விழிகள் 22




அதேநேரம் இங்கிலாந்தில்,


ஜன்னல் வழியே மைதானத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த அதிகாரிகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் லியோ.


"லியோ.. உன்ன எவ்வளவு நேரம் கூப்பிடுறது, அங்கயிருந்து வந்ததுலயிருந்து ஒரு  மாதிரியாவேதான் இருக்க. சரி அதை விடு, இந்த ஃபைல நீ செக் பண்ணிட்டேன்னா ஆஃபீஸ்க்கு சப்மிட் பண்ணிடலாம்" என்று அரசாங்கத்தில் பணி புரியும் அவனின் தோழன் ஜஸ்டின் சொல்ல, "செக் பண்ணிட்டேன்" என்றுவிட்டு சலிப்பாக விழிகளை உருட்டினான் மற்றவன்.


ஜஸ்டினுக்கு சிறு சந்தேகம் எழ, வேகமாக அதையெடுத்துப் பார்த்தவன், "செக் பண்ணிட்டேன்னு சொன்ன, இதுல நிறைய எரர்ஸ் இருக்கு லியோ. இப்படி மட்டும் சப்மிட் பண்ணியிருந்தா ப்ரெசிடென்ட் நம்மள இங்கயிருந்து துரத்தியே விட்டிருப்பாரு" என்றான் அதிர்ச்சியோடு.


ஆனால் லியோவின் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் வெளிப்படவில்லை. 


"ஓ.." என்று மட்டும் சொன்னதோடு அவன் பாட்டிற்கு இருக்கையில் அமர்ந்து விழிகளை மூடி தலையை பின்னே சாய்த்துக்கொள்ள, மற்றவனுக்கு எல்லாமே புதிதாகத்தான் தெரிந்தது.


"ஆர் யூ ஓகே லியோ, உன்கிட்ட எனக்கு ஏதோ வித்தியாசம் தெரியுது. நீ ரொம்ப சேன்ஜ் ஆகியிருக்க. இங்க திரும்ப வந்ததுலயிருந்து உன்னை கவனிச்சிட்டுதான் இருக்கேன். நீ எதையோ ரொம்ப யோசிச்சிக்கிட்டு இருக்க, உன் கான்சென்ட்ரேட் இங்கேயே இல்ல ரைட்?" என்று ஜஸ்டின் கூரிய பார்வையோடுக் கேட்க, அவனை இறுகிய முகமாகப் பார்த்தான் லியோ.


அவனின் மனக்கண் முன் யாழ்மொழியின் முகம் வந்துச்செல்ல, விழிகளை அழுந்த மூடித் திறந்தவன், "அதெல்லாம் ஒன்னு இல்ல, ஐ அம் ஆல்ரைட். ரொம்ப தூரம் ட்ரேவல் பண்ணேன்,  என்ட் க்ளைமேட் எல்லா எனக்கு ஒத்துக்கல. தட்ஸ் இட்! சும்மா கற்பனை பண்ணி பேசாத, மொதல்ல இங்கயிருந்து வெளிய போ" என்று மேசை மீதிருந்த தாள்களை புரட்டியவாறு சொல்ல, ஜஸ்டினோ சிறிதுநேரம் அவனையே பார்த்திருந்தவன் பின் எதுவுமே பேசாமல் அறையிலிருந்து வெளியேறினான்.


அவன் சென்ற அடுத்தகணமே மீண்டும் யாரோ உள்ளே வருவது போல் சத்தம் கேட்க, "இவன..." என்று பற்களைக் கடித்துக்கொண்டு நிமிர்ந்துப் பார்த்த லியோவின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, வார்த்தைகளோ தொண்டைக்குழியில் நின்றுவிட்டன.


"க்ரிஸ்டி..." என்று அதிர்ச்சி குறையாத குரலில் அழைத்தவாறு அவன் எழுந்து நிற்க, அவனெதிரே புன்னகையோடு நின்றிருந்தாள் அவனின் பழைய காதலி.


"என்னை பார்க்க வரணும்னு உனக்கு தோனவே இல்லல்ல, இன்னும் என்மேல கோபமாதான் இருக்கியா?" என்று சிறு வேதனை குரலில் அவள் கேட்டதும், நெற்றியை நீவிவிட்டுக்கொண்டவன், "மைக்கேல்" என்றான் சட்டென்று.


