யாத்ரன் 16
யாத்ரனின் கோபம் ஏகத்துக்கும் எகிறியிருக்க, அடுத்து அவன் சொன்ன வார்த்தைகளில் உயிருடன் மரித்துவிட்டாள் ஜான்சி.
"லுக், ஐ கான்ட் டோலரேட் திஸ். நான் வேணா உனக்கு ஆஃபர் கொடுக்குறேன். நீ உன் ஊருக்கு திரும்பி போக தேவையில்ல. டுபாய்லயே இருக்கலாம். பட் என் வாழ்க்கைய விட்டு மட்டும் போனா போதும். எவ்வளவு பணம் வேணுமோ கேளு!"
அவன் கேட்டுவிட்டு மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு தன்னவளை கூர்ந்துப் பார்க்க, அந்த கேள்வியை கிரகிக்கவே பெண்ணவளுக்கு நேரமெடுத்தது.
"என்.. என்ன கேட்டீங்க?" அவள் அழுகையை அடக்கிக்கொண்டு மீண்டும் கேட்டாள்.
யாத்ரனோ எரிச்சலோடு விழிகளை சுழற்றிவிட்டு பதில் சொல்ல வர, அவனைக் குறுக்கிட்டு, "இங்கயிருந்து போறதுக்கு எவ்வளவு பணம் வேணும்னு கேக்குறான். சீக்கிரம் சொல்லு! வீ டோன்ட் ஹேவ் டைம்" என்றார் விதுஷா காட்டமாக.
ஜான்சிக்கு இதயத்தை ஈட்டியால் குத்திக் கிழிப்பது போலிருந்தது. அவனுக்கு அவள்மேல் காதல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவளுடைய காதல் கொண்ட மனதிற்கு இத்தகைய வார்த்தைகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
"என்னங்க எனக்.. எனக்கு பணம்லாம் வேணாம். நா.. நான் உங்க கூடவே இருக்கேனே"
அழுகையை அடக்கியதாலோ என்னவோ அது விம்மலாக வெளிப்பட, சிறு குழந்தையாய் விம்மிக்கொண்டே கேட்டாள் ஜான்சி.
ஆனால் ராஜ்தீப்பிற்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்திருக்க வேண்டும்!
"ஸ்டாப் திஸ் விதுஷா! ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. வீ ஹேவ் டூ அக்செப்ட் இட்" என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, "வாட் த ஹெல்! வெறும் அந்த செயின வச்சு கல்யாணம் நடந்ததா ஆகுமா? ரிஜிஸ்டர் கூட ஆகல, இப்போ நினைச்சாலும் வீ கென் மூவ் ஆன். ஆனா இவ சரியான செல்ஃபிஷ்! இப்படி ஒரு வாழ்க்கைய மேடம் எப்படி விடுவாங்க" என்ற யாத்ரனின் வார்த்தைகள் விஷத்தை தடவியது போல் வந்தன.
"ஆமா யாத்ரா, இப்படி ஒரு வாழ்க்கைய விட்டா வேற இடமும் இல்ல நாதியும் இல்ல இவளுக்கு. ஹேய்.. நீ எவ்வளவு கேட்டாலும் கொடுக்க நாங்க ரெடியா இருக்கோம். ஒரே செட்ல்மென்ட், சும்மா அழுது நாடகம் போடாமா எவ்வளவுன்னு கேளு"
விதுஷாவின் குரல் அதட்டலோடு வர, இன்னும் சற்று சத்தமாக அழ ஆரம்பித்துவிட்டாள் அவள்.
"ஓ காட்! இவ கண்ணுக்குள்ள வாட்டர் டேன்க்கே வச்சிருப்பா போல! நினைக்குறப்போ எல்லா தண்ணி வந்துருது" என்று கடுப்பாக சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து சென்றுவிட, அதற்குமேல் பெரியவர்களும் அந்த இடத்திலிருந்து நகர்ந்திருந்தனர்.
ஆனால் ஜான்சியின் மனம்தான் வலியில் கதறித் துடித்தது.
விழிகளில் கண்ணீரோடு அவர்கள் அறைக்குள் சென்று மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவள், அப்படியே தரையில் அமர்ந்து ஒரு மூச்சு அழுதுத் தீர்த்தாள்.
