விழிகள் Final Episode
கப்பலில் யாருடைய கண்ணிலும் படாமல் யாழ்மொழி மறைந்து செல்ல முயற்சிக்க, ஆனால் விதி அவளை விட்டால்தானே!
"அம்மாடி, உனக்கு தேவையான சாப்பாட்ட நான் கொண்டு வந்து தரேன்.. ராத்திரி ஆனதும் இந்த கப்பல்ல ஒரு சின்ன அறை இருக்கு தேவையில்லாத பொருட்கள வச்சிருப்பாங்க. நாம தேசத்துக்கு போய் சேருர வரைக்கும் நீ அங்கேயே தங்கிக்கலாம். புரியுதா.."
என்று கணபதி சொல்ல, தலையாட்டி வைத்தவளுக்கு வயிற்றில் பயபந்து உருளத்தான் செய்தது.
கிட்டத்தட்ட மூன்று நாட்கள் யார் கண்ணிலும் சிக்காமல் கப்பலுக்குள் மறைந்திருந்தவளால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
"இன்னும் எத்தனை நாட்களுக்கு என்னால் இப்படி மறைந்திருக்க முடியும்? இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவைதானா! தங்களை எப்போது சந்திப்பேன் அதிகாரி, நீங்கள் என்னுடன் இல்லாத ஒவ்வொரு நொடியும் நரகம் போல் இருக்கிறதே.."
என்று தனக்குள் பேசி அழுது கரைந்துக்கொண்டு பொருட்கள் அடங்கிய அந்த சிறிய அறைக்குள் அவள் அமர்ந்திருக்க, "ஹேய் யார் நீ?" என்று அதட்டலாக கேட்டது ஒரு குரல்.
யாழ்மொழி உடல் அதிர தூக்கி வாரிப்போட்டவளாக திரும்பிப் பார்க்க, அங்கு அவளை அதிர்ச்சி கோபம் என கலந்த உணர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தான் கப்பலிலிருந்த ஒரு அதிகாரி.
யாழ்மொழி எச்சிலை விழுங்கியவாறு பின்னே நகரப் போக, அதேநேரம் இங்கு ரொனேல்டின் அரண்மனையில் வழக்கம் போல் ஏமாற்றம் கொடுத்த அடியில் கோபத்தோடு அமர்ந்திருந்தார் அவர்.
அந்த அடிமைப் பெண்ணோ சுவற்றோடு ஒன்றி தரையில் பயத்தோடு அமர்ந்திருக்க, அவளை திரும்பிப் பார்த்தவரோ பக்கத்திலிருந்த க்ளாஸை அவள் மேல் தூக்கியெறிந்து கோபத்தைக் காட்டினார்.
"ஆஆ..." என்று அவள் வலியில் கத்த, "நான் அடிச்சா பொறுத்துக்கணும், கத்த கூடாது. யூ டூ அன்டர்ஸ்டேன்ட்!" என்று அடித்தொண்டையிலிருந்து உறும, விம்மலோடு பயந்துப் போய் ஒடுங்கி அமர்ந்துக்கொண்டாள் அவள்.
"யூ நோ வாட், என்னோட லிஸ்ட்ல நீதான் ரொம்பநாளா என்னோட ரூம்ல இருக்க, ஆச்சரியம்தான். ஆனா அதுவும் அந்த கேர்ள் கிடைக்குற வரைக்கும்தான். அவ எனக்கு வேணும்.. ச்சே! அந்த லியோவ சாதாரணமா நினைச்சுட்டேன். எனிவேய்ஸ், நான் எப்படியும் அவன கண்டுபிடிச்சிருவேன்"
என்று ஏதேதோ புலம்பியவாறு அவன் மேசை மீதிருந்த மதுவை மடமடவென அருந்தினான்.
அவன் தொண்டைக்குழி அசைவதை திருப்தியோடு அந்த பெண் பார்த்துக்கொண்டிருக்க, மொத்த போத்தலையும் காலி செய்துவிட்டு போத்தலை உற்றுப் பார்த்தவனின் இதழ்கள் கேலியாக வளைந்தன.
"என்ன இன்னைக்கு டேஸ்ட் டிஃபெரென்ட்டா இருக்கு.. பட் நொட் பேட்" என்று சொல்லிக்கொண்டே அவன் தள்ளாடியவாறு அந்த அறையிலிருந்து வெளியேறப் போக, திடீரென அவனுடைய தொண்டைக் குழியிலிருந்து நெஞ்சுப் பகுதி வயிறு என உடலுக்குள் எரிய ஆரம்பித்தது.
