தஷுரி 11


 


தஷுரியை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாகப் பார்த்தவாறு, "யார் நீ?" என்று ரியா கேட்க, 'என்ன நம்மள ஏதோ அசிங்கத்த பார்க்குற மாதிரி பார்க்குறா' என்று உள்ளுக்குள் நினைத்தவள், "நான் விக்டர் சாரோட லவ்வரு" என்று சொல்லி கோலரைத் தூக்கி விட்டுக்கொண்டாள்.


அவ்வளவுதான். "வாட்!" என்று அதிர்ந்து நின்றது அந்த யுவதி மட்டுமல்ல, அவளுக்குப் பின்னால் நின்றிருந்த விக்டரும் ரோயும்தான்.


"வாட்! நீ லவ்வரா, இஸ் தட் ட்ரூ விக்டர்?" என்று கேலியாகக் கேட்டு ரியா சிரிக்க, பின்னால் நின்றிருந்த விக்டரோ தஷுரியைத் தீப்பார்வைப் பார்த்துக்கொண்டு நின்றருந்தான் என்றால், தஷுரிக்கோ தூக்கி வாரிப்போட்டது.


'ஆத்தீ! சிக்கிட்டோமே சிவனான்டீ' என்று விழிகளை மூடி நாக்கைக் கடித்துக்கொண்டவள், மெல்லத் திரும்பி ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்துப் பார்க்க, இங்கு எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய்யை ஊற்றுவது போல், "வீட்டு சர்வன்ட்தான் உங்க லவ்வரா விக்டர், ஓ கோட்! உங்க கூடதான் நான் பிஸ்னஸ் டீலிங் வச்சிக்க போறனா?" என்று கேட்டு மற்றவள்சிரிக்க, அவனுக்கோ தாடை இறுகியது.


நடப்பது புரிந்து ரோய், "ரியா, டோன்ட் மைன்ட்! இதெல்லாம் சும்ம..." என்று விளக்க வர, "ஓ ரோய், ஐ அம் ஜஸ்ட் கிட்டிங். இதுக்கும் நம்ம பிஸ்னஸ்கும் என்ன சம்மந்தம்? விக்டர் வேலைக்காரி லவ்வரா வச்சா என்ன, தோட்டக்காரிய லவ்வரா வச்சா எனக்கென்ன? அவரோட டேஸ்ட் அப்படி!" என்று நமட்டுச் சிரிப்புடன் சொல்ல, தஷுரியை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தவன், சட்டென ரியாவை குறுக்கிட்டுப் பேசினான்.


"யூ நோ வாட் மிஸ்.ரியா? நான் இன்னைக்கு ஒரு பொண்ணோட இருப்பேன், நாளைக்கு ஒரு பொண்ணோட இருப்பேன். அதை வச்சு நான்தான் அவங்க லவ்வர், ஹஸ்பன்ட்னு அவங்களே நினைச்சுக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்? இந்த சில்லி விஷயங்கள கண்டுக்க எல்லாம் எனக்கு நேரமில்ல" என்று தஷுரியையே பார்த்தவாறு விக்டர் கூற, பெண்ணவளின் விழிகளோ அவனுடைய வார்த்தைகளில் சட்டென கலங்கின.


அதையெல்லாம் அவன் கண்டுகொள்ளவும் இல்லை. "கம் ஆன் ரியா!" என்றுக்கொண்டே விக்டர் அவன் பாட்டிற்கு முன்னே செல்ல, அவளை பாவமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவன் பின்னே சென்றான் ரோய்.


அன்றிரவு, "ஏலே அக்கா, உனக்கு தெரியலன்னா தெரியலன்னு சொல்லு, அதை விட்டுட்டு தெரிஞ்ச மாதிரி பேசி என்னை அசிங்கப்பட வச்சிட்டல்ல!" என்று தஷுரி காட்டுக்கத்து கத்த, "அப்போ அவங்க அதுக்கு வரல்லையா, பிஸ்னஸ் விஷயமா பேச வந்திருக்காங்களா?" என்று சாதாரணமாகக் கேட்டு யோசிப்பது போல் பாவனை செய்துக்கொண்டிருந்தாள் ஹெலன்.


