தஷுரி 27




ஏதேதோ யோசித்தவாறு விக்டர் தனதறையில் அமர்ந்திருக்க, கதவைத் தட்டி உள்ளே வந்த ரோய், "டியூட், ஏதோ முக்கியமான விஷயம் பத்தி பேசணும்னு சொன்ன. அதுவும் பிஸ்னஸ் மேட்டர்" என்று சொல்ல, விழிகளால் தன் எதிரே அமரும் படி சொன்னான் விக்டர்.

ரோயும் அவனெதிரே வந்து அமர, அடுத்து விக்டர் சொன்ன செய்தியைக் கேட்டவனுக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிய, "வாட்! ஆர் யூ சீரியஸ்?" என்று அதே அதிர்ச்சி குறையாமல் கேட்டே விட்டான் ரோய்.

"யெஸ் ரோய், எனிமெல்ஸ் வச்சு நாம பண்ணுற இல்லீகல்லான பிஸ்னஸ்ஸ ஸ்டாப் பண்ணிரலாம். அது தான் எனக்கு சரின்னு தோனுது" என்று தன் முடிவை அவன் சொல்ல, ரோய்க்கு ஒருபக்கம் சரியென்று தோன்றினாலும் இன்னொரு புறம் விக்டரிடம் காணும் மாற்றத்தை நினைத்து அத்தனை ஆச்சரியம்.

"ஐ கான்ட் பிளீவ் திஸ் விக்டர், நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல" என்று தான் நினைப்பதை அவன் வெளிப்படையாக சொல்ல, விக்டரின் இதழ்கள் புன்னகையில் லேசாக விரிந்தன.

"இதை நானே எதிர்பார்க்கல ரோய், எல்லாத்தையும் மாத்திட்டா. புதுசா வாழ்க்கை ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. இதை விட்டுரலாம்னு யோசிச்சதுமே மனசுலயிருந்த பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு. இது கூட அவ சொன்னது தான்" என்று மெல்லிய சிரிப்போடு விக்டர் சொல்லி முடிக்க, தன் தோழனை வியப்பாகப் பார்த்தான் ரோய்.

"ஐ அம் சோ ஹேப்பி டியூட், வாட் நெக்ஸ்ட், மேரேஜ்ஜா?" என்று கேலியாகக் கேட்டு அவன் விக்டரின் தோளைத் தட்ட, மற்றவனின் விழிகளோ அந்த நபர்களை நினைத்து உச்சகட்ட கோபத்தில் சிவந்தன.

முகம் சிவந்து விழிகளில் தெரியும் கோபக் கொந்தளிப்பை பார்த்த ரோய் புரியாமல், "என்னாச்சு டியூட்?" என்று கேட்க, "அந்த ஜேக்கப்ப விடக் கூடாது ரோய், செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் முடிச்சிட்டு தான் நிம்மதியா என் தஷுரிய எனக்கு சொந்தமாக்கிப்பேன்" என்ற விக்டரின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.

ரோய்யோ தன் நண்பனை மெச்சுதலாகப் பார்க்க, அவனின் புருவங்கள் ஏதோ ஒரு யோசனையில் முடிச்சிட்டிருந்தன.

"இதுக்கப்பறம் என்ன விக்டர், வாட் இஸ் யூவர் ப்ளேன்?" என்று ரோய் கேட்டதும், ஒரு கர்வப் புன்னகைப் புரிந்த விக்டர், "ஆல் மை ப்ளான்ஸ் ஆர் ஆன் த ப்ரோஸஸ்" என்றான் கெத்தாக.

அவனின் வார்த்தைகளின் அர்த்தம் அவனை நன்றாகப் புரிந்துக் கொண்ட அவனுடைய தோழனுக்கே புரியவில்லை.

