மையவிழிப் பார்வை 21




அந்த இடமே இரத்தத்தில் நனைந்திருக்க, வலியில் கதறி கதறியே அரை மயக்கத்திற்கு செல்ல ஆரம்பித்தாள் வைஷ்ணவி.


"இந்த பேஸ்மென்ட்ட பத்தி நான் ஒன்னு சொல்லவா? நீ என்ன கத்தினாலும் கதறினாலும் வெளியில எந்த சத்தமும் கேக்காது. யூ நோ வாட், இதுக்கு பின்னாடி ஒரு கதை கூட இருக்கு..." என்றுக்கொண்டே மீண்டும் அவளின் அருகே வந்து அமர்ந்து அவளுடைய கரத்தை தன் கரத்தின் மீது வைத்து அதை தடவி  விட்டான்.


அவனின் ஒவ்வொரு செய்கையிலும் இவளுக்குதான் அடிவயிறு கலங்கியது. ஆனால், எதுவும் செய்ய முடியாத நிலை அவளுக்கு.


"அந்த காலத்துல என் அப்பாவோட ஃப்ரென்ட் சில கேஸ்ஸோட குற்றவாளிங்கள இங்க வச்சு தான் டோர்ச்சர் பண்ணி விசாரிப்பாராம், அதுக்கு எங்க அப்பாவும் சப்போர்ட் வைஷு. அதனாலதான் இந்த இடத்தை இப்படி அமைச்சிருக்காங்க. அவங்க பண்ணது நமக்கு யூஸ் ஆகுதுல்ல" என்று சொல்லியவாறு பற்களைக் கடித்த அபிமன்யு, அவளை கையை முறுக்கி விட, அலறிவிட்டாள் அவள்.


"அய்யோ அம்மா வலிக்குது... ஆஆ..." என்று அவள் வலியில் துடிக்க, அங்கிருந்த கூரிய முனையுடைய கத்தியை எடுத்தவன் அவளுடைய கரத்தை இருக்கையின் பிடியில் வைத்து நடுவிலேயே கத்தியை இறக்கினான்.


அந்த உயிர் போகும் வலியில் வைஷ்ணவி மரண விளிம்பிற்கே சென்று வர, "என்னை முழுசா கொன்னுரு ப்ளீஸ்! என்னால இந்த வலிய தாங்க முடியல, ஆஆ... என்னை கொன்னுரு!" என்று அவளாகவே வலியைத் தாங்க முடியாமல் வார்த்தைகளை உதிர்க்க, அபியின் விழிகள் மின்னின.


"அய்யோ நிஜமாவா! நீ சொல்லி நான் எப்படி பண்ணாம இருப்பேன் வைஷும்மா? ஆனா... அவங்கள மாதிரி உன்னை நான் கொல்லும் போது ரொம்ப கஷ்டப்படுத்த மாட்டேன், ஸ்மூத்தா வலிக்காத மாதிரி... அப்படின்னு சொல்ல முடியாது கொஞ்சோண்டு வலிக்குற மாதிரி உன் சாவ நான் அமைச்சு தரேன். வாட் டூ யூ சே?" என்று அவன் கேட்ட விதத்தில் சர்வமும் அடங்கியது அவளுக்கு.


அவளோ பயத்தோடு அவனையே பார்த்திருக்க, சரியாக கெஸ்ட் ஹவுஸிற்கு பத்தடி தள்ளியே வண்டியை நிறுத்தினான் ஹர்ஷா.


"வாட் ஹேப்பன்ட் ஹர்ஷா?" என்று ப்ரணவ் புரியாமல் கேட்க, "இங்கேயே நிறுத்திட்டு பின் வாசல் வழியா உள்ள போகலாம் ப்ரணவ், நாங்க வரது அவனுக்கு தெரியக் கூடாது. மே பீ சிசிடீவி கேமரா கூட இருக்க வாய்ப்பிருக்கு. அதனாலதான் சொல்றேன்" என்று ஹர்ஷா சொன்னதும், இருவரும் அங்கேயே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர்.


