மையவிழிப் பார்வை Final

 



ப்ரணவின் பிஸ்டல் தரையில் கிடக்க, அதைப் கண்டுகொண்ட அபி வேகமாக அதை எடுக்கப் போக, ஹர்ஷத்தோ வேகமாக அவனை நோக்கி ஓடி வந்தான்.


அபிமன்யோ விழிகள் மின்ன அந்த பிஸ்டலை எடுக்கப் போக, சரியாக மின்னல் வேகத்தில் அதையெடுத்த ப்ரணவ், அவனை நோக்கி குறிவைக்க, அவனை கொஞ்சமும் எதிர்பார்க்காதவன் ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டான்.


"ஏன்டா டேய், முதுகுக்கு பின்னாடி அடிக்குற, இனி முடிஞ்சா தப்பிச்சிக்கோ!" என்று அவன் மிரட்டலாகச் சொல்ல, "யூ ஹேவ் நோ சாய்ஸ் அபி" என்று தன் சகோதரனின் முன்னால் நெற்றி நரம்புகள் புடைக்க நின்றான் ஹர்ஷா.


அபியோ இருவரையும் மாறி மாறி விழிகளில் கோபம் மிதக்கப் பார்க்க, "ஹர்ஷா..." என்றழைத்து அவனை நோக்கி பிஸ்டலை தூக்கிப் போட்ட ப்ரணவ், வேகமாக வைஷ்ணவியை நோக்கித் தான் ஓடினான்.


ஹர்ஷாவோ  பிஸ்டலை வேகமாகப் பிடித்து தன் சகோதரனை நோக்கி குறி வைக்க, கேலியாக இதழை வளைத்துச் சிரித்தான் அபிமன்யு.


"உன்னால என்னை ஷூட் பண்ண முடியாதுண்ணா" என்று அவன் சொல்ல, விழிகள் கலங்க தன் சகோதரனைப் பார்த்தவனுக்கு ஏனோ தன்னை மீறி பிஸ்டலைப் பிடித்திருந்த கரங்கள் நடுங்கின.


"இல்லை. என்னால முடியும், நீ தப்பு பண்ணியிருக்க. அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுர மாட்டேன். பட்... பட் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க அபி, ஏன்... ஏன்டா இப்படி பண்ண? ஒரு வார்த்தை அப்பாக்கிட்ட சொல்லியிருந்தா லீகல்லி அவங்கள ஏதாச்சும்..." என்று கேட்டவனின் வார்த்தைகள் தொண்டையை அடைக்க, அபியின் விழிகளோ வலி நிறைந்த பார்வையோடு விரக்திப் புன்னகைப் புரிந்தது.


"ஏன் அண்ணா, நீயும் என்னை புரிஞ்சுக்கல? என்னோட மீரா... கொஞ்சம் கூட பாவம் பார்க்காம அவள போய்... ச்சே! அவள நான் இழந்துட்டேன், உனக்கு புரியுதா இல்லையா? ஒருவேள என் மீரா இடத்துல உன் தியா இருந்தா, நீ இப்படிதான் சட்டம் காப்பாத்தும்னு நம்பிட்டு இருந்திருப்பியா?" என்று அவன் அழுத்தமாகக் கேட்க, ஹர்ஷாவால் அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.


"எனக்கு புரியுது, ஆனா... நீ வைஷ்ணவிய கொல்லணும்னு நினைக்கிறது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. என்ட், யுகன்... அவன் உனக்கு என்னடா பண்ணான், ஏன்டா அவன கொன்ன? எனக்காக... எனக்காக செத்திருக்கான். நீ பண்ண கொலைக்காக நான் ஜெயில்ல இருக்கும் போது கூடப் பொறந்தவன்னு உனக்கே இல்லாத அக்கறை அவனுக்கு இருந்திருக்கு. அவனோட சாவுக்கு என்னடா பதில் சொல்லுவ?" 


என்று கோபம் தெறிக்க ஹர்ஷா தன் ஆத்திரத்தைக் கொட்ட, அபியோ எதுவுமே பேசாமல் தன் சகோதரனையே வெறித்துப் பார்த்திருந்தான்.