நேரமும் வேகமாக ஓட, மூவரின் கண்ணிலிருந்து மறைந்து சமையலறைக்குள்ளேயே கிடந்தாள் ஜான்சி.
மீண்டும் இத்தகைய மனதைக் குத்திக் கிழிக்கும் கேள்விகளை கேட்டுவிடுவார்களோ என்ற பயம் அவளுக்குள்!
இந்த வீட்டிற்குள் நுழைந்து முழுதாக ஒருநாள் கூட ஆகவில்லை. அதற்குள் நரகத்திற்குள் நுழைந்த உணர்வு.
கிட்டத்தட்ட மாலையை நெருங்கியிருக்க, காலையில் வீட்டிலிருந்து சென்ற மூவரும் வீட்டிற்கே திரும்பாத நிலையில் அத்தனை பெரிய ஆடம்பரமான ஹாலுக்கு நடுவே சுற்றிமுற்றி பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் ஜான்சி.
"நெஞ்சு வலின்னு நான் விழுந்தா கூட எவனும் உதவிக்கு வர மாட்டான் போல, அப்படியே உதவி பண்றேன்னு என் பக்கத்துல வரதுக்குள்ள நான் போய் சேர்ந்துருவேன் போல. என்ன வீடு இது! வாசல்லயிருந்து பார்த்தா அக்கம் பக்கத்து வீடு கூட தெரிய மாட்டேங்குது.. அப்பறம் எப்படிதான் பேசி பழகுறது? ஒரே அமைதியா வேற இருக்கு"
அவள் தனக்குள்ளேயே புலம்பியபடி வந்து நிற்க, அவளுடைய வயிற்றில் பாலை வார்த்தது போல வந்து நின்றான் வரதன்.
அவனைப் பார்த்ததுமே இவளுக்கு தவமிருந்த முனிவருக்கு வரம் கிடைத்த உணர்வு!
"வரதன் அண்ணா..." உற்சாகமாக அழைத்த வண்ணம் அவனை நோக்கி அவள் ஓட, "அட ஜான்சி, இம்புட்டு சந்தோஷமா இருக்க. அதுவும் இந்த வீட்டுல. எப்படிடா?" என்று உண்மையான ஆச்சரியத்தோடுக் கேட்டான் அவன்.
அந்த கேள்வியில் அவளுடைய முகம் வாடி போக, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டவள் நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
"இதாண்ணே நடந்துச்சு, பொய் சொல்லி கல்யாணம் பண்ணது தப்புன்னு இப்போ தோனுது. என் உசுர விட்டாச்சும் அவரோட வாழ்க்கைக்குள்ள நான் நுழையாம இருந்திருக்கணும். இங்க வந்தா எல்லாமே சரியாகும்னு நினைச்சேன், ஆனா.. அவருக்கு என்னை பிடிக்கலண்ணே. எனக்.. எனக்கு வீட்டுக்கு போகணும் போல இருக்கு"
அவளுடைய வார்த்தைகள் தழுதழுக்க, அதிலிருந்த வலியை அவன் உணராமலில்லை.
"இங்க பாரு ஜான்சி, நான் முன்னாடியே சொன்னதுதான். நீயாதான் உன் வாழ்க்கையில அவன எடுத்துக்கிட்ட. அவனோட கோபம் நியாயம். அவன் என்ன சொன்னாலும் நீ அதை பொறுத்துதான் போகணும். என்ட் யூ நோ வாட், யாத்ரன் ரொம்ப ரொம்ப நல்வவன். அதை நான் உனக்கு சொல்ல தேவையில்ல, அவன்தான் உன்ன காப்பாத்த நினைச்சான். உனக்காக வந்தான்.
அவன் எந்தளவுக்கு நல்லவனோ அதே அளவுக்கு கோபமும் இருக்கு. மிஸ்டர் ராஜ்தீப் அவன பெத்த அப்பா கிடையாது. அவன் அம்மாவோட ரெண்டாவது ஹஸ்பன்ட். ரெண்டு பேருமே இங்க இருக்குற டுபாய் கவர்மென்ட்டுல பெரிய பொசிஷன்ல இருக்காங்க. நம்ம ஊர் போலீஸ் மாதிரின்னு வச்சுக்கோயேன்"
அவன் இறுதியாக சொன்னதில் விழிகளை பிதுங்கி விடுமளவிற்கு விரித்துக்கொண்டாள் ஜான்சி.
