அகல்கவி 13
அகல்கவி சிலையமுதே 13 "எதே! நீ.. நீ ட்வின்ஸ்ஸா, உனக்கு அண்ணன் இருக்கானா? என்னடா ஒரே குழப்பமா இருக்கு.." என்று அரவிந்த் தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாகக் கேட்க, இடுப்பில் கைக்குற்றி தரையை வெறித்திருந்தவன் மேலும் கீழும் தலையாட்டி வைத்தான். அரவிந்திற்கோ யுவனுக்கு இரட்டை சகோதரன் இருந்ததே பெரும் அதிர்ச்சி என்றால், அகல்யா அவனுடைய சகோதரனை காதலித்ததை தெரிந்ததும் மயக்கம் வராத குறைதான். "மச்சான் இப்படி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத.. ரெஸ்ட் இன் பீஸ்டா" யுவனின் தோளில் கரத்தை வைத்து வராத கண்ணீரை வரவழைத்தபடி அவன் சொல்ல, அவன் முதுகில் இரண்டு போடு போட்ட மற்றவனுக்கு பைத்தியம் பிடிக்காத குறை. "விளையாடாதடா முண்டம்! அவ என்னை காதலிச்சிருக்கான்னு தெரிஞ்சதாலதான் நான் கட்டிக்கிறேன்னு தைரியமா சொன்னேன், ஆனா இப்போ.. அவ என்னை காதலிக்கல யுகாவதான் காதலிச்சிருக்கான்னோ தெரிஞ்சதுலயிருந்து என்னால முடியலடா. ஒரு மாதிரியா இருக்கு.. தப்பு பண்ணிட்டோமோன்னு தோனிட்டே இருக்கு" அவனுடைய வார்த்தைகள் இயலாமையோடு வெளிவந்தன. அரவிந்திற்கு அவனின் நிலை புரியாமல் இல்லை. "புரியுதுடா மச்சான், ஆனா இப்போ ...