விழிகள் 25
அரண்மனை வளாகத்துக்குள் மறைந்திருந்தவள் அங்கிருந்த நீண்ட ஜன்னலின் கதவு திறந்திருப்பதைப் பார்த்து வேகமாக அதை நோக்கி ஓட, அங்கு சுற்றியிருந்த காவலர்களின் விழிகளுக்கு சிக்கிக்கொண்டாள் அவள்.
"ஹேய்.. வூ ஆர் யூ? ஸ்டாப்! கார்ட்ஸ்... கார்ட்ஸ்..." என்று அவன் எல்லோருக்கும் குரல் எழுப்பி கத்திக்கொண்டு அவளை நோக்கி ஓடி வர, அதிர்ந்து விழித்தவள் உடனே சுதாகரித்து ஜன்னல் வழியே அறைக்குள் நுழைந்து ஜன்னல் கதவை வேகமாக மூடிக்கொண்டாள்.
சுற்றி பரபரப்பு நிலவ, ஜன்னல் கதவை அவர்கள் வேகமாக தட்ட ஆரம்பிக்கவும் இவளுக்கு ஏன்தான் இங்கு வந்தோம் என்று அந்த நொடி தோன்றியது.
வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்டவளுக்கு பயத்தில் உடலெல்லாம் நடுங்க, எதுவும் யோசிக்கக் கூட தோன்றவில்லை.
உடல் முழுவதும் பதற்றத்தில் வியர்க்க ஆரம்பிக்க, உடனே அந்த அறைக் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தவள் எந்த பக்கம் செல்வதென்று கூட தெரியாமல் கால் போன திசைக்கு அந்த வராண்டாவில் ஓட ஆரம்பித்தவள்.
திடீரென சில அதிகாரிகளின் காலடி சத்தம் கேட்க, பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்துக்கொண்டாள் யாழ்மொழி.
'அய்யோ கடவுளே! இப்படி அநியாயமாக வந்து சிக்கி விட்டோமே, இது தேவைதானா யாழ் உனக்கு? இத்தனை பெரிய அரண்மனையில் என்னவரை நான் எங்கு சென்று தேடுவது?'
என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டு வேக மூச்சுக்களை விட்டவாறு அவள் கதவில் சாய்ந்திருக்க, அப்போதுதான் அவளுடைய விழிகள் அந்த அறையை சுற்றி ஆராய்ந்தன.
சுற்றி ஏகப்பட்ட புத்தகங்களும் கோப்புகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, மெல்ல நடந்துச் சென்றவள் அனைத்தையும் ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்து வைத்தாள்.
'என்ன அறை இது, இவ்வளவு நிறைய புத்தகங்களா?' என்று ஆச்சரியத்தோடு ஒவ்வொன்றையும் தடவிப் பார்த்தவள், மேசை மீதிருந்த தாள்களை கையிலெடுத்து அதை புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, திடீரென கதவு வேகமாக திறக்கப்பட்டது.
கையில் துப்பாக்கியோடு வேகமாக உள்ளே வந்த ஆங்கிலேய அதிகாரிகள் அவளுடைய கையிலிருந்த தாள்களைப் பறித்து அவளை கோபமாக நோக்க, இதை எதிர்பார்க்காதவளாய் திகைத்துப் போய்விட்டாள் யாழ்மொழி.
"இவ அரசரோட ஸ்பைன்னு நினைக்கிறேன், நம்மளோட ரகசிய அறைக்குள்ள இருக்கா. அதுவும் இதை திருடியிருக்கா" என்று அந்த அதிகாரி ஏதேதோ பேச, அவர்களின் ஆங்கில மொழி இவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை.
"என.. எனக்கு அதிகாரியை பார்க்க வேண்டும், அவர் எங்கு இருக்கிறார்?" என்று யாழ் பதற்றமாக சொல்லிக்கொண்டு சுற்றி முற்றி தேட, "வாட் த ஹெல் ஆர் யூ டோக்கிங், யூ ****..." என்று கத்திக்கொண்டு அந்த காவலாளியோ அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
சரியாக ஜேம்ஸ்ஸோடு ஆஃபீஸ் அறையிலிருந்த வில்லியமிற்கு தகவல் கொடுக்கப்பட, "ஜெம்ஸ், யூ கேர்ரி ஆன். நான் என்னன்னு பார்க்குறேன்" என்றுவிட்டு வேகமாக சென்றான்.
