யாத்ரன் 09

யாவும் நின் யாத்ரனாய்..

EPISODE 09





இப்படியே சில நாட்கள் கழிந்திருக்க, யாத்ரனும் ஜான்சியும் அவ்வளவாக சந்தித்துக் கொள்ளவேயில்லை.


அவளுக்குள் பல கேள்விகளை உருவாக்கி அவன் குழப்பி விட்டதுமே அதற்கு விடை காண முடியாமல் அவனுடனான சந்திப்புக்களை பெண்ணவள் வேண்டுமென்றே தவிர்த்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். 


"அடியே ருக்மணி, இந்த சப்பாத்திய அவங்களுக்கு கொடு.. நீ அப்பறமா சாப்பிட்டுக்கோ! கொஞ்சம் தாமதா சாப்பிட்டா ஒன்னும் செத்துர மாட்ட" 


என்ற வனஜாவின் கத்தலில் ஒருவாய் சாப்பிடச் சென்ற ருக்மணி உள்ளுக்குள் குமுறிக்கொண்டே அதை கொண்டு போய் வரதனின் தட்டில் போட்டாள்.


"ஏய் என்ன! வர வர மரியாதை குறைஞ்சுட்டு போகுது" என்றவன் அதை உருளைக்கிழங்கு பொறியலில் தொட்டு சாப்பிட்டவாறு நண்பனைப் பார்க்க, அவனோ இல்லாத சப்பாத்தியை தட்டில் தேடிய வண்ணம் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தான்.


"யாத்ரா..." அவன் அழைத்ததும்தான் நடப்புக்கு வந்தவன், "ஹான் சொல்லுடா" என்றான் ஏதோ தூக்கத்திலிருந்து விழித்தது போல.


உணவை வாயில் போட்டு மென்றுக்கொண்டே வரதன் நண்பனை ஏற இறங்க ஒரு பார்வைப் பார்க்க, அவனின் பார்வைக்கான அர்த்தத்தை உணர்ந்த யாத்ரனோ குரலை செருமிக்கொண்டான்.


"அது... அது வந்துடா... எனக்கு  வர்ற ட்ரீம்ஸ் பத்தி உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கேன்ல! அது ரொம்பவே டிஸ்டர்பிங்கா இருக்குடா. ரொம்ப வியர்டான ட்ரீம்ஸ்லாம் வருது. ஏதோ நான் ராஜா காலத்துல இருக்குற மாதிரி முகம் ப்ளரா ஒரு ப்ரின்சஸ்னு ஒரே குழப்பமா இருக்குடா" 


என்று யாத்ரன் சொல்லி முடிக்க, அவனை நக்கலாக ஒரு பார்வைப் பார்த்தான் மற்றவன்.


"பரவாயில்லயே! சரக்கடிக்காமலே உளற ஆரம்பிச்சிட்ட. இருந்தாலும் கண்டபடி பேசுறது வீட்டுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்கடா மச்சான்" என்று தீவிர முகபாவனையோடு சொன்னவனோ தோழனின் கதையை உண்மையாகவே கட்டுக்கதையாக நினைத்துவிட்டான் போலும்!


"டேய் நெஜமாதான்டா, நா.." என்று யாத்ரன் மீண்டும் ஏதோ சொல்ல வர, "தம்பி, சாப்பிட்டதும் உடனே கையையும் தட்டயும் கழுவிடணும். இப்படி காய விடக் கூடாது. வீட்டுக்கு சரியில்லப்பா" என்றார் பெரியவர் மெதுவாக.


'கடவுளே! பூரா பயலுங்களும் லூசா இருக்குதுங்க' என உள்ளுக்குள் பொறுமிக்கொண்டவன் கைகளை கழுவுவதற்காக கொள்ளை புறத்திற்கு போக, தண்ணீர் நிரம்பிய சொம்போடு அங்கு நின்றிருந்தாள் ருக்மணி.


அவள் ஊற்றிய தண்ணீரில் கைகளை கழுவிக்கொண்ட யாத்ரன், அவள் கொடுத்த துண்டில் கையை துடைத்தவாறு தன் ஆறடி உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான்.