தஷுரியோ அவளை முறைத்துவிட்டு அறையிலிருந்த ஜன்னல் வழியே வெளியே பார்க்க, காரில் வந்திறங்கிய யுவதியொன்று காவலாளிகளோடு வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்தவள், "இவனையெல்லாம் திருத்தவே முடியாது" என்று காலால் தரையை கோபத்தில் உதைத்துவிட்டு விறுவிறுவென அறையிலிருந்து வெளியேறினாள்.


"ஏய் தஷு, எங்க போற?" என்ற ஹெலெனின் கத்தல்கள் காற்றில் கரைந்தோட, மின்தூக்கியிருக்கும் பக்கம் சென்றால் காவலாளிகளிடம் சிக்கிக்கொள்வோம் என மெல்ல பதுங்கிப் பதுங்கி படிக்கட்டுக்கள் இருக்கும் பக்கம் சென்றாள் அவள்.


அங்கு காவலுக்கு நின்றிருந்த காவலாளி வேறு தன்னை மறந்து உறங்கியிருக்க, அது இவளுக்கு வசதியாகிப் போனது. எப்படியோ விக்டரின் பெரிய அறை இருக்கும் மேல் தளத்திற்கு வந்தவள், சுற்றிமுற்றி பதற்றமாகப் பார்த்துக்கொண்டு அறை வாசலில் நின்றிருந்தாள்.


'கதவைத் தட்டுவோமா, வேண்டாமா, இல்லையென்றால் அப்படியே தன் அறைக்கு ஓடிவிடலாமா' என்ற குழப்பத்தில் கையை கொண்டு செல்வதும் வேண்டாமென இழுப்பதுமாக தஷுரி விக்டரின் அறை வாசலில் தடுமாறிக்கொண்டிருக்க, சில கணங்கள்தான் சென்றிருக்கும்.


சட்டென கதவு திறக்கப்பட்டு ஒரு வலிய கரம் வெளியே வந்து அவளைப் பிடித்து உள்ளே இழுத்திருக்க, அவளின் உடலிலுள்ள ஒவ்வொரு பாகங்களும் பயத்தில் வேலை செய்வதையே நிறுத்திவிட்டது. தன்னை மீட்டி நடப்பை உணரவே அவளுக்கு சில நிமிடங்கள் சென்றன.


அவள் நடப்பை உணரும் போது இங்கு அறைக்குள் அவளை இரு கைகளால் அணைக்கட்டி கழுகுப் பார்வைப் பார்த்தவாறு நின்றிருந்தான் விக்டர். அவனுடைய விழிகளே அவனின் கேள்வியையும் கோபத்தையும் உணர்த்த, "அது... நான் உங்கள... நான்..." என்று தஷுரி தடுமாற, குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் அந்த யுவதி.


இருவரையும் பார்த்து அவள் ஏதோ பேச வரும் முன், "கெட் அவுட்!" என்ற விக்டரின் கத்தல் அந்த அறையோடு சேர்த்து அவளையும் அடக்க, எதுவும் பேசாது சோஃபாவுக்கு மேலிருந்த தன் பையை எடுத்துக்கொண்டு அறைக்குள் வருவதற்கான இன்னொரு வாசல் வழியே வெளியே ஓடிவிட்டாள் அவள்.


இங்கு அவள் சென்றதைப் பார்த்துவிட்டு தஷுரியைப் பார்த்தவனின் விழிகள், அவளின் கலங்கியிருந்த விழிகளைப் பார்த்ததும் கர்வத்தில் மின்ன, இதழ்களோ விஷமமாகச் சிரித்துக்கொண்டன.