உடனே க்ரிஸ்டியின் முகம் மாற, "உன்ன காயப்படுத்தின சாபமோ தெரியல, மைக்கேலும் நானும் பிரிஞ்சிட்டோம். அது ஏன்னு நான் லெட்டர்லயே சொல்லியிருக்கேன்" என்று அவள் பேசிக்கொண்டே அவனின் அருகே வர, அவளுக்காக இருக்கையை இழுத்து அமரக் கொடுத்தவாறு, "லெட்டர்ல மைக்கேல பத்தி நீ சொல்லும் போது எனக்கும் இதேதான் தோனுச்சு, பட் பிரிஞ்சிட்டேன்னு சொல்றதுக்கு உன்னால முடியலயா? ஓகே லீவ் இட்" என்றான் சாதாரணமாக.


க்ரிஸ்டியோ அவனின் முகத்தை கூர்ந்துப் பார்த்தவள் ஒருவித விரக்திப் புன்னகையோடு தலையை குனிந்து கைகளைப் பிசைந்தவாறு அமர்ந்திருக்க, "வாட்?" என்று கேட்டான் லியோ அவளின் அருகே அமர்ந்தபடி.


"இதை பத்தி நேர்ல சொல்லணும்னு நான் நினைச்சதுக்கு காரணம் இருக்கு லியோ. லெட்டர்ல பேசும் போது உன் வார்த்தைகள்ல கோபத்த நான் உணரல, அதனால நீ என்னை மன்னிச்சிட்டேன்னு நான் நினைச்சேன். ஒருவேள நான் மைக்கேல பிரிஞ்சிட்டேன்னு சொன்னா நீ சந்தோஷப்படுவேன்னு..." 


என்று அவள் தயக்கமாக இழுக்க, அவளை புருவ முடிச்சுகளோடு பார்த்தவன் பின் இரு பக்கமும் தலையாட்டி சிரித்தவாறு முகத்தை திருப்பிக்கொண்டான்.


ஏனோ லியோவின் சிரிப்பும் அவனிடத்தில் தெரிந்த ஒரு மென்மையும் க்ரிஸ்டிக்கு வித்தியாசமாகத் தெரிய, அவனை ஆச்சரிப் பார்வைப் பார்த்தாள் அவள்.


"யூ ஆர் சோ டிஃபெரென்ட் ஃப்ரொம் பிஃபார், நான் காதலிச்ச லியோவா நீ எனக்கு தெரியல. ஏதோ வேற மாதிரி.. ஐ டோன்ட் நோ ஹவ் டூ சே" என்று  ஆச்சரியக் குரலில் பேசிக்கொண்டே சென்றவள் திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாக, "ஒருவேள, இதுக்கு அந்த இந்தியன் கேர்ள்தான் காரணமா, லெட்டர்ல கூட நீ  அதிகமா அவள பத்திதான் பேசியிருப்ப. நான் சொல்றது சரிதானே?" என்று கேட்டாள் ஒரு மாதிரியான குரலில்.


அவளின் கேள்வியில் திகைத்துப் பார்த்தவன், "வா.. வாட்? ஆர் யூ மேட்? அப்படியெல்லாம் இல்ல. அவள பத்தி உன்கிட்ட சொல்லியிருக்கேன், பேளஸ்ல வேலை பார்க்குற சாதாரண பொண்ணு, அவள போய் நான் எப்படி க்ரிஸ்டி.. ஆனா அம்மணி என்னை ரொம்ப காதலிக்கிறாங்க. பார்க்க சின்ன பொண்ணு ஆனா வாய் இருக்கே ஏதோ பெரிய மகாராணி மாதிரி ரொம்ப பேசுவா. திட்டினா போதும் உதட்டை கியூட்டா வச்சுகிட்ட ஒரு பார்வை பார்ப்பா என்னை... ஐ அம் டோட்டலி ஃப்ளர்ட். ஆனா அதுக்காக காதலிச்சிர முடியுமா" என்று மூச்சு விடாமல் தன்னவளைப் பற்றி பேசிக்கொண்டே 瑩போக, க்ரிஸ்டியோ விழி விரித்து அவனைப் பார்த்தாள்.


அவளுடைய இதழ்கள் புன்னகைக்க, "இப்போ நான் காதல பத்தி பேசவே இல்ல லியோ. ஆனா அவதான் காரணமான்னு நான் ஒரு கேள்வி கேட்டதும் அவள பத்தியே நீ பேசுற" என்று சொன்னவாறு அவனை நெருங்கி அமர்ந்தவள் அவனின் இடது பக்க நெஞ்சின் மீது கரத்தை வைக்க, அதுவோ அத்தனை வேகமாக துடித்துக்கொண்டிருந்தது.