அடுத்தநாள் அந்த பெரிய ஹோட்டலின் அறையில்,

அறை பால்கெனியில் போடப்பட்டிருந்த வட்ட மேசையில் நடுவில் அழகான பூக்களுக்கு நடுவே நீண்ட மெழுகுவர்த்தி எரிய எதிரெதிரே அமர்ந்திருந்தனர் விக்டரும் லாராவும்.

"ஐ கென் அன்டர்ஸ்டேன்ட் விக்டர், திடீர்னு நான் மேரேஜ ப்ளேன் பண்ணி இருக்கக் கூடாது. நான் உங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுத்திருக்கணும். அதனால தானோ என்னவோ நீங்க மேரேஜ்ஜ சடன்னா ஸ்டாப் பண்ணி போக வேண்டியதா போச்சு. எனிவேய், நான் அதை பெருசா எடுத்துக்கல. அகைன்... நாம மேரேஜ் பண்ணிக்கலாமா?" என்று லாரா கொஞ்சும் குரலில் குழைந்தவாறு பேச, தன் முன்னே தட்டில் வைக்கப்பட்டிருந்த சீஸ் கேக்கில் ஃபோர்க்கைக் குத்தி விழிகளை மட்டும் உயர்த்தி அவளை ஒரு பார்வைப் பார்த்தான் விக்டர்.

அந்த பார்வையின் அர்த்தம் புரியாது அவள் விழித்தவாறு, "என்ன ஓகேவா?" என்று மீண்டும் கேட்க, அவளைப் பார்த்தவாறே மர்மப் புன்னகைப் புரிந்தவன், "ஷுவர் லாரா, அன்னைக்கு நான் உன்னை அப்படி விட்டுட்டு போய் கூட நீ என்னை அக்செப்ட் பண்ற, தேங்க் யூ சோ மச். இந்த குட் ஹார்ட் எத்தனை பேருக்கு இருக்கும்னு தெரியாது... எனிவேய் லெட்ஸ் என்ஜோய் திஸ் வொன்டர்ஃபுல் டின்னர் நைட்" என்றுக் கொண்டே ஃபார்கினால் குத்தி சீஸ் கேக்கின் ஒரு பகுதியை எடுத்தவன், அதை அவளிள் வாயருகே நீட்டினான்.

அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டவள், தானும் ஊட்ட போகிறேன் என்ற ரீதியில் அவனுக்கு முன்னே கேக்கை நீட்ட, தலையை இருபக்கமும் ஆட்டியவாறு எழுந்துக் கொண்ட விக்டர், தன் இதழைக் காட்டியவாறு அறைக்குள் நுழைந்தான்.

"ஏய் வெயிட்!" என்றுக்கொண்டே அவள் அவனை நோக்கி ஓடி அவனை பின்னாலிருந்து அணைக்க, அவள் முன்னே திரும்பியவன் தன் வலிய கரங்களால் அவளை சுற்றி வளைத்து தன்னோடு நெருக்க, "ஓ கோட்! உங்களுக்கு கன் ஷுட்  நடந்ததுன்னு தெரிஞ்சதும் ரொம்ப பயந்துட்டேன்" என்று போலியாக வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு, உள்ளுக்குள் விஷமமாக சிரித்துக் கொண்டாள்.

'இன்னும் கொஞ்ச நேரம் தான் விக்டர் ஸ்வீட்ஹார்ட், இன்னைக்கே உன் உயிர எடுத்துருவேன். என்னை அன்னைக்கு அவமானப்படுத்தினதுக்கு நீ அனுபவிச்சே ஆகணும்' என்று உள்ளுக்குள் நினைத்தவாறு தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்ட லாரா, அவனை நெருங்கி அவனின் கன்னத்தில் முத்தமிட, "இட்ஸ் நொட் இனாஃப் ஃபார் மீ" என்றுக் கொண்டே அணைப்பில் மேலும் இறுக்கத்தைக் கூட்டி அவளின் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்தான் விக்டர்.

அவனின் மீசை முடி செய்யும் குறுகுறுப்பில் தன்னை இழந்து அவள் நிற்க, திடீரென நெஞ்சு எரிவது போல் அவளுக்கு ஓர் உணர்வு.

