யாத்ரன் 08
அன்றிரவு விட்டத்தை வெறித்தவாறு கட்டிலில் படுத்திருந்த யாத்ரனுக்கு ருக்மணியின் வார்த்தைகளே சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்தன.
"இதை எப்படி அவளால சாதாரணமா எடுத்துக்க முடியுது, என்னால இதை கொஞ்சமும் ஏத்துக்க முடியல. வெறும் மூடநம்பிக்கைகாக உயிர் பழியா.. ச்சே!" என்று தீவிர யோசனையில் உழன்றுக் கொண்டிருந்தான்.
அடுத்த கொஞ்ச நேரத்திலேயே அவனுக்கு மெல்ல உறக்கம் தழுவ, மீண்டும் அவனை ஆட்கொண்டது அந்த நினைவுகள்.
"யாத்ரா, இது எனக்கு சரியா படல. நீ இந்த ஊர்லயே சிறந்த சிற்பிதான் அதுக்காக இளவரசியோட அனுமதியில்லாம அவங்களோட சிலைய பண்ணது ரொம்ப தப்புடா. அரச காவலர்கள்கிட்ட மாட்டிக்கிட்டா அவ்வளவுதான்"
என்று ஒருவன் பதற்றமாக சொல்ல, தான் காதலிக்கும் இளவரசியின் உருவத்தை செதுக்கி அதை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு எதுவுமே மூளைக்கு எட்டவில்லை.
"அவங்கள சந்திக்கிறதுக்காக இப்படி ஒரு வாய்ப்பு அமைஞ்சா கூட அது எனக்கு சந்தோஷம்தான்"
அவனின் குரலில் காதல் மிதக்க, சட்டென காட்சி மாறி அந்த சிலை இருக்கும் ஒரு கோயில் யாத்ரனின் மனக்கண் முன் வந்தது.
இப்போது அவனிருக்கும் அதே ஊரிலுள்ள ஒரு கோயில்தான் அது.
பட்டென்று விழிகளை திறந்தவனுக்கு இந்த முறை பயமோ பதற்றமோ இலலை. மாறாக ஒருவித ஆர்வம் அவனுடைய விழிகளில் தெரிந்தது.
இடது பக்க புருவத்தை நீவி விட்டவாறு யோசித்தவன் உடனே அறையிலிருந்த வரதனின் லேப்டாப்பை எடுத்து தேட ஆரம்பித்தான்.
உலகம் பற்றிய மொத்த தகவல்களும் கை நுனியில் இருக்க, அந்த கோயிலை கண்டுபிடிப்பது என்ன அவனுக்கு அத்தனை சிரமமாகவா இருக்கப் போகிறது!
"நாளைக்கே போய் பார்க்கலாம். இந்த ட்ரீம்ஸ் வரதுக்கு என்ன காரணம்னு சின்ன இன்ஃபார்மேஷனாச்சும் நமக்கு கிடைக்கலாம் யாத்ரா"
தனக்குத்தானே சொல்லிக்கொண்டு உறங்கியவன் அடுத்தநாள் வரதனை கூட அழைக்காமல் அந்த கோயில் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.
பராமரிக்கப்படாது விட்டிருந்த அந்த கோயில் தற்போது பல வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலாத்தளமாக இருக்க, மெல்ல உள்ளே நுழைந்தான் அவன்.
உடைந்தும் உடையாததுமான கோயில் தூண்களும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னே செதுக்கப்பட்டு இப்போது சிதைக்கப்பட்டிருந்த சில சிலைகளும் அங்கு இருந்தன.
தன் அலைப்பேசி கேமரா வழியே அனைத்தையும் படம் பிடித்துக்கொண்டிருந்தவனுக்கு எதுவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை.
எதிர்பார்த்து வந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்ச, கோபத்தில் காலை தரையில் உதைத்த யாத்ரன் அங்கிருந்து வெளியேற எத்தனிக்க, திடீரென ஒரு சலசலப்பு.
அவனுடைய கால்கள் தானாக நிற்க, புருவ முடிச்சுகளோடு சுற்றி முற்றி பார்த்தான்.
யோசனையோடு மீண்டும் வெளியேறப் போனவனின் காதில் காலடி சத்தம் கேட்க, அலைப்பேசியை பேன்ட் பாக்கெட்டில் வைத்தவன் சட்டைக் கையை மடித்துவிட்டவாறு வேகமாக வந்தான்.
அவனின் கழுகுப் பார்வை முன் எதுவும் தப்பவில்லை.
அடக்கப்பட்ட கோபத்தோடு அந்த ஒரு தூணை நெருங்கி அதன் பின்னே மறைந்து நின்றிருந்தவளின் கரத்தைப் பற்றி அவன் இழுத்து தன் முன்னே நிறுத்த, அவனுடைய விழிகளோ பெரிதாய் விரிந்துக்கொண்டன.