"எல்லாத்தையும் பண்ணிட்டு, இப்போ புரிஞ்சுக்க சொல்றியா? என்னை இப்படி ஒரு நிலைமையில கொண்டு வந்து நிறுத்திட்டியேடா, யூ ப்ளடி **** ஒழுங்கா நீயே சரண்டராகிடு, இல்லன்னா..." என்று கெட்ட வார்த்தையால் திட்டி அவன் தன் சகோதரனை மிரட்ட, கேலியாக இதழை வளைத்து சிரித்தான் அபிமன்யு.


"சரண்டரா... எதுக்கு? மீராவுக்காகத் தான் எல்லாமே, எனக்கு இந்த சட்டம் மேல எல்லாம் நம்பிக்கை இல்லை, மீராவோட சாவுக்கு சம்பந்தப்பட்ட எல்லாரும் சாகணும். அந்த வைஷ்ணவியும்தான்... உன்னால முடிஞ்சத பார்த்துக்க" என்று அபி விழிகள் சிவக்க சொல்லி அங்கு துடித்துக்கொண்டிருந்த வைஷ்ணவியை விழிகள் மின்ன பார்க்க, ப்ரணவோ விடாமல் அவளுடைய கன்னத்தில் தட்டி அவளை எழுப்ப முயற்சி செய்துக்கொண்டிருந்தான்.


"ரொம்ப பவர்ஃபுல்லான இன்ஜெக்ஷன், வெறும் பத்து நிமிஷம்தான். அதுக்குள்ள கொண்டு போனா காப்பாத்திடலாம். பெஸ்ட் ஆஃப் லக்!" என்று சொல்லி பேய் போல் அபி சிரிக்க, தன் சகோதரனை அருவருப்பாக ஒரு பார்வைப் பார்த்தான் அவன்.


"வைஷு... வைஷு எழுந்துருடீ! ப்ளீஸ்... ஐ லவ் யூடீ, என்னை விட்டு போக முடிவு பண்ணேன்னா நானே உன்னை கொன்னுருவேன் இடியட்!" என்று அழுதுக்கொண்டே அவளை எழுப்ப முயற்சி செய்த ப்ரணவ், உடனே வெளியில் நின்றிருக்கும் தன் ஆட்களுக்கு அழைக்க முயற்சி செய்ய, அதுவோ தோல்வியில் முடிந்தது.


"என்னோட ஒரு ஆர்டர் அவங்களுக்கு போனா கூட உள்ள வந்துடுவாங்க. ஆனா... ஆனா ஏன் இங்க என்னால யாரையும் கான்டேக்ட் பண்ண முடியல" என்று ப்ரணவ் தன்னவளை மடியில் கிடத்தி இயலாமையில் கத்த, "இந்த பேஸ்மென்ட்ல மட்டும் சிக்னல் இருக்காது ப்ரணவ், அப்பா சொல்லியிருக்காரு" என்று அதிர்ச்சியோடு சொன்ன ஹர்ஷா, "உடனே அவள இங்கயிருந்து எடுத்துட்டு போங்க, இவன நான் பார்த்துக்குறேன்" என்றான் அழுத்தமாக.


ப்ரணவும் வைஷ்ணவியை கரங்களில் ஏந்திக்கொண்டவன், வெளியே செல்வதற்கான படிக்கட்டுகளை நோக்கி ஓடப் போக, அவர்களை நோக்கி ஒரு அடி முன்னே வைத்த அபியை நோக்கி பிஸ்டலை இறுக்கிப் பிடித்தான் ஹர்ஷா.


"ஸ்டாப் அபி, டோன்ட் மூவ்! இதுக்கு மேல உனக்கு வாய்ப்பே இல்லை" என்று தீப்பார்வையோடு சொன்னவனின் வார்த்தைகளில் அத்தனை அழுத்தம்.


ஹர்ஷாவை நோக்கி ஒவ்வொரு அடியாக வைத்து முன்னே வந்த அபி, "உன்னால என்னை கொல்ல முடியாது அண்ணா, அதான் நான் சொன்னேன்ல! நான் உன் தம்பி, உன்னால என்னை காயப்படுத்த முடியாது" என்று சொல்லிக்கொண்டே அவனை நெருங்க, அதிர்ந்த விழிகளோடு அவனைப் பார்த்திருந்த மற்றவனோ தன்னை மீறி பின்னால் நகர்ந்தான்.