"ஆஆ... ஆஆ... இட்ஸ் பர்னிங்.. எனக்கு உள்ள எரியுது.. ஓ காட் எரியுதே... எரியுதே..." என்று பெரிய குரலெடுத்து ரொனேல்ட் கத்த ஆரம்பிக்க, கண்ணீரை துடைத்தெறிந்தவாறு எழுந்து நின்ற அந்த பெண்ணோ அவனை கோபத்தோடு பார்த்தாள்.
உடலுக்குள் ஒவ்வொரு பாகமும் அவனுக்கு பெரிய வலியோடு எரிந்துத் தள்ள அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
"ஏய்.. ஏதாச்சும் பண்ணு என்னை காப்பாத்து.. ப்ளீஸ்!" என்று வலியில் துடித்துக்கொண்டு அவளை நோக்கி திரும்பியவருக்கு அவளின் பார்வையில் ஏதோ ஒன்று புரிய, "யூ..." என்று அதிர்ந்துப் போய் ஏதோ சொன்னவாறு அவளை நோக்கி ஒரு அடி வைத்தார்.
அடுத்தநொடி அவருடைய தலையில் விழுந்த பெரிய அடியிவ் அவர் அப்படியே தரையில் விழ, "ஆர் யூ ஓகே சார்?" என்று கேலிக் குரலில் கேட்ட வண்ணம் அவர் பக்கத்தில் முட்டி போட்டு அமர்ந்தான் லியோ.
ரொனேல்ட் அவனை எதிர்பார்க்கவில்லை என்பது அவருடைய அதிர்ந்த முகமே அப்பட்டமாக காட்டியது.
"நீ.. நீ எப்படி.. என்னை என்ன பண்ண? என்னடா பண்ண?" என்று அவர் கத்தியவாறு அவனை நோக்கி கையை நீட்ட, அதை முழு வேகத்தோடு முறுக்கியவன், "உங்களால இப்போ எதுவுமே பண்ண முடியாது. கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க சார், எல்லாமே சரியாயிடும். என்ட் அட்வான்ஸ் ரெஸ்ட் இன் பீஸ்!" என்று விழிகள் சிவக்க சொன்னான்.
"லியோ... மை பாய், நான் தப்பு பண்ணிட்டேன்தான் ஐ அம் ரியலி சாரி! ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு! என்னை காப்பாத்து, இதுக்கு அப்பறம் உன் விஷயத்துலயும் அந்த பொண்ணு விஷயத்துலயும் நான் வர மாட்டேன். ட்ரஸ்ட் மீ ப்ளீஸ்!"
என்று அவன் அந்த நிலையில் வெட்கம் விட்டு கெஞ்ச ஆரம்பிக்க, அந்த அறை அதிர பயங்கரமாக சிரித்தான் லியோ.
"ரியலி! பட் இட்ஸ் டூ லேட் சார். நெக்ஸ் லைஃப்னு ஒன்னு இருந்தா பார்க்கலாம்" என்றுவிட்டு அவன் தன் ஆறடி உயரத்திற்கு எழுந்து நின்று ரொனேல்ட் துடிதுடித்து சாகுவதை வெறித்துப் பார்த்திருக்க, அவனோ வலி தாங்க முடியாமல் அலறிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக தன் உயிரை விட்டான்.
அவன் துடிப்பதைப் பார்க்க அந்த அடிமைப் பெண்ணிற்கு அத்தனை திருப்தி. இத்தனைநாள் அவள் அனுபவித்த கொடுமைக்கு அவனுடைய மரணம் அவளுக்கு அத்தனை நிம்மதியைக் கொடுக்க, லியோவை நன்றியுணர்ச்சியோடுப் பார்த்தாள் அவள்.
"நான்தான் உனக்கு நன்றி. சொல்லணும், தேங்க் யூ சோ மச். இனி நீ சுதந்திரமா இருக்கலாம்" என்ற லியோவின் நினைவுகள் நடந்த சில சம்பவங்களை நினைத்துப் பார்த்தது.