"அவங்க வேலை வேலைன்னு இருந்ததால யாத்ரன பெருசா கண்டுக்கல. சின்ன வயசுலயிருந்து தனியாதான் இருந்திருக்கான். அதனாலயே இப்போ அவன் அம்மா கூட பெருசா பேசிக்க மாட்டான். ராஜ்தீப் அவன் கூட நெருங்கி பழக எவ்வளவு முயற்சி பண்ணியும் அதுக்கான ஒரு இடத்த அவன் கொடுத்ததே கிடையாது. அதான் சொல்றேன். அவனோட கோபம் குறைய ரொம்ப நாளாகலாம், அதுக்காக நீதான் கொஞ்சம் பொறுமையா இருக்கணும்"
வரதன் சொல்லி முடிக்க, பேயறைந்தது போல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளுக்கு சுத்தமாக அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.
"அவரோட கோபத்த குறைக்க நான் என்ன அண்ணே பண்ணணும், எதுவா இருந்தாலும் நான் பண்ணுவேன், ஏதாச்சும் பரிகாரம் பண்ணா சரியாகுவாரா?"
ஜான்சி தீவிர முகபாவனையோடுக் கேட்க, "கடவுளே..." என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இரண்டடி பின்னே நகர்ந்துவிட்டான் வரதன்.
'மூச்சு விடாம இவ்வளவு பெரிய ஸ்பீச் பண்ணியும் இவ மூளைக்கு எதுவுமே ஏறல போலயே, பேசாம இவள கொன்னுடலாமா?'
உள்ளுக்குள் புலம்பிக்கொண்டு அவளை மூக்கு விடைக்க முறைத்துப் பார்த்தவன், "அவன தொல்லை பண்ணாம இரு, ஆறு மாசத்துல.. இல்ல இல்ல ஒரு வருஷத்துல உன்மேல இருக்குற கோபம் பாதி குறைஞ்சிரும்" என்றுவிட்டு விட்டால் போதுமென்று அந்த இடத்திலிருந்து வெளியேறியிருந்தான்.
அவன் சொல்லிவிட்டு சென்றதை நாடியை நீவி விட்டவாறு யோசித்தவள் எதை புரிந்துக்கொண்டாளோ!
அன்றிரவு அங்குமிங்கும் அலைந்துத் திரிந்து சற்று தாமதமாகவே வீட்டுக்கு வந்தான் யாத்ரன்.
உள்ளே நுழைந்தவன் அவன் பாட்டிற்கு அறையை நோக்கிச் செல்ல, "என்னங்க... சாப்பிட்டீங்களா?" என்றொரு குரல் தூரத்திலிருந்து கேட்க, காதில் விழுந்தாலும் கேட்காதது போல சென்றான் அவன்.
அதைப் பார்த்த விதுஷா இரு பக்கமும் சலிப்பாக தலையாட்டிவிட்டு திரும்பிக்கொள்ள, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டவள் ஒரு முடிவோடு ஒரு க்ளாஸ் பாலை எடுத்துக்கொண்டு அறையை நோக்கிச் சென்றாள்.
மெல்ல இவள் அறைக்குள் நுழைய, யாருடனோ சிரித்துச் சிரித்து அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான் யாத்ரன்.
டீபாயின் மீது பால் க்ளாஸை வைத்தவள் கையிலிருந்த துண்டால் தூசு தட்டுவது போல அவன் பேசுவதை ஒட்டுக் கேட்க ஆரம்பித்தாள்.
"ரியலி! ஓ காட் ஐ மிஸ்ட் தட்.. பட் எனிவேய் நாளைக்கு க்ளப்ல மீட் பண்ணலாம். லெட்ஸ் என்ஜாய்!"
---------------
"க்ளப்புக்கு ட்ரெடிஷனல்லா வர போறாளா! நோ நோ.. எனக்கு எப்போவும் மாடர்ன் ட்ரெஸ்தான் புடிக்கும். நீ என் கூட க்ளப்க்கு வந்தேன்னு தெரிஞ்சது கண்டிப்பா ஷீலா ஜெலஸ் ஆகிருவா"
---------------
"ஓகே பாய், சீ யூ!"