"என்னை நெருங்காத அபி, ஐ வில் ஷுட் யூ" என்று ஹர்ஷா மீண்டும் உணர்வுகளின் தாக்கத்தில் சிக்கிக்கொண்டு கண்ணீர் மல்க சொல்ல, "உன்னால என்னைக்கும் என்னை காயப்படுத்த முடியாது அண்ணா, ஐ நோ..." என்ற அபி சகோதரனின் கரத்திலிருந்த பிஸ்டலை பறிக்கப் போக, சட்டென ட்ரிகரை அழுத்தினான் ஹர்ஷா.


அந்த புல்லட் அபியின் இடது பக்க நெஞ்சைத் துளைக்க, இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை. 


ஹர்ஷாவோ ஸ்தம்பித்துப் போய் நிற்க, தன் அண்ணனை விழிகளிலிருந்து விழிநீரோடு பார்த்தவன் அப்படியே தரையில் விழுந்து விட, "அபி..." என்ற ஹர்ஷாவின் கதறல் கேட்கவும், ப்ரணவின் உத்தரவுக்கேற்ப அவனுடைய அதிகாரிகள் அந்த இடத்திற்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது.


கையிலிருந்த பிஸ்டல் தரையில் விழ, தன் சகோதரனை மடியில் கிடத்தி கதற ஆரம்பித்துவிட்டான் அவன்.


என்னதான் கொலையாளியாக இருந்தாலும் உடன் பிறந்தவன் அல்லவா! 


"அபி... ஏன்டா, ஏன் இப்படி பண்ண? அய்யோ!" என்று ஹர்ஷா சகோதரனின் பிரிவு கொடுத்த வலியை தாங்க முடியாமல் அழ, தரையில் கிடந்த பிஸ்டலை கையிலெடுத்துக்கொண்டார் ஒரு அதிகாரி.


"ப்ரணவ் சாரோட ஆர்டர். இதுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது மிஸ்டர் ஹர்ஷா. என்ட், க்ரேட் ஜாப்" என்ற அதிகாரி தன் கைகளுக்குள் பிஸ்டலை வைத்துக்கொள்ள, அபியின் சடலத்தை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி மோட்சரிக்கு எடுத்துச் சென்றனர் அந்த அதிகாரிகள்.


அடுத்த சில நிமிடங்களில் அலைப்பேசியில் தகவலைக் கேட்ட மானவ் மற்றும் மஞ்சுளாவுக்கு வாழ்க்கையில் பெரிய இடியாய் வந்து விழுந்தது போலிருக்க, மகனைப் பற்றிய செய்தியையும் அவனின் இறப்பையும் தாங்க முடியாமல் சுயநினைவின்றி விழுந்துவிட்டார் மஞ்சுளா.


இங்கு வைத்தியசாலையில் ப்ரணவ் தகவல் சொன்னதுமே அடித்துப் பிடித்து ஓடி வந்தனர் ஆராதியாவும் லலிதாவும்.


வைஷ்ணவிக்கு தீவிர சிகிச்சை நடாத்தப்பட, கிட்டத்தட்ட மரண விளிம்பைத் தொட்டு வந்துவிட்டாள் அவள். அவளுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கேள்விப்பட்டதும்தான் இங்கு ப்ரணவிற்கு போன உயிரே திரும்பி வர, அவனின் முன் சென்று நின்றாள் ஆராதியா.


"ஹர்ஷாவ பார்க்கணும்" என்று அவள் சொன்னதும், தோழியை அழைத்துக்கொண்டே மோர்ச்சரிக்கு சென்றான் ப்ரணவ்.


ஆராதியாவைப் பார்த்த மறுகணம் தாயைப் பார்த்த குஞ்சு போல் ஓடிச் சென்று ஹர்ஷா தன்னவளை அணைத்துக்கொள்ள, அவனின் மனநிலை நன்றாகவே புரிந்தது அவளுக்கு. 


