யாத்ரன் 18
யாவும் நின் யாத்ரனாய்..
EPISODE 18
அன்றிரவு,
"ஆமாடா நாளையில இருந்து ஜாப் ஸ்டார்ட் ஆகுது. அப்பறம் வீகென்ட்ல மட்டும்தான் பார்ட்டீஸ் ஃபன் எல்லாமே.."
அலைப்பேசியில் பேசிக்கொண்டே அறைக்குள் நுழைந்த யாத்ரன் அறை முழுவதும் கும்மிருட்டாக இருப்பதைப் பார்த்து புருவங்களை நெறித்தான்.
அவனுடைய கால்கள் கவனத்தோடு ஒவ்வொரு அடியாக வைக்க, மெல்ல சென்று விளக்கை ஒளிரச் செய்தவனின் விழிகள் ஒரு இடத்தில் நிலைக்குத்தி நின்றது.
"டேய் மச்சா ஐ வில் கால் யூ பேக்" அவனுடைய குரலில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்திருக்க, அறை மூலையில் நின்றுக்கொண்டிருந்த தன் மனைவியை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்த்தான்.
இடை தெரியக் கூடியவாரான ஒரு டீஷர்ட் மற்றும் இறுக்கிப் பிடித்திருக்கும் பேன்ட்டில் நெளிந்த வண்ணமாய் முகம் சிவக்க நின்றுக்கொண்டிந்தாள் ஜான்சி.
அவனால் அவனுடைய விழிகளையே நம்ப முடியவில்லை. அவளை இப்படி ஒரு அவதாரத்தில் அவன் நினைத்தும் பார்த்ததில்லை.
"என்னடீ கோலம் இது?" அவனுடைய முகம் அஷ்டகோணலாக சுருங்க, தன்னை குனிந்துப் பார்த்தவள், "என்னங்க, ஏன் உங்களுக்கு இது பிடிக்கலயா?" என்று கேட்டாள் பாவமாக.
அவனோ 'ஙே' என அவளை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன், சட்டென முகபாவனையை மாற்றி "இது வரதனோட வேலைதானே?" என்று கேட்டு முறைக்க, "அது.. நான்தான் வாங்கி கொண்டு வர சொன்னேன். உங்களுக்கு இப்படி உடுத்தாதானே பிடிக்கும். அன்னைக்கு நீங்க கால்ல கூட சொல்லிட்டு இருந்தீங்கல்ல. அதான்ங்க.. உங்களுக்கு பிடிக்கலயா?" என்று அவனின் எதிரே வந்து கேட்டாள் விழிகளில் ஆர்வத்தோடு.
அணிந்திருக்கும் மாடர்ன் ஆடைக்கு சம்பந்தமே இல்லாத பிண்ணலிட்ட நீண்ட கூந்தலும் கழுத்தில் தாலியும் காலில் சிறு கொலுசும், பழக்கப்படாத ஹீல்ஸ்ஸும் என அவளிருந்த தோற்றம் அவனுக்கு சிரிப்பைதான் வரவழைத்தது.
"சரியான பட்டிக்காடுங்குறது உண்மைதான். மொதல்ல போய் இதை சேன்ஞ் பண்ணு, உன்னோட சேர்த்து என்னையும் பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க இடியட்!" அவன் கடுப்பாக சொல்லிவிட்டு நகரப் போக, "என்னங்க நீங்க..." என்று சிணுங்கியவாறு அவனை நோக்கி வேகமாக வந்தாள் ஜான்சி.
ஆனால் இரண்டடி கூட வைத்திருக்க மாட்டாள். பழக்கமில்லாத ஹீல்ஸ் காலை தடுக்கி விட, அவன் மீது சரிந்தவள் அவனையும் சேர்த்து இழுத்துக்கொண்டு நிலத்தில் விழுந்தாள்.
இருவரின் உடல்களும் ஒன்றோடு ஒன்று தாராளமாக உரசிக்கொள்ள, பின்னந்தலையில் விழுந்த அடியில் உண்டான வலியில் முகத்தை சுருக்கிக்கொண்டு தன் மேல் கிடந்தவளை பார்த்தான் யாத்ரன்.
