூட்?" என்று கிசுகிசுத்த குரலில் கேட்க, மற்றவனோ அவனைப் போல் அவன் காதருகே நெருங்கி, "நமக்கு தேவையானதை அடைய எந்த எல்லைக்கும் நாம போகலாம்" என்றான் அதே கிசுகிசுத்த குரலில்.


'இவனை என்ன செய்தால் தகும்?' என்ற ரீதியில் ரோய் அவனை ஒரு பார்வைப் பார்க்க, அன்று நடந்ததை நினைத்து இன்று இதழ்களை வளைத்து தன் அக்மார்க் புன்னகைப் புரிந்தான் விக்டர்.


லாராவோ அறிமுகப்படுத்திவிட்டு வியாபார ஒப்பந்தம் பற்றிப் பேச, ஆரம்பத்தில் நன்றாகப் பேசிச் சென்றவனின் சிந்தனை சட்டென தஷுரியிடம் தாவியது. இவன் செய்யும் வியாபாரத்தை நாட்டுக்கு செய்யும் துரோகமென அவள் பேசிய வார்த்தைகளே இவனின் சிந்தனைக்குள் ஓடத் தொடங்கின.


எப்போதும் வியாபாரம் என்று வரும் போது தனிப்பட்ட விடயங்களைவிட்டு முழு கவனத்தையும் வியாபாரத்தில் செலுத்தி வேங்கையென சீறுபவன், இன்று ஏனோ மனம் தடுமாற, எதிலும் கவனம் செலுத்தாது அமைதியாக இருந்தான்.


"விக்டர், ஆர் யூ ஓகே?" என்று லாரா அவனின் கரத்தைப் பற்ற, அவளிடமிருந்து மெல்ல கரத்தை விலக்கியவன், "தட்ஸ் இனாஃப், நான் போகணும்" என்றவன், எதையும் கண்டுகொள்ளாது அவன் பாட்டிற்கு எழுந்து அங்கிருந்து விறுவிறுவென வெளியேற, பக்கத்திலிருந்தவளுக்கோ ஒன்றும் புரியவில்லை.


"எக்ஸ்கியூஸ் மீ!" என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு, "விக்டர்... விக்டர்..." என்று அவன் பின்னாலேயே சென்ற லாரா, தன் அழைப்புகளைக் கண்டுகொள்ளாதது போல் அவன் காரில் ஏறிச் செல்லவும், அவனின் செயல் புரியாது வீதியில் மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.


வீட்டுக்கு வந்ததுமே அங்கிருந்த வேலையாளிடம், "கெட் மீ அ காஃபி வித் கேக், இம்மீடியட்டா ரூமுக்கு அனுப்பி விடு!" என்றுக்கொண்டே நெற்றியை எரிச்சலாக நீவிவிட்டவாறு தனதறைக்குச் சென்றவன், கதவை பெரிய சத்தத்தோடு இழுத்து மூடிவிட்டு அப்படியே அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான்.


'தான் ஏன் இப்படி இருக்கிறோம்?' என்ற கேள்விக்கு அவனிடத்திலே பதிலில்லை. சிறிதுநேரம் தலையை இரு கைகளால் தாங்கியிருந்தவன், பின் பெருமூச்சைவிட்டு குளியலறைக்குள் நுழைந்து அடுத்த பத்தே நிமிடங்களில் இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தான்.


வழக்கம் போல் ஆளுயர கண்ணாடியின் முன் நின்று நீர்த்துளிகள் அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் தன் சிக்ஸ்பேக் உடலை ரசித்துப் பார்த்தவன், மேலும் உடலை முறுக்கி நிற்க, "உங்களுக்கு தொப்பையே இல்லையா விக்கு?" என்றொரு குரல். 


திடுக்கிட்டு விழித்த விக்டர், சுற்றிமுற்றி குரல் வந்த திசையைத் தேட, சரியாக அவனின் கட்டிலின் மறுபுறம் தரையில் அமர்ந்தவாறு அவனுக்குக் கொண்டு வரப்பட்ட கேக்கை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் தஷுரி. அவளைப் பார்த்ததும் சில கணங்கள் அவனுக்கோ பேச்சே வரவில்லை. 


"நீ... நீ இங்... தஷு..." அவனுடைய வார்த்தைகள் அவளை இங்கு எதிர்பார்க்காத பதற்றத்திலும் அதிர்ச்சியிலும் தந்தியடித்தன. விக்டரையே தடுமாற வைத்த பெருமை தஷுரியையே சாரும்.