இங்கு விஷத்திற்காக பயன்படுத்தப்படும் மூலிகை ஒன்றினை கொடுத்து ஜேம்ஸை ரொனேல்டின் அரண்மனைக்கு அனுப்பி வைத்திருந்தான் லியோ. அவனுடைய திட்டப்படி அங்கு உடல் தேவைக்காக சிறைப்பிடித்திருக்கும் அடிமைப் பெண்ணின் கையில் கொடுத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த அவன் எண்ணியிருக்க, எல்லாமே அவன் எதிர்பார்த்தது போலவே நடந்தது.
ரொனேல்டிற்கு தெரியாமல் இந்த அடிமைப் பெண்ணின் கையில் கொடுத்து ஜேம்ஸ் தன் திட்டத்தை சொல்ல, ஏற்கனவே ரொனேல்டின் மேல் கொலை வெறியில் இருந்தவளோ இதை செய்யத் துணிய கொஞ்சமும் யோசிக்கவில்லை.
அத்தனையும் அவர்கள் நினைத்தது போல் நடந்திருக்க, வாயிலிருந்து இரத்தம் வடிய சடலமாகக் கிடந்தவரை திருப்தியாகப் பார்த்துவிட்டு நகரப் போனவனை மீண்டும் அழைத்து நிறுத்தினாள் அந்த அடிமைப் பெண்.
"நான் சொல்றது சரியா தப்பான்னு எனக்கு தெரியல. அந்த பொண்ணு விஷயத்துல தலையிட மாட்டேன்னு இவன் சொன்னான். யார் அந்த பொண்ணு, அவளும் இந்த ஊர்தானா?"
என்று அவள் கேட்க, சட்டென யாழ்மொழியின் முகம்தான் அவனுடைய மணக்கண் முன் தோன்ற, இதழில் மெல்லிய புன்னகை கீற்றாகத் தோன்றியது.
"ஷீ இஸ் மை லவ்" என்று மட்டும் சொன்னவன் அதே புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்திருக்க, இங்கு இரு பக்கமும் இரு அதிகாரிகள் பிடித்திருக்க வெடவெடத்துப் போய் நின்றிருந்தாள் யாழ்மொழி.
மாறி மாறி கையில் துப்பாக்கியோடு ஒவ்வொரு அதிகாரிகளும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, அவளுக்கு தலை சுற்றாத குறைதான். கணபதிக்கு என்ன செய்வதென்று கூட தெரியவில்லை.
"என்னை விட்டுவிடுங்கள், நா.. நான் தெரியாமல் வந்துவிட்டேன். என்னை விடுங்கள்... நா.. நான் இப்போதே அதிகாரியை பார்க்க வேண்டும். அதிகாரி.. அதிகாரி..." என்று கத்திக்கொண்டே அவள் அவர்களின் பிடியில் கதறித் துடிக்க, அவளைத் தள்ளிவிட்டு முட்டி போட வைத்தான் ஒரு அதிகாரி.
"யூ ப்ளடி ஷட் யூவர் மவுத்! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினேன்னா ஐ வில் ஷூட் யூ" என்று ஆங்கிலத்தில் அவன் கத்த, "வாட்ஸ் ஹேப்பனிங் ஹியர்?" என்றொரு கணீர் குரல் பின்னாலிருந்து கேட்டது.
யாழ்மொழி அழுகையோடு திரும்பிப் பார்க்க, விழிகளை கூர்மையாக்கி அவளைப் பார்த்தான் அந்த ஒருவன்.
"கேப்டன், இந்த பொண்ணு அந்த தேசத்தை சேர்ந்தவ, இவள பார்த்தாலே தெரியுது. யாருக்கும் தெரியாம எங்க கப்பல்ல ஏறியிருக்கா. இவள சும்மா விடக் கூடாது" என்று ஒரு அதிகாரி சொல்லிக்கொண்டே அவளை நோக்கி துப்பாக்கியை நீட்ட, பெண்ணவளோ நடுங்கிவிட்டாள்.
இடம், மொழி எதுவுமே அவளுக்கு புரியவில்லை. இப்படியொரு நிலையில் நிற்பதற்கு பதில் தன்னை சுற்றியுள்ள நீரிலேயே குதித்துவிடலாம் என்று கூட ஒரு நொடி தோன்றியது அவளுக்கு.
ஆனால், அடுத்து நடந்ததோ அவளே எதிர்பார்க்காத ஒன்று.