அவனை இறுக அணைத்துக்கொண்டு முதுகை நீவி விட்டவாறு, "ஐ கென் ஃபீல் யூவர் எமோஷன்ஸ், பட் நான் ஒன்னு மட்டும் சொல்றேன். யுகனோட சாவுக்கு இப்போ ஜஸ்டிஸ் கிடைச்சிருக்கு, உன்னை நினைச்சு ரொம்ப பெருமைப்படுறேன் ஹர்ஷா. ஐ லவ் யூ!" என்று ஆராதியா அழுதுக்கொண்டே உணர்ச்சி பூர்வமாக சொல்ல, அவனும் தன் மொத்த வலிகளையும் அவளிடமே கொட்டினான்.


பல கொலைகளை செய்த குற்றவாளி என்றதாலோ என்னவோ! அன்றே அபிமன்யுவுக்கான போஸ்மார்ட்டம் வேகமாக நடந்து முடிந்திருக்க, அடுத்தநாளே அவனுக்காக காரியங்கள் முடிந்திருந்தன.


மானவ்வுடைய விழிகளிலிருந்து விழிநீர் ஓட, தன் தந்தையின் கரத்தை ஆறுதலாகப் பற்றிக்கொண்டான் ஹர்ஷா.


"சாரி டாட்" என்று தழுதழுத்த குரலில் அவன் சொல்ல, அவரோ கண்ணீரைத் துடைத்தவாறு இல்லை எனும் விதமாக அழுத்தமாக தலையசைத்தார்.


"நீ சரியாதான் பண்ணியிருக்க, அபியோட நடவடிக்கைகள கவனிக்காம விட்டது என்னோட தப்பு. பேரன்ட்ஸ்ஸா ஒருபக்கம் நாங்க தோத்துப் போயிருந்தாலும் இன்னொரு பக்கம் உன்னை நினைச்சு சந்தோஷமா இருக்கு" என்று மானவ் சொல்லி அவனுடைய தலையை வாஞ்சையோடு வருடிவிட, "அம்மா..." என்று தயக்கமாக இழுத்தான் அவன்.


"சீக்கிரம் சரியாகிடுவா, எவ்ரிதிங் வில் பீ ஃபைன்" மனம் வேதனையில் துடித்தாலும் தன்னைத்தானே சமாளித்துக்கொண்டு பெரியவர் அங்கிருந்து நகர்ந்து விட, ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டான் ஹர்ஷா.


மூன்று நாட்கள் கழிந்திருக்க,


"சென்னையில் தொடர்ந்து நடந்த கொலைகளுக்கு காரணமான குற்றவாளியை போலீஸார் சுட்டுக் கொன்றிருக்க, கொலையாளி அபிமன்யு பிரபலமான வழக்கறிஞர் மானவ்வுடைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது"


என்ற செய்தி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க, கலங்கிய விழிகளோடு அதை ஹாஸ்பிடல் கட்டிலில் சாய்ந்தவாறு பார்த்திருந்தாள் வைஷ்ணவி.


கிட்டத்தட்ட அவள் முழுதாக குணமாகியிருக்க, நாளை டிஸ்சார்ஜ் செய்யவிருந்த நிலையில்,"உள்ள வரலாமா?" என்று கேட்டுக்கொண்டே  அவளின் அறைக்குள் நுழைந்தான் ப்ரணவ்.


அவனை சற்றும் எதிர்பார்க்காதவளாய் அதிர்ந்துப் பார்த்தவள் பின் தயக்கமாக முகத்தை திருப்பிக்கொண்டாள். அவளை ஹாஸ்பிடலில் கொண்டு வந்து அனுமதித்தவன்தான், மூன்று நாட்களுக்கு பின் இன்றுதான் வருகிறான்.


அதில் மென்மையாகப் புன்னகைத்தவன், அவளின் அருகே வந்தமர, "தேங்க்ஸ்!" என்று மெல்லிய குரலில் சொன்னாள் வைஷ்ணவி.