"இந்த இடத்துக்கு நான் அதிகமா வந்தது கிடையாது. அபிதான் காலேஜ் படிக்கும் போதிலிருந்து அடிக்கடி வருவான், அவனுக்கு தனிமையில இருக்குறது ரொம்ப பிடிக்கும்னு சொல்வான். எப்போவும் இந்த வீடு பூட்டியேதான் இருக்கும், இவ்வளவு ப்ளான் பண்ணவன் இந்த விஷயத்தை மிஸ் பண்ணிட்டான்" என்று சொல்லிக்கொண்டே சுவரேறி குதித்தவன் ப்ரணவை அழைத்துக்கொண்டு சமையலறையின் பின்வழியாக உள்ளே சென்றான்.


"ஹர்ஷா, அபிக்கு நாம வந்தது தெரிஞ்சிருக்குமா என்ன? என்ட், இந்த இடத்துல யாரும் இருக்குறதா எனக்கு தெரியல" என்று ஹஸ்கி குரலில் கேட்டுக்கொண்டே அவன் மெல்ல செல்ல, "வாய்ப்பில்லன்னு நினைக்கிறேன்" என்று புருவங்களை நெறித்தவாறு சொன்ன மற்றவன், அந்த தளத்தில் யாராவது இருக்கின்றார்களா என அலச ஆரம்பித்தான்.


சிறிய வெளிச்சத்தில் இருவரும் தேட ஆரம்பிக்க, அந்த தளத்திலோ யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. 


"ஹர்ஷா, இங்க யாருமே இல்லை. ச்சே!" என்று எரிச்சலாக முணங்கியவாறு ப்ரணவ் எதேர்ச்சையாக திரும்ப, அவனின் கரம் பட்டு அவனின் பாதி உயரத்திற்கு வைக்கப்பட்டிருந்த பெரிய பூச்சாடி விழப் போக, உடனே அதைப் பிடித்துக்கொண்டான் மற்றவன்.


"ஊஃப்ப்..." என்று இருவரும் ஒரு பெருமூச்சை இழுத்து விட, இவர்களின் துரதிஷ்டவசத்திற்கு பூச்சாடியில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த சிறிய இரு கற்கள் தரையில் விழுந்து சத்தத்தை எழுப்பிவிட, அது சரியாக அபியின் காதிலும் விழுந்தது.


மேல் தளத்திலிருந்த ஹர்ஷாவோ எரிச்சலாக விழிகளை அழுந்த மூடித் திறக்க, "ஓ காட்! போச்சு, அவனுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். இப்போ என்ன பண்றது?" என்ற ப்ரணவ் சட்டென என்ன நினைத்தானோ!


உடனே தன் அலைப்பேசியை எடுத்து ஒரு எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப, அதை புரியாமல் பார்த்தான் ஹர்ஷா.


"அபியால இனி வெளியில போக முடியாது" என்றுவிட்டு ப்ரணவ் மெல்ல மாடிக்கு செல்ல, அலட்சியமாக தோளைக் குலுக்கிவிட்டு அவன் பின்னாலேயே சென்றவன் மாடியிலுள்ள அத்தனை அறைகளையும் அலச ஆரம்பித்தான். 


இங்கு மேல் தளத்தில் சத்தம் கேட்டதும் உடனே மேல் நோக்கிப் பார்த்த அபிமன்யுவுக்கு ஏதோ ஒன்று தவறாகத் தோன்ற, வைஷ்ணவியின் முன்னே குறுக்கும் நெடுக்குமாக நகத்தை கடித்தவாறு நடக்க ஆரம்பித்தான்.


இவளோ வலியில் அழுதுக்கொண்டிருக்க, "வாய மூடுடீ! சத்தம் போடாத, ஷட் அப் யூ ப்ளடி ****..." என்று ஆக்ரோஷமாகக் கத்திக்கொண்டு அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் அபிமன்யு.