"உன் கூட கொஞ்சம் பேசணும்" என்று அவன் சொன்னதும் அதிர்ந்து விழித்தவள் சிறு வெட்கத்தோடு தலை குனிந்துக்கொண்டாள்.


"அது.. நீங்க பெரிய படிப்பெல்லா படிச்சிருக்கீங்க. துபாய்ல பொறந்து வளர்ந்திருக்கீங்க. இங்லீசு கூட நல்ல பேசுறீங்க" என்று சம்பந்தமே இல்லாமல் அவள் பேசிக்கொண்டு போக, அவளை மேலிருந்து கீழ் 'ஙே' என பார்த்து வைத்தான் யாத்ரன்.


அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றே புரியவில்லை அவனுக்கு.


"ஓகே... அதெல்லா இருக்கட்டும். இப்போ எதுக்கு நீ என்னை பத்தி என்கிட்டயே சொல்ற" நிஜமாகவே அவள் சொல்ல வருவது புரியாமல் கேட்டு விழிக்க, கைகளைப் பிசைந்தவாறு நின்றிருந்தவள் விட்டால் வெட்கத்தில் மண்ணிற்குள்ளேயே புதைந்துவிடுவாள் போல.


"என்னங்க நீங்க, என்கிட்டயே விளையாடுறீங்க. இதையெல்லா நீங்க அம்மாகிட்டயோ இல்லன்னா அண்ணாகிட்டயும்ல பேசிக்கணும். சரி விடுங்க, உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு எனக்கு தெரியும். நான் உங்களுக்கு கத்து தரேன். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு சின்னதா ஒரு தோஷம் இருக்கு. என்னை கட்டிக்க போறவரு கல்யாணத்துக்கு முன்னாடி எனக்காக கோயிலை சுத்தி அம்பது தடவை முட்டி போட்டு நடக்கணுமாம். அந்த பரிகாரத்த அடுத்த வாரமே..." 


பேசிக்கொண்டே சென்றவளின் வார்த்தைகள், "ஹேய் வெயிட் வெயிட்"" என்று பதறிப்போய் அவன் கத்திய கத்தில் அப்படியே நின்றது.


அவளோ புரியாமல் பார்க்க, "என்ன.. இல்ல என்னன்னு கேக்குறேன். இப்போ நான் சொன்னேனா, நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேனு சொன்னேனா, ஊஃப்... அதுக்குள்ள கல்யாணம் பரிகாரம் முட்டி போட்டுன்னு ஏதேதோ சொல்லிட்டு போற. ஓ காட்!" என்று தலையில் கை வைத்து அவள் பேசியதற்கு இவன் வேக மூச்சுக்களை விட்டான்.


ருக்மணியோ அதிருப்தியோடு ஒரு பார்வைப் பார்க்க, இடுப்பில் கைக்குற்றி முயன்று பொறுமையை இழுத்துப் பிடித்து பேச ஆரம்பித்தான் யாத்ரன்.


"ருக்மணி, நான் ஜான்சிய பத்தி பேசணும்னு சொன்னேன். அவ கொஞ்சநாள்ல சாக போறாங்குறத என்னால ஏத்துக்கவே முடியல. இன்ஃபேக்ட் நீதான் அவள காப்பாத்த ஏதாச்சும் ட்ரை பண்ணணும், அவ உன் ஃப்ரென்ட். நீ ஏதாச்சும் பண்ணி இதை நடக்க விடக் கூடாது. நான் சொல்றது புரியுதா உனக்கு? ருக்மணி, வெறும் மூட நம்பிக்கைக்காக அவ உயிர் போக விட்டுருவியா, அவமேல நெஜமாவே உனக்கு இவ்வளவுதான் பாசமா? ஒரு தடவ உயிர் போச்சுன்னா அதுக்கப்பறம் நீ வருத்தப்பட்டாலும் அவ திரும்ப வர மாட்டா" 


அவன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு பேசி முடிக்க, வாயில் ஈ போகாத குறையாக வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் ருக்மணி.