அவன் பேசி முடித்து ஒரு பெருமூச்சோடு கட்டிலில் பொத்தென்று அமர்ந்துக்கொள்ள, அவன் பேசியதை தனக்குள் உருட்டிக்கொண்டு தீவிர யோசனையோடு நின்றிருந்தாள் ஜான்சி.
'மாடர்ன் ட்ரெஸ்ஸா... அப்படின்னா குட்டி பாவாடை ஜீன்ஸ்னு போடுவாங்களே அதுவா இருக்குமோ?' அவள் நாடியை நீவி விட்டவாறு தீவிர சிந்தனையில் இருக்க, "ஏய்..." அவளை சொடக்கிட்டு அழைத்தான் யாத்ரன்.
திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவள் இரு புருவங்களை ஏற்றி இறக்க, அவளுடைய பாவனையை ஒரு ஆண்மகனாக ரசித்திருக்க வேண்டும்.
ஆனால், அவள் மீதிருந்த கோபம் அவனுடைய ரசனை மனதைக் கூட கல்லாக்கி விட்டது போல!
அவளை முறைத்துப் பார்த்தவன், "என்ன திமிரா, உன்னதான் இந்த பக்கம் வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல! உன்ன பார்க்க கூடாதுன்னுதான் இவ்வளவு நேரம் வெளியில இருந்துட்டு வந்தேன். இப்போவாச்சும் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா முன்னாடி வந்து நின்னுட்டு இருக்க. ச்சே!" என்று கத்திக்கொண்டே போக, ஏதோ தவறு செய்து மாட்டிக்கொண்ட பள்ளி மாணவி போல பாவமாக நின்றுக்கொண்டிருந்தாள் அவள்.
"அது வந்துங்க... உங்களுக்கு பாலு..." அவள் வார்த்தைகளை நீட்டி முழக்கிப் பேச, வேகமாக வந்தவன் அந்த பால் க்ளாஸை கையிலெடுத்தான்.
ஜான்சிக்கு மனதிற்குள் சிறு சந்தோஷம். அவன் அருந்துவான் என அவள் ஆர்வத்தோடு பார்த்து நிற்க, அறைக்குள்ளிருந்த குளியலறைக்குள் மொத்தமாக கொட்டியவன் காலியான க்ளாஸை அவள் கையில் திணித்தான்.
"இப்போ கெளம்பு!" அவன் தெனாவெட்டாக சொன்ன விதத்தில் அவளுக்கு அழுகைதான் வந்தது.
கீழுதாட்டைக் கடித்து அடக்கிக்கொண்டவள், ஒரு முடிவெடுத்தவளாக அறையிலிருந்து வெளியேற அடுத்தநாளும் விடிந்தது.
நேற்றிரவு அறைக்குள் அவன் அனுமதிக்காததால் ஹால் சோஃபாவிலேயே உறங்கிப் போயிருந்தாள் ஜான்சி.
அவள் வாழ்ந்த வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் அதுவே அவளுக்கு சொகுசு மெத்தைதான்.
சரியாக உடற்பயிற்சிக்காக தயாராகி வந்த விதுஷாவின் விழிகளுக்கு உறங்கிக்கொண்டிருந்தவள் தென்பட, அருகில் சென்று டீபாயின் மேலிருந்த தண்ணீர் க்ளாஸை அவள் முகத்தில் ஊற்றி விட்டார்.
அதில் பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தவள், "அத்தை..." என்றுக்கொண்டு எழுந்து நின்று சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த மணிக்கூட்டைப் பார்த்தாள்.
நேரத்தைப் பார்த்ததும் அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.
"அய்யோ அத்தை, மன்னிச்சிருங்க. ராத்திரி தூக்கமே போகாததால கொஞ்சம் தாமதமாகிருச்சு. கொஞ்சநேரம் இருந்தீங்கன்னா நான் காபி போட்டு கொண்டு வர்றேன்"
ஜான்சி தன் நீண்ட கூந்தலை கொண்டையிட்டவாறு சொல்லிக்கொண்டே சமையலறையை நோக்கி ஓடப் போக, அவளை தடுத்தார் விதுஷா.