"சத்தம் வெளியில வந்துச்சுன்னா துடிக்க துடிக்க கொல்லுவேன், சொல்லிட்டேன்" என்று விழிகள் சிவக்க அவன் கத்தவும், வலியை முடிந்தளவுக்கு பொறுத்துக்கொண்டு அழுகையை அடக்கிக்கொண்டாள் அவள். 


"இங்க யாரோ இருக்காங்க, யார் அது? ஓ ஷீட்! இந்த இடத்தை கண்டுபிடிச்சிட்டாங்க. இல்லை, விட மாட்டேன், நான் விட மாட்டேன்" என்று அவன் பைத்தியம் பிடித்தவன் போல் கத்த ஆரம்பிக்க, திடீரென ஏதோ ஒரு யோசனையில் வேகமாக சென்று அடைத்திருந்த ஜன்னலின் கண்ணாடிக் கதவை லேசாகத் திறந்துப் பார்த்தான்.


ப்ரணவின் ஏற்பாட்டில் அந்த சுற்று வட்டாரத்திலிருந்த காவல் அதிகாரிகள் இந்த வீட்டை சுற்றி பாதுகாப்புக்காக நிற்க, இவனுக்கோ சர்வமும் அடங்கிவிட்டது.


அதேசமயம் மொத்த இடத்தை அலசியும் ஒரு சிறு துருப்பு கூட இருவருக்கும் கிடைக்கவில்லை.


"ஹர்ஷா, ஒருவேள... ஒருவேள அபி வைஷுவ கொன்னுட்டானா, அவ இல்லையா? அதான் இங்க யாருமே இல்லையே, எனக்.. எனக்கு பைத்தியம் பிடிக்குது" என்று அவன் கோபத்தில் கத்திக்கொண்டு அங்கிருந்த கண்ணாடியை ஓங்கிக் குத்தப் போக, அவனை பின்னாலிருந்து பிடித்திழுத்த கட்டுப்படுத்த முயற்சித்தான் மற்றவன்.


"காம் டவுன் ப்ரணவ், சத்தம் போடாதீங்க, காம் டவுன்! இந்த சமயத்துல வேகத்தை விட விவேகம்தான் ரொம்ப முக்கியம். நம்ம கோபமே எல்லாத்தையும் இழக்க வச்சிரும். ப்ளீஸ்!" என்று ஹர்ஷா அவனுக்கு புரிய வைக்க முயல, மற்றவனோ மெல்ல அமைதியடைந்தான்.


"சுத்தி எல்லா இடமும் தேடியாச்சு, எங்கேயும் இல்லை. இப்போ என்ன பண்றது? நம்மளோட சத்தத்தை தவிர சுத்தி எல்லாமே அமைதியா இருக்கு. ஒரு பொருள் கூட அசையாம இருக்கு. ச்சே! அபி இங்க இல்லன்னு நினைக்கிறேன்" என்று ப்ரணவ் இடுப்பில் கைக்குற்றி மூச்சு வாங்கியவாறு சொல்ல, அப்போதுதான் அந்த ஒரு விடயம் ஞாபகத்திற்கு  வந்தது ஹர்ஷாவுக்கு.


அதிர்ந்த விழிகளோடு சில கணங்கள் அப்படியே  நின்று யோசித்தவன், "ஐ கொட் இட் ப்ரணவ்! இங்க இன்னொரு இடமும் இருக்கு" என்று அழுத்தமாக சொல்ல, ப்ரணவுடைய விழிகளும் அதிர்ச்சியில் விரிந்தன.


"நிஜமாதான் சொல்றீங்களா, அது.. அது எங்க இருக்கு?" என்று அவன் அதிர்ச்சி குறையாமல் கேட்க, "பேஸ்மென்ட்" என்றுவிட்டு உடனே மாடியிலிருந்து கீழே இறங்கி ஒரு அறைக் கதவின் முன் நின்றான் மற்றவன்.