"விக்கு ஹிஹிஹி..." வாயை சுற்றி கேக்கின் ஐஸிங் ஒட்டியிருக்க, அவள் அப்பட்டமாக அசடுவழிய, முயன்று தன்னை மீட்டு அவளை முறைத்தவனுக்கு  கோபம் எக்குத்தப்பாக எகிறியிருக்க, "ஹவ் டேர் யூ... என் பர்மிஷன் இல்லாம என் ரூம்ல... ஐ வில் ஸ்லேஷ் யூ இடியட்! கெட் அவுட் ஃப்ராம் மை சைட்!" என்று காட்டுக்கத்துக் கத்த, அவளுக்கோ அதுவெல்லாம் புரிந்தால்தானே!


"இங்லீசு பேச தெரிஞ்ச உங்களுக்கு அதை யாருகிட்ட பேசணும்னு தெரியல பார்த்தீங்களா! பெரிய பெரிய படிப்பு படிச்சு என்ன பயன்..." என்று அவள் அப்படியே அமர்ந்தவாறு புலம்பத் தொடங்க, எரிச்சலில் தலையை அழுந்தக் கோதியவன், வேகமாக வந்து அவளின் முழங்கையைப் பற்றித் தூக்கி நிறுத்த, நிற்கக் கூட முடியாது தள்ளாடினாள் தஷுரி.


அவளின் தள்ளாட்டத்திலேயே அவனுக்கு சிறு சந்தேகம் உண்டாக, அறைக் கதவு வரை இழுத்துச் செல்லவென அவளின் கரத்தைப் பற்றி அவனிழுக்க, அவளோ அவனுடலோடு மோதி நின்றாள். அப்போதுதான் அவளிடமிருந்து வந்த மது நெடியை உணர்த்ததவன், சட்டென நின்று தஷுரியை கூர்ந்துப் பார்த்தான்.


அவளோ பெரிய ஏப்பமாகவிட்டு, "ஹிஹிஹி... சார்..சாரிங்க" என்று வாய் குளறியபடிச் சொல்ல, "ட்ரிங்க் பண்ணிருக்கியா?" என்று அதிர்ந்துப்போய் கேட்டவன், "உனக்கு இதெல்லாம் பழக்கமிருக்கா?" என்று கேட்டான் திகைப்பு மாறாமல்.


"நான் குடிச்சிருக்கேனான்னு கேக்குறீங்களா விக்கு! ஒரு பக்கா கிராமத்து பொண்ணுகிட்ட கேக்குற கேள்வியா இது?" என்று கேட்டு உதட்டைப் பிதுக்கியவள், அவனுடைய கரத்தை உதறிவிட்டு அவனுடைய படுக்கைக்குச் சென்று சம்மணமிட்டு அமர்ந்து 'ஓ...' என ஒப்பாரி வைக்க, விக்டருக்கோ பிபி எகிறியது.


"ரொம்ப அதிகமா குடிச்சிருக்கன்னு நினைக்கிறேன். இந்த நிலைமையில உன்கிட்ட ஆர்கியூ பண்ண எனக்கு புடிக்கல. நீயா போயிரு, நாளைக்கு பேசலாம்" என்று அடக்கப்பட்ட கோபத்தோடு அவன் சொல்ல, 


கட்டிலிலிருந்து பாய்ந்து எழுந்து விறுவிறுவென அவனை நோக்கி வந்தவள், அவனின் ஆறடி உயரத்தை அண்ணாந்துப் பார்த்து "நீங்க எதுக்கு கோபப்படுறீங்க, நீங்க பண்ண காரியத்துக்கு நான்தான் கோபப்படணும். நீங்க என்னை கட்டிக்காம வாழ்க்கை முழுக்க பிரம்மச்சாரியா இருந்தா கூட பரவாயில்ல, போயும் போயும் அந்த உம்முணா மூஞ்சிய கல்யாணம் பண்ண போறீங்க, என்னால இதை தாங்க முடியல விக்கு" என்று ஒற்றை விரலை நீட்டி கோபமாக ஆரம்பித்து இறுதியில் உதட்டைப் பிதுக்கி மீண்டும் அவனின் கட்டிலுக்கே ஓடிச் சென்று குப்புறப்படுத்து குலுங்கிக் குலுங்கி அழ, இவனுக்கு ஏனோ தன்னை மிறி சிரிப்புதான் வந்தது.