யாழ்மொழியை கூர்மையாகப் பார்த்தவன், "ஓஹோ.. அவ சொன்ன பொண்ணு நீதானா!" என்று கேலிப் புன்னகையோடு சொன்னவன், "ஹாய் ஐ அம் மைக்கேல், நைஸ் டூ மீட் யூ" என்று புன்னகையோடு சொல்ல, அவன் என்ன பேசுகிறாள் என்றே அவளுக்கு புரியவில்லை.
அவள் திருதிருவென விழிக்க, "நாம இங்கிலாந்து போய் சேருற வரைக்கும்
இவ இங்கேயே இருக்கட்டும், இவளுக்கு எதுவும் ஆகக் கூடாது புரியுதா" என்று கத்த, வேறு வழியில்லாமல் தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர் மற்ற அதிகாரிகள்.
"அம்மாடி ஐயா உன்னை எதுவும் பண்ண வேணாம்னு சொல்லிட்டாரு, நீ போக வேண்டிய இடத்துக்கு பாதுகாப்பா போய் சேரலாம். இனி எந்த பிரச்சனையும் இல்ல" என்று கணபதி ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்து சொல்ல, அவளால் நடப்பதை நம்பவே முடியவில்லை.
அதே அதிர்ச்சியோடு அவள் மைக்கலை திரும்பிப் பார்க்க, "என்னோட எக்ஸ் வைஃப் க்ரிஸ்டிக்காக இதை கூட பண்ண மாட்டேனா" என்று அலட்சியமாக தோளைக் குலுக்கியவன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.
யாழ்மொழிக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. காதல் அவளுடைய வாழ்க்கையையே தலை கீழாக மாற்றிவிட்டது.
அரண்மனையை விட்டு வெளியிலேயே வராத ஒருத்தி இன்று வேறொரு தேசத்துக்கு செல்லும் கப்பலில் வேறு நாட்டவர்களோடு நின்றுக்கொண்டிருக்கிறாள்.
"நடப்பவை அனைத்தும் நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது. காதல் என்னை இத்தனை தைரியசாலியாக மாற்றிவிட்டது. ஆனால் தங்களை மீண்டும் எப்போது பார்ப்பேன் அதிகாரி? உங்களுக்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன்"
என்று தன்னவனோடு மானசீகமாக பேசியவாறு கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.
நாட்களும் வேகமாக ஓடியது. மைக்கலுக்கு பயந்தே மற்ற எந்த அதிகாரிகளும் அவளை சீண்டவில்லை.
அவளுக்கு தேவையானதை மைக்கல் ஏற்பாடு செய்திருக்க, கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்த நிலையில், லண்டன் துறைமுகத்தில் வந்து நின்றது மைக்கலின் கப்பல்.
எல்லாரும் கப்பலிலிருந்து இறங்க ஏற்றுமதி பொருட்களும் வேகவேகமாக இறக்கப்பட, அந்த துறைமுகத்தையும் சுற்றியிருந்த ஆங்கிலேயர்களையும் யாழ்மொழி ஆச்சரியத்தோடும் பயத்தோடும் பார்த்தவாறு நின்றுக்கொண்டிருந்தாள்.
முதல் தடவை ஒரு புதுதேசத்திற்கு வந்திருக்கிறாள். மொழி ஆட்கள் என எல்லாமே அவளுக்கு புதிது.
ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல அவளுக்குத் தோன்ற, பயந்து நடுங்கியபடி கப்பலிலிருந்து இறங்கி எங்கு செல்வது என்ன செய்வதென்று கூட தெரியாமல் நின்றுக்கொண்டிருந்தவளின் முன் வந்து நின்றான் மைக்கல்.
"உனக்காக ஒருத்தர் காத்துட்டு இருக்காங்க, போலாமா" என்று அவன் சொல்ல, யாழ்மொழியோ புரியாது விழித்தாள்.
அவனோ விழிகளை சலிப்பாக உருட்டியவன் தூரத்திலிருந்த காரைக் காட்டி சைகையால் சொல்ல, பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்ட யாழ்மொழி அவன் பின்னாலேயே அமைதியாக சென்றாள்.