தலையசைப்போடு ஜன்னல் வழியே எதேர்ச்சையாக பார்த்த ஜேம்ஸின் விழிகளுக்கு சிறு வெளிச்சம் தெரிய, அவனுடைய புருவங்களோ புரியாமல் முடிச்சிட்டன.
வில்லியயோ அந்த அறைக்கு வேகமாக வந்தவன், அங்கு யாழ்மொழியைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றாலும் இன்னொரு புறம் வன்மமாகப் புன்னகைத்துக்கொண்டான்.
அதே விஷம புன்னகையோடு அவன் அவளை நோக்கி நடந்து வர, அவனைப் பார்த்ததும்தான் பெண்ணவளுக்கு நிம்மதி பெருமூச்சே வெளியானது.
கண்ணீரைத் துடைத்தவள் வேகமாக வில்லியமை நோக்கிச் சென்று, "தங்களுக்கு என்னை தெரியும் அல்லவா! அதிகாரி தேசத்துக்கு வந்துவிட்டாரா, அவர் என்னை சந்திக்க காத்திருப்பதாக தாங்கள்தானே கூறினீர்கள், அவர் எங்கே? தயவு செய்து கூறுங்கள்" என அழுகையை அடக்கிய குரலில் கேள்விகளைத் தொடுக்க, அவனோ அவளை அந்நியப் பார்வைப் பார்த்து வைத்தான்.
"வூ இஸ் ஷீ? ஏதேதோ என்கிட்ட உளறிக்கிட்டு இருக்கா, சரியான பைத்தியமா இருப்பா போல ஹாஹாஹா..." என்று ஆங்கிலத்தில் சொல்லி சிரித்தவன், "அதிகாரியா! எந்த அதிகாரி? ஒருவேள ஆஃபீசர் லியோவ சொல்றியா? அவர்தான் இன்னும் இங்க வரவே இல்லையே... அப்பறம் எதுக்கு நீ இங்க வந்திருக்க? அதுவும் இந்த அறையில இருக்கன்னா எங்க ரகசியங்கள திருடுறதுக்காக வந்திருக்கியா?"
என்று பற்களைக் கடித்துக்கொண்டு கேட்டவாறு அவளுடைய பின்னந்தலை முடியை கொத்தாகப் பற்ற, ஸ்தம்பித்துப் போய்விட்டாள் பெண்ணவள்.
இதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
"என்ன?" என்றவளின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, "தெரியாத மாதிரி நல்லாவே நடிக்குற உன்ன..." என்று துப்பாக்கியால் அவளை அடிக்க கையை ஓங்கிய வில்லியமின் கரம் திடீரென பின்னாலிருந்து கேட்ட குரலில் அந்தரத்தில் நின்றது.
அங்கிருந்த மொத்த அதிகாரிகளும் திரும்பிப் பார்க்க, பயத்தில் விழிகளை மூடியிருந்தவளுக்கும் அந்த பழக்கப்பட்ட குரலில் பேரதிர்ச்சியாக இருந்தது.
மொத்தப் பேரின் பார்வையும் வாசல் புறம் திரும்ப, கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நெற்றி நரம்புகள் புடைக்க நின்றிருந்தான் லியோ ஜார்ஜ்.
அவனைப் பார்த்ததுமே யாழ்மொழியின் இதழ்கள் புன்னகைக்க, இதை எதிர்பார்க்காத வில்லியமிற்கு அவனின் வருகை பேரிடியாக இருந்தது.
அவனின் கோபத்தைப் பற்றி தான் இவன் அறிவானே!
உடனே வில்லத்தனமாக யோசித்தவன், "சார், வந்துட்டீங்களா! இதோ இவ நம்ம ரகசியங்களயே திருட பார்த்திருக்கா. இது கண்டிப்பா அரசரோட வேலையாதான் இருக்கணும். வீ ஹேவ் டூ டேக் ஆக்ஷன்" என்று கதையை திசைத்திருப்ப, விழிகளை சுருக்கியவாறு தன்னவளைப் பார்த்தான் அவன்.
ஆனால், யாழ்மொழிக்கு தான் மொத்த உலகத்தையும் அடைந்த உணர்வு.