"இங்க என்ன பண்ற?" அவனுடைய வார்த்தைகள் அழுத்தமாக வர, கலங்கிய விழிகளை இமை சிமிட்டி அடக்கிக்கொண்டவள், "ஹிஹிஹி... ஹெலோ பாஸ், நீங்க நல்லா தூங்கிட்டீங்களான்னு பார்க்க வந்தேன். சரி பாஸ், அப்போ நான் கிளம்புறேன்..." என்று அசடுவழிந்தவாறு அங்கிருந்து நழுவப் பார்க்க, அவன் விட்டால்தானே!


"ஆஹான்! பட், நான் தூங்கல்லையே ஸ்வீட்ஹார்ட், ஐ அம் நொட் செடிஸ்ஃபைட் வித் ஹெர். சோ, கென் யூ?" என்று சொல்லி விக்டர் பாவமாக முகத்தை வைக்க, ஆங்கில மொழியில் அவன் சொன்னது புரியாது விழித்தவள், "ஆ..ஆங்" என்று அர்த்தம் தெரியாது வெகுளியாக தலையசைத்தாள்.


அதைப் பார்த்ததுமே தன் அக்மார்க் புன்னகைப் புரிந்தவன், அடுத்தகணம் அவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு கட்டிலை நோக்கிச் செல்ல, அவன் தூக்கியதும் ஆடிப்போனவளாக விதிர்த்துப்போய் அவனைப் பார்த்தவள், "என்..என்ன பண்றீங்க?" என்று கத்தத் தொடங்கிவிட்டாள்.


அவனோ அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. "நீதானே ஸ்வீட்ஹார்ட் சரின்னு சொன்ன, இப்போ வேணாம்னா எப்படி?" என்று சொன்னவாறு விக்டர் அவளை மஞ்சத்தில் தூக்கிப் போட்டிருக்க, "எதுக்கு?" என்று கேட்டவளுக்கு பின்னர் அவன் தமிழில் சொன்னதும் இதயமே நின்றுவிட்டது.


அவளையும் மீறி ஒற்றை விழியிலிருந்து விழிநீர் கன்னத்தினூடே வேகமாக வந்து மெத்தையை நனைத்திருக்க, இடுப்பில் கைக்குற்றி அவளை ஆழ்ந்து நோக்கிய விக்டர், மெல்ல அவளை நெருங்கி அவள் மூச்சுக்காற்றோடு தன் மூச்சுக்காற்றை கலந்தவாறு, "யூ லவ் மீ, ரைட்? அப்போ எதுக்கு இந்த டியர்ஸ் ஸ்வீட்ஹார்ட்" என்று கேட்டான் கேலியாக.


அவளோ சிவந்து கண்ணீர் தேங்கிய விழிகளோடு அவனை முறைக்க, அவளுடைய தாடையை இறுகப் பற்றிக்கொண்டவன், "யூ லவ் மீ ரைட்?" என்று மீண்டும் அழுத்தமாக ஒரு மாதிரிக்குரலில் கேட்க, இவளுக்கோ அவன் கேட்கும் விதத்தில் வார்த்தைகள் கூட வரவில்லை. 


அவனோ வெற்றிச் சிரிப்போடு அவளுடைய விழிகளைப் பார்த்தவாறு கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்தவன், வாசத்தை இழுக்க, எந்த செயற்கை மணமுமின்றி அவளிடத்தில் வரும் இயற்கை நறுமணமே அவனை கிறங்கடித்தது. 


"இதுவரைக்கும் உன்னை மாதிரி ஒரு பொண்ண நான் பார்த்ததே இல்லை" கிறக்கமாக அவனுடைய வார்த்தைகள் வெளிவர, உணர்வின்றி ஜடம் போல் அப்படியே தஷுரி இருக்க, அவனுடைய விரல்கள் அவளுடைய உடலில் அத்து மீறத் தொடங்கிவிட்டன.