"ஜான்சி..." ஆடவனின் குரல் குறையாத அதிர்ச்சியோடு ஒலிக்க, "ஹிஹிஹி... நீங்க இந்த வழியா போறத பார்த்தேன். அதான் வந்தேன்" என்று அசடுவழிந்தவாறு சொன்னாள் அவள்.
அவளை முறைத்துப் பார்த்தவன், "ஏன் மறுபடியும் உங்கம்மாகிட்ட அறை வாங்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கோ, இல்லன்னா இன்னும் கொஞ்சநாள்தான் உயிரோடா இருக்க போறன்னு உன்ன தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா" என்று குத்தலாகக் கேட்க, பெண்ணவளுடைய முகமோ சோர்ந்துப் போனது.
"எங்க ஊருக்காக நான் பண்ண போற தியாகம் அது, எதுக்கும் நான் உபயோகம் இல்ல இதுக்காச்சும் உபயோகமா இருந்துட்டு போறேன்" கலங்கிய குரலில் அவள் சொல்ல, அவள் தோள்களைப் பற்றி சுவற்றில் சாற்றியவன் விழிகளில் கோபம் கொப்பளிக்க அவளைப் பார்த்தான்.
"ஆர் யூ அவுட் ஆஃப் யூவர் மைன்ட்! அதான் சொல்றேனே இது பைத்தியக்காரத்தனம்னு, ஏன் உன்னால இதை புரிஞ்சுக்க முடியல முட்டாள் முட்டாள். உயிர் பழிய கேக்குதுன்னா அதெப்படி கடவுளா இருக்க முடியும்?" என்று மூச்சு விடாமல் அவன் ஆக்ரோஷமாக கத்திய விதத்தில், பயந்து போய் விக்கித்துப்போய் நின்றுவிட்டாள் ஜான்சி.
அவளின் மருண்ட விழிகளைப் பார்த்தவனுக்கு அப்போதுதான் தான் செய்யும் காரியம் புரிய, விழிகளை அழுந்த மூடித் திறந்து கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான் யாத்ரன்.
"லுக், நான் அவ்வளவா கோபப்பட மாட்டேன். பட் கோபம் வந்தா ஐ கான்ட் கன்ட்ரோல் மை செல்ஃப். இதையெல்லா பார்க்கும் போது என்னால நெஜமாவே கோபப்படாம இருக்க முடியல ஜான்சி. எந்த கடவுளும் தன்னோட மக்கள கஷ்டப்படுத்த நினைக்க மாட்டாங்க, என்னை பொருத்த வரைக்கும் அதுதான் கடவுள். நீ இறந்ததுக்கு அப்பறமும் பஞ்சம் போகலன்னா மறுபடியும் மூனு பொண்ணுங்கள பழி கொடுப்பாங்களா என்ன!
ஜஸ்ட் லிசன் டூ மீ! என்னால இதை சாதாரணமா கடந்து போக முடியல. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. அது உன்னோட உரிமை, நோ வன் ஹேஸ் டூ ரைட்ஸ் டூ டேக் தட். உன் வாழ்க்கைய முடிவு பண்ணுற உரிமைய யாருக்கும் கொடுக்காத"
என்று பொறுமையை இழுத்துப் பிடித்து அவன் பேசி முடிக்க, அவனை மிரட்சியாக பார்த்துக்கொண்டிருந்த ஜான்சியின் விழிகளிலிருந்து கண்ணீர் ஊற்றெடுத்தது.
"உங்களுக்கு ஒன்னு தெரியுமா. என்.. என்னால குழந்தை பெத்துக்க முடியாது. பொறக்கும் போதே சாபத்த வாங்கி பொறந்திருக்கேனு ஊர்க்காரங்க சொல்லுவாங்க. என்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கன்னு அப்பாவே சொன்னாரு. நான் உயிரோட இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்ல, அதான் நானே இதை பண்றேன்னு வாக்கு கொடுத்தேன்"
அவளின் வார்த்தைகளில் வலி மட்டுமே..
ஒருகணம் அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து விழித்தவனுக்கு இன்னொருபுறம் 'இதுக்காக எல்லா உயிர விடுவாங்களா?' என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை.
இருவரும் கிட்டத்தட்ட மூச்சுக்காற்று கலக்கும் தூரத்திற்கு நெருங்கி நின்றிருந்தனர்.
அவனுடைய கரங்கள் அவள் தோள்களைப் பற்றியிருக்க, அவளின் பார்வையோ தன் மேலிருந்த கரங்களைப் பார்த்துவிட்டு அவனுடைய விழிளை நோக்கின.