வில்லியமின் கரத்தை உதறிவிட்டு லியோவை நோக்கி ஓடியவள் கோழிக் குஞ்சு தன் அம்மாவிடத்தில் தஞ்சம் புகுவது போல் அவனுடைய பரந்த மார்பில் முகத்தை புதைத்து அழ ஆரம்பிக்க, சிலையாகி நின்றுவிட்டான் ஆடவன்.
"இப்போதுதான் தங்களுக்கு என்னை நியாபகமே வந்ததா அதிகாரி? உங்களை காணாமல் நான் தவித்து போய்விட்டேன், இது ஒன்றும் கனவில்லையே, தாங்கள் சொன்னது போல நானே தங்களை காண வந்துவிட்டேன்" என்று சந்தோஷத்தில் ஏதேதோ பிதற்றிக்கொண்டு அவனுக்குள் மூழ்குவது போல் அவனை மேலும் மேலும் தன்னோடு நெருக்கிக்கொள்ள, லியோவோ ஒருகணம் திக்குமுக்காடி விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்த அதிகாரிகளும் நடப்பதை அதிர்ச்சியாகப் பார்க்க, வில்லியமிற்கு இதை கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
"ஓஹோ... அப்போ இவ பண்ண காரியத்துக்கு உங்களுக்கும் சம்பந்தம் இருக்கா. சரியா நீங்க இங்க வரும் போது இவ வந்திருக்கான்னா அப்போ கண்டிப்பா இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கு. நீங்க நம்ம அரசாங்கத்துக்கு துரோகம் பண்றீங்க" என்று வில்லியம் இப்போது மொத்த பழியையும் லியோவை நோக்கித் திருப்ப, அவனோ விழிகள் சிவக்க வில்லியமைப் பார்த்தான்.
அங்கிருந்த அதிகாரிகளும் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பிக்க, யாழ்மொழிக்கு அவர்கள் பேசிக்கொள்வது சுத்தமாகப் புரியவில்லை.
ஆனால், ஒன்று மட்டும் அவளால் நன்கு உணர முடிந்தது, வில்லியம் அவளுக்கெதிராக ஏதொ சதி செய்கிறான் என்று.
லியோவோ தீவிரமாக யோசித்தவன் விழிகளை அழுந்த மூடித் திறந்து தன்னை அணைத்திருந்த பெண்ணவளின் கரங்களை உதறிவிட, சற்று தள்ளி நின்றவள் தன்னவனின் செய்கையை புரியாமல் பார்த்தாள்.
"என்.. என்ன நடந்தது, ஏன் என்னை விலக்குகிறீர்கள்?" என்று பதறியபடி யாழ்மொழி கேட்டுக்கொண்டே மீண்டும் அவனை நோக்கிச் செல்ல, பின்னால் நகர்ந்தவன், "பக்கத்துல வராத, மொதல்ல யார் நீ?" என்று இறுகிய குரலில் ஒரு கேள்வியை கேட்டு வைத்தான்.
சில கணங்கள் அவனின் வார்த்தைகளை கிரகிக்க முடியாமல் சிலையாகி நின்றவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பிக்க, "என்ன? நான் யாரா?" என்று கேட்டாள் வேதனை நிரம்பிய குரலில்.
வில்லியமோ இப்போது நடப்பதை புரியாமல் பார்க்க, "யார் வந்து என்ன சொன்னாலும் நம்பிடுறதா? இந்த சின்ன பொண்ண போய் அரசர் உழவாளியா வச்சிருப்பாருங்குறத என்னாலயே நம்ப முடியல. அப்படியே இவ உழவாளியா இருந்தாலும் இவகிட்ட நம்ம வீரத்தையும் கோபத்தையும் காமிச்சு என்ன ஆக போகுது. நாம அரசர் வேந்தன் கூட தான் நம்ம பேச்சு வார்த்தைய நடத்தணும். சோ... ஒரு ஹையர் ஆஃபீசரா சொல்றேன், இவள விட்டுருங்க. இதை பத்தி நான் நாளைக்கு பார்த்துக்குறேன்" என்று அழுத்தமாக சொன்னான் லியோ.
அதிகாரிகளோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு மறுபேச்சு பேச முடியாமல் சம்மதமாக தலையசைக்க, இரு அதிகாரிகளோ வேகமாக வந்து யாழ்மொழியை இருபுறமும் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர்.