என்னதான் காதலனாக இருந்தாலும் ஏனோ அவனுடைய தொடுகை அவன் மீது காதல் கொண்ட அவளின் மனதிற்கு சுகத்தைக் கொடுக்கவில்லை. மாறாக, வலியைக் கொடுக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தாள் தஷுரி.


"ஆமா, நான் உங்கள காதலிக்கிறேன்தான். அப்போ உயிர்ப்போட இருந்த நான் இப்போ உங்க தொடுகையில பொணமாகிட்டேன். நீங்க ருசிக்க நினைக்கிறது வெறும் பொணந்தான் மிஸ்டர்.விக்டர்" என்று அவள் சொன்னதும் அவளிடமிருந்து சட்டென விலகியவன், அவள் முகத்தை அதிர்ந்துப் பார்த்தான்.


"காதலோட முடிவு இரண்டு மனசும் சேர்ந்ததா இருக்கணும், அப்போதான் இந்த உறவுக்கு உயிர்ப்பிருக்கும். காதல் இல்லாத காமம் பலாத்காரம். இப்போ நீங்களே உங்க மேல இருக்குற காதல அசிங்கப்படுத்திட்டீங்க" என்ற அவளின் வார்த்தைகளில் தெரிந்த வலியில் அவனுடைய முகம் இறுகிப் போக, "விருப்பமில்லாம இந்த விக்டர் யாரையும் தொட மாட்டான். அதுக்காக சாரி எல்லாம் கேக்க முடியாது, என்ட் ஆல்சோ ஐ டோன்ட் லவ் யூ" என்றவன், அவளை தரதரவென இழுத்துக்கொண்டு வழக்கம் போல் அறையிலிருந்து தள்ளி கதவை சாத்தியிருந்தான்.


பூட்டியிருந்த அறைக்கு முன் நின்றிருந்தவளுக்கு அழுகையில் தொண்டை அடைத்தது. அவனுடைய பிரத்யேக வாசம் வேறு அவளுடைய உடையிலிருந்து வர, கண்ணீரை அழுந்தத் துடைத்துவிட்டு அங்கிருந்து தனதறைக்குச் சென்றாள்.


அடுத்தநாள், ஜேக்கப் கோபத்தில் குத்தியதில் அவன் முன்னிருந்த கண்ணாடி சுக்கு நூறாகச் சிதறியது. அன்று நடந்ததை நினைத்து அவனுக்குள் அத்தனை ஆத்திரம். 'போயும் போயும் ஒரு சர்வன்ட்கிட்ட என்னை மன்னிப்பு கேக்க வச்சிட்டான்' என்ற அவமானமே அவனின் நிம்மதியை குலைத்தது.


அடக்க முடியாத கோபத்தில் நின்றவாறு எதிரே இருந்த மேசையில் இரு கைகளைக் குத்தியிருந்தவனின் விழிகள் சிவந்துப் போயிருக்க, கரத்திலிருந்து சொட்டு சொட்டாக தரையில் இரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. 


"நீ உன்னை ஹர்ட் பண்ணிக்கிட்டா அங்க விக்டருக்கு வலிக்க போகுதா என்ன? இப்படியெல்லாம் பண்றது சில்லித்தனமா இருக்கு" என்று ரியோ கோபமாகச் சொல்ல, "இப்போ உனக்கு எந்தளவுக்கு வலிக்குதோ அதே வலிய அவனுக்கு கொடுக்கணும்" என்றது இன்னொரு குரல்.


இருவரும் அங்கு சிகரெட் புகையை ஊதியவாறு இருந்த ரியாவைப் பார்க்க, அவள் விழிகளிலும் அத்தனை வெறி.


"யெஸ், இதே வலிய... இதை விட அதிகமா அனுபவிக்கணும்" என்று அழுத்தமாக ஜேக்கப்பின் வார்த்தைகள் வெளிவர, "பேசாம அவனோட அம்மா அப்பாவ தூக்கிரலாமா?" என்று கேட்டான் ரியோ மதுவை ஊற்றியபடி.