அவனின் மொழி புரியவில்லை கூடவே வேறு வழியும் தெரியவில்லை அவளுக்கு.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிந்திருக்க, "கம் மீன்ஸ் வா... போ... சாப்.. ஓ ஷீட் இட்ஸ் ஹார்ட் டூ லேர்ன்" என்று தமிழை கற்றுக்கொள்ள முயற்சித்தவாறு க்ரிஸ்டி புலம்பிக்கொண்டிருக்க, அவளுடைய வீட்டின் அழைப்புமணி ஒலித்தது.
கையிலிருந்த புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு வேகமாக வந்து கதவைத் திறந்த க்ரிஸ்டியின் முகம் முன்னே நின்ற மைக்கலைப் பார்த்ததுமே சட்டென மாறியது.
"நீயா..." என்று கோபமாகக் கேட்டவாறு அவள் மீண்டும் கதவை மூடப் போக, "ஹேய் வெயிட்! என்னை பார்த்தாலே ஏன் இப்படி நடந்துக்குற க்ரிஸ்டி. உன்கூட கொஞ்சம் பேசணும்" என்று கதவை மூட விடாமல் பிடித்தபடி பேசினான் மைக்கல்.
அவனை எரிச்சலாகப் பார்த்தவள், "ஐ அம் நொட் இன்ட்ரஸ்டட்" என்றுவிட்டு மீண்டும் முழு பலத்தையும் பயன்படுத்தி கதவை மூட முயற்சிக்க, "ஸ்டாப் இட் க்ரிஸ்டி! அங்க பாரு" என்று அவளுடைய நாடியைப் பிடித்து ஒரு திசையைக் காட்ட, அடுத்தகணம் அவளுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிந்தன.
"யாழ்..." என்று அழைத்தவளின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, அங்கு கைகளைப் பிசைந்தவாறு தயக்கத்தோடு நின்றிருந்தாள் யாழ்மொழி.
அடுத்த பத்து நிமிடங்களில் தன் முன்னே சோஃபாவில் அமர்ந்திருக்கும் அந்த தமிழ் பெண்ணிடம் எப்படி பேசுவதென்று கூட க்ரிஸ்டிக்கு தெரியவில்லை.
மைக்கலோ இருக்கையில் சாய்ந்து அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க, "யூ லுக் பியூட்டிஃபுல், லியோவுக்கு உன்ன பிடிச்சதுல ஆச்சரியம் இல்ல" என்று புன்னகையோடு சொன்னாள் க்ரிஸ்டி.
யாழ்மொழி பெக்கபெக்கவென விழிக்க, "ஓ காட்! இந்த பொண்ணு என்ன ஊமையா, ஷிப்ல இவள பார்த்ததுலயிருந்து இப்படிதான் முழிச்சிட்டு இருக்கா" என்றான் அவன் பெருமூச்சோடு.
"ஷட் அப் மைக்கல், அவ ரொம்ப பயந்து போயிருக்கா" என்று சற்று கோபத்தோடு சொன்னவள் எங்கிருந்தோ தேடி எடுத்த புகைப்படமொன்றை கொண்டு வந்து அவளிடம் நீட்ட, அதை வாங்கிப் பார்த்த யாழ்மொழிக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவளுடைய கண்கள் அந்த புகைப்படத்தில் விறைப்பாக நின்றிருந்த லியோவைப் பார்த்ததும் கலங்கிப் போக, அவளையே பார்த்திருந்த க்ரிஸ்டிக்கு ஏனோ அந்த சின்னப்பெண் மீது ஏனென்று தெரியாத ஒரு பரிதாபம் உருவானது.
அவளுடைய கரத்தை ஆறுதலாகப் பற்றி அழுத்தம் கொடுத்தவள், "கண்டிப்பா அவன் உன்னை தேடி வருவான், ட்ரஸ்ட் மீ!" என்று உறுதியான குரலில் சொல்ல, அவளின் வார்த்தைகளுக்கான அர்த்தம் புரியாவிட்டாலும் அந்த வார்த்தைகளிலிருந்த அழுத்தமும் க்ரிஸ்டியின் விழிகள் வெளிப்படுத்திய நம்பிக்கையுமே அவள் சொல்ல வருவதை யாழ்மொழிக்கு உணர்த்தியது.
அடுத்து வந்த நாட்கள் க்ரிஸ்டியோடு தன் நாட்களை கழித்தாள் அவள். இருவரும் இருவேறு தேசத்தை சேர்ந்தவர்கள், இருவேறு மொழிகள். ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்வது புரியாவிட்டாலும் ஏதோ ஒரு நல்ல தொடர்பு இருவருக்குமிடையில் தானாகவே உருவானது.