முழு பலத்தையும் பயன்படுத்தி அவர்களை தள்ளிவிட்டு மீண்டும் லியோவிடமே ஓடி வந்தவள், அவனின் கன்னத்தை இரு கரங்களால் தாங்கி அவன் விழிகளை ஏக்கத்தோடு பார்த்தாள்.
"அதிகாரி.. நான் யாரென்றா கேட்கிறீர்கள்? அவ்வளவு இலகுவாக என்னை மறந்துவிட்டீர்களா என்ன? தங்களுக்காக அனைத்தையும் உதறிவிட்டு வந்த என்னை இப்படி நிர்க்கதியாக்கி விட்டீர்களே! நிஜமாகவே தங்களுக்கு என் மேல் துளியும் காதல் இல்லையா" என்று கண்ணீரோடு யாழ் பேச, தன்னவளின் விழிகளைப் பார்த்தவனுக்கு இதயத்தை கசக்கிப் பிழியும் வலி.
ஆனால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டவன், அவளின் தோள்களைப் பற்றி தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தி "இவள இங்கயிருந்து வெளியில துரத்தி விடுங்க" என உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட குரலில் சொல்ல, ஸ்தம்பித்துப் போய் அவனைப் பார்த்தாள் அவள்.
லியோவோ அவளின் விழிகளைக் காண தயக்கப்பட்டு எங்கோ பார்வையைப் பதித்தபடி நின்றுக்கொண்டிருக்க, அதிகாரிகளோ மீண்டும் வந்து அவளை இழுத்துக்கொண்டே சென்றனர்.
பெண்ணவளின் பார்வை கொஞ்சமும் நகரவில்லை. கண்ணிலிருந்து மறையும் வரை அவனையே திரும்பி பார்த்தபடி அவள் செல்ல, ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டவன் வேகமாக தனதறைக்குச் சென்றான்.
வில்லியமோ அந்த நொடி தனக்குள் ஒரு திட்டத்தை தீட்டிக்கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறியிருக்க, கதவைக் கூட மூடாது இருந்த கோபத்தில் அறையிலிருந்த மொத்தப் பொருட்களையும் தூக்கிப் போட்டு உடைத்தான் லியோ.
"ஏன்... ஏன் நான் இப்படி பண்ணேன், இப்போ கூட பதவி போயிருமேங்குற பயத்துல அவள விட்டுட்டியே! யூ ப்ளடி ****... அவளோட பார்வை.. என்னை அக்யூஸ்ட் பண்ற மாதிரி பார்க்குற அந்த கண்கள நேருக்கு நேரா பார்க்க முடியல. ச்சே! இப்படி பண்ணியிருக்க கூடாது, அவள இப்படி விட்டிருக்க கூடாது"
என்று தன்னை மீறிய ஆதங்கத்தில் ஏதேதோ புலம்பியவாறு பைத்தியம் பிடித்தவன் போல் அவன் நடந்துக்கொள்ள, "சார்..." என்ற ஜேம்ஸின் குரல் வாசலிலிருந்து கேட்டது.
மூச்சு வாங்கியவாறு லியோ திரும்பிப் பார்க்க, "யூ லவ் ஹெர் ரைட்?" என்று சட்டெனக் கேட்டான் மற்றவன்.
அவனோ பதிலெதுவும் சொல்லாமல் ஜேம்ஸ்ஸை சில கணங்கள் வெறித்துப் பார்த்தவன், விரல்களை அசைத்து அவனை உள்ளே வரும்படி சொன்னான்.
மற்றவனும் எச்சிலை விழுங்கியவாறு அவன் பக்கத்தில் வர, "யூ நோ வாட் ஜேம்ஸ், இப்போன்னு இல்ல. மார்கெட்ல நான் அவள துரத்திட்டு போனப்போ இல்லன்னா அவளோட முகத்த ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ.. அதுவும் இல்லன்னா மே பீ பேளஸ்ல நடந்த டான்ஸ் அப்போ கூட இருக்கலாம். சரியா தெரியல. சின்ஸ் தட் டைம், ஐ லவ் ஹெர். அவள காதலிச்சிருவேனோன்னு பயத்துலதான் இங்கயிருந்து போனேன். இப்போ கூட நான் அவளுக்காக தான் இங்க திரும்ப வந்தேன். அவளுக்காக மட்டும்தான் எல்லாமே... ஆனா நான்.. ஐ டோன்ட் டிசெர்வ் ஹெர் லவ்" என்றவனின் விழிகள் கலங்க குரல் அழுகையை அடக்கியிருந்தது.