'நான் சொன்னது இவ மரமண்டைக்கு ஏறிச்சா இல்லையா?' என்று விழிகளை சுருக்கி யோசித்தபடி யாத்ரன் அவளையே பார்த்து நிற்க, 'இவர் இப்படி நிக்கிறதால நான் படுற அவஸ்தை இவருக்கு புரியுதா இல்லையா?' என உள்ளுக்குள் நினைத்தபடி அவனை பாவமாகப் பார்த்தாள் ஜான்சி.
அந்த பார்வையில் என்ன உணர்ந்தானோ!
"சோ.. சோரி! நான் வேணும்னு பண்ணல.." என்றவனின் வார்த்தைகள் சற்று தடுமாற, அதற்குமேல் அங்கு நிற்காமல் விறுவிறுவென்று அந்த இடத்தைவிட்டு வெளியேறினான் அவன்.
அன்றிரவு,
அர்ச்சனாவோடு பாயில் படுத்திருந்த ஜான்சிக்கு இன்று யாத்ரன் சொன்னதே மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வந்துக்கொண்டிருந்தது.
'பொறந்ததுலயிருந்து இந்த நம்பிக்கைகள கேட்டு வளர்ந்திருக்கேன், அதெப்படி பொய்யாகும்? என்னோட நம்பிக்கையில தப்பிருக்கா இல்லன்னா அவர் இதை நம்பாதது தப்பா? எதுவுமே புரிய மாட்டேங்குது.. ஆனா...'
அவன் சொன்ன ஒரு விடயத்தை ஆழமாக யோசித்தவள், மெல்ல தன் அம்மாவை தட்டி எழுப்பினாள்.
தூக்கக் கலக்கத்திலிருந்த அர்ச்சனாவோ, "ம்ம் என்ன சொல்லு.." என்று சிறு எரிச்சலோடுக் கேட்க, "உயிர் பழி கேட்டு மக்களோட ஆசைய நிறைவேத்தினா அது கடவுளா?" என்று தன் சந்தேகத்தை கேட்டுவிட்டாள் ஜான்சி.
பட்டென்று விழிகளைத் திறந்த பெரியவரோ மகளை விசித்திரமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு உடனே கட்டிலில் படுத்திருந்த தன் கணவரைதான் பதற்றமாக நோக்கினார்.
"ஜானு, அமைதியா பேசு. உன் அப்பா காதுல விழுந்துர போகுது" என்று பதறியவர், "என்ன திடீர் சந்தேகம், எப்போவும் ஊருக்காக பண்றது பெருமைன்னு பேசிப்ப. இப்போ என்னாச்சு?" என்று விழிகளைக் கூர்மையாக்கிக் கேட்க, பெண்ணவளின் பார்வை சற்று தயங்கி நின்றது.
"அம்மா, அது.. அது வந்து.. நம்ம ஊர் கலாச்சாரம் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. அது இருந்துச்சு. ஆனா இப்போ, நாங்க தப்பா நம்பிக்கையில இருக்கோமோன்னு சந்தேகமா இருக்கு. காக்குற கடவுளே எப்படி உயிர காவு வாங்கும்? நெஜமாவே நீங்.. நீங்க இதை நம்புறீங்களாம்மா?"
என்று தயங்கித் தயங்கி அவள் கேட்டு முடிக்க, அர்ச்சனாவின் இதழ்கள் விரக்தியாகப் புன்னகைத்தன.
"இல்ல, ஆனா உன் அப்பாவுக்காக நம்புற மாதிரி நடிக்க வேண்டிய நிலைமை ஜானு. என்ன பண்ண? காதலிச்சு வீட்டை எதிர்த்து நின்னு கல்யாணம் பண்ணி வந்துட்டேன். ஆனா அந்த காதல் இந்த ஊருக்கு வந்த ஒரே வாரத்துல மொத்தமா அழிஞ்சு போச்சு" என்றவரின் வார்த்தைகள் அவளுக்குள் பல கேள்விகளை எழுப்பின.
"புரியலம்மா.." அவள் புரியாமல் கேட்க, ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு கடந்தகால சம்பவங்களை மீட்டினார் அர்ச்சனா.
தன் வீட்டாற்களை எதிர்த்து நின்று சுபாஷை திருமணம் செய்து வட இந்தியாவுக்கு வந்த அர்ச்சனாவிற்கு அனைத்தும் புதிதுதான். கூடவே, அவர்களின் மூடநம்பிக்கைகள் ஒருகணம் அவரை கதிகலங்கவே வைத்துவிட்டது.