யாழ்மொழிக்கு தேவையான அனைத்தையும் அவள் சொல்ல வருவதற்கு முன்னரே ஏற்படுத்திக் கொடுத்தாள் மற்றவள். கிட்டத்தட்ட அவள் க்ரிஸ்டியின் வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டன..
அன்று, அந்த நகரத்திலுள்ள அழகிய பூங்காவில்,
"எத்தனை நாளைக்கு நீ இப்படியே இருக்க போற, அதான் மன்னிப்பு கேக்குறேன்ல.." என்று மைக்கல் கேட்க, க்ரிஸ்டியோ தன்னை சுற்றியிருந்த பூக்களை வெறித்துப் பார்த்திருந்தாளே தவிர எதுவுமே பேசவில்லை.
"நான் உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன், ஐ ரியலைஸ்ட் தட்.. மறுபடியும் ஒரு வாய்ப்பு..." என்று அவன் தயக்கமாக இழுக்க, சில கணங்கள் யோசித்துவிட்டு அவன் பக்கம் திரும்பியவள், "பார்க்கலாம்..." என்றுவிட்டு எதேர்ச்சையாகத் திரும்ப, அடுத்தகணம் அவளுடைய விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
"மைக்கல்..." என்று அழைத்து அவள் ஒரு திசையைக் காட்ட, வேகமாகத் திரும்பிப் பார்த்தவன் முதலில் அதிர்ச்சியில் விழித்தாலும் பின் கேலியாகப் புன்னகைத்தான்.
அதேநேரம் இவர்களை விட்டு சற்று தள்ளி அந்த அழகிய பூங்காவின் அழகை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.
அந்த வண்ணப் பூக்கள் அவளுடைய மனதை மயக்கியிருக்க வேண்டும்,
ஆனால் அதற்கு மாறாக அந்த பூக்கள் அவளவனையே அவளுக்கு ஞாபகப்படுத்த, "எப்போதுதான் என்னை சந்திக்க வருவீர்கள் அதிகாரி? இன்னும் எத்தனை நாட்கள் நான் காத்திருக்க வேண்டும்?" என்று வாய்விட்டே கேட்டவாறு தன் மாங்கல்யத்தை மெல்ல வருடினாள்.
"யாழ்..." என்று லியோ அழைப்பது போல் அவளுக்குக் கேட்க, உடனே சுற்றி முற்றி தேட ஆரம்பித்தாள் யாழ்மொழி.
கண்ணிற்கு எட்டும் தூரம் வரை அவன் எங்கும் இல்லை. விழிகள் சட்டென கலங்கி கண்ணீர் கன்னத்தின் வழியே வழிந்தோட, தொண்டையை அடைத்த அழுகையை அடக்கிக்கொண்டாள் அவள்.
"கடவுளுக்கு நான் பிடித்த குழந்தை போல, என்னை சற்று அதிகமாகவே சோதிக்கிறார்" என்று விரக்தியோடு நினைத்துக்கொண்டவள், உணர்வுகளை அடக்கிக்கொண்டவாறு தளர்ந்த நடையாக அந்த பூங்காவில் நடந்தாள்.
திடீரென ஏனென்று தெரியாத ஒரு உணர்வு. அவளின் உள்மனம் ஒரு திசையைப் பார்க்க சொல்லி உந்த, வேகமாக திரும்பிப் பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
அப்படியே அசையக் கூட செய்யாது தன்னெதிரே நின்றிருந்தவனை அவள் சிலை போல் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். இது கனவா நிஜமா என்ற சந்தேகம் வேறு அவளுக்குள்.
ஆனால் அவளெதிரே நின்றிருந்த லியோவின் இதழ்கள் புன்னகையில் விரிந்திருக்க, முதல் தடவை அவனுடைய கலங்கிய விழிகள் அத்தனை உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது.
"யாழ்.. என்னை ரொம்ப மிஸ் பண்ணியா என்ன?" என்று அவன் குறும்புப் புன்னகையோடு இரு புருவங்களை ஏற்றி இறக்கிக் கேட்க, நடப்புக்கு வந்த மறுநொடி அவனை நோக்கி ஓடினாள் அவள்.