"நான் யாரை மேரேஜ் பண்ணா உனக்கென்ன? தட் இஸ் நொன் ஆஃப் யூவர் பிஸ்னஸ்" ஏளனச் சிரிப்போடு அவன் சொல்ல, படுத்திருந்தவள் சட்டென எழுந்தமர்ந்து சம்மணமிட்டு, "இங்க வாங்க" என்றாள் ஹஸ்கி குரலில்.


ஒருகணம் புரியாது புருவங்களை நெறித்தவன், மெல்ல அவளருகே சென்று  அவள் முன் அமர்ந்துக்கொள்ள, தஷுரியோ பட்டென அவனின் இரு கன்னங்களைப் பற்றிக்கொண்டாள்.


"உங்கள பத்தி நான் கவலைப்படாம வேற யாரு கவலைப்படுவா, உங்கள நான்தானே நல்லா பார்த்துக்கணும்" என்று ஆழ்மனதிலிருந்து தஷுரி சொன்ன வார்த்தைகளில் உடல் சிலிர்த்துவிட்டான் விக்டர். 


இதுவரை அஃப்ரிமைத் தவிர அவனுக்காக கவலைப்பட்டு யாரையும் அவன் பார்த்ததில்லை. யாருடைய விழிகளிலும் அவனுக்கான உண்மையான அக்கறையை உணர்ந்ததில்லை. ஆனால் இவள்?


தன்னை மறந்துவிட்டான் அவன். அவளையே இமை சிமிட்டாது பார்த்திருந்தவன், நடப்பை உணர்ந்ததும் முயன்று அவளிடமிருந்து பார்வையை மீட்டு வேறுபுறம் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.


'ஊஃப்...' என்ற பெருமூச்சு அவனிடமிருந்து வெளியாக, "இங்கயிருந்து போயிடு தஷுரி!" என்றான் அழுத்தமாக. ஆனால், அவனின் மனநிலையெல்லாம் உணரும் நிலையில் அவளில்லை.


"நிஜமாவே உங்களுக்கு என்மேல கொஞ்சோண்டு காதல் கூட இல்லையா?" என்று தஷுரி வாய் குளறியபடிக் கேட்க, அவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்தவன் 'இல்லை' எனும் விதமாக அழுத்தமாக தலையசைத்து முகத்தைத் திருப்பிக்கொண்டான்.


அதில் சட்டென்று உதட்டைப் பிதுக்கியவளின் விழிகளுக்கு மீண்டும் அவனின் பால்கனி அருகில் வைத்திருந்த மது போத்தல் தென்பட, "என் அப்பாவுக்கும் நான் வேணாம், உங்களுக்கும் நான் வேணாம், யாருக்கும் நான் வேணாம்" என்று புலம்பியவாறு ஓடிச் சென்று அந்த மதுபோத்தலை எடுத்து வாயில் சரிக்க, "ஓ ஷிட்!" என்று தலையிலடித்துக்கொண்டவன், வேகமாகச் சென்று அவளின் கையில் இருந்ததைப் பிடுங்கினான்.


அதில் அவனை மூக்கு விடைக்க முறைத்தவள், "காதலிக்க சொன்னா அதுவும் முடியாது, என்னை குடிக்கவும் விட மாட்டேங்குறீங்க. உங்கள... உங்கள நான் சும்மா விட மாட்டேன்" என்று அடிப்பது போல் சென்று போதையில் தடுமாறி விழப் போக, அவனோ விழச் சென்றவளின் முழங்கையைப் பற்றியிழுத்து தரதரவென இழுத்துச் சென்று சோஃபாவில் அமர வைத்தான்.


அவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்துவிட்டது, அஃப்ரிம் அவரைப் பற்றிய உண்மையை சொல்லவில்லை என்று. இருந்தாலும், அவனுக்குள் ஒரு சந்தேகம். "ஏன் உங்க அப்பாவுக்கு நீ வேணாம்னு சொல்ற, அவரு உன்கிட்ட சொன்னாரா என்ன?" என்று கேட்டான் அவன் மெதுவாக.


"இப்போ வரைக்கும் என்னை தேடி வரல. நான் இருக்கேனா இல்லையான்னு கூட அவருக்கு தெரியல. அப்படின்னா அவருக்குன்னு ஒரு குடும்பம் இருக்காங்க, நான் அவருக்கு தேவையில்லைன்னுதானே அர்த்தம்!" என்று சொல்லி விக்டரின் தோளில் அவள் சாய்ந்துக்கொள்ள, ஏனோ அவனுக்கு அவளை தன்னிடமிருந்து விலக்கத் தோன்றவில்லை.