"விட்டா அவனே அவனோட பேரென்ட்ஸ்ஸ கொன்னுருவான், இதுல நாங்க என்ன பண்ணயிருக்கு?" ரியா சலித்துக்கொள்ள, மற்ற இருவரும் அவளை கேள்வியாக நோக்கினர்.


"விக்டரோட ஃப்ரென்ட் ரோய்யோட ஒரு பிஸ்னஸ் டீலிங் போட்டிருக்கேன்.  அன்னைக்கு விக்டரோட பிஸ்னஸ்ஸ பத்தி பேச அவனோட மென்ஷனுக்கு கூட போனேன். பட், அவன் என் டீலிங்க ரிஜெக்ட் பண்ணிட்டான். இடியட்!" என்று பற்களைக் கடித்தவள், "பட், ரோய் என் கூட இன்னும் கான்டேக்ட்லதான் இருக்கான். அவன்கிட்டயிருந்து விக்டர பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டேன். பட்..." என்று யோசனையோடு இழுத்தாள்.


"பட் வாட்?" ஜேக்கப் ஆர்வம் கலந்த கேள்வியோடு நோக்க, "ரோய் என்கிட்ட சொல்லாத ஒன்னு, விக்டரோட மென்ஷன்ல வேலை பார்க்குற சர்வன்ட் பத்தி" என்றுக்கொண்டே தன் அலைப்பேசியில் தஷுரிக்குத் தெரியாமல் எடுத்த அவளுடைய புகைப்படத்தைக் காட்ட, அதைப் பார்த்ததும் ஜேக்கப்பின் விழிகள் மேலும் விரிந்தன.


"என்னாச்சு?" என்று புகைப்படத்திலிருந்த அவளுடைய முகத்தையே பார்த்தவாறு அவன் கேட்க, அன்று நடந்ததை அவள் சொல்லி முடித்ததும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட ரியோ மற்றும் ஜேக்கப்பின் இதழ்கள் விஷமமாகச் சிரித்துக்கொண்டன.


"எனக்கென்னவோ அவங்களுக்குள்ள ஏதோ இருக்குன்னு தோனுது, இருந்தாலும் போயும் போயும் ஒரு சர்வன்ட்ட..." என்று ரியா முகத்தைச் சுளிக்க, "இப்போ தெரிஞ்சிருச்சு, இந்த வலிய எப்படி கொடுக்கணும்னு" என்று ஜேக்கப் வன்மச் சிரிப்போடு அங்கு பழங்கள் வெட்ட வைத்திருந்த கத்தியை மேசையில் குத்த, ரியாவோ புரியாமல் விழிகளைச் சுருக்கினாள்.


அதேநேரம், தன்னவனைப் பற்றிய யோசனையில் மிதந்துக்கொண்டிருந்தாள் தஷுரி. 'சொந்த நாட்டுக்கு சொந்தமானதை வெளிநாட்டுக்கு விக்கிறானே, இது நாட்டுக்கே செய்ற துரோகம் இல்லையா? இதை எப்படியாச்சும் நிறுத்தணும், அவன பண்ண விடக் கூடாது' என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தவள், எதேர்ச்சையாகத் திரும்ப அங்கு படிக்கட்டுகளிவ் இரு காவலாளிகளிடம் ஏதோ உத்தரவு பிறப்பித்தவாறு கம்பீரமாக நடந்து வந்துக்கொண்டிருந்தான் விக்டர்.


அவனைக் கண்டதும் தன்னை மறந்து சிறிதுநேரம் அவனையே பார்த்திருந்தவள், குறும்புச் சிரிப்போடு அவனுக்கு நேரே சென்று நின்று அங்கிருந்த பெரிய பூச்சாடியைத் துடைப்பது போல் பாவனை செய்ய, எதேர்ச்சையாக அவளை கண்டுகொண்டவன்தான் அவன். பிறகு அவளை திரும்பியும் பார்க்கவில்லை.