"இது நிஜமாவே வைஷ்ணவிதானா, வாய்ஸ் இவ்வளவு சாஃப்ட்டா இகுக்கு. எனிவேய், எதுக்கு இந்த தேங்க்ஸ், உன்ன காப்பாத்தினதுக்கா?" என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி அவன் கேட்கவும், "அது... அது வந்து... ஆமா" என்று அவளோ தயங்கியபடி சொன்னாள்.


ஏனோ ப்ரணவிற்கு அவள் தயங்கித் தயங்கி பேசும் விதத்தில் ஆச்சரியமாக இருந்தது.


"எதுக்கு இவ்வளவு தயக்கம்?" என்று அவன் புரியாமல் கேட்க, "அது... கட்டிக்கப் போறவருக்கு முன்னால தலை குனிஞ்சு இருக்கணும்னு எங்க அம்மா சொல்லி கொடுத்தாங்க அதான்..." என்று அவள் சொன்ன விதத்தில், அவனுக்கு பக்கென்று சிரிப்பு வர, அதை அடக்கிக்கொண்டு, "யாரு யாரை கட்டிக்கப்போறா?" என்று தெரியாதது போல் கேட்டான்.


விழிகளை நிமிர்த்தி குறும்புச் சிரிப்போடு அவனைப் பார்த்த வைஷ்ணவி, "நான் மயக்கத்துல இருக்கும் போது எல்லாத்தையும் கேட்டேன்" என்று சொல்லி சிவந்த முகத்தை மறைக்க தடுமாற, அவளை ரசித்துப் பார்த்தவாறு, "என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?" என சட்டென்று கேட்டுவிட்டான் ப்ரணவ்.


விழிகளை நேருக்கு நேராகப் பார்த்து அவன் கேட்ட விதத்தில் அதிர்ந்துப் போய் வாயைப் பிளந்தவாறு வைஷ்ணவி அமர்ந்திருக்க, மெல்ல அவளை நெருங்கி அவளிதழில் தன்னிதழைப் பதித்து சுவைத்தான் ஆடவன்.


ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவளுக்கு இந்த இதழ் முத்தம் மேலும் அதிர்ச்சியைக் கொடுக்க, அசையாது சிலை போல் அவள் அமர்ந்திருந்தாள் என்றால், விலகி அமர்ந்திருந்த ப்ரணவின் இதழ்கள் அவளின் அதிர்ந்த விழிகளையும் சிவந்த கன்னங்களையும் பார்த்து புன்னகைத்தன.


**********


இப்படியே நாட்கள் ஓடி நிலைமை ஓரளவுக்கு சரியாகி இருக்க, ஒரு வாரம் கழிந்த நிலையில்,


"வெல்டன் மிஸ் ஆராதியா, நிஜமாவே இந்த கேஸ்ஸ பத்தின டீடெயில்ஸ்ஸ ரொம்ப க்ளியரா எக்ஸ்ப்ளைன் பண்ணியிருக்கீங்க. பட், மானவ் சார் ரொம்ப நல்ல மனுஷன். இந்த கேஸ்ல இப்படி ஒரு என்டிங்க யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க"


என்று ஸ்கை நிறுவனத்தின் மேனேஜர் ஒரு பெருமூச்சோடு சொல்ல, யோசனையோடு தலையசைத்தவள், "தேங்க் யூ சோ மச் ஃபார் யூவர் காம்ப்ளிமென்ட் சார்" என்று அவரின் பாராட்டுக்கு சிறு புன்னகையோடு ஒரு நன்றியை சொல்லிவிட்டு ஆஃபீஸிலிருந்து வெளியேறினாள்.


விழிகளில் ஆர்வத்தோடு சுற்றி முற்றி தன்னவனை அவள் தேட, அடுத்தகணம் பார்த்த காட்சியில் பிபி உச்சகட்டத்திற்கு எகிற காதில் புகை வராத குறைதான்.


அங்கு ஹர்ஷா தன் புல்லட்டில் ஸ்டைலாக சாய்ந்தமர்ந்து ரியாவோடு சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, அவளும் குழைந்து இழித்துக்கொண்டு அவனை ஒட்டாத குறையாக நின்று பேசிக்கொண்டிருந்தாள்.