அவனோ அவள் முன் சொடக்கிட்டு இரு புருவங்களை ஏற்றி இறக்க, "எனக்கு ஜானுவ பிடிக்கும்தான். ஆனா எங்க ஊர் பஞ்சம் போகணுமே, இது பரிகாரம். சரியா பண்ணி முடிக்கலன்னா சாமி குத்தமாகிடும்" என்று தலையை சொரிந்த வண்ணம் சொன்னாள் பாவமாக.


அவளின் நிலை அவனுக்கு புரியாமலில்லை. சிறு வயதிலிருந்து பார்த்து பழகிய நம்பிக்கையை திடீரென ஒருவன் நிறுத்த சொன்னால் அவளால் எப்படி அதை கையாள முடியும்?


"ஐ அன்டர்ஸ்டேன்ட், ஐ மீன் நீ சொல்ல வர்றது எனக்கு புரியுது. பட் நேத்து கனவுல வரதனோட அப்பா வந்தாரு. அந்த பொண்ணு ஜான்சிய காப்பாத்தணும், இந்த பரிகாரம் கடவுளுக்கு பிடிக்கலன்னு சொல்ல சொன்னாரு. இதை எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னுதான்..." 


என்று அவன் நடித்த நடிப்பில் அந்த வெகுளிப் பெண்ணவளோ ஏமாந்துவிட்டாள் என்பதுதான் உண்மை.


"நெஜமாவா சொல்றீங்க, என்.. என்னால நம்பவே முடியல. எங்க கனவுல எல்லா வராத அப்பா அதெப்படி உங்க கனவுல.." என்று அந்த சந்தேக கேள்வியைக் கேட்டாலும் அதைப் பற்றி தீவிரமாக யோசிக்காமல், "ஏதோ ஒன்னு அப்பாவே சொல்லிட்டாரு, அதுக்கப்பறம் என்ன! ஜானுகிட்ட நான் பேசுறேன்" என்று ஒரு முடிவுக்கு வந்தாள் ருக்மணி.


அவளின் வார்த்தைகளைக் கேட்டதும்தான் அவனுக்கு 'அப்பாடா' என்றிருந்தது.


எதையோ சாதித்தது போல் அவன் தன்னைத்தானே மெச்சிக்கொள்ள, ருக்மணி நகர்ந்த மறுகணம், "எங்க அப்பா பேரு என்ன ராசா?" என்ற வரதனின் குரல் பின்னாலிருந்து கேட்க, தூக்கி வாரிப்போட்டது யாத்ரனுக்கு.


"அது.. அது வந்து.. பெரியவங்களோட பேர மரியாதையில்லாம சொல்ல கூடாது, வீட்டுக்கு சரியில்ல" அவர்கள் விட்ட அம்பை இவன் அவர்களுக்கு திருப்பிவிட, மூக்கு விடைக்க முறைத்துப் பார்த்தான் வரதன்.


"நீ பேசுறதையெல்லா கேட்டேன் யாத்ரா, தேவையில்லாம வம்ப விலை கொடுத்து வாங்குற. இன்னும் டென் டேய்ஸ்ல நாம ஊரை விட்டே போயிடுவோம், அதுவரைக்கும் எல்லாத்தையும் கொஞ்சம் மூடிட்டு இரு. சும்மா ருக்குவையும் அந்த பொண்ணையும் பிரச்சனையில சிக்க வச்சிராத புரியுதா! இந்த ஊரை பத்தி உனக்கு தெரியாது" 


அவன் கிட்டத்தட்ட எச்சரிக்கும் தொனியில் சொல்ல, "ஏன் தெரியாது.. பூரா பயலுகளும் கொலைகாரங்க முட்டா பயலுங்க" என்று சீண்டவென சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்துக்கொண்டான் யாத்ரன்.


அவனின் செயலில் தன் வார்த்தைகளை கொஞ்சமும் அவன் மதிக்கவில்லை என்பதை உணர்ந்துக்கொண்டான் வரதன். 


அடுத்தநாள்,


"அப்.. அப்பா..." என்று சிறு பயத்தோடு மெல்ல அழைத்து கைகளைப் பிசைந்தவாறு ஜான்சி அவர் முன்னே நிற்க, டயரியில் வரவு செலவு கணக்குகளை குறித்துக்கொண்டிருந்த சுபாஷோ காதிற்கும் கேட்காதது போல் அமர்ந்திருந்தார்.