"விக்.. விக்டர் கொஞ்சம் விடுங்க! எனக்குள்ள ரொம்ப எரியுது. ஏதோ வலிக்குற மாதிரி இருக்கு" என்று வலியில் சற்று திணறியவாறு சொல்லிக்கொண்டே லாரா இவனை தள்ளி விட, இவனோ விட்டபாடில்லை.

மேலும் மேலும் அவளை தன்னோடு நெருக்கிக் கொண்டே விக்டர் சொன்ன செய்தியில் அவளுக்கு சப்த நாடியும் அடங்கிப் போனது.

"விஷம் சாப்பிட்டா அப்படி தான் இருக்கும் மை டியர்" அவன் சொன்ன விதத்தில் இவளுக்கு உலகமே தலை கீழாக சுற்றி விட, அவனைப் பிடித்து தள்ளி விட்டவள், "விக்டர்!" என்று அதிர்ந்துப் போய் கத்தினாள்.

அவனின் இதழ்களோ கேலியாக வளைய, தோள்களை அலட்சியமாகக் குலுக்கியவன் அவள் சாப்பிட்ட சீஸ் கேக்கைக் காட்டினான். "நான் எதுவுமே பண்ணல்ல மை லவ், செத்துப் போய் என்னை பழிவாங்குறேன்னு கிளம்பிறாத! ஆல் ஆர் ஃபேட்" என்று எதுவுமே அறியாதவன் போல் அவன் பேசிய விதத்தில் அவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியவில்லை.

"விக்... விக்டர் ஐ வில் கில் யூ! உன்னை நான் சும்மா விட மாட்டேன், யூ ப்ள.. ப்ளடி ****... என்னை..." என்று திக்கித் திணறி பேசிய லாராவுக்கு உடலுக்குள் எரிச்சல் அதிகமாகி தாங்க முடியாத ஒரு வலி ஏற்பட்டது. ஆசீட் அடித்தால் எத்தகைய எரிச்சலை வலியைக் கொடுக்குமோ அதே எரிச்சலையும் வலியையும் அனுபவித்துக் கொண்டிருந்தாள் அவள்.

"யூ நோ வாட் மை டியர், இது ரொம்ப பவர்ஃபுல்லானா பாய்சன். இதுக்கு மெடிசினும் இல்லை சொல்யூஷனும் இல்லை. சோ... ஹேப்பி ஜர்னி லாரா" என்று அவன் பேசப் பேச, இவளுக்கு உள்ளுக்குள் திகில் பரவத் தொடங்கியது.

"விக்டர், ஐ அம் சோ சாரி... ப்ளீஸ் என்னை காப்பாத்து! நான் ரியலைஸ் பண்ணிட்டேன், நான் புரிஞ்சிக்கிட்டேன். ப்ளீஸ் பிளீவ் மீ! நான் இனி உன் லைஃப்ல குறுக்க வர மாட்டேன், என்னை காப்பாத்து, என்னை இங்க இருந்து கூட்டிட்டு போ" என்று வலியில் முயன்று வார்த்தைகளைக் கோர்த்து பேசிய லாரா, அதற்கு மேல் வலியைத் தாங்க முடியாது அப்படியே தரையில் விழுந்திருக்க, அவளருகே வந்து ஒற்றைக் காலை மடக்கி அமர்ந்தான் விக்டர்.

"என்னை சைலன்ட்டா நீ கொல்ல பார்த்த... அதனால தான் சைலன்ட்டாவே உன் உயிர நான் எடுத்துட்டேன். எனிவேய், ரெஸ்ட் இன் பீஸ்" என்று அவன் சொல்லி முடிக்கும் போதே வாயிலிருந்து இரத்தம் வடிய, மூச்செடுக்கத் திணறி அத்தோடு அவள் அந்த இடத்திலேயே இறந்திருக்க, அங்க மேசையில் இருந்த அவளின் அலைப்பேசியை எடுத்தான் அவன்.