"ஏய் நில்லு! உன் பேரென்ன?" அவர் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு கேட்ட தோரணை ஏனோ அவளுக்கு தன் கணவனை பெண் வேடத்தில் பார்ப்பது போல் தெரிய, கிளுக்கி சிரித்தாள்.
அதில் புருவத்தை நெறீத்தவர், "எதுக்கு இப்போ இழிக்குற?" என்று சற்று காட்டமாகக் கேட்க, "இல்ல... உங்கள பார்க்கும் போது எனக்கு அப்படியே அவர பார்க்குற மாதிரியே இருக்கு. அதான்..." என்றாள் அதே சிரிப்போடு.
ஏனோ விதுஷாவின் இதழ்கள் அவள் சொன்ன வார்த்தைகளில் சிரிக்க முயன்று பின் இதழுக்குப் பின்னே அடங்கிப் போக, அவருடைய உம்மென்ற முகத்தைப் பார்த்ததும் ஜான்சியின் இதழ்கள் கப்சிப்பென்று மூடிக்கொண்டது.
"பேரு ஜான்சி..." அவள் சொல்ல, "ம்.. ஐ வோன்ட் டூ க்ளெரிஃபை வன்திங். ரொம்ப பொறுமையா கேக்குறேன். எதுக்காக என் பையன கல்யாணம் பண்ணன்னு மட்டும் சொல்லு!" என்று விழிகளைக் கூர்மையாக்கிக் கேட்டார் அவர்.
யாத்ரனும் அப்போதுதான் எழுந்தவன் அறையிலிருந்து வெளியேறி இருவர் பேசிக்கொள்வதைப் பார்த்து மாடியிலேயே நின்றுக்கொண்டான்.
"உன்னதான் கேக்குறேன் பதில் சொல்லு! என் பையன் என்ன படிச்சிருக்கான், என்ன வேலை பார்க்குறான்னு உனக்கு தெரியுமா? இங்க எங்களோட ஸ்டேட்டஸ் என்னன்னு உனக்கு தெரியுமா சொல்லு..."
அவருடைய கேள்விகள் கூரிய ஈட்டி போல் அவள் இதயத்தைத் தாக்க, அவரை மிரட்சியாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவள் மெல்ல இதழ் பிரித்து பேச ஆரம்பித்தாள்.
"அது எங்க ஊர்ல..." என்று ஆரம்பித்தவள் நடந்தது மொத்தத்தையும் சொல்லி முடித்து, "இதான் அத்தை நடந்துச்சு, என்னை காப்பாத்திக்குறதுக்காக அவர என் வாழ்க்கைக்குள்ள கொண்டு வந்தேன். தப்பு என்மேலதான். அதுமட்டுமில்லாம என்னால... என்னால குழந்தை பெத்துக்க முடியாது. அதுக்காகவும்தான்" என்றாள் வார்த்தைகள் தடுமாற.
விதுஷாவுக்கு இந்த கதையைக் கேட்டு தலை வலியே வந்துவிட்டது.
நெற்றியை நீவி விட்டவாறு அவளை ஏற இறங்கப் பார்த்தவர், "அப்போ உன்னோட சுயநலத்துக்காக அவன யூஸ் பண்ணியிருக்க, உனக்கு அசிங்கமா இல்லயா?" என்று அடக்கப்பட்ட கோபத்தோடுக் கேட்க, அவமானத்தில் முகம் சிவந்துவிட்டது அவளுக்கு.
-----------------
யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 17 >>>
Https://agnitamilnovels.blogspot.com/2026/04/17.html
என்னோட நான்கு ஆன்டி ஹீரோ கதைகளான
தஷுரி
ரதியின் ரணதீரன்
கனவுகள் கனலாய் மாறுமா
வேல்விழி மொழிகள்
இந்த கதைகள Papr space Website ல இருக்கு.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க..
Here's the link 👇
https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4
என்னோட கதைகள ஆடியோ நாவலா கேக்கணும்னா...
Channel name - kadhaikulla polaama 👇
https://youtube.com/@kadhaikullapolaama99?si=ZIbEQ6qPd-b7cg-b
இப்போ காதல்போதையடா நீ எனக்கு நாவல் ஆடியோ வடிவுல இருக்கு..

Comments
Post a Comment