"பேஸ்மென்ட்டுன்னு சொல்லிட்டு இந்த ரூம் முன்னாடி என்ன பண்றீங்க?" என்று ப்ரணவ் புரியாமல் கேட்க, "இதை பத்தி தெரிஞ்சுக்கணும்னா இதுக்கு பின்னாடி இருக்குற ஸ்டோரியும் உங்களுக்கு தெரியணும் ப்ரணவ், அப்போ அக்யூஸ்ட்ட டோர்ச்சர் பண்ணி உண்மைய வெளியில கொண்டு வர இந்த பேஸ்மென்ட்ட யூஸ் பண்ணியிருக்காங்க. யாருக்கும் தெரியாம இருக்கணுங்குறதுக்காக பேஸ்மென்ட்குள்ள போறதுக்கான வழிய வெளியில வைக்காம வீட்டுக்குள்ளயே டிஸைன் பண்ணியிருக்காங்க" என்றான் ஹர்ஷா தெளிவாக.


"இதை நீங்க யார்கிட்ட சொல்றீங்கன்னு தெரியுதா, ஒரு போலீஸ்காரன்கிட்ட" என்று ப்ரணவ் ஒற்றைப் புருவத்தைத் தூக்கிக்கொண்டு சொல்ல, "பண்ணதே ஒரு போலீஸ்காரரும் க்ரிம்னல் லாயரான எங்க அப்பாவும்தான்" என்று அலட்சியமாக தோளைக் குலுக்கிய ஹர்ஷா அந்த கதவைத் திறந்து உள்ளே சென்றான்.


உள்ளே நுழைந்ததுமே கீழே செல்வதற்கான படிக்கட்டுகள் காணப்பட, தன் பிஸ்டலை லோட் செய்து தயாராக வைத்துக்கொண்டவன், மெல்ல பதுங்கிப் பதுங்கி கீழே இறங்க, கைக்காப்பை ஏற்றிவிட்டவாறு அவனோடு இறங்கினான் ஹர்ஷா.


பேஸ்மென்ட் கும்மிருட்டாக இருக்க, கைகளால் துலாவி அவன் விளக்கை ஒளிரவிட, அங்கோ யாருமில்லை. 


"என்ன ஹர்ஷா இது, இங்க யாருமே இல்லை..." என்றுக்கொண்டே அந்த இடத்தை ஆராய்ந்த ப்ரணவிற்கு அப்போதுதான் நிலத்திலிருந்த இரத்தக்கறையையும் ஆயுதங்களையும் பார்த்து தெறித்து விடுமளவிற்கு விழிகள் விரிந்தன.


"ஹர்ஷா..." என்று அவன் அதிர்ச்சியோடு கத்த, ப்ரணவோடு சேர்ந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஹர்ஷாவுக்கும் அதே திகைப்புதான்.


ஒற்றைக் காலை மடக்கி தரையில் அமர்ந்தவன், அந்த இரத்தக்கறையை இரு விரலால் தொட்டுப் பார்த்து, "இதை பார்க்கும் போது இப்போ தான் ஏதோ நடந்த மாதிரி இருக்கு. ரொம்ப நாளோ இல்லன்னா ரொம்ப டைம் ஆகியிருந்தாலோ இந்நேரம் இரத்தம் உறைஞ்சிருக்கும். ஆனா, இது அப்படி இல்லை" என்று புருவ முடிச்சுகளோடு சொல்ல, "ஆஆ..." என்ற ப்ரணவின் அலறல் சத்தம் திடீரென அந்த இடத்தையே அதிர வைத்தது.


ஹர்ஷாவோ வேகமாக எழுந்துப் பார்க்க, அவன் சுதாகரிப்பதற்குள் அவனுடைய முகத்தில் இருப்பு ராடால் அடித்திருந்தான் அபிமன்யு.


பின்னந்தலையில் விழுந்த அடியால் சுயநினைவை இழந்து ப்ரணவ் அப்படியே விழுந்து விட, "ஸ்ஸ்... ஆஆஆ..." என்று வலியில் கத்திக்கொண்டு தன் முன்னே நின்றிருந்தவனைப் பார்த்தான் ஹர்ஷா.