முதல் முறை லியோவிடத்தில் இத்தகைய மாற்றத்தை காண்கிறான் ஜேம்ஸ்.
அவன் பேசுவதில் திகைத்துப்போய் அவன் சிலையாக நிற்க, லியோவோ அப்படியே முட்டி போட்டு தரையில் அமர்ந்தவன், "ஐ டோன்ட் டிசெர்வ், மத்த ஆஃபீசார்ஸ் முன்னாடி எனக்கு அவமானமாகிரும், என்னோட பதவி போயிருமேங்குற ஒரு பயத்துல அவ யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டேன். ச்சீ... எனக்கே என்னை நினைச்சா அருவருப்பா இருக்கு.
எதுவானாலும் ஃபேஸ் பண்ணலாம்னு ஒரு தைரியத்துல வந்தேன். பட் ஐ அம் நொட், நான் ஒரு கோழை ஜேம்ஸ். எனக்காக வந்தவள நான் விட்டுட்டேன். ஐ டிட் இட் அகைன். என்ன பண்றதுன்னு தெரியல" என்று விழிகளில் வலியோடு ஒரு பார்வைப் பார்த்தான்.
ஜேம்ஸிற்கு அவனின் நிலை நன்றாகவே புரிந்தது.
பதற்றமாக அவரை பார்த்துக்கொண்டு நின்றவன், தன்னைத்தானே நிதானப்படுத்தி மெல்ல லியோவின் அருகே அமர்ந்தான்.
அவனோ தலையைத் தாங்கிக்கொண்டு அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியாமல் குழம்பிப் போய் அமர்ந்திருக்க, "சார், நான் ஒன்னு சொல்லட்டுமா?" என்று ஜேம்ஸ் சிறு தயக்கத்தோடு கேட்க, அவனை கேள்வியாகப் பார்த்தான் மற்றவன்.
"நம்ம அரசாங்கத்த பொருத்த வரைக்கும் இவங்க நம்மளோட அடிமைங்க, யூஸ் என்ட் த்ரோவா தான் நாம இவங்கள நினைக்கணும். ஒருவேள அது காதல் கல்யாணம்னு போனா நம்ம அரசாங்கத்துல நடக்குற அவமானங்கள் உங்களுக்கு தெரியாம இருக்காது. நீங்க அந்த பொண்ண கல்யாணம் பண்ணீங்கன்னா மே பீ உங்க பதவிய விட்டு விலக வேண்டியிருக்கும். இல்லன்னா பதவிக்காக அவள விடணும்.
இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னதான் உங்களால தேர்ந்தெடுக்க முடியும். அது என்னதா இருக்கணும்னு நீங்கதான் முடிவு பண்ணணும். ஒருவேள என்னை கேட்டீங்கன்னா நான் உங்க லவ்வ தான் சொல்லுவேன், பிகாஸ் ஷீ இஸ் யூவர் ஹேப்பினஸ், ஷீ இஸ் யூவர் ஸ்மைல். ஷீ இஸ் எவ்ரிதிங்"
என்று ஜேம்ஸ் அவனின் மொத்த குழப்பத்திற்கும் பதிலளிக்க, விழிகளில் கண்ணீரோடு சில கணங்கள் அவனை வெறித்துப் பார்த்தான் மற்றவன்.
அவளுடனான முதல் சந்திப்பிலிருந்து அவனுடனான முத்தம் வரை அவனுக்கு நினைவு வர, இதழில் புன்னகையோடு ஜேம்ஸை உடனே அணைத்துக்கொண்டான் லியோ.
"ஆமா.. ஆமா ஜேம்ஸ் என்ன வேணா நடக்கட்டும், ஐ லவ் ஹெர் தட்ஸ் இட். என.. எனக்கு இப்போவே அவள பார்க்கணும்" என்று சொன்னவனுக்கு அப்போதுதான் யாழ்மொழி சொன்ன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன.
'தங்களுக்காக அனைத்தையும் உதறிவிட்டு வந்த என்னை இப்படி நிர்க்கதியாக்கி விட்டீர்களே!'
அவளின் அந்த வார்த்தைகளுக்கான அர்த்தமும் புரிய, அதிர்ந்துப் போய் விழி விரித்தவன் புயல் போல் தன்னவளை தேடி ஓட ஆரம்பித்தான்.
************

Comments
Post a Comment