"கொஞ்சநாள்ல பரிகாரம் இருக்குல்ல, எனக்கு அதுல கொஞ்சம் ஆட்சேபணை இருக்கு. பூசாரிக்கிட்ட..." என்று தைரியத்தை வரவழைத்து அவள் பேச, அதை குறுக்கிடுவது போல் விழிகளை மட்டும் உயர்த்தி மகளை தீப்பார்வைப் பார்த்தார் அவர்.


அந்த பார்வையில் பெண்ணவளுக்கு வார்த்தைகள் அப்படியே நிற்க, நா எழவில்லை.


"அது.. அது வந்துப்பா.. பரிகாரம்.. பரிகாரத்துல ஏதோ தப்பிருக்குன்னு தோனுது.. மறுபடியும் ஒருதடவ பூசாரிக்கிட்ட... "


என்றவளின் இதழ்கள் அடுத்து சுபாஷ் விட்ட அறையில் கப்சிப்பென்று மூடிக்கொண்டன.


ஆனால் அத்தோடு நிறுத்தவில்லை.


அவள் முதுகில் ஓங்கிக் குத்தியவர் அவளின் பின்னந்தலை முடியை கொத்தாகப் பற்றிக்கொள்ள, வலியில் துடிதுடித்துப் போனாள் ஜான்சி.


"ஏன்டி, ரெண்டு மாசம் தொடர்ந்து பரிகாரம் நடக்கும் போது தப்ப உணராதவ இப்போ தப்பு கிப்பின்னு வந்து என் முன்னாடியே பேசுற. அவ்வளவு தைரியமாடீ உனக்கு? படிக்காத தர்கூறி நீயெல்லா பரிகாரத்துல தப்புன்னு சொல்ற. இங்க பாரு ஏதோ கொஞ்சநாள் இருக்க போறவன்னு அடிக்க கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன், வாய மூடிக்கிட்டு நாங்க சொல்றத நீ பண்ணா மட்டும் போதும்" 


என்று கடிந்துக்கொண்டவருக்கு மகள் மேல் கொஞ்சமும் பாசம் என்ற ஒன்றே இல்லை.


அர்ச்சனாவோ எதுவும் செய்ய முடியாத கையாலாத தனத்தோடு சமையலறைக்குள் நின்றுக்கொண்டிருக்க, சுபாஷோ அவளை தரையில் தள்ளிவிட்டார்.


கண்ணீரைத் துடைத்து அழுத வண்ணமாய் அங்கிருந்து வெளியேறியவள் தன் மனதின் மொத்த பாரத்தையும் வலியையும் போக்க எண்ணி கோயிலுக்குள் நுழைந்துக்கொண்டாள்.


சன்னிதானத்திற்கு செல்லாமல் கோயில் தூணொன்றில் சாய்ந்து அமர்ந்துக்கொண்ட ஜான்சி, உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகமாய் தரையை வெறித்திருக்க, அவளுடைய விழிகளிலிருந்து கண்ணீர் மட்டும் அருவியாய் ஓடியது.


"ஜான்சி.. இந்த பேருக்கும் உனக்கும் சம்பந்தமே இல்ல" அவனின் குரல் காதில் விழ, சட்டென திரும்பிப் பார்த்தவளின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.


அங்கு ருக்மணியோடு நின்றுக்கொண்டிருந்தான் யாத்ரன்.


"அடியே ஜானு, உனக்கு தெரியும்ல! இவரு எம்புட்டு பெரிய படிப்பெல்லா படிச்சிருக்காருன்னு. அவரே சொல்றாரு, இந்த பரிகாரம் தப்புன்னு. அதுமட்டும் இல்லடீ எங்க அப்பா கூட இவர் கிட்ட சொல்லியிருக்காராம். நாமதான்டீ முட்டாளுங்க. வா வா இப்போவே போய் எல்லார்கிட்டயும் பரிகாரம் பண்ண முடியாதுன்னு சொல்லிருவோம்" 


என்று தீவிர முகபாவனையோடு பேசிக்கொண்டே தோழியின் கரத்தை இழுக்க, தரையில் கால்களை ஊன்றி நின்றுக்கொண்டாள் அவள்.