விழிகளை சுருக்கியிருந்தவனுக்கு அவளுடைய முகம் சற்று மங்கலாகத் தெரிய, அவனுடைய மூளை சட்டென கனவில் வரும் இளவரசியைதான் நினைவுக் கூர்ந்தது.
அன்று குளத்திற்குள்ளிருந்து அந்த இளவரசியை பார்க்கும் போது தெரிந்த அதே விம்பம் போலவே இன்று ஜான்சியின் விம்பமும் அவனுக்குத் தெரிந்தது.
உடல் அதிர அவளையே அவன் பார்த்துக்கொண்டிருக்க, 'என்ன தலையில அடிபட்டதுல நான் யாருங்குறதயே மறந்துட்டாரா?' என்று யோசித்தபடி அவனை சிறு பயத்தோடு உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஜான்சி.
யாத்ரன் கிட்டத்தட்ட இந்த உலகத்திலேயே இல்லை. மொத்தமாக கனவுலகில் சஞ்சரிக்க தொடங்கிவிட்டான்.
முகம் தெரியாத அந்த இளவரசி அவனை நெருங்கி இருப்பது போல அவனுக்குத் தோன்ற, ஆண்மகனாக அவனுடைய உணர்ச்சிகள் கிளற ஆரம்பித்தன.
தன் மேல் கிடந்தவளின் இடையை தன் வலிய கரங்களால் வளைத்து தன்னோடு நெருக்கிக்கொண்டவன் ஜான்சி சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் அவளை தரையில் சரித்து அவள் மீது படர்ந்தான்.
"என்ன.. என்னங்க.." வார்த்தைகள் வரவில்லை. வெறும் காற்றுதான் வந்தது.
அடுத்தகணம் சிறிதும் தாமதிக்காமல் அவளிதழை கவ்விக்கொண்டான் அவன். பெண்ணவளோ விதிர்த்துப் போய் அப்படியே இருக்க, அவளிதழை சுவைக்கத் தொடங்கியவனுக்கு இடம் பொருள் எதுவுமே புலப்படவில்லை.
ஜான்சிக்கு அதிர்ச்சி குறைய குறைய இந்த முதல் இதழ் முத்தம் அவளுடைய ஹார்மான்களைத் தூண்டிவிட, விழிகளை மூடி அவனுடைய சட்டைக் காலரை பற்றிக்கொண்டாள் அவள்.
ஒருசில கணங்கள்தான் சென்றிருக்கும். ஆனால் நீண்டநேரம் முத்தமிடும் உணர்வு இருவருக்கும்.
சட்டென மாய வலை அறுபட நடப்பை உணர்ந்த யாத்ரனுக்கு அப்போதுதான் தான் செய்யும் காரியமே உணர, அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான்.
ஜான்சிக்கு அவனைப் பார்க்க வெட்கம் பிடுங்கித் தின்றது.
சாதாரணமாகவே ஆண்களோடு பழகியிராதவளுக்கு இந்த முத்தமெல்லாம் பெரிய விடயம்தானே!
"உங்களுக்கு என்மேல இம்புட்டு ஆசை இருக்குன்னு முன்னாடியே சொல்லியிருக்கலாமேங்க" அவள் நிமிர்ந்தும் பார்க்காமல் தலையை குனிந்து வெட்கப்பட்டபடி சொல்ல, யாத்ரனுக்கு அய்யோ என்றிருந்தது.
'போச்சு போச்சு! என்ன காரியம்டா பண்ண யாத்ரா?' அவன் மானசீகமாக புலம்பியபடி எழுந்து செல்லப் போக, "என்னங்க அப்படியே போய் கட்டில்ல படுத்துர வேணாம், குளிச்சிட்டு படுங்க, இல்லன்னா வீட்டுக்கு ஆகாது" என்று அப்போதும் தரைக்குள் புதைவது போல் தலையை குனிந்துக்கொண்டு சொன்னாள்.