கையில் இரும்பு ராடோடு மூச்சு வாங்கியவாறு அபிமன்யு நின்றிருக்க, "அபி... டேய், ஏன்டா ஏன் இந்த மாதிரி பண்ண?" என்று நெற்றி நரம்புகள் புடைக்க ஹர்ஷா கேட்க, அவனோ கேலியாக இதழை வைத்தான்.


"அண்ணா, நீ ஏன் இந்த விஷயத்துல தலையிட்ட, நீ ஏன் இதுக்குள்ள வந்த? எனக்கு உன்னை காயப்படுத்த இஷ்டமே இல்லை, ஏன் அண்ணா... நீயும் என்னை புரிஞ்சுக்க மாட்டியா?" என்றுக்கொண்டு அவன் மீண்டும் சகோதரனின் தோளில் அடிக்க, அவனால் அந்த அடியின் வலியை தாங்வே முடியவில்லை.


"ஆஆ..." என்று கத்திக்கொண்டு தரையில் முட்டிப்போட்டு அமர்ந்தவன், "நீ பண்றது தப்பு அபி, வைஷ்ணவிய விட்டுரு! அவ எங்க?" என்று விழிகள் சிவக்க பற்களைக் கடித்தவாறுக் கேட்க, "வைஷ்ணவியா... அய்யோ! அவ கதை முடிஞ்சு போச்சு. ஷீ இஸ் நோ மோர் அண்ணா" என்று அபி சொன்னதும், விக்கித்துப் போய் விட்டான் மற்றவன்.


"எ.. என்ன? என்ன சொல்லுற நீ" என்று அதிர்ச்சி குறையாத குரலில் அவன் கேட்க, "அய்யோ பயந்துட்டீங்களா! சும்மா சொன்னேன், உயிரோடதான் இருக்கா, ஆனா... இன்னும் கொஞ்ச நேரம்தான். அதுக்கப்பறம் அவள காப்பாத்த முடியாது. அவளுக்கு நான் போட்டிருக்குற இன்ஜெக்ஷன் அப்படி. இதுல என் மேல எல்லாம் தப்பு இல்லண்ணா, அவளாதான் ரிக்வஸ்ட் பண்ணா ப்ராமிஸ்!" என்று பாவம் போல் முகத்தை வைத்த தன் சகோதரனை கொலை வெறியோடு பார்த்தான் ஹர்ஷா.


"சாரிண்ணா, நீ உயிரோட இருந்தா எனக்குதான் டிஸ்டர்ப். இதுக்கப்பறம் எந்த கொலையும் நடக்காதுன்னு சொன்னா நீங்க இரண்டு பேரும் என்ன என்னை விடவா போறீங்க ஹாஹாஹா... அதனால, செத்துருங்க. அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நான் உனக்கு அண்ணனா பொறந்துக்குறேன்" 


என்று சொல்லிக்கொண்டு அபி மீண்டும் இரும்பு ராடை அவனுடைய தலைக்கு குறி வைத்து தாக்கப் போக, அவனுடைய அடியிலிருந்து லாவகமாக தப்பித்து அந்த இரும்பு ராடை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான் ஹர்ஷா.


அவனை அதிர்ச்சியாகப் பார்த்தவன் அவனுடைய பிடியிலிருந்து இரும்பு ராடை இழுக்க முயற்சிக்க, மற்றவனோ நெற்றி நரம்புகள் புடைக்க அவனைப் பார்த்தான்.


"ஐ அம் சாரி அபி" என்றுவிட்டு மொத்த பலத்தையும் சேர்த்து  அந்த இரும்பு ராடை இழுத்து அதனைக்கொண்டே அபியின் நெஞ்சில் ஓங்கி அடிக்க, "ஆஆ..." என்ற அலறலோடு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பின்னே நகர்ந்தான் அபிமன்யு.