"என்னை விடுங்க, என் அம்மா இப்போ வரைக்கும் விட்டுட்டு போன என் அப்பாவுக்காக காத்துகிட்டு இருக்காங்க. அவங்களுக்காக கூட வரல்லையே அந்த மனுஷன்! உங்களுக்கொன்னு தெரியுமா, நான் அவங்கள ரொம்ப திட்டியிருக்கேன், இரண்டாவது கல்யாணம் பண்ண சொல்லி கூட நானே அவங்ககிட்ட சொல்லியிருக்கேன். ஆனா, இப்போ நான் காதலிக்கும் போதுதான் எனக்கு புரியுது" என்றவள், "நானும் உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பேன், 

உங்க காதலையும் சேர்த்து நானே காதலிப்பேன்ங்க" என்றாள் மொத்தக் காதலையும் விழிகளில் தேக்கியபடி.


ஒருகணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டான் விக்டர். இது போன்ற உணர்வுகளை அவன் இதுவரை உணர்ந்ததேயில்லை. யாரும் உணர்த்தியதும் இல்லை. இந்த சிறுபெண் அவனுக்கு உணர்த்திவிட்டாள்.


அவளிடமிருந்து விழிகளை கஷ்டப்பட்டு விலக்கியவன், "உன் அம்மாவ நீ ரொம்ப மிஸ் பண்றியா?" என்று கேட்க, "அம்மா..." என்று மெதுவாக முணுமுணுத்தவள் திடீரென ஓவென்று அழத் தொடங்க, அவளின் கதறலில் பயந்தவன், "ஹேய் ஷட்அப்!" என்று கத்தி அவளின் வாயைப் பொத்தினான்.


திமிறியபடி அவனின் கரத்தை தன் வாயிலிருந்து எடுத்தவள், "நீங்க வேணா என் ஊருக்கு என்னை கட்டிக்கிட்டு வந்துடுறீங்களா, பணம் காசு இல்லைன்னாலும் ரொம்ப நிம்மதியா இருக்கும். வயல், குளம், ஏரின்னு பார்க்குற இடமெல்லாம் ரொம்ப அழகா இருக்கும். அங்க அனுபவிக்குற சுகத்தை இந்த புசுபுசு மெத்தை கூட தராது. உங்க மனசுல ஏதோ ஒரு பாரம் இருக்கு. அது என்னன்னு எனக்கு தெரியும், உங்களுக்கும் தெரியும். என் ஊருக்கு வாங்க, எல்லாத்தையும் மறந்துடுவீங்க!" என்று அவனின் இடதுபக்க நெஞ்சைத் தொட்டு புன்னகைக்க, 


ஒருகணம் தஷுரி தன் மனதிலிருக்கும் பாரத்தைப் பற்றி பேசியதில் அதிர்ந்தவன், உடனே முகபாவனையை மாற்றி அலட்சியமாகத் தோளைக் குலுக்கிக்கொண்டான்.


தஷுரியோ சோஃபாவின் மேல் இரு கால்களையும் ஏற்றி எழுந்து நின்று, "ஒருதடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று, ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று" என்று விக்டரை நோக்கி விரலை நீட்டி கத்திக் கத்திப் பாடத் தொடங்க, "ஓ கோட்! சரியான இம்சைடீ நீ" என்று நின்றுக்கொண்டிருந்தவளின் கரத்தைப் பற்றியிழுக்க, அவளோ முழுதாக அவனின் மேல் விழுந்து அவனுடலோடு ஒட்டிக்கொண்டாள்.


அதிர்ச்சியில் அவன், ஏற்கனவே போதையில் இவள். அவனோடு உரசியதும் ஏதேதோ உணர்வுகள் தோன்ற, தன் இதழுக்கருகே இருந்த அவனின் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டாள் பெண்ணவள். அவளின் ஒற்றை முத்தத்தில் அவனுக்கோ உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வு.


ஒருதரம் விழிகளை அழுந்த மூடித் திறந்தான். இத்தனைநேரம் அவளருகில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தவனுக்கு இப்போது ஒவ்வொரு கணங்களும் தன் கட்டுப்பாட்டை இழப்பது போல் தோன்ற, கைமுஷ்டியை இறுக்கி உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான். ஆனால், அவள் விட்டால்தானே!