"ருக்கு, என்ன பேசுற நீ? இவரு நேத்து வந்தவரு. கொஞ்சநாள்ல இங்கயிருந்து போயிடுவாரு. இவர் பேச்ச கேட்டு நாம ஏதாச்சும் பண்ண போய் நமக்குதான் வினையா முடியும். தப்புன்னு தெரியுது, ஆனா எதுவுமே பண்ண முடியாது" 


என்றுவிட்டு கரத்தை உதறியவள் கோயிலிலிருந்து வெளியேறி வேகமாக நடந்துச் செல்ல, அவளை நான்கே எட்டுக்களில் பிடித்துக்கொண்ட யாத்ரனோ பக்கத்திலிருந்த பெரிய சுவற்றுக்கு பின்னே அவளை இழுத்துச் சென்றான்.


அவர்களின் நல்லநேரமோ என்னவோ! சுற்றிமுற்றி ஆள் அரவமே இல்லாமல் இருக்க, விழிகளைக் கூர்மையாக்கி அவளைப் பார்த்தான் அவன்.


"உனக்கு இப்போ தப்புன்னு தெரியுதுல்ல, அதுவே பெரிய முன்னேற்றம்தான். இஃப் யூ டோன்ட் மைன்ட், ஐ மீன் உனக்கு ஆட்சேபனை இல்லன்னா நீ என் கூட வந்துடுறியா, எல்லா ஏற்பாட்டையும் நான் பார்த்துக்குறேன்" 


அவன் குருட்டு தைரியத்தில் வார்த்தைகளை விட, ஜான்சியின் விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிந்துக்கொண்டன.


"என்ன... உங்க கூட ஊரை விட்டு ஓடி வர சொல்றீங்களா?" என்று குறையாத அதிர்ச்சியோடு அவள் கேட்க, "அது நான் என்ன சொல்ல வந்தேன்னா... ஏதோ ஒன்னு, என்னால எக்ஸ்ப்ளைன் பண்ண முடியல. பட் யூ வில் பீ சேஃப். நீ பாதுகாப்பா இருக்கலாம், யாராலயும் உனக்கு எந்த பிரச்சனையும் வராது. ட்ரஸ்ட் மீ!" என்று இறுதி வார்த்தைகளை முடித்தான் அழுத்தமாக.


ஜான்சிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தாயின் அரவணைப்பைத் தாண்டி ஒரு அந்நிய ஆடவனிடத்தில் தனக்கான கரிசணையை காண்கிறாள். 


தன் தந்தை போன்ற ஆண்களையே பார்த்து வளர்ந்த பெண்ணவளுக்கு யாத்ரன் எட்டாம் அதிசயமாகத்தான் தெரிந்தான்.


சரியாக அவள் சாய்ந்து நின்றிருந்த சுவற்றில் சிறிய தேளொன்றை கண்டுகொண்ட யாத்ரன், "ஹேய் கெயார்ஃபுல்" என்று தன்னை மீறி கத்திவிட, அதில் பதறியவள் துடித்துக்கொண்டு தனக்கு எதிரே நின்றிருந்த அவன் மேல் மோதி விழப் போனாள்.


ஆனால் ஆடவனின் கரங்கள் அவளை இழுத்து தன்னோடு அணைத்திருக்க, அவள் உடல் தாராளமாக அவனின் கட்டுடலோடு பிணைந்துக்கொண்டது.


**********


என்னோட நான்கு ஆன்டி ஹீரோ கதைகளான 


தஷுரி

ரதியின் ரணதீரன்

கனவுகள் கனலாய் மாறுமா

வேல்விழி மொழிகள்


இந்த கதைகள Papr space Website appல April மாதம் வரைக்கும் ஃப்ரீயா படிக்கலாம்.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. 


Here's the link 👇

https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4


என்னோட கதைகள ஆடியோ நாவலா கேக்கணும்னா... 

Channel name - kadhaikulla polaama


இப்போ விழி தீயிலொரு தவம் நாவல் ஆடியோ வடிவுல இருக்கு.. 


Channel    link 👇

https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y


 


Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