ஏற்கனவே கடுப்பில் இருந்தவனுக்கு அவளுடைய பேச்சு மேலும் கோபத்தைத் தூண்டியது.
"எல்லா உன்னாலதான், கெட் அவுட் ஆஃப் மை சைட்" என்று கத்தியவன் அவளின் பின்னங்கழுத்தைப் பற்றி இழுத்துக்கொண்டே சென்று அறைக்கு வெளியே தள்ளிவிட , பூட்டிய கதவை பாவமாகப் பார்த்த வண்ணம், "ஒருவேள நான் சரியா முத்தம் கொடுக்கலயோ... ச்சே!" என்று உள்ளுக்குள் வெகுளித்தனமாக நினைத்துக்கொண்டாள் ஜான்சி.
அடுத்தநாளும் விடிந்தது.
"என்னங்க..." என்று கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளின் விழிகளில் முதலில் சிக்கியது என்னவோ வேலைக்காக ஃபார்மல் உடையில் தயாராகி நின்றிருந்த யாத்ரன்தான்.
ஷர்ட்டை சரி செய்து சட்டைக் கையை மடித்து விட்டுக்கொண்டவன் சுவற்றில் தொங்க விடப்பட்டிருந்த ஆளுயர கண்ணாடியில் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டவாறு தன்னை ஒருதரம் சரிபார்த்துக்கொண்டான்.
இத்தனை நாள் அவனை சாதாரண உடைகளில் பார்த்து பழகியவளுக்கு இந்த உடையில் தோன்றிய அவனின் கம்பீரம் புதிதுதான்.
'சும்மாவே இவரு அழகுதான், இப்போ டக்கரா இருக்காரே!' வாயில் ஈ போகாத குறையாக அவள் மெய் மறந்து பார்த்துக்கொண்டு நிற்க, அரவம் உணர்ந்து வாசல் புறம் திரும்பிப் பார்த்தான் யாத்ரன்.
அவளுடைய பார்வையால் முதலில் புரியாமல் புருவங்களை முடிச்சிட்டவன் பின் அப்பட்டமாக அவள் சைட் அடிப்பதை உணர்ந்து சற்று தடுமாறத்தான் செய்தான்.
ஆண்களுக்கும் வெட்கம் இருக்கத்தானே செய்யும்!
'என்ன இவ, இப்படி பார்க்குறா.. சரியான இம்சை!' அவளுடைய பார்வையால் தோன்றிய அசௌகரியம் அவனுக்கு எரிச்சலைக் கொடுக்க, "வாட்?" என்று கேட்டான் ஒற்றைப் புருவத்தைத் தூக்கி.
வேகமாக இல்லையெனும் விதமாக தலையாட்டியவள் கைகளைப் பிசைந்த வண்ணம் அறை வாசலில் நின்றுக்கொண்டிருக்க, ஏதோ சொல்ல வருகிறாள் என்பதை உணர்ந்தாலும் அவளை கண்டுகொள்ளாதது போல கைக்காடிகாரத்தைக் கட்டினான் யாத்ரன்.
"என்னங்க.. என்னங்க.." அவள் பொறுமையை இழந்து அவனை அழைக்க, விழிகளை மட்டும் நிமிர்த்திப் பார்த்தவன், மீண்டும் தன் பொருட்களை எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேற எத்தனித்தான்.
ஜான்சிக்கு எப்படி ஆரம்பிப்பதென்றே தெரியவில்லை.
"ஏங்க... நா... என்னங்க..." அவள் தடுமாற, "ஏங்க.. என்னங்க.. நோங்கன்னு சொல்றத மொதல்ல நிறுத்து. ஏதோ காலிங் பெல் சத்தம் கேக்குற மாதிரி இருக்கு. இட்ஸ் இர்ரிடேட்டிங்" என்றான் அவன் கடுப்பாக.