கன்னத்தில் பதிந்த உதட்டை உரசிக்கொண்டே இதழுக்கருகில் கொண்டு வந்து இதழோரத்தில் மெல்லிய முத்தமொன்றை அவள் பதிக்க, அவ்வளவுதான். அவளிள் இடையை தன் வலிய கரத்தால் வளைத்து இறுகப் பற்றி தன்னோடு நெருக்கிக்கொண்டவன், ஆவேசமாக அவளின் இதழை தன் வன்னிதழால் கவ்வியிருந்தான். 


அவனுடைய இதழ் முத்தம் நேரம் கடந்துச் சென்றது. கரங்களும் அவளுடலில் அத்து மீறத் தொடங்கிவிட்டது. இருவரும் தங்களுடைய நிலையிலேயே இல்லை. தம்மையே மறந்த நிலையில் முத்தப் போர்களத்தில் இதழ்களால் சண்டையிட்டுக்கொண்டிருக்க, விக்டரின் இதழ்களோ அவளுடைய இதழைவிட்டு அவளின் கழுத்துவளைவுக்குத் தாவிவிட்டன. 


அவள் கழுத்தில் அவனின் மீசை முடி உண்டாக்கும் கூச்சத்தில் அவளுடல் சிலிர்த்தடங்க, அவனின் பின்னந்தலை முடியை இறுகப் பற்றிக்கொண்டாள் தஷுரி. மெல்ல மெல்ல இருவரும் எல்லையைக் கடக்கத் தொடங்க,வழக்கம் போல் முதலில் சுதாகரித்தது விக்டர்தான்.


நடப்பை உணர்ந்த மறுகணமே போதையில் தன்னை மறந்து இருப்பவளிடம் தான் செய்யும் காரியத்தை உணர்ந்து அவளிடமிருந்து விலகி மடியிலிருந்தவளை பிடித்து கீழே தள்ளிவிட்டிருந்தான் அவன். "ஷீட்!" தன்னைத்தானே கடிந்துக்கொண்டு நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டவன், இப்போது தஷுரியைப் பார்க்க, அவளோ போதையிவ் ஏதேதோ முணங்கியவாறு தரையிலேயே மட்டை ஆகிவிட்டாள்.


இடதுபக்க புருவத்தை நீவிவிட்டவாறு பெருமூச்சொன்றை வெளியிட்டவன், உடனே காவலாளி ஒருவனுக்கு அழைத்து ஹெலனை வரவழைத்தான். அவள் வருவதற்குள் தஷுரியின் ஆடையை சரிசெய்தவன், அவளை சோஃபாவில் படுக்க வைத்திருக்க, உள்ளே வந்த ஹெலனிற்கு 'இவளை என்ன செய்தால் தகும்?' என்றுதான் இருந்தது.


விக்டரிடம் தஷுரிக்காக மன்னிப்புக் கேட்டவள், தோழியைத் தாங்கியவாறு அங்கிருந்து அழைத்துச் சென்றிருக்க, போதை மயக்கத்தில் புலம்பியவாறு சென்றவளை வெறித்துப் பார்த்தவன் உடனே ரோயிற்கு அழைத்து, "நான் சொன்ன வேலை என்னாச்சு?" என்று கேட்டான் இறுகிய குரலில்.


மறுமுனையில் என்ன பதில் வந்ததோ, விக்டரின் முகம் பாறை போல் மேலும் இறுகிப் போக, "நாளைக்கே கொடுத்துடு" என்றான் சுரத்தே இல்லாத குரலில்.


அடுத்தநாள் காலையில் தலைவலியோடு எழுந்தமர்ந்தவள், தனதறையில் தன் முன்னே ஹெலனோடு நின்றிருந்த ரோயை புரியாமல் பார்க்க, அவனோ இவள் எழுந்ததைக் கவனித்ததுமே தன் கோர்ட் பாக்கெட்டில் வைத்திருந்த தஷுரியின் பாஸ்? போர்ட்டையும் நாளை மறுநாள் அவள் இந்தியா செல்வதற்கான டிக்கெட்டையும் கொடுக்க, சிலையாக சமைந்துவிட்டாள் பெண்ணவள்.


***************

தஷுரி 16>>>

https://agnitamilnovels.blogspot.com/2024/06/16.html


தஷுரி கதையை கிண்டலில் படிக்க 👇

https://www.amazon.in/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls


Comments

Popular posts

தஷுரி 10