"இ.. இல்ல, நான் ஏதோ அவள பத்தி.. எனக்கும் அவளுக்கும்.. அது..."  என்று அவன் தடுமாற ஆரம்பிக்க, "லியோ, முதல் தடவை உன்கிட்ட பதட்டத்தயும் தடுமாற்றத்தயும் பார்க்குறேன். அதுவும் அந்த சாதாரண சின்ன பொண்ணு உன்ன முழுசா மாத்தியிருக்கா. பட், யூ கான்ட் அக்செப்ட் இட் ரைட்?" என்று இரு புருவங்களை ஏற்றி இறக்க, அவனோ வார்த்தைகளின்றி அதிர்ந்த முகமாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.


"ஐ திங், அவ உன் வாழ்க்கையில வந்ததாலதான் நீ லெட்டர்ல என்கிட்ட ரொம்ப சகஜமா பேசியிருக்க. உன்னால என்னை மன்னிக்க முடிஞ்சிருக்கு.  அவ மட்டுமில்ல நீயும் அவள ரொம்ப காதலிக்கிற, அவ அளவுக்கு.. இல்லன்னா அவள விட அதிகமா கூட இருக்கலாம். உன்னால அவள பிரிஞ்சு இருக்க முடியல" என்று அவள் சொல்லிக்கொண்டே போக, அவள் கரத்தை பட்டென்று உதறிவிட்டான் அவன்.


"ஜஸ்ட் ஷட் அப் க்ரிஸ்டி! நீயா ஏதேதோ பேசுற. என.. எனக்கு அவள பிடிக்கும்தான். ஆனா லவ்.. அதெல்லாம் இல்ல, எனக்கு லவ் வேணாம்" என்று அழுத்தமாக சொன்னவனைப் பார்த்து அவள் சிரிக்க, அவளை முறைத்துப் பார்த்தான் லியோ.


"நான் உன் கூட ரொம்ப வருஷம் இருந்திருக்கேன், இப்போ நாம பிரிஞ்சிருக்கலாம். பட் உன்ன பத்தி எனக்கு தெரியாம இல்ல. நீ அந்த பொண்ண ரொம்ப லவ் பண்ற, ஆனா உன் மனசுக்குள்ள ஏதோ இருக்கு. உன்னை அத ஏத்துக்க விட மாட்டேங்குது தட்ஸ் இட்!"  என்று நிறுத்தியவள் அவனை நெருங்கி, அவன் கரத்தைப் பற்றி அவன் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தாள்.


"நான் பண்ண அதே தப்ப நீயும் பண்ண கூடாது லியோ. தட்ஸ் ஐ வான்ட். முட்டாள்தனமா யோசிச்சு அந்த பொண்ண விட்டுராத, ஒரு தடவை கைவிட்டு போயிருச்சுன்னா திரும்ப பெறவே முடியாது" என்றவளின் வார்த்தைகள் விரக்தியோடு வெளிப்பட, பார்வையில் அத்தனை ஏக்கம்.


லியோவுடனான பழைய நினைவுகள் அவளின் மனக்கண் முன் தோன்றி மறைய, "யாழ்..." என்று அவன் மெல்ல முணுமுணுத்ததுமே அவனைப் பற்றியிருந்த கரத்தை விட்டு தள்ளி நின்றுக்கொண்டாள் க்ரிஸ்டி.


"லீவ் மீ அலோன், இங்கயிருந்து கெளம்பு" என்று மூச்சு வாங்கியவாறு சொன்னவன் தலையைத் தாங்கியவாறு அப்படியே அமர்ந்திருக்க, விழிநீரைத் துடைத்துவிட்டு விறுவிறுவென அந்த அறையிலிருந்து வெளியேறினாள் அவள்.


இங்கு லியோவுக்கு தன் மனதை தன்னாலயே கணிக்க முடியவில்லை. இந்த உணர்வுகள் கொடுத்த வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் "ஆஆ...." என்று அந்த அறையே அதிர கத்தியவனின் விழியிலிருந்து ஒரு சொட்டு விழிநீர் வெளியேறி தரையில் விழ, அவனுக்கே தன்னை நினைத்து ஆச்சரியம்தான்.


லியோவின் நிலை இவ்வாறு இருக்க, இங்கு கடற்கரைக்கு அருகே காத்திருந்த யாழ்மொழியைத் தேடி வந்த வில்லியம் அவளிடம் ஒரு கடிதத்தை நீட்ட, அதை ஆர்வமாக வாங்கிப் படித்தாள் அவள்.


"என்னைப் பற்றி தெரிந்தே அதிகாரி என் மொழியில் கடிதத்தை அனுப்பியிருக்கிறார். உண்மையிலேயே என்னால் நடப்பதை நம்பவே முடியவில்லை, இந்த உதவியை செய்ததற்கு நான் தங்களுக்கு என்ன பரிகாரம் செய்ய போகிறேனோ தெரியவில்லை" என்று சந்தோஷத்தில் அவள் படபடவென பேசிக்கொண்டே போக, வில்லியமோ ஏளனப் புன்னகையோடு அவளைப் பார்த்தான்.