உடனே ஹர்ஷா சுற்றி முற்றி வைஷ்ணவியைத் தேட, அங்கு ஒரு மூலையில் வாயிலிருந்து இரத்தம் சொட்ட துடித்துக்கொண்டிருந்தாள் அவள்.


"வைஷு... வைஷு..." என்று கத்திக்கொண்டு ஹர்ஷா அவளை நோக்கிச் செல்ல, தன் திட்டம் மொத்தத்தையும் கலைத்த கோபத்தோடு வேகமாக வந்த அபிமன்யு, பின்னாலிருந்து அவனைப் பாய்ந்துப் பிடித்துக்கொள்ள, அவனின் பிடியிலிருந்து திமிற ஆரம்பித்தான் அவன்.


"விடுடா! என்னை விடு அபி யூ ப்ளடி ****...." என்று ஹர்ஷா கத்திக்கொண்டு அவனிடமிருந்து விலக, அவனின் முகத்தில் ஓங்கிக் குத்தினான் அபிமன்யு.


"அனாவசியமா வந்து நீயா மாட்டிக்கிட்ட ஹர்ஷா அண்ணா, என்னை இங்கயிருந்து போக விடு, இரண்டு நாள்ல லண்டன் கெளம்பிருவேன். அதுக்கப்பறம் எந்த பிரச்சனையும் இல்லை. முடியாதுன்னா..." என்று அவன் மின்னல் வேகத்தில் அவனை நெருங்கி அடிக்க ஆரம்பிக்க, அவனின் தாக்குதலிலிருந்து தப்பித்து சட்டென அவனின் குரல்வளையைப் பிடித்து சுவற்றில் சாற்றினான் ஹர்ஷா.


"உன்னை விட்டுட்டா என் யுகனோட சாவுக்கு எவன்டா பதில் சொல்லுவா!" என்று ஆக்ரோஷத்தின் உச்சக்கட்டத்தில் பற்களைக் கடித்துக்கொண்டு அவன் கேட்க, அந்த நிலையிலும் சிரித்து அவனின் கோபத்தை தூண்டத்தான் செய்தான் அபி.


"ஓஹோ! அவனா... அவன் ஒரு சரியான கிறுக்கன்" என்று அபி சொல்லி முடிக்கவில்லை, குரல்வளையிலிருந்த தன் கரத்தில் அழுத்தத்தைக் கூட்டியவன், "ஹவ் டேர் யூ..." என்று கத்த, தன் பாக்கெட்டிலிருந்த கத்தியை எடுத்து ஹர்ஷாவின் கரத்தை பதம் பார்த்தான் மற்றவன்.


அவனின் குரல்வளையைப் பிடித்திருந்த தன் கரத்தை விட்ட ஹர்ஷா, கத்தி இறங்கிய கரத்தை பிடித்துக்கொண்டு அபியைப் பார்க்க, இருமியவாறு அவனைப் பார்த்தவனின் விழிகளுக்கு அப்போதுதான் கீழே விழுந்திருந்த ப்ரணவின் பிஸ்டல் கண்ணில் பட்டது.


அதைப் பார்த்தவன் சகோதரனைப் பார்த்தவாறு அதை வேகமாக எடுக்கப் போக, "நோ..." என்று அடித்தொண்டையிலிருந்து கத்தினான் ஹர்ஷா.


************

Final Episode >>>

https://agnitamilnovels.blogspot.com/2025/07/final.html


தஷுரி, ரதியின் ரணதீரன் கதைகள் Kobo writing life ல இருக்கு... கிட்டத்தட்ட அமேசன் மாதிரி தான்.. Kobo plus subscription பண்ணா மன்த்லி ஃப்ரீயா எல்லா கதைகளும் ரீட் பண்ணலாம்... 


IN link 👇

https://www.kobo.com/in/en/search?query=sheha+zaki&ac=1&acp=sheha+zaki&ac.author=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta


USA link 👇

https://www.kobo.com/ww/en/search?query=sheha+zaki&ac=1&acp=sheha+zaki&ac.author=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta






Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