"இவன் எல்லாம் திருந்தவே மாட்டான்..." என்று பற்களைக் கடித்தவாறு தன்னவனை நோக்கி விறுவிறுவென சென்றவள், ரியாவின் பின்னே நின்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, "ஆரு..." என்று அவன் அழைத்ததும், ரியாவும் பின்னே திரும்பிப் பார்த்தாள்.


அவளோ ஹர்ஷாவை முறைத்துப் பார்க்க, "என்னாச்சு?" என்று புரியாமல் விழித்தான் அவன்.


ரியாவோ இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள், "ஓ காட் தியா! ஹர்ஷாவுக்கு அனுபவம் நல்லாவே பேசுது. நானே ஃப்ளர்ட் பண்ணாலும் பையன் உஷாரா இருக்கான். இப்போ பேசிக்கிட்டு இருந்தது கூட அவனோட நிவ் ஜாப் சம்பந்தமாதான். யூ கேர்ரி ஆன்" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட, ஆராதியாவோ ஹர்ஷாவை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.


"போட்டு கொடுத்துட்டியே பரட்ட!" என்ற ரீதியில் ரியாவை பார்த்தவன், "அது... ஜாப் கிடைச்சிருக்கு, ரியா ரெகமென்ட் பண்ணதுதான். உன்கிட்ட சர்ப்ரைஸ்ஸா சொல்லலாம்னு இருந்தேன். அதுக்குள்ள..." என்று சிறு தடுமாற்றத்தோடு சொல்லி முடிக்கும் முன்னே, அவனை தாவி அணைத்திருந்தாள் ஆராதியா.


"ஐ அம் சோ ஹேப்பி ஃபார் யூ ஹர்ஷா" என்று அவள் சந்தோஷத்தில் திளைக்க, அவளிடமிருந்து விலகி, "என்னையே சந்தேகப்பட்டல்ல, இதுக்கு தண்டனை இருக்கு" என்று பெருவிரலால் அவளிதழை வருடியபடி கிறக்கமான குரலில் சொன்னான் அவன்.


அவனின் நெருக்கத்திலும் வார்த்தைகளிலும் விழி விரித்து முகம் சிவக்க நின்றிருந்த ஆராதியா, சட்டென அவன் கரத்தைப் பற்றி அங்கிருந்த சுவற்றுக்கு பின் இழுத்துச் சென்று அவனுடைய இதழில் தன்னிதழை பதித்திருக்க, அவளுடைய கரங்கள் பிடிமானத்திற்காக அவனின் பின்னந்தலை முடியை கொத்தாக பற்றிக்கொண்டன.


அவளின் திடீர் முத்தத்தை ஆடவனே எதிர்பார்க்கவில்லை. 


முதலில் அதிர்ந்து நின்றவன் பின் அவளிடையை தன் வலிய கரங்களால் வளைத்து தன்னோடு நெருக்கியிருக்க, கணங்கள் கடந்துச் சென்றது அவர்களின் முத்தப் போராட்டம்.


நீண்ட முத்தத்தின் பின்னர் நெற்றியோடு நெற்றி முட்டி மூச்சு வாங்கியவாறு நின்றிருந்த இருவரின் விழிகளிலும் காதல் வழிந்தோட, அவர்களின் வாழ்வும் காதலால் நிரம்பி இருந்தது.



****சுபம்****


**********

அப்பாடா எப்படியோ கதை முடிஞ்சிருச்சு.. கூடிய சீக்கிரம் என்னோட அடுத்த நாவலான விழி தீயிலொரு தவம் கதைய தான் ஆரம்பிக்க போறேன்..

மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லிருங்க.. Keep supporting me 😘🙌


தஷுரி, ரதியின் ரணதீரன் கதைகள் Kobo writing life ல இருக்கு... கிட்டத்தட்ட அமேசன் மாதிரி தான்.. Kobo plus subscription பண்ணா மன்த்லி ஃப்ரீயா எல்லா கதைகளும் ரீட் பண்ணலாம்... 


IN link 👇

https://www.kobo.com/in/en/search?query=sheha+zaki&ac=1&acp=sheha+zaki&ac.author=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta


USA link 👇

https://www.kobo.com/ww/en/search?query=sheha+zaki&ac=1&acp=sheha+zaki&ac.author=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta







Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