அவன் பார்க்காவிட்டால் இவள் விட்டுவிடுவாளா என்ன!


உணவு மேசையில் விக்டர் சென்று அமர்ந்ததும் அவனை நோக்கி ஓடிச் சென்றவள், "நான்தான் உங்களுக்கு பரிமாறுவேங்க" என்று சற்று வெட்கத்தோடுச் சொல்ல, அவளை ஒருகணம் மேலிருந்து கீழ் 'ஙே' எனப் பார்த்தவன், பின் முறைப்பாக "ஷட் அப் என்ட் டூ யூ வர்க்!" என்று பற்களைக் கடிக்க, கொடுப்புக்குள் சிரித்தாள் தஷுரி.


"இப்போ மட்டும் உங்களுக்கு முன்னாடி மூடியிருக்குற ப்ளேட்ட திறந்தீங்கன்னா உங்க மானம்தான் போகும், அதுக்கு நான் பொறுப்பில்ல" என்று சொல்லிவிட்டு அவள் அசால்ட்டாகத் தோளைக் குலுக்க, ஒருகணம் யோசித்தவன் ஏதோ ஒன்று இருப்பதை மட்டும் உணர்ந்து அங்கு அவனுக்கு பரிமாறவெனக் காத்திருக்கும் பணிப்பெண்ணைப் பார்க்க, அவளோ இருவர் பேசும் தமிழ் மொழிப் புரியாது பெக்கபெக்கவென விழித்துக்கொண்டிருந்தாள்.


அவனோ போகும்படி விழிகளால் சைகை செய்ய, அவள் விட்டால் போதுமென்று ஓடிய மறுகணம் விக்டரின் முன்னிருந்த மூடியிருந்த தட்டை வேகமாகத் திறந்தாள் தஷுரி.


விக்டர் அதை உற்றுப் பார்க்க, அதிலோ ஹார்ட் வடிவத்திலான பேன்கேக்கில் சோஸினால் அம்பு வரையப்பட்டு 'விக்டர் லவ் தஷுரி' என்று எழுதப்பட்டிருக்க, பட்டென தட்டால் அதை மூடியவன் சுற்றிமுற்றி பதற்றமாகப் பார்த்தான்.


அவளோ, "நானே... அது நானே... இந்த பேன்கேக் செய்ததும் நானே... இந்த அம்புவிட்டதும் நானே... அது நானே..." என்று பாடியவாறு கால் பெருவிரலால் தரையில் கோலம் போட, அவனோ அவளை முறைத்துப் பார்த்தான்.


"விக்டர் லோரன்ட்! இந்த பேர வாய் குளறாம சொல்லவே எனக்கு ரெண்டு  நாளாச்சு. அதனால, நம்ம கல்யாணத்துக்கு அப்றம் நான் வேணா உங்கள விக்கு விக்குன்னு கூப்பிடவா?" என்று ஆர்வமாக அவள் கேட்க, அடுத்தநொடி "ரோக்கி..." என்ற விக்டரின் அழைப்பில் மின்னல் வேகத்தில் மறைந்திருந்தாள் அவள்.


அன்றிரவு, விக்டரும் ரோயும் தொழில் சம்மந்தமான ஒரு கேளிக்கை விருந்துக்குச் சென்றிருக்க, அங்கு வந்திருந்த பல தொழில்துறை நண்பர்களோடு வியாபாரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர் இரு ஆடவர்களும்.