அதற்குமேல் லியோவாலும் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் வருவதற்கு முன்னரே வேக அடிகளை வைத்து அவளை நெருங்கியிருந்தவன் தன் காதல் மனைவியை இறுக அணைத்துக்கொள்ள, யாழ்மொழியோ இத்தனை நாட்கள் பிரிவின் வலியை தன் அணைப்பில் வெளிப்படுத்தி கதறியழுதாள்.
"அதிகாரி என்னிடமே வந்துவிட்டீர்களா, இந்த ஒன்றே போதும் எனக்கு, இதுவே போதும். இப்போது நான் இறந்தாலும் எனக்கு சந்தோஷம்தான்" என்ற அவளின் வார்த்தைகளைக் கேட்டவன் மேலும் அவளை தன்னோடு நெருக்கியவாறு, "ஷட் அப்! இதுக்கப்பறம் நீ என்னை விட்டு போகவே கூடாது. போக விடவும் மாட்டேன்" என்றான் அதட்டலாக.
பெண்ணவளோ அவனின் இரு கன்னங்களைத் தாங்கிக்கொண்டவள் அவனின் நெற்றி, கன்னம் என வேகமாக முத்தம் கொடுக்க, உடனே அவளின் இதழை கவ்விக்கொண்டான் லியோ.
அவளிடையை வளைத்து தன்னுடன் அணைத்தவாறு பிரிவின் வலிக்கான மருந்தாக அவளிதழை சுவைத்துக்கொண்டு போக, யாழ்மொழிக்கும் அந்த நொடி அந்த முத்தம் தேவைப்பட்டது போலும்!
இருவரும் ஒருவருக்குள் ஒருவர் மூழ்கியிருக்க, இதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த க்ரிஸ்டிக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது.
விழியோரம் கசிந்த நீரை துடைத்துக்கொண்டவள், பக்கத்திலிருந்த மைக்கலின் தோளில் சாய்ந்துக்கொள்ள, "அட இதுவும் நல்லாதான் இருக்கு" என்று நினைத்து அவள் சாய்வதற்கு வசதியாக தோளைக்
கொடுத்தான் மைக்கல்.
தன்னவளின் நெற்றியோடு நெற்றியை முட்டியவாறு, "ஐ லவ் யூ.. ஐ மீன்..." என்று லியோ அதற்கான அர்த்தத்தை சொல்ல வர, அவனின் உதட்டின் மீது விரலை வைத்து, "ஐ.. லவ்.. லவ் யூ டூ" என்று இத்தனை நாட்களில் க்ரிஸ்டியிடம் கற்றுக்கொண்டதை காதலோடு அவனின் மொழியிலேயே ஒப்பித்தாள் யாழ்மொழி.
லியோவோ ஆச்சரியமாக விழி விரிக்க, அவனின் பூனை விழிகளை பார்த்தவாறு அவனின் இதழோடு தன்னிதழை சேர்த்தாள் பெண்ணவள்.
காதல் அவர்கள் இருவருடைய வாழ்க்கையையும் அவர்கள் நினைத்துப் பார்க்காத திசைக்கு கொண்டு சென்று நிறுத்த, பல தடைகளைத் தாண்டி அந்த அழகான ஆழ்கடலில் விரும்பியே மூழ்கி முத்தெடுத்தனர் அந்த காதல் ஜோடிகள்.
****சுபம்****
கதை எப்படின்னு மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க... 😍😍
விழி தீயிலொரு தவம் கதை ஆடியோ நாவலா என்னோட யூடியூப் சேனல்ல இருக்கு கேட்டுட்டு மறக்காம கமென்ட் பண்ணுங்க..
Channel name - kadhaikulla polaama
channel link 👇
https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y
And....
Teenage and kids கான ஒரு யூடியூப் சேனல்.. பெரியவங்க கூட பார்க்கலாம் 😁.. யாருக்குதான் கார்டூன்ஸ் கதைகள பார்க்குறது பிடிக்காது... Fairy tales கதைகள்ல இருந்து பேய் கதைகள் வரைக்கும் Visuals oda பார்க்கலாம்.. 😇
Channel name - Bundle of Tales
https://youtube.com/@bundle_of_tales?si=16UQTLk8uJ_ZKTVB
தொலைந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் மர்மமான காடும் 👇
https://youtu.be/LbgMZ1yVeFM?si=NolWa0bSjAx55WJr
-Shehazaki 🙌

Comments
Post a Comment