திருமணமாகி வந்த ஒரு வாரத்தில் ஊருக்கு ஏதோ தோஷம் என்று பரிகாரமாக அவரை நிர்வாணமாக்கி நடுநிசியில் ஊரை சுற்றி நடக்க விட்டதை அவரால் இன்றும் மறக்க முடியாது.
அன்று காதலாவது மண்ணாவது என்று தன் தாயின் பேச்சைக் கேட்டு புது காதல் மனைவியை வற்புறுத்தி செய்ய வைத்த தன் கணவரைப் பார்த்தவருக்கு அன்றோடு அத்தனை காதல் உணர்வுகளும் மரத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
வேறு ஸ்டேட்டிலிருந்து வந்த பெண் என்று அவருடைய பேச்சை எவரும் மதிப்பதில்லை. அதனாலேயே யாருடனும் பேசி பழகாது தனிமையில் இருந்தவருக்கு ஒரே ஆறுதல் தன் மகள் ஜான்சிதான்.
ஆனால் இப்போது பரிகாரம் என்ற பெயரில் அவளின் உயிரை இந்த ஊர் பறிக்கப் போவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கூடவே எதுவும் செய்ய முடியாத நிலை.
இதில் மகள் வேறு ஊர் நம்பிக்கையில் மூழ்கியிருக்க, மனதைக் கல்லாக்கிக்கொண்டு நடப்பவை நடக்கட்டும் என்று முயற்சியை விட்டவர் வேதனைப்படாத நாளில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தனக்கு நடந்ததையும் தன் மனதிலுள்ளதையும் அர்ச்சனா சொல்லி முடிக்க, ஜான்சி இதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவளுடைய அதிர்ந்த முகமே அப்பட்டமாகக் காட்டியது.
"அம்மா... ஆனா கடவுள் சன்னிதானத்துல இருக்குறவங்க எப்படி பொய் சொல்வாங்க. அவர் சொன்னதெல்லா இதுவரைக்கும் நடந்திருக்குல்ல. அதுமட்டும் இல்லாம இந்த பரிகாரம் சரியா நடந்து முடிஞ்சா நம்ம ஊருக்குதானே நல்லது. இதெல்லா எப்படி பொய்யாகும்?"
பதற்றமாக கேட்டவளின் மூளை அதிலிருக்கும் தவறை உணர்த்தினாலும் சிறுவயதிலிருந்து பழகிப் போன நம்பிக்கை அந்த உண்மையை ஏற்க மறுத்தது.
"இங்க பாரு ஜான்சி, நீ கேட்ட கேள்வி சரிதான். உயிர் பழி கேட்டா அது கடவுளே இல்ல. ஆனா அது இந்த ஊர் மக்களுக்கு புரியாது. இப்போவும் ஒன்னும் கெட்டு போகல. நீ வேணா இந்த ஊரை விட்டே..."
அர்ச்சனா சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுபாஷின் கத்தல் அந்த அறையை நிரப்பியது.
"ஏய் என்னங்கடீ ஆத்தாளும் புள்ளையும் பேசிட்டு இருக்கீங்க, சும்மா நொய்யு நொய்யுன்னுக்கிட்டு.. ஒழுங்கா தூங்குங்கடீ, இல்லன்னா கொன்னுருவேன்"
என்று அவர் அரைத் தூக்கத்தில் கத்திவிட்டு திரும்பிப் படுக்க, பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்ட அர்ச்சனாவோ அதற்குமேல் எதுவுமே பேசவில்லை.
மகளின் தலையை வருடிவிட்டு அவர் திரும்பி படுத்துக்கொள்ள, ஜான்சிக்கு இருந்த குழப்பத்தில் தூக்கமோ தூரச் சென்றுவிட்டது.
ஆனால், அவளை குழப்பி விட்டவனோ இன்று அந்த இளவரசியின் முகத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வராத தூக்கத்தை வரவழைத்து தூங்கிக்கொண்டிருந்தான்.
***********
யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 09
👇👇👇
Https://agnitamilnovels.blogspot.com/2026/03/09.html
என்னோட நான்கு ஆன்டி ஹீரோ கதைகளான
தஷுரி
ரதியின் ரணதீரன்
கனவுகள் கனலாய் மாறுமா
வேல்விழி மொழிகள்
இந்த கதைகள Papr space Website appல April மாதம் வரைக்கும் ஃப்ரீயா படிக்கலாம்.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க..
Here's the link 👇
https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4
என்னோட கதைகள ஆடியோ நாவலா கேக்கணும்னா...
Channel name - kadhaikulla polaama
இப்போ விழி தீயிலொரு தவம் நாவல் ஆடியோ வடிவுல இருக்கு..
Channel link 👇
https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y

Comments
Post a Comment