"அது வந்துங்க.. ரொம்ப நாளா வீட்டுலயே இருக்குற மாதிரி இருக்கு. வெளியில எங்கேயாச்சும் அழைச்சுட்டு போறீங்களா? இந்த ஊர சுத்தி பார்க்கணும்னு ஆசையா இருக்கு" என்று அவள் திக்கித்திணறி தன் ஆசையை கேட்டு முடிக்க, புருவங்கள் முடிச்சிட யோசித்தான் அவன்.
உள்ளுக்குள் அவளை நினைத்து சிறு பரிதாபம் எழுந்தாலும் கோபம் அவனுடைய கண்களை மறைத்து விடுகிறது போலும்!
"உனக்கு இங்க இருக்க இடம் கொடுத்ததே பெரிய விஷயம். வாட் டூ யூ திங்க் ஆஃப் யூவர் செல்ஃப்? ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்க வந்திருக்கோம்னு நீயா நினைச்சுட்டு இருக்கியா! கொஞ்சமாச்சும் ஹியூமேனிட்டி எனக்கு இருக்க போய்தான் நீ இங்க இருக்க கொட் இட்! தேவையில்லாத ஆசைய வளர்த்துக்காம போய் வேலைய பாரு"
அவன் பற்களைக் கடித்துக்கொண்டு சொல்லிவிட்டு வெளியேறிவிட, விழியோரம் கசிந்த நீரை துடைத்துக்கொண்டாள் ஜான்சி.
அவளாக தேர்ந்தெடுத்த வாழ்க்கை இது, நடப்பதை ஏற்கத்தானே வேண்டும்!
ஊரிலிருக்கும் போது நேரம் செல்வதே தெரியாது அவளுக்கு. சிறிய வீடுதான், ஆனால் பக்கத்துவீட்டாற்கள் ருக்மணி என அவர்களோடு காலில் சக்கரத்தை கட்டியது போல நேரம் ஓடும்.
ஆனால் இங்கு, இத்தனை பெரிய அரண்மனை. ஆனால் சிரித்துப் பேச ஒருவரும் இல்லை.
கடவுள் அவளுக்கு மட்டும் நேரத்தை மெதுவாக செலுத்துவது போல அவளுக்குத் தோன்ற, இல்லாத வேலையை இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்தாள் பெண்ணவள்.
'வெளிநாட்டு வாழ்க்கைங்குறது நெஜமாவே இப்படிதான் இருக்குமா, யாருமே இருக்க மாட்டாங்கன்னா எதுக்கு இத்தனை பெரிய வீட்ட வீணா கட்டி வச்சிருக்காங்க'
உள்ளுக்குள் மீண்டும் மீண்டும் புலம்பியபடியே அவளுடைய காலமும் நேரமும் ஓடியது என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்றிரவு,
வேலை மாலையே முடிந்தாலும் வீட்டிற்கு வர பிடிக்காமல் தாமதமாகவே வந்தான் யாத்ரன்.
"ஹவ் இஸ் யூவர் வர்க் யாத்ரா?" என்று விதுஷா சாப்பிட்டவாறுக் கேட்க, "ம்ம்.. நொட் பேட்" என்றான் அவன் அலைப்பேசியை நோண்டியபடி.
"உன் கம்பனி மேனேஜர் என் க்ளோஸ் ஃப்ரேன்ட்தான். ஏதாச்சும்னா சொல்லு, பேசிக்கலாம். ஐ டோன்ட் மைன்ட்" என்று ராஜ்தீப் சிரித்தபடி சொல்ல, யாத்ரன் அவரை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.
அதில் பெரியவருடைய முகம் வாடிப் போக, அதை கண்டுகொண்டாள் ஜான்சி.