"யூ நோ வாட், உன்னோட அதிகாரி சீக்கிரமா இங்க வர போறதா எங்க ஆளுங்க பேசிக்குறாங்க. ஆனா..." என்று வில்லியம் நிறுத்த, "ஆனால் என்ன? வருவதில் ஏதாவது சிக்கலா என்ன" என்று பதற்றமாகக் கேட்டாள் அவள்.


"அவர் வரதுல எந்த சிக்கலும் இல்ல, நீதான் பிரச்சனையே" என்ற வில்லியமின் வார்த்தைகளில் பெண்ணவளுக்கோ அத்தனை அதிர்ச்சி.


"நானா?" என்ற கேள்வியோடு அவள் சிலையாகி நிற்க, "ஆமா, நீ காதலிக்கிறத அரசர் ஏத்துக்குவாருன்னு நினைக்கிறியா? கண்டிப்பா இந்த மக்களே ஏத்துக்க மாட்டாங்க. பட் யூ டோன்ட் வொர்ரி, உனக்காக நாங்க இருக்கோம். அவர் வந்ததுமே நீ எங்க அரண்மனைக்கு வந்துரு. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி எங்க நாட்டுக்கு போய் பாதுகாப்பா இருக்கலாம். வாட் டூ யூ சே?" என்று ஏதேதோ பேசிச் சென்றான் அவன்.


யாழ்மொழியோ தீவிரமாக யோசித்தவள், "முதலில் அதிகாரி வரட்டும், அதற்குப் பிறகு நடப்பதை பார்த்துக் கொள்ளலாம்" என்று முடிவாக சொன்னவள், "இது நான் எழுதிய கடிதம், இதை அவருக்கு கொடுத்து விட முடியுமா?" என்று ஆசையோடு நீட்ட, கோபத்தை அடக்கியவாறு அதை வாங்கிக்கொண்டான் அவன்.


யாழ்மொழியோ அந்த காமுகன் கொடுத்த கடிதத்தை உண்மையென நம்பியவாறு அதை தன்னோடு அணைத்துக்கொண்டு அரண்மனையை நோக்கிச் செல்ல, போகும் அவளைப் பார்த்தவாறு அவள் கொடுத்த கடிதத்தை கிழித்தெறிந்தான் வில்லியம்.


"அந்த லியோ இங்க வரதுக்குள்ள நான் நினைச்சத நடத்தியிருப்பேன்" என்று அவன் உள்ளுக்குள் நினைத்துக்கொள்ள, இங்கு தனதறையிலிருந்த யாழ்மொழியோ அந்த கடிதத்தை தான் ஆர்வமாக படித்துக்கொண்டிருந்தாள்.


வில்லியம் ஒருவரை வைத்து எழுதிய அந்த  பொய்யான கடிதத்தை தன்னவன் எழுதியது என நினைத்து அவள் ஆசையாக வாசித்துக்கொண்டிருக்க, அதை ராதா கவனிக்காமலில்லை.


தன் வேலைகளை செய்தவாறு அவள் யாழ்மொழியையே நோட்டமிட்டுக்கொண்டிருக்க, அடுத்தநாள் அறையிலிருந்து தோழி வெளியேறியதுமே அவளுடைய பொருட்களிலிருந்து அதை தேடி எடுத்திருந்தாள் ராதா.


அங்கிருந்த மற்ற பணிப்பெண்களும் இதை கவனிக்க, அதில் எழுதியிருந்ததை வாசித்தவள் மற்றவர்களுக்கும் வேண்டுமென்றே அந்த கடிதத்தை காண்பிக்க, சிலர் கண்டுகொள்ளாதது போல் இருந்தாலும் ஒருசிலர் கோபத்திலும் ஒருவித பொறாமையிலும்  வெடிக்க ஆரம்பித்தனர்.


நடப்பது எதையும் அறியாமல் இந்திராவின் வேலைகளை முடித்துவிட்டு அப்போதுதான் உணவுக்காக யாழ்மொழி வந்தமர, அவளை ஏளனமாக பார்ப்பதும் தங்களுக்குள் கிசுகிசுப்பதுமாக இருந்தனர் மற்ற பணிப்பெண்கள்.


ஆரம்பத்தில் தனக்குதான் என்பதை உணராமல் தட்டில் முகத்தைப் புதைத்தவாறு சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் பின் குத்தல் பேச்சுகள் காதில் விழவும் சடாரென நிமிர்ந்துப் பார்த்தாள்.