சரியாக ஜேக்கப்பிடம் இருந்து அழைப்பு வர, திரையைப் பார்த்தவன் ஏளன சிரிப்போடு அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

"லாரா, லாரா... வாட்ஸ் கொய்ங் ஆன் தெயார்? அவன கொன்னுட்டியா? அந்த விக்டர உயிரோட விடக் கூடாது, அங்க என்ன நடக்குது? லாரா..." என்று அவன் அலைப்பேசியில் காட்டுக் கத்து கத்த, "ஷ்ஷ்..." என்றான் விக்டர் அவனின் கத்தலைக் கேட்க முடியாது.

அதில் ஜேக்கப்பிற்கு திக்கென்று இருந்தது. லாராவின் அலைப்பேசி எப்படி விக்டரிம் என்று யோசித்தவாறு எச்சிலை விழுங்கிக் கொண்டவன், "விக்டர் உன்கிட்ட எப்படி..." என்று அதிர்ச்சி குறையாத குரலில் கேட்டான் ஜேக்கப்.

"ஹாஹாஹா... என்னை கண்டுபிடிச்சிட்ட, அந்தளவுக்கு என்னை பத்தி தெரிஞ்சு வச்சிருக்கியா ஜேக்கப் நீ!" என்று அந்த இடமே அதிர சிரித்தவன், அவனிடம் கேலியாகக் கேட்ட விதத்தில், பற்களை நரநரவென கடித்தான் மற்றவன்.

"விக்டர், யூ ப்ளடீ... லாரா எங்க டா, அவள என்ன பண்ண?" என்று அவன் அதீத கோபத்தில் கத்த, "சோ சேட் ஜேக்கப் டியூட், அவ ரொம்ப மோசம் சரியான துரோகி, உன்னை கூப்பிடாம ஹெவனுக்கு போயிட்டா" என்று விக்டர் சொன்னதும், தூக்கி வாரிப்போட்டது ஜேக்கப்பிற்கு.

"என்... என்ன சொல்லுற விக்டர், லாரா... லாரா இறந்துட்டாளா?" என்று அதிர்ந்துப் போய் கேட்டவனுக்கு அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.

"ஆமா... நீ ஏன் இவ்வளவு கோபப்படுற, ஒருவேள அந்த லாரா கூட நீ... இருக்கும் இருக்கும். எனிவேய், கவுன்ட் டவுன் யூவர் டேய்ஸ் மை டியூட்!" என்று விட்டு விக்டர் அழைப்பைத் துண்டித்திருக்க, அலைப்பேசியைத் தூக்கி நிலத்தில் அடித்தவன், உச்சகட்ட கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாது "ஆஆ..." என்று அந்த அறையே அதிரக் கத்தினான்.

சீக்கிரம் தன் ஆட்கள் மூலமாக தன் செல்வாக்கைப் பயன்டுத்தி அவளை கொன்றதற்கான தடையமே இல்லாமல் மொத்தத்தையும் கச்சிதமாக முடித்து விட்டு வீட்டிற்குச் சென்றான் விக்டர்.

அவனுடைய கார் போர்டிகாவில் நிற்க, அவன் வந்ததை உணர்ந்து வாசலுக்கு தஷுரி ஓடி வர, காரிலிருந்து இறங்கியவனுக்கு அவளைப் பார்த்ததும் அத்தனை இதமாக இருந்தது. அவளைப் பார்த்ததே அவளுக்கு அத்தனை ஆறுதலைக் கொடுக்க, "தஷு..." என்று அழைத்துக் கொண்டே அவன் ஒரு அடி வைத்தான்.

ஆனால், பெண்ணவள் தான் அவன் செய்த காரியத்தால் அத்தனை கோபத்தில் இருக்கின்றாளே!