"ஹேய் யூ நோ வாட், அந்த ரெயாரான வைரக்கல் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? அதை வச்சிருக்குறவங்க ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு சொல்லுவாங்க, இதோ இந்த டயமன்ட்தான்" என்று ஒருவன் சொல்லி புகைப்படத்தைக் காட்ட, மற்றவனோ, "யாஹ், நானும் கேள்விப்பட்டிருக்கேன். அது உலகத்துலயே ஒன்னுதான் இருக்காம். பல்மாணிக்க நிறத்துல இருக்கும். ஆரம்பத்துல ஏதோ ஒரு ராணிகிட்ட இருந்ததாம், அதுக்கப்பறம் ரோம்ல ஒரு ஃபேமஸான சயன்டிஸ்ட்கிட்ட இருந்ததாம். இப்போ யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ?" என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சைவிட்டான்.


இவர்கள் பேசுவதை வைன் க்ளாஸை சுழற்றியவாறு கேட்டுக்கொண்டிருந்த விக்டரும் இதை ஆரம்பத்திலேயே அறிந்து வைத்தவன்தான். அதற்கான தேடல் அவனுக்குள்ளும் உண்டு. ஆனால், அதை அவனால் அடையதான் முடியவில்லை.


சரியாக,"ஹாய் மிஸ்டர் விக்டர் லோரன்ட்" என்ற ஒரு அழைப்பு. விக்டரோடு சேர்த்து ரோயும் திரும்பிப் பார்க்க, அவர்களுக்கெதிரே உடலமைப்பை அப்பட்டமாகக் காட்டும் ஆடையில் முழு ஒப்பனையில் தேவதைப் போல் நின்றிருந்தாள் பாரிஸின் புகழ் பெற்ற மாடல் அழகியான லாரா.


"ஹெலோ மிஸ்.லாரா!" என்று ரோய் முதல் ஆளாக கைக்குலுக்க கரத்தை நீட்ட, அவனோடு கையைக் குலுக்கியவளின் பார்வை பக்கத்திலிருந்த விக்டரின் மீதுதான் இருந்தது.


அவனோ, "யூ கெர்ரி ஆன்" என்றுவிட்டு நகரப் போனவன், "மிஸ்டர்.விக்டர், உங்க கூட பேசலாமா?" என்ற லாராவின் வார்த்தைகளில் சட்டென நின்று திரும்பிப் பார்த்தான். 


"இஸ் திஸ் அபௌட் பிஸ்னஸ்?" அவன் அழுத்தமாக கூரிய பார்வையோடுக் கேட்க, "லைஃப் வித் பிஸ்னஸ்" என்றவளின் இதழ்களோ மயக்கும் சிரிப்பை உதிர்த்தது.


என்ன பேசினார்களோ, ஏது பேசினார்களோ?


பல மணித்தியாலங்கள் கடந்து விருந்து நடக்கும் இடத்திலிருந்து வெளியேறி வீட்டு வளாகத்துக்குள் நுழைந்து போர்டிகாவில் கார் நிறுத்தப்பட, இறங்கப் போன விக்டர், "இது உனக்கு சரின்னு தோனுதா?" என்ற தோழனின் கேள்வியில் அவனை கேள்வியாக நோக்கினான்.


"எனக்கு ஏதோ தப்பா இருக்கு விக்டர், நீ மொதல் தடவை அவசரப்பட்டுட்டியோன்னு..." என்று அவன் தயக்கமாக இழுக்க, "என்ன செய்யணும்னு எனக்கு தெரியும், கூடிய சீக்கிரம் இதுக்கான ஏற்பாட பண்ணு!" என்றுவிட்டு காரிலிருந்து இறங்கி விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்தான் மற்றவன்.


உள்ளே நுழைந்ததுமே காவலாளர்களிடம் கண்ணீரோடு சண்டையிட்டுக்கொண்டிருந்த ஹெலனே இவன் விழிகளுக்குச் சிக்க, விக்டரைப் பார்த்ததும், "சார்..." என்று கத்திவிட்டாள் ஹெலன்.


*****************

தஷுரி 12 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/06/12.html


தஷுரி கதையை கிண்டலில் படிக்க 👇

https://www.amazon.in/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls



Comments

Popular posts

தஷுரி 10