"ஆரம்பத்தில் அந்த ஆங்கிலேய உயரதிகாரியை வர்ணிக்கும் போது பொங்கி எழுந்தவளே இப்போது அவரிடம் மயங்கிக் கிடப்பது ஆச்சரியம்தான், அப்படி என்ன வசியம் செய்தானோ?" என்று ஒருத்தி கூற, "அவளுக்கு வசியம், நம் தேசத்துக்கு சாபம். எத்தனை பெரிய துரோகத்தை செய்துவிட்டு வெட்கமே இல்லாமல் சாப்பிடுகிறாளே! ச்சீ... மானங்கெட்ட மனிதர்கள்" என்றாள் இன்னொருத்தி.


"இவள் மயங்கியதில் எனக்கு ஆச்சரியமில்லை. அவன் இவளிடம் மயங்கியதில்தான் ஆச்சரியமே! எதைக் காட்டி மயக்கினாளோ, எதைக் கொடுத்து தன் பக்கம் இழுத்தாளோ? இவர்களை எல்லாம் தேசத்தை விட்டே ஒதுக்க வேண்டும்" என்று ஒருத்தி வன்மத்தோடு யாழ்மொழியின் விழிகளையே பார்த்த வண்ணம் சொல்ல, அவளோ இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.


ராதாவோ உள்ளுக்குள் சிரித்தவாறு நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு ஒரு ஓரமாக நின்றிருக்க,  விழிகள் கலங்க கீழுதட்டைக் கடித்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியவள் அவமானத்தில் தலையை குனிந்துக்கொண்டாள்.


ஆனால் வார்த்தைகளால் அவளை நோகடித்தது போதாது போலும்! 


வேகமாக அவளிடம் வந்த பணிப்பெண்களில் ஒருத்தி யாழ்மொழி சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டை இழுத்து வீசி எறிய, "என்ன காரியம் செய்கிறீர்கள்?" என்று கத்தியபடி எழுந்து நின்றவள் மொத்தப் பேரின் தன்னை நோக்கிய பார்வையில் கூனிக் குறுகிப் போய் நின்றாள்.


அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாக அங்கிருந்து வெளியேறியவள் சுவற்றுக்கு பின்னே நின்று தன்னிலையை நினைத்து கதறியழ, அவளை தேற்றக் கூட எவருமில்லை.


"இதற்குப் பிறகு என்னால் எப்படி இங்கு நிம்மதியாக இருக்க முடியும்? இல்லை.. இல்லை என்னால் முடியாது. நான் வெளியேற வேண்டும். என்.. என்னை அழைத்துச் செல்ல எப்போது வருவீர்கள் அதிகாரி? எப்போது வருவீர்கள்?" 


என்று அப்படியே தரையில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு அவள் கதறியழ, அன்றிரவு அப்போதுதான் உறக்கம் தழுவியவளாக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுக்கொண்டிருந்தாள் இந்திரா.


திடீரென ஒரு நிழல் அவளை சுற்றி நடமாட, உள்ளுக்குள் எழுந்த எச்சரிக்கை உணர்வில் பட்டென்று விழிகளைத் திறந்தவள் தன்னை நெருங்கியிருந்த உருவத்தைப் பார்த்து அதிர்ந்து விழித்தாள்.


*************

விழி தீயிலொரு தவம் 23

https://agnitamilnovels.blogspot.com/2025/10/23.html



தென்றல் தீண்டும் தாரகை.. எங்களோட நெக்ஸ்ட் டிரெக்ட் புக் இப்போ கிண்டல்ல Available ஆ இருக்கு.. 🙌 இந்த book பத்தி சொல்லனும்னா,

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் ஆரன் பெரும் இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்க, அவனை சந்திக்கக் கூடாத இடத்தில் காண்கிறாள் கதாநாயகி ஐரா ஸ்மிரித்தி.

காலம் அவனோடு அவளை நெருக்கமாக்க, இவனோ வேறு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறான். ஒரு முக்கோண காதல் ஆரம்பமாக, அடுத்து அடுத்து என்று இதயங்கள் நொறுங்க, பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளோடு நகரும் இக்கதைக்களம்.

இத்தனையும் தாண்டி துரோகமும் தலை தூக்க, அதையும் ஏற்று இணையுமா இவர்களின் காதல்?

Happy reading 😍 

IN link 👇

https://www.amazon.in/dp/B0FVF3NGM2


USA link 👇

https://www.amazon.com/dp/B0FVF3NGM2

Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