"என்னங்க நீங்க, சாப்பிடும் போது டொக்கு டொக்குன்னு அந்த டப்பாவதான் நோண்டிக்கிட்டு இருப்பீங்களா? எங்க ஊர்ல சாப்பிடும் போது நானும் அம்மாவும் அன்னைக்கு நடந்ததெல்லா பேசி சிரிச்சுக்கிட்டே சாப்பிடுவோம். சில சமயத்துல பக்கத்து வீட்டு விஜயா அக்கா பசங்களும் எங்க கூட சேர்ந்துக்குவாங்க. அப்பாதான் ஒத்து போக மாட்டாரு. மத்தபடி ஒன்னா பேசி சிரிச்சு சாப்பிடுறதுல தனி சந்தோஷம்தான்"
அவள் தன்னை மீறி தனக்குள் இருக்கும் சில இனிமையான நினைவலைகளை சொல்லிவிட, உணவு மேசையிலிருந்த மற்ற மூவரின் முகத்திலும் எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை.
யாத்ரனின் பார்வையோ இப்போது விதுஷாவை குற்றம் சாட்டுவது போல ஒரு பார்வைப் பார்க்க, அதை எதிர்கொள்ள முடியாமல் தட்டிலேயே கையை கழுவிக்கொண்டார் அவர்.
"ஓ... இன்ட்ரஸ்ட்டிங்! கதை முடிஞ்சதுன்னா நான் என் வேலைய பார்க்குறேன்" அவர் பாட்டிற்கு சொல்லிக்கொண்டு அவருடைய அறைக்கு சென்றிருக்க, யாத்ரனின் இதழில் ஒரு விரக்திப் புன்னகை தோன்றி மறைந்தது.
"நானும் என் ஊர்ல இப்படிதான்ம்மா, என்னதான் காசு பணம்னு வாழ்ந்தாலும் சொந்தபந்தம் கூட இருக்குற சந்தோஷமே தனிதான். சிலபேர் நினைச்சா எல்லாமே மாறும், ஆனா..."
என்று நிறுத்தியவர் மனைவி சென்ற திசையையும் யாத்ரனையும் மாறி மாறி ஒரு பார்வைப் பார்த்துவிட்டு செல்ல, யாத்ரனும் பாதி சாப்பாட்டிலேயே எழுந்துக்கொண்டான்.
நடப்பதை ஓரளவு அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தாலும் என்ன செய்துவிட முடியும்!
ஒரு பெருமூச்சோடு மேசையிலிருந்த எச்சில் தட்டுகளை சமையலறையை நோக்கி எடுத்துச் சென்ற ஜான்சி அப்போதுதான் எதேர்ச்சையாக நேரத்தைப் பார்த்தாள்.
அவளுடைய விழிகள் பெரிதாய் விரிய, 'ஆத்தாடி ஆத்தா! எல்லாரும் தூங்கினதும் பரிகாரத்த வேற ஆரம்பிக்கணுமே! என் வீட்டுக்காரருக்கு மட்டும் தெரிஞ்சிரவே கூடாது, ஒருவேள தெரிஞ்சதுன்னா அறைக்கு வெளிய இல்ல வீட்டுக்கு வெளியதான் படுக்க வைப்பாரு' என தனக்குள் நினைத்துக்கொண்டாள் அவள்.
நேரமும் வேகமாய் ஓட, கிட்டத்தட்ட நேரம் மணி பன்னிரெண்டை தொட்டிருந்தது.
சரியாக அவசர அழைப்பொன்று வர, பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த கணவரைப் பார்த்துவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தார் விதுஷா.
வராண்டாவில் நடந்த வண்ணம் அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவரின் பார்வை ஹாலின் புறம் திரும்ப, அடுத்தகணம் தூக்கி வாரிப்போட்டது அவருக்கு.
**********
யாவும் நின் யாத்ரனாய்..
EPISODE 19 >>>
https://agnitamilnovels.blogspot.com/2026/04/19.html
Papr space தளத்துல என்னோட மற்ற கதைகள் இருக்கு.. பட் இப்போ ஃப்ரீயா இல்லை. சின்ன கட்டணம் Subscription க்கு கட்டணும்...
Subscription பண்ணா ஒரு மாதம் முழுவதும் நீங்க அந்த தளத்துல இருக்குற அத்தனை கதைகளையும் வாசிக்கலாம் டியர்ஸ்... 🙌
Link 👇

Comments
Post a Comment