அவனைப் பார்த்ததுமே முகத்தை திருப்பிக் கொண்டு அவள் செல்ல, விக்டருக்கு ஐயோ என்று இருந்தது. இதுவரை யாரையும் இது போன்று சமாளித்து பழக்கம் இல்லாதவனுக்கு இது எல்லாம் புதிதாகவே தோன்றியது.

"தஷுரி ஸ்டாப்! எனக்கு உன் கூட கொஞ்சம் பேசணும்" என்று அவன் சொல்ல, "இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க காதலியோடு தானே இருந்து பேசிட்டு வரீங்க, இப்போ மட்டும் எதுக்கு நானு? போய் அவ கூடவே இருங்க" என்று படபடவென திட்டிக்கொண்டே சென்றாள் அவள்.

அங்கு நின்றிருந்த காவலர்கள் கூட இவர்களை அதிர்ச்சியாகப் பார்க்க, இவர்கள் இருவரும் பேசும் தமிழ் மொழி அந்தக் காவலர்களுக்கு தெரியாமல் போனது, விக்டருக்கு ஒரு நல்லதாக அமைந்தது.

இடுப்பில் கைக் குற்றி தான் பேசுவதைக் கேட்காமல் செல்பவளை என்ன செய்தால் தகும் என்ற ரீதியில் அவன் தன்னவளை ஏகத்துக்கும் முறைத்து தள்ள, என்ன நினைத்தாளோ! சட்டென நின்றவள் பின் மீண்டும் அவனை நோக்கி விறுவிறுவென்று திரும்பி வந்தாள்.

"அந்த ராலாவா லாராவா ஆங்.. லாரா அவ நல்லவ கிடையாது, உங்கள ஏமாத்திட்டு இருக்கா. அது பொண்ணே கிடையாது பிசாசு, எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க. அழகு இருக்குற இடத்துல எப்போவும் ஆபத்து இருக்கும்" என்று அவனுக்கு ஏற்கனவே தெரிந்த விடயத்தை ஏதோ தத்துவ ஞானி போல் தஷுரி பேசிவிட்டு நகர, சிரிப்பை அடக்கியவாறு தன்னவளை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் விக்டர்.

"ஓஹோ... இப்போ நீ சொல்லி தானே தஷுரி எனக்கு தெரியும். அச்சச்சோ! இது தெரியாம நான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ கூட...." என்று அவன் முட்டிக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கி போலியாக அதிர்ச்சியாக, தஷுரிக்கு தூக்கி வாரிப்போட்டது.

"என்.. என்ன சொன்னீங்க! அவ கூட என்ன... என்ன பண்ணீங்க?" அவள் அதிர்ச்சியாகக் கேட்க, பாவமாக முகத்தை வைத்தவாறு "ஓ கோட் தஷுரி! இதை நீ முன்னாடியே சொல்லியிருக்க கூடாதா? நானும் அவளும்..." என்று மீண்டும் அவன் நிறுத்த, அவளுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது.

"நோ நோ... நான் தான் அவள..." என்று மீண்டும் விக்டர் ராகமிழுத்து நிறுத்த, "அய்யோ சொல்லித் தொலைங்களேன்! நீங்க அவள..." என்று அவனையே போல் ராகமிழுத்தவளுக்கு இதயம் படு வேகமாகத் துடித்தது. எங்கு தன்னவன் தவறு செய்துவிட்டு வந்திருப்பானோ என்ற ஏதேதோ எண்ணங்கள் எல்லாம் அவளுக்குள் ஓட,

"நான் அவள கொன்னுட்டேன் தஷுரி" என்று விக்டர் சட்டென்று சொல்லி முடித்ததும், எல்லாத்துக்கும் மேல் அதிர்ச்சியாக, "எதே!" என்று கத்தியவளுக்கு மயக்கமே வராத குறை தான்.


 ***************

தஷுரி 28 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/08/28.html


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls


Comments

  1. அடேயப்பா..! இந்த தஷுரியோட ப்ராப்ளம் ஒருவழியா லாராவை போட்டுத்தள்ளினதுல தீர்ந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.

    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts

தஷுரி 10